யோசுவா கண்ணோட்டம்

யோசுவா சுருக்கம் 

வாக்களிக்கப்பட்ட நாட்டை சுதந்தரித்தல்

அமைப்பும், முக்கிய பிரிவுகளும்

24 அதிகாரங்கள்

3 முக்கிய பிரிவுகள்

அதிகாரங்கள் 1-5 – வெல்லுவதற்கு ஆயத்தம்

  • யோசுவாவுக்குக் கட்டளை
  • எரிகோபற்றி வேவுகாரர் அறிக்கை ராகாப்
  • யோர்தானைக் கடந்தது
  • கடவுளின் சேனைத் தலைவன்

அதிகாரங்கள் 6-12 – நாட்டை வெல்லுதல்

  • இராணுவ முகாம் 
  • எரிகோவில் வெற்றி 
  • பாவம், ஆவியில் முறியடிப்பு 
  • தென்பாக படையெடுப்பு 
  • வடபாக படையெடுப்பு
  • வெற்றி – இஸ்ரவேலுக்காக கடவுள் போரிட்டார்

அதிகாரங்கள் 13-24 – நாட்டைப் பங்கிடுதல்

  • 12 வம்சத்தாருக்கு நாடு பங்கிடப்பட்டது
  • சீலோவிலே பொது ஆராதனை இடம்
  • அடைக்கலப்பட்டணங்கள்
  • லேவியரின் பட்டணங்கள்
  • கானானியரை அவர்கள் முழுமையாக அழிக்கவில்லை 
  • யோசுவாவின் இறுதி உரை

முக்கிய மக்கள்

  • யோசுவா
  • ஆகான்
  • கடவுளின் சேனாதிபதி

முக்கிய வார்த்தைகள்

  • பலங்கொண்டிரு 
  • திடமனதாயிரு 
  • கீழ்ப்படி
  • முழுமையாக அழித்துவிடு

உள்ளடக்கத்தின் சுருக்கம்

அதிகாரங்கள் 1-5 – வெற்றிக்கென ஆயத்தப்படல்

புதிய சந்ததியாருக்கு நியாயப்பிரமாணமும், கடவுளின் வழிகளும் போதிக்கப்பட்டன. இப்பொழுது இஸ்ரவேவர் வாக்குத்தத்த நாட்டிக்குள் நுழைவதற்கெள் ஆயத்தம். தன்னுடைய மக்களின் தலைவனாக இருக்கும்படி அமர்த்தின யோசுவாவிடம் கடவுள் கூறினது

  • திடமனதாயிரு 
  •  பலங்கொண்டிரு
  • கீழ்ப்படியக் கவனமாயிரு

யோசுவாவுடன் கடவுள் இருப்பதாகவும், பெரிய வெற்றியளிப்பதாகவும் வாக்களித்தார். பின்னர் யோசுவா மக்களிடம் ஆயத்தப்படும்படி கூறினார். நிலைமையை வேவு பார்த்து வருவதற்கென இரண்டுபேரை எரிகோவுக்கு அனுப்பி வைத்தார். ராகாப் என்னும் பெண், வேசி இருவரையும் பிடிபடாதவாறு காப்பாற்றி, வெற்றிக்கு வழிவகுத்துக் கொடுத்தாள் (எபிரெயர் 11:13).

விசுவாசத்தினாலே அற்புதமாக அவர்கள் யோர்தான் நதியைக் கடந்தனர். இது மக்களுக்கு, எகிப்திலிருந்து வெளியேறி வரும்போது செங்கடலைக் கடந்த முந்தின அற்புதத்தை நினைவூட்டிற்று. மக்களைச் சுத்திகரிக்க பின்பு. ஆண்மக்கள் விருத்தசேதனம் செய்த பின்னர், தன் போராட்டத்தைத் தொடர யோசுவா கில்காலிலே ஆயத்தமானார். இதைச் செய்யும் முன்னர் கடவுள், கடவுளின் சேனாதிபதி மூலம் வெளிப்படுத்தி, யுத்தம் கடவுளுடையது எனவும், அவரே அதற்குப் பொறுப்பு எனவும் நிரூபித்துக் காட்டினார்.

