மனந்திரும்புதல், இரட்சிப்பு
ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் பாவங்கள் இருப்பதை உணர்ந்து, பாவங்களை விட்டுவிடவும் பரிசுத்தமாக வாழவும் தீர்மானிப்பது மனந்திரும்புதலாரும். ஒவ்வொரு மனிதனும் இவ்வாறு பளந்திரும்புவது மிகவும் முக்கியமானது என்பதால் கர்த்தராகிய இயேசு தமது முதல் சொற்பொழிவிலேயே இதைக்கூறினார் (பத்.4:17). மனந்திரும்புகிறவர் தனது பாவங்களை மன்னிக்குமாறு இயேசுவிடம் வேண்டிக்கொண்டு, இயேசுவைத் தனது வாழ்க்கையின் வழிகாட்டியாக ஏற்றுக்கொள்வது இரட்சிப்பு என்று அழைக்கப்படுகிறது.
இரட்சிப்பு
இரட்சிப்பு என்ற சொல் பாதுகாக்கப்படுதல், விடுவிக்கப்படுதல் என்ற பொருள் கொண்டது. எதிரிகளிடமிருந்து, போராட்டங்களிலிருந்து, நோய்களிலிருந்து, பாவத்திலிருந்து, நரகத்துக்குச் செல்வதிலிருந்து பாதுகாப்பதையும் விடுவிப்பதையும் குறிப்பிடுவதாக வேதத்தின் பல இடங்களில் இச்சொல் கையாளப்பட்டுள்ளது.
புதிய ஏற்பாட்டுக் காலத்தில் இரட்சிப்பு என்பது ஒருவர் பாவமன்னிப்படைந்து, கிறிஸ்துவுக்காக, கிறிஸ்துவைப் பற்றிக்கொண்டு, பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்படுவதற்கு அர்ப்பணிப்பதைக் குறிக்கிறது.
இரட்சிப்பு எவ்வாறெல்லாம் அழைக்கப்பட்டுள்ளது?
- மனந்திரும்புதல் (மத்.4:17; அப்.17:30).
- மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் (ஜாக்.24:47)
- பாவமன்னிப்பாகிய மீட்பு (எபே.1:7; கொலோ.1:14).
- பாவங்கள் அக்கிரமங்களிலிருந்து கிறிஸ்துவுடனே உயிர்ப்பிக்கப்படுதல் (எபே.2:15),
- மறுபடியும் பிறத்தல் (யோவா.3:3,7),
- தேவனால் பிறத்தல் (யோவா.1:13).
- இயேசுவை ஏற்றுக்கொள்ளுதல், தேவனுடைய பிள்ளையாதல் (யோவா.1:12).
- கிறிஸ்துவுக்கு உள்ளாதல், புது சிருஷ்டியாதல் (2 கொரி.5:17).
- தேவனுடன் ஒப்புரவாதல் (எபே.2:16).
- பரிசுத்தவான்களுடனே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாதல் (எபே.2:19).
- பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியம் பெறுதல் (எபே.2:18).
- கிறிஸ்துவைச் சேருதல்,
- இஸ்ரவேலுடைய காணியாட்சிக்கு உள்ளாதல்,
- வாக்குத்தத்தத்தின் உடபடிக்கைக்குப் பங்காளியாதல்,
- நம்பிக்கையுள்ளவர்களாதல்,
- தேவனுள்ளவர்களாதல் (எபே.2:12-13).
- நீதிமானாக்கப்படுதல் (லூக்.18:14).
- சீஷளாதல் (மத்.28:19).
- விசுவாசியாதல் (எமே.1:13).
- நித்திய ஜீவனை உடையவனாதல் (யோவா.3:16; 1 யோவா.5:11-12).
- ஜீவபுத்தகத்தில் பெயரெழுதப்படுதல் (வெளி.20:15). (85) அ
- பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டல் (சங்.103:4).
- வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ளும் வகை (மத்.3:7),
- நியாயப்பிரமாணத்தின் சாபத்துக்கு நீங்கலாக்கி மீட்கப்படுதல் (கலா.3:13)
எவை இரட்சிப்பு அல்ல
கீழே கூறப்பட்டுள்ளவை சிறந்தவைதான், ஆனால் அவை இரட்சிப்பு அல்ல. இதை அறியாமல் அநேக கிறிஸ்தவர்களும் மற்றவர்களும் ஏமாந்துபோயிருக்கின்றனர்.
