வரலாற்று நூல்கள்

வரலாற்று நூல்கள் 12

1. முன்னுரை

யோசுவாவின் தலைமையில் கி. மு. 1400-இல் கானான் நாட்டை வென்றது முதல் கி. மு. 430-இல் பழைய ஏற்பாட்டு இறுதியில் மக்கள் பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தது வரையுள்ள இஸ்ரவேல் மக்களின் இறையியல் வரலாற்றைக் கூறுவது இந்த வரலாற்று நூல்கள், ஏறத்தாழ இஸ்ரவேலரின் 1000 வருட வரலாறு இதிலே இணைக்கப்பட்டுள்ளது.

வரலாற்று நூள்கள் இரண்டு வேறுபட்ட பிரிவுகளில் அடங்கும். 

அ. சிறையிருப்புக்கு முந்தினவை (9 புத்தகங்கள்) கி. மு. 1400-586 வரை

1. கானானை வென்றது முதல் நியாயாதிபதிகள் வரை (3 புத்தகங்கள் கி.மு. 1400-1051

  • யோசுவா
  • நியாயாதிபதிகள்
  • ரூத் 

2. அரசர்கள் காலம் (6 புத்தகங்கள்) கி.மு. 1051-586

  • 1 சாமுவேல் 
  • 2 சாமுவேல்
  • 1 இராஜாக்கள்
  • 2 இராஜாக்கள்
  • 1 நாளாகமம்
  • 2 நாளாகமம்

ஆ. சிறையிருப்பின் பின் (3 புத்தகங்கள்) கி. மு. 538-400.

  • எஸ்றா 
  • நெகேமியா
  • எஸ்தர் 

வரலாற்று நூல்களைத் தொடர்ந்து வரும் 5 நூல்கள் பாட்டாகமங்கள் (யோபு தவிர, முற்பிதாக்கள் காலத்தே நிகழ்ந்தது) யாவும் சவுல். தாவீது, சாலமோன் காலத்து இணைந்த இராஜ்யத்தின் காலத்திற்குள் அடங்கும். பாட்டாகமங்கள் இணைந்த இராஜ்யத்தின் காலத்தே நிலவிய ஆவிக்குரிய உயர்வுகளைக் தூண்டும். தத்துவங்களைக் கூறும் வியாக்கியானங்கள் எனலாம்.

அடுத்துவரும் 17 தீர்க்சுதரிசன ஆகமங்கள் யாவும் உடைபட்ட இராஜ்யத்தின் காலத்தவை (கி.மு. 931-430) இவை அசீரியர், பாபிலோனியர் சிறைப்பிடித்ததின் ஆவிக்குரிய காரணங்களைப்பற்றிக் கூறுகின்றன. ஆகவே பழைய ஏற்பாட்டின் காலவரம்பு முன்னேற்றம், வரலாற்று நூல்களுடன் முடிவடைகிறது எனலாம்.

வரலாற்று நூல்களை நாம் படிக்கும்போது, கடவுள் தம் மக்களோடு செய்த உடன்படிக்கையை மனதிற் கொண்டு படிக்கவேண்டும். ஏனெனில் அதிலே அவர் கீழ்ப்படிவோருக்குரிய வாக்குறுதிகளையும், கீழ்ப்படியாதோருக்குரிய உபத்திரவங்களையும் குறிப்பிட்டுள்ளார். கடவுளின் மக்கள் செய்த பாவத்தின் விளைவாக 70 வருடம் பாபிலோளியரின் சிறையிருப்பில் இருந்தனர் (கி.மு.605-535) என்று வரலாற்று நூல்கள் கூறுகின்றன. கடவுள் தாம் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தினை நிறைவேற்றுவதில் இஸ்ரவேலச் உண்மையாயிராமற் போனாலும், அவர் உண்மையுள்ளவராயிருந்தார். சிறையிருப்புக்குப் பிந்தின வரலாற்று நூல்கள் கடவுள், பாவத்திற்கென நாட்டை தண்டித்த பின்னர், மீதியாயிருந்தவர்களை மீட்டுத் திரும்ப நாட்டிற்குக் கொண்டு வந்ததைப் பற்றி கூறுகின்றன.

Leave a Reply