நித்திய ஜீவ வாழ்வு (நித்திய ஜீவன்)
நித்திய ஜீவ வாழ்வு என்றால் என்ன?
என்றென்றும் தேவனுடன் பேரானந்தத்தோடு நிறைவாக வாழ்வதை நிறைபேறுடை வாழ்வு என்கிறோம். இரட்சிப்படையும்போது இதைச் சற்று உணருகிறோம். அதன்பின்னர் வேதத்தியானத்திலும் ஜெபத்திலும் வாழ்க்கையின் பல கட்டங்களிலும் ஆவியானவரின் நிறைவை அனுபவிக்கும்பொழுதும் தேவனுடைய பிரசன்னத்தை உணரும்பொழுது பேரின்பத்தைச் சிறிது அனுபவிக்கிறோம் (சங்.16:11). மறுமையிலே கிறிஸ்துவின் நேரடிப் பிரசன்னத்தில் அவரைப்போன்று இருந்து அவரோடுகூட அரசாளும்பொழுது முழுவதுமாக இப்பேரின்ப வாழ்வை அனுபவிப்போம் (பிலி.3:21; 1 யோவா.3:2). வேறொரு வகையில் இதைக் கூறுவதென்றால் ‘கிறிஸ்துவை உடையவராகக் கிறிஸ்துவுடன் வாழ்வதே நித்திய ஜீவ வாழ்வு’ என்று கூறலாம். கிறிஸ்துவுக்கு ஒப்பாயிருப்போம் என்றும் இதைக் கருதலாம் (1 யோவா.3:2). இந்த வாழ்வைப்பற்றி முழுவதும் விளக்குவதற்கும் உணர்வதற்கும் இப்பொழுது முடியாது. தேவன் தம்மிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணியிருப்பவற்றைக் கண்கள் கண்டதுமில்லை, காது கேட்கவுமில்லை, மனிதருடைய இருதயத்தில் தோன்றியதுமில்லை. பரிசுத்த ஆவியானவர் மூலம் நமக்குத் தேவன்: வெளிப்படுத்தியுள்ளார் (1 கொரி.2:9-10).
பிதாவாகிய தேவனையும் அவர் அனுப்பிய கிறிஸ்துவையும் அறிவதே ‘நித்திய ஜீவன்’ என்று யோவா.17:3 கூறுகிறது. இயேசு கிறிஸ்துவை மூளை அறிவினால் மட்டுமின்றி இருதயத்தாலும் அறியும்பொழுது (இரட்சிக்கப்படும்பொழுது) அவரை அனுப்பிய பிதாவையும் அறிந்துகொள்கிறோம். இது கண்ணாடியில் நிழலாட்டமாய்ப் பார்ப்பது போன்றது. மறுமையிலே பிதாவையும் குமாரனையும் முகமுகமாய்க் கண்டு நோடியாகத் தேவனுடைய பிரசன்னத்தில் வாழப்போகிறோம் (1 கொரி.13:12). அந்தப் பேரின்ப வாழ்வு முழுமையான ‘நித்திய ஜீவள்’ ஆகும்.
‘நித்திய ஜீவன்’ (Eternal life, everlasting life) என்றால் எப்பொழுதும் வாழ்ந்துகொண்டிருப்பது என்று மட்டும் பொருள்படாது. ஏனெனில் நரகத்தில் தள்ளப்படுகிறவர்களும் அங்கு எப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருந்து வேதனைகள் (நித்திய ஆக்கினை) அடைவார்கள். எனவே இதை நிலையான வாழ்வு என்று தமிழாக்கம் செய்வதைவிட நித்திய ஜீவ வாழ்வு, என்றென்றும் பேறுடை வாழ்வு, என்றென்றுமான ஆசிகள் கொண்ட வாழ்வு என்று தமிழாக்கம் செய்யலாம். ஏனெனில் இது என்றென்றும் தேவனுடன் பேரின்பத்துடன் வாழும் பேறுடைய (ஆசீர்வாதமான) வாழ்வாகும்.
‘நித்திய ஆக்கினை’ (என்றென்றும் நீடிக்கும் தண்டனை)
‘நித்திய அக்கிளியில் தள்ளப்படுதல்’, ‘எரிநரகத்தில் தள்ளப்படுதல்’, ‘நித்திய ஆக்கினை அடைதல்’ என்று வேதத்தில் எழுதப்பட்டுள்ள யாவும் ஒரு மனிதன் இறுதியாக மிகவும் கொடிய நரகத்தில் தள்ளப்பட்டு, தொடர்ந்து வேதனையில் இருப்பதைக் குறிக்கின்றன, ‘நித்திய’ என்ற சொல் முடிவில்லாத காலமாக இந்த வேதனை தொடர்ந்து இருக்கும் என்பதைக் குறிக்கின்றது. சாத்தானின் இறுதி இடமான இந்த இடத்தில் (நரகத்தில்) இரவும் பகலும் தொடர்ந்து என்றென்றும் வேதனை அடைவதை வெளி,20:10 கூறுகிறது. இந்த இடத்திற்கு ஒரு கூட்டம் மக்கள் அனுப்பப்படுவதை மத்-2541; வெளி.20:15 இல் காண்கிறோம். நித்திய ஜீவ வாழ்வு அடைதல் என்பதும் தேவனுடைய அரசும் மாற்.9:45,47 மசனங்களை ஆராய்ந்து பார்த்தால் நிலைபேறுடை வாழ்வை அடைதல் என்பதும் தேவனுமடய அரசிற்குள் சென்றடைதல் (பிரவேசித்தல்) என்பதும் ஒன்றுதான் என்பது தெளிவாகத் தெரிகிறது. தேவனுடைய அரசிற்குள்ளே செல்ல முடியாதவர்கள் நரகத்திற்குச் செல்வார்கள் என்பதையும் இவ்வானங்கள் விளக்குகின்றன.
யாருக்கு நித்திய ஜீவ வாழ்வு இல்லை?
இக்கேள்வியும் யார் தேவனுடைய அரசிற்குள் சென்றடையமாட்டார்கள் என்பதும் யார் நாகத்திற்குள் தன்னப்படுவார்கள் என்பதும் ஒன்றுதான், மறுபடியும் பிறவாதவர்கள் (யோவா.3:3), நீரினாலும் ஆவியினாலும் பிறவாதவர்கள் (யோவா.3:5), பலவித பாவங்களில் வாழ்கிறவர்கள் (யோவா.5:29; கலா.5:19-21; 1 கொரி.6:9 10; வெளி.21:8), கர்த்தருடைய மக்களுக்கு உதவிகள் செய்யாதவர்கள் (மத் 25:41-46), நூய ஆவியானவருக்கு விரோதமாக அவதூறாகப் பேசுகிறவர்கள் (மாற்.3:28-29), இரட்சிப்பைக்குறித்து சுவளமற்றிருப்போர் (எபி.2:4), துன்மார்க்கர். தேவனை மறக்கிறவர்கள் (சங்.9:17) ஆகியோர் நிலைபேறுடை வாழ்வில்லாதவர்கள் ஆவர், இவர்களின் முடிவு நரகம்.
நிலைபேறுடை வாழ்வைப் பெறுவது எவ்வாறு?
பாவத்தில் வாழ்ந்துவரும் யாராயினும் அதை வெறுத்து மனந்திரும்பி கர்த்தராகிய இயேசுவை விகவாசிப்பதின் மூலம் மன்னிப்பையும் இரட்சிப்பையும் பெற்றுக்கொள்ளும்போது நித்திய ஜீவ வாழ்வுக்கு உரிமையுடையவராகிறார் (1 யோவா.1:7-9; யோவா.3:15-15,36; 5:24,40; 6:40). இயேசுவைத் தேவனுடைய குமாரன் என்று விசுவாசித்து அவருடைய திருப்பெயரால் நிலைபேறுடை வாழ்வை அடையவேண்டும். (யோவா.20:31).
பரிசுத்த ஆவியானவரின் அருள்மாரியைப் பெற்றுக்கொள்ளும்போது நித்திய ஜீவ வாழ்வு உண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி உரிமையுள்ளவர்களாகிறோம் (தீத்.3:6-7),
நித்திய ஜீவ வாழ்வு ஒரு ஈவு
நமது சொந்த முயற்சியால், நற்செயல்களால், தூய்மையாக வாழ்வதால் நிறைபேறுடை வாழ்வைப் பெற முடியாது. அது, தேவனுடைய கிருபையினாலும் இரக்கத்தாலும் இலவசமாக அருளப்படுகிறது (ரோ.5:23; தீத்.3:5-7). இயேசுவினாலே நித்திய ஜீவ வாழ்வு உண்டாயிருக்கிறது என்பதை வேதத்தின் பலபகுதிகள் கூறுகின்றன (யோவா.1:4; 3:36; 5:40; 6:27,35,53,54; 14:6; கொலோ.3:3-4; 1 தீபோ.1:15-16; 1 யோவா.5:11– 12). குமாரனாகிய கிறிஸ்துவை உடையவன் நித்திய ஜீவ வாழ்வு உடையவன் என்றும் அவர் இல்லாதவன் நித்திய ஜீவ வாழ்வு இல்லாதவன் என்றும் வேதம் கூறுகிறது (1 யோவா.5:11-12).
நிலைபேறுடை வாழ்வைக் குறித்து மத்.19:29; 25:46; யோவா.3:15-16,36; 5:24,29; 6:40,47,51: 12:25, 17:3; ரோம.2:7; கலா.6:8 ஆகிய வசனங்களையும் ஆராயலாம்.