- தேவாலயத்துக்குச் செல்லுதல் (லூக்.18:10)
- தேவனை ஸ்தோத்திரித்தல் (லூக்.18:11)
- எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணுதல் (அப்.10:2)
- உபவாசித்தல் (லூக்.18:12)
- சபை அதிகாரியாக இருத்தல் (யோவா.3:1)”
- சபைப் போதகராயிருத்தல் (யோவா.3:10)
- வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவராயிருத்தல் (அப்.10:2)
- சடங்காசாரங்களை நிறைவேற்றுதல் (பிலி.3:5)
- பக்தி வைராக்கியம் உடையவனாயிருத்தல் (பிலி.3:6)
- கற்பனைகளையெல்லாம் சிறுவயது முதல் கைக்கொள்ளுதல் (லூக்.18:20-21)
- நியாயப்பிரமாணத்திற்குரிய நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவனாக இருத்தல் (பிலி.3:6)
- நியாயப்பிரமாணத்தினாலுண்டாகும் சுயநீதியை உடையவனாக இருத்தல் (பிலி.3:9)
- பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரராய் இல்லாதிருத்தல் (லூக்.18:11),
- சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்துதல் (லூக்:18:12)
- இயேசு தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று கூறுதல் (யோவா.3:2)
- ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்தல் (அப்.10:2)
- மனந்திரும்பாமல் ஞானஸ்நானம் எடுத்தல் (மாற்.16:16)
இரட்சிப்பின் முக்கியத்துவம்
இரட்சிக்கப்படாதவன் (மறுபடியும் பிறவாதவன்) தேவனுடைய அரசைக் காணவே முடியாது (யோவா.3:3), இரட்சிப்பைக்குறித்துக் கவலையற்றிருப்பவர்கள் தண்டனைக்குத் தப்பித்துக்கொள்ள முடியாது (எபி.2:4). இரட்சிக்கப்படாதவர்கள் (ஜீவபுத்தகத்தில் பெயரெழுதப்படாதவர்கள்) அக்கினிக்கடலாகிய நாகத்தில் தள்ளப்படுவார்கள் (வெளி.20:15). எனவே ஒவ்வொருவரும் இரட்சிக்கப்படுவது அவசியம்.
நமது இரட்சிப்பிற்காகத் தேவன் செய்தது என்ன?
1) பிதாவாகிய தேவன் தமது சொந்தக் குமாரனை நமக்காகத் தந்தருளினார் (யோவா.3:15).
2) கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமது மீறுதல்களிளிமிந்தம் காயப்பட்டு, நமது அக்கிரமங்களினிபித்தம் நொறுக்கப்பட்டு, நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினையை அடைந்து நமது குணமாகுதலுக்காகத் தழும்புகளை ஏற்றுக்கொண்டார் (ஏசா.53:5). நமது பாவமன்னிப்பிற்காகத் தமது இரத்தத்தைச் சிந்தினார் (மத்.26:28). தமது ஆத்துமாவை மரணத்திலூற்றினார் (ஏசா.53:12). தமது ஆவியை விட்டார் (மத்.27:50).
3) பரிசுத்த ஆவியானவர், நமது பாவங்களுக்காக இரத்தம் சிந்தி மரணமடைவதற்கு இயேசுவுக்கு உதவினார் (எபி.9:14). ஆவியானவர் மனிதரின் பாவங்களைக் கண்டித்து உணர்த்துவதின் வாயிலாக (யோவா.16:8) இரட்சிப்பிற்கு வழிநடத்துகிறார். இரட்சிப்பைத் தேடி ஜெபிக்கிறவர்கள் தேவனுடைய பிள்ளைகளாவதின் நிச்சயத்தை அவர்களுக்கு அளிக்கிறார் (ரோம.8:16), இவ்விதமாகக் கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்குள் அவர்களை இணைக்கிறார் (1 கொரி.12:13).
இரட்சிப்படைவதற்கு இயேசுவே வழி
மனுக்குலத்தின் பாவங்களைத் தம்மீது ஏற்றுக்கொண்டு, அதற்கான தண்டனைகளை அடைத்து, இரத்தம் சிந்தி, மரணமடைந்து, உயிர்த்தெழுந்தவர் இயேசுவைத்தவிர வேறு யாரும் இல்லை நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்று இயேசு கூறியுள்ளார் (யோவா.14:6). இயேசுவாலேயன்றி இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும் மனிதர்களுக்குள்ளே இயேசுவின் நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவில்லை (அப்,4:12).
இரட்சிப்படைய என்ன செய்யவேண்டும்?
எனக்கு மன்னிப்பு வேண்டும். ஆனால் நான் மீண்டும் அதே பாவத்தில் ஈடுபடுவேன் என்ற நிலையில் இருப்பவருக்கு மன்னிப்பு இல்லை. பாவங்களை விட்டு மனந்திரும்பவேண்டும். அதாவது, தான் செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி அவற்றை வெறுத்து விட்டுவிடவும் (மத்.4:17; லூக்.3:8; 13:3; 2 கொரி.7:9 10; நீதி.28:13) தேவனுக்கென்று வாழவும் தீர்மானிக்கவேண்டும் (ரோம5:11; 14:7-8; 2 கொரி.5:15; கலா.2:20; 1 தெச.5:10). இவ்வாறு செய்யத் தீர்மானித்தவுடன், அதுவரை செய்த பாவங்களை (நினைவில் இருப்பவை யாவையும்) மறைக்காமல் ஒவ்வொன்றாக மனதிற்குள்ளாகக் கர்த்தரிடம் சொல்லி, மன்னிப்புக் கேட்கவேண்டும் (சங்.32:3-5; நீதி.28:13). இவ்வாறு செய்யும்பொழுது, மன்னிப்புக் கேட்பவர் 1). தனது பாவங்களுக்கு வரவேண்டிய தண்டனைகளைக் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சிலுவைப்பாடுகளின்போது தம்மீது ஏற்றுக்கொண்டு (ஏசா.53:5; 1 பேது.2:24) மரணமடைந்தார் என்பதையும் 2), அவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பு தளக்குக் கிடைக்கிறது என்பதையும் (எபே.1:7; கொலோ.1:14). 3). இயேசு உயிர்த்தெழுந்தபடியால் இப்பொழுது ஜெபத்தைக் கேட்டு மன்னிக்கிறார் என்பதையும் விசுவாசிக்க வேண்டும். மேலும் இயேசுவைச் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளவேண்டும். அதற்காகத் தனது. இருதயத்திற்குள் வருமாறு இயேசுவை அழைக்கவேண்டும் (நீதி.23:26; வெளி.3:20). இவ்வாறு செய்யும் ஒவ்வொருவருடைய பாவங்களையும் கர்த்தர் மன்ளிக்கிறார் (1 யோவா.1:9). மேலும் அவர்களுடைய இருதயத்திற்குள் வந்து வாசம்செய்கிறார் (வெளி.3:20). அவர்கள் தேவனுடைய பிள்ளைகளாகிறார்கள் (யோவா.1:12). அவர்கள் நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்கின்றனர் (1 யோவா.5:11-12).
ஜெபம்
நினைவிற்கு வரும் பாவங்களை மனதிற்குள்ளாகக் கர்த்தரிடம் கூறியபிள்ளர் கீழ்க்கண்ட ஜெபத்தைப் களை மனத் பயன்படுத்தலாம். ‘இயேசுவே நான் ஒரு பாவி என்பதை ஒப்புக்கொள்கிறேள். தெரிந்தும் தெரியாமலும் பாவங்கள் செய்திருக்கிறேன். என்னுடைய பாவங்களுக்கு நான் அடையவேண்டிய தண்டனைகளை நீர் அடைந்தீர் என்பதையும் நீர் உயிரோடு எழுந்தீர் என்பதையும் நம்புகிறேன். ஆகவே, என்னை மன்னியும். மேலும், என் இருதயத்தை, என் வாழ்க்கையை, உமக்காகத் திறக்கிறேன். இயேசுவே, என் இருதயத்திற்குள் இப்பொழுதே வாரும். உம்மை இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன். என் இருதயத்திற்குள் நீர் வந்து விட்டதற்காக, என்னை மன்னித்ததற்காக நன்றி. இப்பொழுது என்னை மறுபடியும் பிறக்கச் செய்ததற்காக உமக்கு நன்றி. நாள் இப்பொழுது தேவனுடைய பிள்ளை. என்னை மாற்றியதற்காக உமக்கு நன்றி. ஆமென்,
இரட்சிப்பின் நிச்சயம்
பாவங்களை அறிக்கையிட்டால் பாவங்களை மன்னித்து எல்லா அதியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்குக் கர்த்தர் உண்மையும் நீதியுமுள்ளவராயிருக்கிறார் (1 யோவா.1:9). இந்த வசனத்தின்படி பாவங்களை அறிக்கையிட்ட ஒவ்வொருவரும் மன்னிப்பைப் பெற்றுக்கொள்கின்றனர். சில பாவங்களை மறைத்துவைப்பவர்களுக்கும் மற்றவர்களுக்கு மன்னிக்காமலிருக்கிறவர்களுக்கும் இது பொருந்தாது.