அதிகாரங்கள் 6-12 நாட்டை வெல்லுதல்

யோசுவா யுத்த உத்திகளைக் கையாண்டு, இஸ்ரவேலர் அவர்களைத் துரத்த நாட்டின் நடுவேயுள்ள எரிகோவிலிருந்து ஆரம்பித்தார். பிளவுபடுத்தி வெற்றிகொள்வது எளிதாக இருந்தது. கோட்டை மதிலுள்ள எரிகோவை கடவுள் எளிதாக விழப் பண்ணினார். இதனால் கடவுளும் இஸ்ரவேலரும் நிலைத்திருப்பர் என்கிற தெளிவான செய்தி அத்தேசத்து மக்களிடம் பரவிற்று. எரிகோவின் ஆரம்ப வெற்றிக்குப் பின்னர், இஸ்ரவேலர் பரிசுத்தமாக இருக்க வேண்டும். கடவுளைச் சார்ந்திருக்க வேண்டும் என்பதை ஆயிபட்டணத்துத் தோல்வி ஆகாளின் பாவந்தால் வந்தது என்பதின் மூலம் உணர்த்தினது. பாலையத்திலிருந்து பாவம் நீக்கப்பட்ட பின்னர் ஆயிபட்டணம் பிடிபட்டது. பாவம் பெருகும்போது கடவுளால் ஆசீர்வதிக்க முடியாது என்கிற பாடத்தைக் கற்றுக்கொள்வது இஸ்ரவேலருக்குக் கடினமாயிருந்தது.

படையெடுப்பு முதலாவது தென்பாகத்தில் தொடங்கிற்று. கிபியோனியரின் உடன்படிக்கை, எமோரியரின் இராஜாக்களின் வீழ்ச்சியிலும் இது ஆரம்பமாயிற்று இதன் பின்னர் யோசுவாவும் இஸ்ரவேலரும் வடக்கே சென்று ஆரம்ப நிலையில் வெற்றி கண்டனர். அதிகாரம் 11:16-12:24 வரையில் இஸ்ரவேல் படை பெற்ற வெற்றிகளைக் காணலாம்.

அதிகாரங்கள் 13-24 – நாட்டைப் பங்கிடல்

இனி இருந்த காரியம் நாட்டைப் 12 கோத்திரங்களுக்குப் பங்கிடுவது மட்டுமே. இஸ்ரவேலர் யோசுவா மீது கொண்டிருந்த நம்பிக்கை, எண்ணாகம மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையைவிட மாறுபட்டது. யோர்தான் நதியின் கிழக்கே ரூபன், காத், மனாசேயின் பாதி கோத்திரத்தார் குடியேறிவிட்டனர். மீதியான 91/2 கோத்திரத்தார் யோர்தானில் மேற்குப் பகுதியிலே கானான் நாட்டிற்குள் குடியேறினர்.

யூதா கோத்திரத்தார் நாட்டின் தென்பகுதியிலே குடியேறினர். அதிலே எருசவேம் இருந்தது. காலேப்புக்கு எபிரோன் பட்டணம் கொடுக்கப்பட்டது. அடைக்கலப் பட்டணங்கள் நிறுவப்பட்டு, லேவியருக்கு 48 பட்டணங்கள் கொடுக்கப்பட்டன ஏனெனில் அவர்களுக்கு” சுதந்திரமாக வேறு நிலங்கள் கொடுக்கப்படவில்லை. ஒவ்வொரு வம்சத்தாருக்கும் ஒரு பகுதியைப் பங்கிட்டுக் கொடுத்து அதிலுள்ள மீதியான பாவமுள்ள கானானியரை முழுமையாக அழிக்கக் கட்டளையிடப்பட்டிருந்தனர். ஏளெனில் அவர்கள் மூலம் ஆவிக்குரிய கலப்படமும், சிலை வழிபாடும் இஸ்ரவேலருக்குள் ஏற்பட வாய்ப்பிருந்தது.

அதிகாரம் 24-இல் யோசுவா தன் இறுதியுரை நிகழ்த்தினார். அதிலே அவர் இன்று நீங்கள் யாரைச் சேவிக்கத் தெரிந்து கொள்வீர்கள்? கர்த்தரையா, அந்நிய தேவர்களையா? என்று சவால் விட்டுக் கேட்டார். இந்நூல் யோசுலாவின் மரணத்துடன் முடிவடைகிறது.

மையபொருள்/நோக்கம்

கடவுள் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவும், அந்நாட்டுக் குடிமக்களின் அக்கிரமத்திற்குத் தண்டனையனிக்கவும் யோசுவாவின் தலைமையின் கீழே இஸ்ரவேலர் எவ்வாறு அந்நாட்டை வெற்றிகொள்ள கடவுள் உதவினார் என்று யோசுவாவில் எழுதப்பட்டுள்ளது.

பயன்பாட்டுக்குரிய செய்தி

நாம் அவருக்குக் கீழ்ப்படிந்திருக்கும்போது கடவுள் தமது வாக்குறுதியின்படி நம்மை ஆசீர்வதித்து நிறைவேற்றுவதில் உண்மையுள்ளவராயிருக்கிறார்.

முக்கிய அதிகாரங்கள்

  • 2. வேவுகாரரும், எரிகோவின் ராகாபும்
  • 3. யோர்தானைக்கடந்து காளானுக்குள் செல்லுதல்
  • 5. கடவுளின் சேனை அதிபதி
  • 6. எரிகோவின் மதில்கள் இடிந்து விழுதல்
  • 7. ஆயியில் ஆகானின் பாவம்
  • 9. கிபியோனியரின் தந்திரமான உடன்படிக்கை 
  • 24. யோசுவாவின் இறுதி உரை

முக்கிய பகுதிகள்

  • 1:3
  • 2:8-11
  • 5:13-15
  • 7:4-13
  • 11:23
  • 21:43-45
  • 24:14, 15
  • 1:6-9
  • 3:14-17
  • 6:20
  • 10:9-15
  • 17:12-18
  • 23:14-16
  • 24:19-25

முக்கிய போதனைகள்

  • நாம் கீழ்ப்படியும் போது, கடவுளின் நோக்கத்தையும் நான் நிறைவேற்றக் கடவுள் நம்மைத் தகுதி படுத்துகிறார். 
  • கடவுளின் பிரசன்னமும், வல்லமையும் நம்மை பலங்கொண்டு திடமனதாயிருக்கச் செய்கிறது. 
  • கடவுளின் வார்த்தை நம் வாழ்விற்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
  • கடவுள் வாக்களித்ததை நிறைவேற்ற உண்மையாயிருக்கிறார்.
  • கடவுள் யாவற்றையும் ஆளுகிறவர். 
  • பாவம் பெருகும்போது கடவுள் ஆசீர்வதிக்க மாட்டார்.
  • பாவத்தின் ஈர்ப்பிலிருந்து நாம் நம்மை விலக்கிக் கொள்ளாவிடில் நாம் பாவ ஊழலிருந்து தப்ப முடியாது.
  • கடவுளுக்குக் கீழ்ப்படிவதா வேண்டாமா என்பதை நாமே தெரிவு செய்ய வேண்டும்.

தெரிந்துகொள்ளப்பட்ட தொடர்பான வேதபகுதிகள்

  • நியாயாதிபதிகள் 2:7-10
  • சங்கீதம் 1:1-3
  • மத்தேயு 1:5
  • அப்போஸ்தலர் 7:45
  • எபிரெயர் 13:5
  • யாக்கோபு 2:25

சிறப்புக் அம்சங்கள்

  • வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நாட்டை வெல்லுதல்.
  • யோர்தான் ஆற்றைக் கடந்த அற்புதம்,
  • கானான் நாட்டை 12 இனத்தாருக்குப் பங்கிடுதல். 
  • ராகாப் வேசியைக் கடவுள் பயன்படுத்தினார்.
  • கடவுள் உன்னோடு இருப்பார்.
  • கடவுளின் சேனை அதிபதி.
  • பலங்கொண்டு திடமனதாயிரு. 
  •  எரிகோவின் மதில்கள் வீழ்ந்தன.
  • ஆயியில் ஆகானின் பாவம்.
  • சூரியன் தரித்து நின்ற நாள், 
  • தம் வாக்கை நிறைவேற்றுவதில் கடவுளின் உண்மை.
  • நீங்கள் யாரைச் சேவிப்பீர்கள் என்பதை இன்று தெரிந்து கொள்ளுங்கள். 
  • நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம்.

Have any Question or Comment?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *