பாவம்
பாவம் என்றால் என்ன?
எல்லாவிதமான அநீதியும் (1 யோவா.5:17) சட்டத்தை பிறுவதும் (1 யோவா;3:4) நன்மை செய்ய அறிந்திருந்தும் அதைச் செய்யாமலிருப்பதும் (மத்.23:23; யாக்.4:17) விசுவாசத்தினால் வராத யாவும் (ரோம.14:23) தீயநோக்கமும் (நீதி.24:9) பிறரை அவமதிப்பதும் (நீதி.14:21) பாரபட்சம் காட்டுதலும் (யாக்.2:9) பாவங்களாகும். மிகுதியாகப் பேசினால் சொற்களில் பாவம் காணப்படும் (நீதி.10:19).
தனித்தனியாகவும் பட்டியல்கலாகவும் வேதத்தின் பலபகுதிகளில் பாவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சில பட்டியல்கள் மாற்.7:21-23; 1 கொரி.6:9-10; கலா.5:19-21; வெளி.21:8 இல் இடம்பெற்றுள்ளன.
சட்டத்தை (நியாயப்பிரமாணத்தை) மீறுவது என்றால் என்ள?
யோவா.3:4 இன் பிற்பகுதி ‘நியாயப்பிரமாணத்தை மீறுவதே பாவம்’ என்று தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் நியாயப்பிரமாணம் என்பது யூதருக்கு மோசேயின் மூலம் தேவன் அளித்த நியாயப்பிரமாணத்தைக் குறிப்பிடவில்லை. சட்டம் என்ற பொருளில் எழுதப்பட்டுள்ளது.
‘சட்டத்தை ‘மீறுவதே பாவம்’ என்று இருந்தால் பொருத்தமாக இருக்கும். நியாயப்பிரமாணம் சொல்லுவது அதற்குக் கீழ்ப்பட்டவர்களுக்கே பொருந்தும், பிறருக்குப் பொருந்தாது (ரோம.3:19), ஏனெனில் (மோசேயின்) நியாயப்பிரமாணமில்லாதவர்கள் மனச்சாட்சியின்படியும் அவர்களின் சிந்தனைகளின்படியும் தங்களுக்குத் தாங்களே சட்டங்கள் (நியாயப்பிரமாணம்) உள்ளவர்களாயிருக் கின்றனர் (ரோம.2:14). மேலும் கர்த்தருடைய பிள்ளைகள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராயில் விசுவாசப்பிரமானாத்திற்குட்பட்டவர்களாயிருக்கிறோம் (ரோம.3:27-28), கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக் கிறோம் (ரோம.6:14-15), எனவே
சட்டத்தை மீறுவது என்பதின் பொருள் என்னவெனில்
1) மோசேயின் நியாயப்பிரமாணத்திற்குட்படாத யூதரல்லாதோர் தங்கள் வீ மனச்சாட்சி, சிந்தனை ஆகியவற்றில் தவறு என்று அறிந்தவற்றிற்கு எதிராகச் செயல்படும்பொழுது அவ்வாறு மீறுவது அவர்களுக்குப் பாவம் ஆகும். ஆதாமும் ஏவாளும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த ஒரே கட்டளையை மீறியதே பாவமாகக் கருதப்பட்டது என்பது இதற்கு எடுத்துக்காட்டு.
2) மோசேயின் நியாயப்பிரமாணத்திற்குட்பட்ட யூதர்கள் அதை மீறுவது அவர்களுக்குப் பாவமாகும்.
3) விசுவாசிகள் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்குட்பட்டவர்களல்ல, விசுவாசப்பிரமானாத்திற்குட் பட்டவர்கள் (ரோம.3:27-28). எனவே விசுவாசப்பிரமாணத்தை மீறுவது (அவிசுவாசம்கொள்வது, பின்மாற்றமாயிருப்பது, புதிய ஏற்பாட்டிலுள்ள கட்டளைகளை மீறுவது) விசுவாசிகளுக்குப் பாவமாகக் கருதப்படும்.
பாவத்தின் தொடக்கம்
செய்ய தேவதூதர்கள் பாவமில்லாதவர்களாக உருவாக்கப்பட்டபோதிலும், பாவம் ஆற்றலுள்ளவர் களாயிருந்தனர். லூசியர் என்ற கேருப் (சிறப்பான தூதன்) தனது அழகினால் பெருமையடைந்து வானத்துக்கு ஏறவும் தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாகத் தனது சிங்காசனத்தை, உயர்த்தவும் ஆராதனைக் கூட்டத்தின் பரிவதத்திலே விற்றிருக்கவும் உன்னதங்களில் ஏறவும் உன்ளதருக்கு ஒப்பாகவும் இருதயத்தில் நினைத்தபோது பாவம் உருவாயிற்று (ஏசா.14:12-14),
பாம்பின் வாயிலாக உலகின் முதற்பெண்ணைச் சாத்தான் ஏமாற்றியபோது, கர்த்தரின் கட்டளையை மீறி, கர்த்தர் உண்ணக்கூடாது என்று விலக்கிய களியைப் பறித்து, பெண்ணும் அவரது கணவரும் உண்டதால் பாவம் மனிதருக்குள் வந்தது. பாவமின்றி உருவாக்கப்பட்ட மனிதனுக்குப் பாவம் செய்யும் ஆற்றல் இருந்தது. பெண் ஏமாற்றப்பட்டுத் தவறிழைத்தார். ஆனால் ஆதாம் ரமாறாதபோதிலும் தெரிந்து துணிகரமாகப் பாவத்திற்குத் துணையாயிருந்ததுமன்றி, தானும் பாவம் செய்தார் (1 திமோ.2:14). தேவனுடைய சித்தத்தைவிட தங்கள் சித்தத்தை (விருப்பத்தை) முக்கியமாகக் கருதுதல், தேவனுடைய வார்த்தையின்மீது அவநம்பிக்கைகொள்தல், தேவனுடைய வார்த்தைக்கு எதிராகப் புரட்சி செய்தல், கீழ்ப்படியாமை, கண்களின் இச்சை, மாமிச இச்சை, பெருமை ஆகியவை ஆதாமும் அவருடைய மனைவியும் கனியைப் பறித்து உண்டதில் அடங்கியுள்ளன. ஆதி.3:1-10
மனிதனுக்குள் பாவம் எவ்வாறு தொடங்குகிறது
செயல்கள், சொற்கள் தொடங்குமுன்பே இருதயத்தில் பாவம் உண்டாகிறது (மாற்.7:21-23), இருதயத்தில் உண்டாகும் இச்சை பாலமாக உருவாகிறது என்பதை யாக். 1:14-15 இலிருந்து காண்கிறோம். இச்சையோடு பார்க்கும்பொழுதே இருதயத்தில் விபசாரம் செய்தாயிற்று என்று கர்த்தர். கூறியிருக்கிறார் (மத்.5:28). எனவேதாள் எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள் என்று நீதி.4:23 கூறுகிறது. ‘ஒருவளின் எண்ணங்கள் எங்கு செல்கின்றளவோ அங்கு அவற்றை அவன் பின்தொடருவாள்’ என்பது ஒரு மாபெரும் உண்மையாகும். சிந்தனைகள் திசைமாறும்போது ஜெபத்துடனும் துதியுடனும் அவைகளைத் திருப்புவதற்குக் கவளமாயிருப்போமாக, உள்ளத்தில் இருக்கும் இச்சை, பெருமை, பொறாமை, வஞ்சனை, பொருளாசை ஆகியவை செயல்களில் தெரியும்பொழுது வெளியரங்கமான பாவங்களாக உருவெடுக்கின்றன.
மன்னிக்கப்படாத மிகவும் கொடிய பாவம்
ஆவியானவருக்கு விரோதமாகப் பேசும் பாவம் இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படுவதில்லை என்பதையும் அவ்வாறு பேசுகிறவன் ‘நித்திய ஆக்கினையை அடைவான்’ என்பதையும் இயேசு கூறியுள்ளார். (மதி.12:31-32; மாற்.3:28-29). எனவே ஆவியானவரைப்பற்றிப் பேசும்பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவரைப்பற்றிச் சரியாசுத் தெரியாதவர்கள் பேசாமலிருப்பது நலமாயிருக்கும். மனிதன் பாவியாகப் பிறந்ததாய் பாவம் செய்கிறான்,
எல்லாரும் பாவிகள்
பாவங்களைச் செய்கிறதால் ஒரு மனிதன் பாவியாக மாறுகிறான் என்பது சரியன்று. பாவியாகப் பிறப்பதால் மனிதன் பாவம் செய்கிறாள் என்பதே சரி. ஆதாமின் சாயலில் மனிதன் பிறப்பதால் (ஆதி.5:3) சுபாவப்படி பாவம் செய்கிறான். ஒரே மனிதனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டனர். என்பதை வேதம் கூறுகிறது (ரோம.5:19), ‘எள் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்’ என்று தாவீது கூறியிருப்பதின் கருத்து இதுதான் (சங்.51:5). நண்மை தீமை பற்றிய அறிவு வந்த எந்த மனிதனும் தனது பாவசுபாவத்தின்படி பாவம் செய்கிறான் (எபே.2:3). இதற்கு விதிவிலக்கு இல்லை. எல்லோரும் பாவம் செய்து தேவ மகிமையற்றவர்களானார்கள் என்று வேதம் கூறுகிறது (ரோம.3:23). 1 இரா.8:46; ரோம்.3:9 12,20-23; கலா.3:22 போன்ற வசனங்களும் எல்லோரும் பாவிகள் என்பதை உணர்த்துகின்றன.
பாவத்தின் விளைவுகள்
பாவம் மனிதனைத் தேவனிடமிருந்து பிரிக்கிறது. எனவே, பாவத்தில் இருப்போருக்குத் தேவளிடமிருந்து உதவி, பாதுகாப்பு, விடுதலை, ஜெபங்களுக்குப் பதில் ஆகியவை கிடைக்காது (ஏசா.59:1-2), பாவம் செய்கிற மளிதனுக்கு உள்ளத்தில் சமாதானம் இருக்காது (ஏசா.48:22; 57:21). தனது பாவங்களை நினைக்கும்போதெல்லாம் மனச்சாட்சி அவனுக்கு வேதனைகளைத் தரும். பாவத்தின் விளைவினால் மனதிலும் சரீரத்திலும் நோய்கள் வரும். ஒருவன் செய்யும் பாவம் அவனை மட்டுமன்றி அவனது குடும்பம், நண்பர்கள் ஆகியோரையும் தீங்கிழைக்கப்பட்டவரின் குடும்பம், நண்பர்கள், சமுதாயம் ஆகியவற்றையும் பாதிக்கும். யாவற்றிற்கும் மேலாசு, பாவும் செய்கிற ஆத்துமா சாகும். இது ஆவிக்குரிய மரணமாகும். (எசே 18:4,20; மோள.8:23). இவ்விதமாக ஆவிக்குரிய மரணமடைத்தவர்கள் பாலகள்ளிப்பைப் பெறும்பொழுது உயிர்ப்பிக்கப்படுகிறார்கள் (எபே.2:1,4-5). இயேசுகிறிஸ்துவிடம் பாவமன்னிப்பைப் பெற்றுக்கொள்ளாமல் இவ்வுலகை யிட்டுப் பிரிந்துசெல்கிறவர்கள் யாவரும் நாகத்தில் தள்ளப்படுவார்கள் (சங்.9:17; வெளி.21:8), பாவத்தின் சம்பளமாக ஆத்தும மரணமும் பின்னர் இரண்டாம் மரணமாகிய நாகமும் வைக்கப்பட்டுள்ளன (ரோம.5:23),
பாவம் தேவனுக்கு விரோதமானது
மனிதன் செய்யும் எந்தப் பாவமும் தேவனின் நியமத்துக்கு எதிராக இருக்கிறபடியால் தேவனுக்கு எதிராகச் செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஆதி.39:9; சங்.51:4; 119:11 போன்ற வானங்கள் இக்கருத்தை வலியுறுத்துகின்றன.
ஒரு பனிதனின் பாவத்திற்கு அவனே பொறுப்பு
பாவம் செய்த மனிதனின் ஒத்துழைப்பு இன்றி, மற்றவர்களின் தூண்டுதலால் மட்டும் அவன் பாவம் செய்வதில்லை. எனவே சூழ்நிலைகளையும் பாவம் செய்யத் தூண்டியவர்களையும் சாத்தாளையும் காரணம் காட்டி யாரும் தப்பித்துக்கொள்ள முடியாது. நடந்த பாவத்திற்கு, அதைச் செய்த மனிதன் பொறுப்பு: ஏற்றே ஆக வேண்டும். அதற்கேற்ற தண்டனையை அடையவேண்டும். பாம்பினால் ஏமாற்றப்பட்டபோதிலும் ஆதாமின் மனைவியும் ஆதாமும் தங்கள் தவறுகளுக்குத் தண்டனை அடைந்தனர் (ஆதி.3) என்பது இதை
வெளிப்படுத்துகின்றது.
மனிதனின் பாவமன்னிப்பிற்காகத் தேவன் செய்வநென்ள?
பாவம் செய்த ஒவ்வொரு மனிதருக்கும் தண்டனை தருவதே சரியானது, ஆனால் அவ்விதம் தண்டனை அளிக்கப்பட்டால் மனுக்குலம் அளைத்தும் நரகத்திற்குள் தள்ளப்படவேண்டியிருக்கும். எனவே, தேவன் தமது மிகுந்த அன்பினால் பாவமன்னிப்பிற்கு வழியுண்டாக்கியிருக்கின்றார். பாவத்திற்குப் பரிகாரமாகவும் தண்டனையின் அடையாளமாகவும் இரத்தம் சிந்தப்படவேண்டும் என்ற நிலையைத் தேவன் நியமித்துள்ளார். இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமள்ளிப்பு இல்லை (எபி.9:22). ஒரு மனிதனின் பாவத்திற்கு அவனது இரத்தம் சிந்தப்படவேண்டும். இதற்கு ஈடாக, குற்றமற்ற ஒருவர் தமது இரத்தத்தைச் சிந்தி மன்னிப்பு அளிப்பதைத் தேவன் ஏற்றுக்கொள்கிறார். குற்றமற்ற மனிதன் எவரும் இல்லாததால், வார்த்தையாகிய தேவன் (யோவா.1:1-2) மாம்சமாகி (யோவா.1:14). இயேக என்ற பெயரில் (மத்.1:21), உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டியாக உலகிற்கு வந்தார் (யோவா.1:29), நம்முடைய பாவங்களுக்கு நாம் அடையவேண்டிய தண்டனைகளை இயேசு தமது சரீரத்தின்மீது ஏற்றுக் கொண்டார் (ஏசா.53:5; 1 கொரி.15:3). முழு உலகத்தின் பாவத்தையும் துரோகத்தையும் தமது சரீரத்தில் சிலுவையின்மேல் சுமந்தார் (1 பேது.2:24). தமது தலையில் முட்கிரீடம் சூட்டப்படுவதற்கும் தமது நலையிலும் கள்ளத்திலும் அடிக்கப்படுவதற்கும் முகத்தில் துப்பப்படுவதற்கும் உடலெங்கும் சவுக்கால் அடிக்கப்படுவதற்கும் கை கால்களில் ஆணிகளால் அடிக்கப்படுவதற்கும் இயேசு தம்மைப் பலியாக ஒப்புக்கொடுத்தார் (கலா.1:4; எபே.5:2; எபி.9:14; 1 யோவா.2:2; 4:10). இயேசு மரணமடைந்ததும் அவருடைய விலாவில் ஈட்டியால் குத்தினார்கள். இவ்விதமாகத் தமது இரத்தத்தைச் சிந்தி அவர் உயிர்விட்டார். இயேசு நமது பாவங்களுக்காகத் தண்டனைகளை அனுபவித்து, இரத்தத்தைச் சிந்தினபடியால்’ அவரது இரத்தம் நமது பாவங்களைச் சுத்திகரிக்கிறது (மத்.26:28; எபி.1:3; 1 யோவா. 1:7; வெளி.1:6), இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது (எபே.1:7; கொலோ.1:14). இயேசு பாவத்தின்மீதும் மரணத்தின்மீதும் வெற்றியடைந்ததால் ஜீவனையும் அழியாமையையும் வாக்களித்துள்ளார். இதுவே நற்செய்தியாகும்.
இயேசுகிறிஸ்துவின் மரமத்திற்கு முன்னடையானமாகவும் நிறமாகவும் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பலிகள் செலுத்தப்பட்டன. பாவநிவாரனாபலி, குற்ற நிவாரணபலி ஆகியவற்றைச் செலுத்துவதின்மூலம் பாவங்கள் மூடப்பட்டன (சங்.32:1).
பாவமன்னிப்பு பெற என்ன செய்யவேண்டும்
ஒரு மனிதன் தனது பாலங்களுக்காகப் பரிகாரம் செய்ய முடியாது, இயேசு அளிக்கும் பாலமன்னிப்பைப் பெற்றுக்கொள்ளவேண்டும். புதிய ஏற்பாட்டுக் காலமாகிய இக்காலத்தில் பாவமன்னிப்பு மட்டும் தனியாக வழங்கப்படுவதில்லை. பாவத்தில் இருப்பவர்கள் இரட்சிக்கப்படும்பொழுது பாவமன்னிப்படைகின்றனர்.
இரட்சிக்கப்பட்டவர்கள் பாவத்தில் தவறி விழுந்தால் அவர்கள் தங்கள் பாவங்களைக் கர்த்தரிடம் மனதிற்குள் கூறி மன்னிப்பு பெற்றுக்கொள்ளவேண்டும் (1 யோவா.18-9). செய்த பாவங்கள் ஒவ்வொன்றும் நம் நினைவில் இருப்பதில்லை. எனவே, நினைவிற்கு வரும் யாவற்றையும் கூறி மன்னிப்புப் பெறுதல் போதுமானது.
மன்னிக்கப்பட்ட பாவங்கள்
நாம் பாவமன்னிப்படையும் பொழுது பாவங்கள் நம்மைவிட்டு விலக்கப்படுகின்றன (சங்.103:12). தேவனுடைய முதுகுக்குப் பின்னாக எறிந்துவிடப்படுகின்றன (ஏசா.38:17). சமுத்திரத்தின் ஆழத்தில் போடப்படுகின்றன. (மீகா.7:19), மன்னிக்கப்படுகின்றன (1 யோவா.1:9), தேவனால் மறக்கப்படுகின்றன (ஏசா.43:25). இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு நாம் கத்தம் பண்ணப்படுகிறோம் (1 யோவா.1:7; வெளி.1:6).
பாவத்தைத் தேவன் அனுமதித்தது ஏன்?
இக்கேள்விக்கு ஒரு விளக்கம் உண்டு. தேவன் தமது மகிமை, ஆற்றல், வல்லமை, ஞானம் போன்றவற்றை எளிதில் வெளிப்படுத்த முடியும். ஆனால் தனது மாபெரும் அன்பை வெளிப்படுத்தவேண்டுமானால் அவருக்கு எதிரிகளும், துரோகிகளும் தேவை. ஏனெனில் எதிரியாக மாறிய, துரோகியாக மாறிய, பெலனற்ற, அசுத்தத்தால் நிறைந்த மனிதனை நேசித்துத் தன்னுடைய ஒரேபேறான குமாரனுடைய இரத்தத்தைச் சிந்தி மீட்கும் அளவிற்குத் தேவனுக்கிருக்கும் அன்பை வெளிப்படுத்தவேண்டுமானால் துரோகியாக மாறும் மனிதனும் அவனை மதிமயங்கச் செய்யும் சாத்தானும் தேவை. தேவன் லூசிபர் என்ற நல்ல தூதளைத்தான் படைத்தார். அவன் பாவம் செய்ய முற்பட்டு சாத்தான் என்ற கொடியவனாக மாறுவதை அனுமதித்தார். பாவம் தோன்ற அனுமதிக்கப்படாவிட்டால் தேவனின் மாபெரும் அன்பை வெளிப்படுத்த வழியில்லை. எனவே, தேவன் யாவற்றையும் படைத்ததோடு பாவம் தோன்ற அனுமதித்தார். வெளி.13:8