உபாகமம் கண்ணோட்டம்

உபாகமம் சுருக்கம் 

புதிய சந்ததிக்கு நியாயப்பிரமாணம் திரும்பக் கூறப்படல்

அமைப்பும், முக்கிய பிரிவுகளும்

34 அதிகாரங்கள்

3 பெரும் பிரிவுகள்

அதிகாரங்கள் 1 -4 – வரலாறு – கடந்த காலத்தில் கடவுளின் உண்மை

  • ஆபிரகாமின் உடன்படிக்கை மீண்டும் உறுதிப்படுத்தப்படல்
  • கடவுளின் உண்மையுள்ள தன்மையை நினைவுகூருதல்
  • இஸ்ரவேலரின் விசுவாச வீழ்ச்சியை திரும்பப் பார்த்தல்
  • கீழ்ப்படிய நினைப்பூட்டல்

அதிகாரங்கள் 5:1-26:15 – போதனை – நிகழ்காலத்தில் கடவுளின் கட்டளைகள்

  • நியாயப்பிரமாணம் திரும்பக்கூறல்
  • ஒழுக்க விதிகள் 
  • இஸ்ரவேலே கேள்
  • 10 கட்டளைகள்
  • கடவுளின் மேலான எச்சரிப்புகள்
  • ஆசரிப்பு நியமங்கள் 
  • ஒரு பரிசுத்தமான மக்களுக்கு பொதுவான ஆராதனை இடம்
  • 7-ஆம் ஆண்டு ஓய்வு ஆண்டு
  • 3 யாத்திரை பண்டிகைகள்
  • சமுதாயச் சட்டங்கள் 
  • நியாயாதிபதிகள்
  • இராஜாக்கள்
  • லேவியர்
  • தீர்க்கதரிசிகள்
  • அடைக்கலப்பட்டணங்கள்
  • சமூக சட்டங்கள் மற்றும் பிற முதல் புத்திர உரிமைகள்
  • மணமுறிவு மைத்துனி மறுமணம்

அதிகாரங்கள் 26:16-34:12 – உடன்படிக்கை – கடவுளின் தீர்க்கதரிசன வாக்குறுதி

  • உடன்படிக்கை உருதிப்படுத்தல்
  • ஆசீர்வாதம்/சாபம்
  • பாலஸ்தீன நாட்டு உடன்படிக்கை
  • மோசேயின் இறுதி உரை
    • கோத்திரங்களுக்குரிய ஆசீர்வாதம்
    • மரணம்
    • தனித்தன்மை

முக்கிய வார்த்தைகள்

நினைவுகூரக்கடவோம் நியாயப்பிரமாணம்

கீழ்ப்படி

அன்பு கடவுளுக்குப் பயந்து

உள்ளடக்கத்தின் சுருக்கம்

அதிகாரங்கள் 1-4 – கடந்த காலத்தில் கடவுளின் உண்மை

யோர்தானின் கிழக்குக் கரையில் இஸ்ரவேலர், வாக்குத்தத்த நாட்டிற்குள் நழைவதற்கென தயக்கத்தோடு ஆயத்தமாக நின்றனர். யாத்திராகமத்து மக்கள் யாவரும் மடிந்த பின்னர் தோன்றிய இந்தப் புதிய சந்ததிக்குக் கடவுளின் போதனை தேவைப்பட்டதினால் “மோசே நியாயப்பிரமாணத்தை விவரித்துக் காண்பிக்கத் தொடங்கினார்” (1:5)

மோசே முதலாவது ஆபிரகாமுக்குக் கடவுள் கொடுத்த வாக்குறுதியையும், காதேஸ்பர்னேயாவில் இஸ்ரவேலரின் விசுவாச வீழ்ச்சிக் குறித்தும் நினைப்பூட்டினார். பின்னர் இஸ்ரவேலரின் அலைச்சல்களிலும், பாவத்திலும் கடவுள் உண்மையுள்ளவராக இருந்து வந்ததையும் நினைவு கூர்ந்தார். மக்கள் கீழ்ப்படிய முன்வரவேண்டும் என்று மோசே அழைப்பு விடுத்தார்.

அதிகாரங்கள் 5-26:15 – நிகழ்காலத்தில் கடவுளின் கட்டளைகள்

இரண்டாம் முறையாகக் கடவுளின் கட்டளைகளை விவரிக்க மோசே ஆயத்தமானார். இது வாக்குத்தத்த நாடான கானானுக்குள் நுழைய விருந்த புதிய சந்ததிக்காக இந்த சமயத்தில் கூறினார். மோசே சன்மார்க்க (ஒழுக்க) விதிகளைக் கூற ஆரம்பித்து, நாற்பது வருடங்களுக்கு முன்னர் சீனாய் மலையில் கூறப்பட்ட பத்துக் கட்டளைகளையும் கூறினார். பின்னர் அவர் இஸ்ரவேலர் கடவுளுக்கெனச் செய்ய வேண்டிய கடமையைச் சுருக்கமாக கீழ்க்கண்டவாறு கூறினார்.

“இஸ்ரவேலே கேள். நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு பலத்தோடும் அன்புகூருவாயாக. இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது” (6:4-6)

இஸ்ரவேலர் பாவத்தில் விழாதிருக்க அந்நாட்டிலேயுள்ள கொடிய கானானியர் யாவரையும் முழுமையாக அழிக்க வேண்டியதின் தேவையை மோசே தொடர்ந்து நினைப்பூட்டினார். கானானுக்குள் நுழைவது என்பது, கடவுள் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறை வேற்றுவதும், அந்நாட்டு மக்களை நியாயந்தீர்ப்பதும் போன்றவற்றின் நிறைவேற்றமாகும் (ஆதியாகமம் 15:16). இஸ்ரவேலர் பாவத்திற்குக் கடவுள் கொண்டுவரும் நியாயத்தீர்ப்பின் கருவிகளாக இருந்தனர். அந்தீப் புதிய நாட்டில் குடியேறின பின்னர் கடவுளை மறந்துவிடும் அபாயம் இருப்பதையும், இதற்கென முன்பு கொடுக்கப்பட்ட சிட்சையையும் பற்றி கடவுள் அவர்களுக்கு எச்சரிப்பு விடுத்தார். கடவுளின் வார்த்தையைக் கேட்பது. கீழ்ப்படிவது. போதிப்பது குறித்து மோசே அதிகமாக வலியுறுத்திக் கூறியுள்ளார்.

மைய ஆராதனை இடத்தில் கையாளப் படவேண்டிய சடங்குகளின் (ஆசரிப்பு) நியமங்களையும், பரிசுத்தமான வாழ்வின் அவசியத்தையும் வலியுறுத்தினர். அதோடு, தசமபாகங்கள், உணவுகள், ஏழாம் வருடம், தேவையான பிரயாண பண்டிகைகள் போன்றவற்றின் நியமங்களும் முன் வைக்கப்பட்டன. பின்னர் மோசே சமுதாய சட்டங்களை எடுத்துக் கூறினார். இது நியாயாதிபதிகள், அரசர்கள், தீர்க்கதரிசிகள், யுத்தம், இராணுவம், அடைக்கலப் பட்டணங்கள்

போன்றவற்ரைக் குறித்த விதிகள் யலாம். சாத்தாள், ஆவிகள், மந்திரம், குறி சொல்லுதல் போன்ற பல்வேறு காரியங்கள் யாவும் கூறப்பட்டன. ஒவ்வொன்றோடும், இஸ்ரவேலர்” கீழ்ப்படியாமற் போகக் கூடிய சாக்குகளையும், தெளிவாகக் கூறினார். கடைசியாக சமூக, விடுப்பட்ட பிற சட்டங்களில் முதற்பேறானவனின் உரிமைகள், மணமுறிவு. மைத்துனி மறுமணம், முதற்கனிகள், நிலஉரிமை போன்ற பல குறிப்பிடப்பட்டுள்ளன. நாட்டை உளமுடன் வைத்திருக்க ஒரு முழுமையான ஆளுகைக்குத் தேவையான சட்டத் தொகுப்பை மோசே மக்களுக்குக் கொடுத்தார்.

அதிகாரங்கள் 26:16 – 34:12 – கடவுளின் தீர்க்கதரிசன வாக்குறுதி

 இனி மீந்திருப்பது மக்கள் உடன்படிக்கை – உறுதிப்படுத்திக் கட்டுப்பட்டு ஏற்றுக்கொள்ள வேண்டியது மட்டுமே. இதனால் அவர்கள் அதற்குக் கீழ்ப்படியும்போது, கிட்டும் சிலாக்கியங்களையும், ஆதாயங்களையும் அடைய முடியும்..

மக்கள் “ஆமென்” என்று (அப்படியே ஆகட்டும்) கூறி தங்கள் ஒப்புதலைப் தெரிவித்தனர். கடவுள் மோசேயின் மூலம் கூறினார். கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதம், கீழ்ப்படியாமைக்குச் சாபம் கிட்டும் என்ற நிபந்தனையை தனக்கும் தன் உடன்படிக்கை மக்களுக்கும் நடுவே வைத்தார். இந்த உடன்படிக்கை அந்த இளத்தார் மீது செயல்பட்டதை மீதியுள்ள பழைய ஏற்பாட்டில் காணலாம். கடவுளின் ஆசீர்வாதம்/சாபங்கள் நன்மைபயப்பன. மீண்டும் ஆண்டவர் அந்த நாட்டைக் குறித்த வாக்குறுதியை இஸ்ரவேலருக்கும் நினைப்பூட்டி, அவர்கள் தமக்குக் கீழ்ப்படிவதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென வலியுறுத்தினர்.”

மோசே பிரியா விடைபெறும்போது கூறிய உரையில்: 

  • கடவுனைக்குறித்து மக்களுக்கு நினைப்பூட்டினார்
  • யோசுவாவைப் பின்பற்றச் சொன்னார்
  • தங்கள் பொருத்தனைக்குச் சாட்சி வைத்தார் 
  • 12 வம்சத்தாரை ஆசீர்வதித்தார்.

மோசேயின் மரணமும், அவரது சிறப்பான பண்புகளும், அதிகாரம் 34-இல் பின்னர் இணைக்கப்பட்டது. ஒருவேளை யோசுவா இதை இணைத்திருக்கலாம்.

மையப்பொருள்/நோக்கம்

புதிய சந்ததியார், வாக்குப்பண்ணப்பட்ட நாட்டில் நுழையும் முன்னர் கடவுளிடம் அன்பு வைத்து, அவருக்குக் கீழ்ப்படிந்து, அவருக்கு ஏற்ற வகையில் வாழ வேண்டியதின் அவசியத்தை நினைப்பூட்டி மோவாபின் சமவெளியில் கடவுள் எவ்வாறு வலியுறுத்தினார் என்பதை மோசே உபாகமத்தில் எழுதி வைத்துள்ளார்.

பயன்பாட்டுக்குரிய செய்தி

தம் பிள்ளைகள் தம்மில் அன்புவைத்து. நமக்குப் பயந்து, தமது கட்டளைகட்ருக் கீழ்ப் படிய வேண்டுமென்று கடவுள் எதிர்பார்க்கிறார்; கீழ்ப்படிவோருக்கு வரும் நற்பலன்களையும், கீழ்ப்படியாதோருக்குக் கிட்டும் விளைவுகளையும் வாக்களித்தார்.

முக்கிய அதிகாரங்கள்

  • 5-10. கட்டளைகளை திரும்பக் கூறல்
  • 6. பெரிய சீமா
  • 8. கடவுளை மறப்பதற்குரிய எச்சரிக்கை
  • 12. பொதுவான மைய ஆராதனை இடம்
  • 17. இராஜாக்களுக்குரிய தடைகள் 18. உண்மையான தீர்க்கதரிசி
  •  19. அடைக்கலப் பட்டணங்கள் 
  • 24. திருமணம், மணமுறிவு
  • 28. ஆசீர்வாதம், சாபங்கள் 
  • 30. பாபிலோனிய அடிமைத்தனம்பற்றி முன்னறிவித்தல்

முக்கிய பகுதிகள்

  • 1:3-5
  • 4:1-2
  • 4:32-40
  • 6:1-9
  • 7:11-12
  • 7:1-9
  • 8:1-15
  • 8:10-20
  • 9:4-6
  • 17:14-20
  • 18:9-14
  • 18:15-21
  • 24:1-4
  • 28:1-2
  • 28:15
  • 29:29
  • 30:11-20

முக்கிய போதனைகள்

  • நாம் அவரில் அன்புகொண்டு, அவருக்குக் கீழ்ப்படியவேண்டும் என்பதே கடவுளின் முக்கிய கட்டளையாகும்.
  • கடவுளுக்குப் பயப்படுதல் என்பது அவருக்கு மதிப்புக் கொடுத்து, உயர்த்தி, ஆராதித்துக் கீழ்ப்படிவதேயாகும். 
  • கடவுள் கண்டிப்பான கீழ்ப்படிதலை எதிர்ப்பார்க்கிறார்.
  • கீழ்ப்படிதலுக்குரிய, நற்பலனைக் கடவுள் அளிக்கிறார். கீழ்ப்படியாமையின் விளைவுகளை அவரவர் ஏற்க வேண்டும்.
  • தமது வார்த்தையை பிறருக்கு நாம் போதிக்க வேண்டுமென கடவுள் விரும்புகிறார். 
  • வளம் பெருகும்போது கடவுளை மறப்பது எளிது.
  • வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் கடவுளின் பரிசுத்தத் தகுதியை நாம் பயன்படுத்த வேண்டும்.
  • கடவுளிடம் அன்பு கூருவதை நாம் கீழ்ப்படிதல் மூலம் காட்டவேண்டும்.
  • நாம் கீழ்ப்படிவதைத் தெரிந்து கொள்வதும், தெரிந்து கொள்ளாதிருப்பதும் நம் விருப்பமாகக் கடவுள் விட்டு வைத்துள்ளார். 
  •  கீழ்ப்படிவதற்கும், கீழ்ப்படியாமைக்கும் தனித்தனியே கூறப்பட்ட விளைவுகள் நிகழும்.
  •  கடவுள் எல்லாவற்றையும் நமக்கு வெளிப்படுத்தவில்லை. ஆனால் நமக்கு வெளிப்படித்திவைற்றிற்கு நாம் கீழ்ப்படியவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

தெரிந்துகொள்ளப்பட்ட தொடர்பான வேதபகுதிகள்

  • யோவான்  16:10
  • ஓசியா 13:4-8
  • மத்தேயு 4:1-10
  • மத்தேயு 19:1-11
  • மத்தேயு 22:34-40

சிறப்பு அம்சங்கள்

  • கடவுளிடம் அன்பு கூரு.
  • பெரிய கட்டளை (“சீமா”).
  • பத்துக் கட்டளைகளும் நியாயப்பிரமாணமும் திரும்பக் கூறப்படல்,
  •  இஸ்ரவேலர் கானானை வெல்ல கடவுள் ஏன் அனுமதித்தார்.
  • கடவுளை மறப்பதற்கு எச்சரிக்கை. மைய ஆராதனை இடம்.
  • அரசர்களுக்குத் தேவையானவை,
  • மந்திரம், ஆவிகளோடு பேசுதல், குறிகூறுதல் போன்றன கூடாது.
  • உண்மையான தீர்க்கதரிசியை அறிய சோதனை. 
  • மணமுறிவு, மறுமணம் செய்தல்.
  • மறைவானவை கடவுளுக்குரியன. 
  • ஆசீர்வாதம்/சாபங்களின் நோக்கம்.
  • கடவுளின் வார்த்தைகளை போதிப்பதின் முக்கியத்துவம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *