தேவ சித்தத்தின் இரகசியம்

தேவ சித்தத்தின் இரகசியம்

எபேசியர் 1: 10

தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார்.

தேவ சித்தம் என்பது தேவன் தனக்குள் தீர்மானித்த ஒன்று ஆகும். பவுல் அதை தேவன் தனக்கு வெளிப்படுத்தினார் என்றும் தேவ சித்தம் என்பது ஒரு ரகசியம் என்றும் கூறுகிறார்.

தேவனுடைய சித்தம் இல்லாமல் அண்ட சராசரங்களில் ஒன்றும் நடைபெறாது. எனவே நம்முடைய வாழ்வில் தேவ சித்தம் என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நம்மிடத்தில் தேவனுடைய சித்தத்தை அறிந்து கொள்ளுவது மிகவும் குறைந்து காணப்படுகிறது.

தேவ சித்தத்தின் மூன்று உட்பிரிவுகள்

 1. தேவ ஆலோசனை
 2. தேவ தீர்மானம்
 3. தேவ திட்டம்

1. தேவ ஆலோசனை

தேவ ஆலோசனை என்பது தேவன் தமக்குள் அவருடைய ஆழ்மனதில்  யோசித்து ஆலோசனை செய்து முடிவெடுப்பார் அதையே தேவ ஆலோசனை என்கிறோம்.

2. தேவ தீர்மானம்

தேவன் தமக்குள் ஆலோசனை செய்ததை என்ன செய்ய வேண்டும் என்று பரலோகத்தில் உள்ள பரம சங்கத்தில் தீர்மானமாக கொண்டு வரப்படும் அதையே தேவ தீர்மானம் என்கிறோம்.

3. தேவ திட்டம்

தேவன் தனக்குள் ஆலோசித்து பரலோகத்தில் தீர்மானமாக கொண்டு வந்ததை பரலோகத்தில் உள்ள புத்தகத்தில் எழுதப்படும் அதுவே தேவ திட்டம் ஆகும். இப்படி எழுதப்பட்ட தேவ திட்டத்தை மீறி இந்த உலகில் ஒன்றும் நடைபெறுவது இல்லை.

தேவ சித்தம் என்பது

தேவ ஆலோசனை தேவன் தீர்மானம் தேவ திட்டம் ஆகிய இம்மூன்றும் சேர்ந்தது தான் தேவசித்தம் ஆகும். இது எழுதப்பட்டதற்குப் பிறகு எதுவும் மாறாது. எந்தெந்த காலங்களில் என்ன என்ன நடக்க வேண்டும் என்பது ஏற்கனவே தீர்மானமாக கொண்டுவரப்பட்டு எழுதப்பட்டுள்ளது. பூமியில் என்ன என்ன நடக்க வேண்டும் என்பது ஏற்கனவே எழுதப்பட்டு விட்டது அதை திருத்தவோ மாற்றவோ ஒருவருக்கும் அதிகாரம் இல்லை.

தேவ சித்தத்தை எப்படி விளங்கிக் கொள்வது

தேவ சித்தத்தின் சில பெயர்கள்

 1. தலைவிதி
 2. தலையெழுத்து
 3. தலை பிரமாணம்

1. தலைவிதி

வெளிப்படுத்தின விசேஷம் 4: 9

மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது,

வெளிப்படுத்தின விசேஷம் 4: 10

இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்கள் கிரீடங்களைச் சிங்காசனத்திற்குமுன்பாக வைத்து:

வெளிப்படுத்தின விசேஷம் 4: 11

கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள்.

சகலத்தையும் – என்றால் காணக்கூடியவை காணக்கூடாதவை எல்லாவற்றையும் குறிக்கும். அதைக் கீழே உள்ள வசனங்கள் தெளிவுபடுத்துகிறது.

கொலோசெயர் 1:15-18

15 அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். 

16 ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது. பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும், அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. 

17 அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது. 

18 அவரே சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர். எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர். 

 முந்தின பேறுமானவர் :- இதன் பொருள் எல்லாவற்றுக்கும் முதல்வர் அவரே.

அவரைக் கொண்டு :-  இதன் பொருள் எல்லா படைப்புக்கும் மூலப் பொருள் அல்லது மூல ஆதாரம் இவரே என்பதாகும். அவர் இல்லாமல் இந்த உலகில் ஒன்றும் தோன்றவில்லை.

ஆகவே தேவனை முந்தினவர் , முதல்வர் , தலைவர் , மூலப்பொருள் என்கிறோம். இவர் எழுதினது தான் தலையெழுத்து அதாவது தலைவர் எழுதின எழுத்து என்று பொருள். இவர் எழுதின புத்தகத்தை தான் தலைவிதி தலைப்பிரமாணம் என்று கூறுகிறோம். விதி என்றால் சட்டம் என்று பொருள்.

என்ன எழுதினார்

மாறாத பிரமாணம்

சங்கீதம் 148: 6

அவர் அவைகளை என்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நிலைக்கும்படி செய்தார்; மாறாத பிரமாணத்தை அவைகளுக்கு நியமித்தார்.

எபே 1:4-14

4 தமக்குமுன்பாக நாம் அன்பிலே பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே, 

5 பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்கு புகழ்ச்சியாக, 

6 தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார். 

7 அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது. 

8 அந்தக் கிருபையை அவர் சகல ஞானத்தோடும் புத்தியோடும் எங்களிடத்தில் பெருகப்பண்ணினார். 

9 காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்று, 

10 தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார். 

11 மேலும் கிறிஸ்துவின்மேல் முன்னே நம்பிக்கையாயிருந்த நாங்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு, 

12 தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே, நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம். 

13 நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்தஆவியால் அவருக்கள் முத்திரைபோடப்பட்டீர்கள். 

14 அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார். 

உலகத் தோற்றத்திற்கு முன் நம்மை தெரிந்து கொண்டார். காலம் நிறைவேறும் போது…. 

இரட்சிப்பின் திட்டம்

இரட்சிப்பின் திட்டம் கூட அவருடைய சித்தத்தின் படியே நடக்கிறது.

 • யோவா 15:5
 • தானி 2:21
 • சங் 119:91
 • வெளி 5:1-7 ; 22:9-10

எல்லாம் அவருடைய சித்தமே அதை மாற்ற ஒருவராலும் கூடாது.

தேவ சித்தத்தை விளங்கிக் கொள்ள மூன்று அடிப்படைத் தகுதிகள்

 • ஞானம் தேவை
 • தெரிந்துகொள்ளப்படுதல் தேவை
 • பிரபஞ்ச வேஷம் தரியாமை

ஞானம் தேவை

கொலோசெயர் 1: 9

இதினிமித்தம், நாங்கள் அதைக்கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம்பண்ணுகிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும்,

ஞானம் என்பது தேவனை அறிகிற அறிவை குறிக்கிறது. தேவனே ஞானமாக இருக்கிறார். தேவ சித்தத்தை அறிந்து கொள்ள ஜெபம் தேவை அந்த ஜெபத்தை செய்வதற்கு முன் ஞானம் பெற்று இருக்க வேண்டும்.

தெரிந்துகொள்ளப்படுதல் தேவை

அப்போஸ்தலருடைய நடபடிகள் 22: 14

அப்பொழுது அவன்: நம்முடைய முன்னோர்களின் தேவனுடைய திருவுளத்தை நீ அறியவும், நீதிபரரைத் தரிசிக்கவும், அவருடைய திருவாய்மொழியைக் கேட்கவும், அவர் உன்னை முன்னமே தெரிந்துகொண்டார்.

திருவுளத்தை – என்றால் உள்ளத்தில் விருப்பம் அதாவது சித்தம் என்பது ஆகும். தேவ சித்தத்தை அறிய அதனால் தான் தெரிந்து கொள்ள படுதல் அவசியம் ஆகும்.

பிரபஞ்ச வேஷம் தரியாமை

ரோமர் 12: 2

நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

தேவ சித்தத்தை அறிய வேண்டும் என்றால் நம்முடைய மனம் புதிதாக  வேண்டும் அப்பொழுதுதான் மறுரூபம் கிடைக்கும். இந்தப் பிரபஞ்சத்துக்குரிய சுபாவம் என்பது மாம்சத்தின் கிரியைகள். மாம்சத்தின் கிரியைகள் இல்லாமல் இருந்தால் மறுரூபம் ஆகி தேவ சித்தத்தை அறியலாம்.

மூன்று வித சித்தங்கள்

 • சுயசித்தம் 1 கொரி 7:37
 • மனுஷ சித்தம் 2 பேது 1:21
 • தேவ சித்தம் மத் 6:10

சுயசித்தம்

ஒரு மனிதன் தன்னைக் குறித்து தானே எடுக்கும் தீர்மானத்திற்கு சுயசித்தம் என்று பொருள்.

மனுஷ சித்தம்

ஒரு மனிதனைக் குறித்து மற்றொரு மனிதன் எடுக்கும் முடிவுகளுக்கு மனுஷ சித்தம் என்று பொருள்.

சுயசித்தமும் மனுஷ சித்தமும் தேவனுக்கு விரோதமான செயலாகவும் பாவமாகவும் காணப்படுகிறது.

தேவ சித்தம்

வேதம் பிதாவுடைய சித்தத்தையே தேவ சித்தம் என்று கூறுகிறது. பூமியில் (பூமிக்குரிய காரியங்களை) இயேசு கிறிஸ்துவும் பரிசுத்த ஆவியானவரும் செயல்படும்போது பிதாவினுடைய சித்தத்தையே செய்கின்றனர். பூமியில் இருக்கும் போது இயேசு கிறிஸ்துவும் பரிசுத்த ஆவியானவரும் தூதர்களும் பிதாவின் சித்தத்தை செய்கின்றனர் பூமியில் அவர்களுக்கு சுயசித்தம் என்பது இல்லை.

இயேசு கிறிஸ்து சுயமாக எதையும் செய்யவில்லை

யோவான் 6:38; 5:30; 8:26-28;

எபி 10:7

மத் 26:39

யோவான் 4:34

பரிசுத்த ஆவியானவர் சுயமாக எதையும் பேசவில்லை

யோவான் 16:13-15

ரோம 8:26-27

தூதர்கள் சுயமாக எதையும் செய்வதில்லை

சங் 103:20

மத் 6:10

வேதத்தில் உள்ள சித்தங்கள்

வேதாகமத்தில் 21 சித்தங்கள் கூறப்பட்டுள்ளது அவற்றுள் சில கீழே தருகிறோம்.

 1. எல்லா மனுஷரும் சத்தியத்தை அறிவது 1 தீமோ 2:4
 1. வசனத்தில் மறுபடியும் பிறப்பது அல்லது ஜென்ம சுபாவம் சாவது யாக் 1:18
 1. பரிசுத்தம் உள்ளவர்களாய் இருப்பது 1 தெச 4:3
 1. ஸ்தோத்திரம் செய்வது 1 தெச 5:18
 1. தீமைக்கு நன்மை செய்வது 1 பேதுரு 2:15
 1. பாலவருக்கு உரிய சுபாவம் மத் 11:25-26
 1. உயிர்த்தெழுதலில் பங்கடைவது யோவான் 6:39-40

முடிவுரை

 • யோவான் 9:31
 • லூக் 12:47

தேவ சித்தம் உள்ளதா என்று கண்டறியும் விதம்

 • சங் 119:165
 • ஏசாயா 26:3
 • எரே 29:11
 • யோவான் 14:27

This Post Has One Comment

Leave a Reply