இயேசுகிறிஸ்துவை உள்ளத்தில் வருமாறு அழைத்தவுடன் அவர் வருவதாக யாக்குறுதி அளித்துள்ளார் (வெளி.3:20). எனவே அவ்வாறு அழைத்த ஒவ்வொருவரின் இருதயத்திலும் அவர் வந்துவிட்டது உண்மை. இயேசுவின் திருப்பெயரில் நம்பிக்கைகொண்டு அவரை ஏற்றுக்கொள்ளும் அத்தனை பேரும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அதிகாரம் பெற்றுள்ளனர் (யோவா.1:12). எனவே அவரை ஏற்றுக்கொண்ட அத்தனை பேரும் தேவனுடைய பிள்ளைகள். என்னிடத்தில் வருகிற எவளையும் புறம்பே தள்ளுவதில்லை என்று இயேசு கூறியுள்ளார் (யோவா.6:37), எனவே அவரிடத்தில் வந்த உங்களை ஏற்றுக்கொண்டுள்ளார். நற்செய்திப்பணி என்றால் என்ன, கட்டுரையின் கடைசிப் பகுதி காண்க. பக்கம் 1806– மேலே கூறப்பட்டுள்ளவற்றைத் தியானித்தால் இரட்சிப்பின் நிச்சயத்தைப் பெற்றுக்கொள்ளலாமே.
மறுபடியும் பிறத்தல்
இவ்வுலகில் நமது பெற்றோருக்குப் பிள்ளைகளாகப் பிறந்துள்ளோம். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போது நாம் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அதிகாரம் பெறுகிறோம். இவ்வனுபவத்தைத் தேவனால் பிறப்பது என்று யோவா.1:12-13 இல் காண்கிறோம். இதுவே மறுபடியுப் பிறக்கும் அனுபவமாகும். இவ்வாறு மறுபடியும் பிறக்காதவன் தேவனுடைய அரசைக் காணமுடியாது (Gunun.3:3).
மூன்று காலங்களிலும் இரட்சிப்பு
1) பாவங்களை விட்டு மனந்திரும்பி, பாவங்களை அறிக்கையிட்டு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்பொழுது நாம் இரட்சிக்கப்படுகிறோம் என்று பார்த்தோம். இவ்வாறு நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்று கடந்தகால நிகழ்ச்சியாக ரோம.8:24; எபே.2:5,8; 2 தீமோ.1:9 போன்ற வசனங்களில் காண்கிறோம்.
2) நாம் இரட்சிக்கப்பட்ட பின்பு இவ்வுலகில் வாழும் காலம்வரை பாவத்துடன் போராட்டம் நடைபெற்றுக் கொண்டேயிருக்கும். நாம் நமது இரட்சிப்பு நிறைவேறும்படி (முழுமை பெறும்படி) பிரயாசப்பட வேண்டிய நிலையில் இருக்கிறோம் (பிலி.2:12). மகிமையின்மேல் மகிமையடையவும் (2 கொரி.3:18) இன்னும் பரிசுத்தமாகவும் (வெளி.22:11) ஆவியானவரின் உதவியால் முயற்சி செய்கிறோம். இதை நிகழ்கால இரட்சிப்பு என்று கூறுகிறோம். இச்சமயத்தில் பாவம் நம்மை மேற்கொள்ளாது என்ற வாக்குறுதி நமக்கு உண்டு (ரோம்.6:14). பாவத்தைத் தள்ளிவிட்டு, இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்திலே பொறுமையோடு ஓடவேண்டும் (எபி,12:1).
3) ஒருநாள் நாம் இவ்வுலக வாழ்க்கையை விட்டுக் கடந்து மரணத்தின் வாயிலாக அல்லது கர்த்தரின் இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்பட்டு கர்த்தரிடம் போய்ச் சேருவோம். இதை இறுதி இரட்சிப்பு என்று வேதம் குறிப்பிடுகிறது (ரோம.5:9-10; 13:11; பிலி.2:12).
மாற்றங்கள்
இரட்சிக்கப்பட்டவுடன் உள்ளத்தில் இயேசு தரும் சமாதானம் உண்டாகும் (யோவா.14:27), ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான் என்பதால் அவளது எண்ணங்களில், நோக்கங்களில், வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் (2 கொரி.5:17). மரணபயம் நீங்கிவிடும் (1 கொரி 15:55) ஒரு மாற்றமும் ஏற்படவில்லையெனில், மரணபயம் நீங்காவிடில் இரட்சிக்கப்பட்டிருப்பது உண்மையல்ல
கர்த்தரில் நிலைத்திருப்பது எப்படி?
கிறிஸ்துவுக்குள் தொடர்ந்து நிலைத்திருக்கவேண்டும் என்பதைக் கர்த்தர் தெளிவாகக் கூறியுள்ளார் (யோவா 15:4-6).
1) அனுதினமும் வேதத்தைத் தியானிப்பதின் மூலமும்
2) ஜெபத்தில் கர்த்தருடன் நெருங்கி உறவாடுவதின் மூலமும்
3) இரட்சிக்கப்பட்டவர்களுடன் ஜெப ஐக்கியம் வைத்துக்கொள்வதின் மூலமும்
4) கர்த்தரைப்பற்றி மற்றவர்களுக்கு அறிவிப்பதின் மூலமும் கிறிஸ்துவுக்குள் நிலைத்திருக்க முடியும்.