நியாயாதிபதிகள் சுருக்கம்
இஸ்ரவேலரின் இருண்ட கால வரலாறு
அமைப்பும் முக்கிய பிரிவுகளும்
21 அதிகாரங்கள்
3 முக்கிய பிரிவுகள்
அதிகாரங்கள் 1-2 – ஆவிக்குரிய நிலைமை
பின்வாங்குதல்
- கானானியரின் ஒரு பகுதியை மட்டுமே விரட்டியடித்தனர்
- சிலைகளை வணங்கினர்
- கலப்புத் திருமணம்
- அந்நிய இனப்பழக்கங்களைக் கைக் கொண்டனர்
- கடவுளை மறந்தனர்
அதிகாரங்கள் 3-16 – ஏழு பாவ சுழற்சிகள்
கீழ்ப்படியாமை/விடுதலை
- பாவம் அடிமைப்படுத்திற்று
- இஸ்ரவேலர் கடவுளை நோக்கி அழுதனர்
- கடவுள் விடுதலையாளரை/ நியாயாதிபதிகளை எழுப்பினார்
- அமைதியான காலம்
- மீண்டும் பாவம் அடிமைப்படுதல்
அதிகாரங்கள் 17-21 – ஆவிக்குரிய வீழ்ச்சி
இயலாமை
- போட்டி ஆராதனை ஒழுக்கக் சீர்கேடு
- கள்ள உபதேசம்
- அமைதியான காலம்
- அவனவன் தன்தன் வழியே போனான்
முக்கிய மக்கள்
- ஒத்னியேல்
- தெபோராள்
- கிதியோன்
- யெப்தா
- சிம்சோன்
முக்கிய வார்த்தைகள்
- கடவுள் பார்வையில் பொல்லாப்பு
- விடுதலையளித்தார்
- உதவிக்கு அழுதனர்
- ஒடுக்கப்பட்டனர்
- அடிமைத்தளம்
- நியாயாதிபதி
உள்ளடக்கத்தின் சுருக்கம்
அதிகாரங்கள் 1-2 – ஆவிக்குரிய நிலை – வீழ்ச்சி
யோசுவாவின் மரணத்திற்குப் பின்னர், இஸ்ரவேல் கோத்திரத்தார் யாவரும் கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாமற் போயினர். அவர்கள் அந்நாட்டுப் பொல்லாத குடிமக்களை முழுமையாக அழிக்காமல் விட்டு விட்டனர். கானானியர் சிலை வணக்கமும் ஒழுக்கக்கேடும் உடையவராயிருந்தனர். அவர்களோடு திருமண உறவு கொண்டதினாலும், ஆவிக்குரிய வாழ்வில் நிர்விசாரமாய் இருந்ததினாலும், கீழ்ப்படியாமையினாலும், இஸ்ரவேலர் கானானியரின் பாவவழிகளுக்கு இடமனித்தனர் (ரோமர் 12:2; 2 கொரிந்தியர் 10:2), கானானியரின் தேவர்கள், இஸ்ரவேலர் கடவுளோடு நடக்கவேண்டிய ஆவிக்குரிய வழிக்கு இடறலாக இருப்பர் என்று கடவுள் உபாகமத்தில் முன்னுரைத்தபடியே, இது நடந்தது. மக்கள் பாவம் செய்து அதின் விளைவை அறுத்தனர்.
நியாயதிபதிகள் புத்தகத்தின் கருக்கம் அதிகாரம் 210-19-இல் பாலும், விடுதலை சுழற்சியாகக் கூறப்பட்டுள்ளது. சிலை வணக்கம், ஒழுக்கக்கேடு, கலப்புத் திருமண உறவு போன்றவை மக்களைக் கெடுத்து, பாவத்திற்கும், புறஜாதியாருக்கும் அடிமைகளாக்கிவிட்டது.
அதிகாரங்கள் 3-16 – ஏழு பாவகழற்சிகள் – கீழ்ப்படியாமை/விடுதலை
300 ஆண்டுகட்கும் மேலாக, இஸ்ரவேலின் கொடிய பாவம் – விடுதலை – பாவம் என்ற அழலில் மாறிமாறி தொடர்ந்து வீழ்ந்தனர். மீண்டும் மீண்டும் அதே கதை தொடர்ந்தது. இவ்வாறு ஏழு வகையான பாவ சுழல்கள் விளக்கப்பட்டுள்ளன (புத்தக அட்டவணை காண்க). அவ்வப் போது கடவுள் மக்களை பாவத்திலிருந்தும் நெருக்கத்திலிருந்தும் விடுவிக்க விடுதலையாளரை/ நியாயாதிபதிகளை எழுப்பினர். கொஞ்ச காலத்திற்கு மக்கள் மனந்திரும்பி, சமாதானத்தையும், விடுதலையையும் அனுபவித்தார். ஆனால் மீண்டும் அவர்கள் பாவத்தில் வீழ்ந்து, அந்நிய நாட்டவரால் துன்புறுத்தப்பட்டனர். மீண்டும் மீண்டும் இஸ்ரவேலர் கடவுளை நோக்கி உதவிக்கென முறையிட்டபோது, அவர் கிதியோன். சிம்சோன் போன்ற நியாயாதிபதிகளை எழுப்பினதின் மூலம் நாம் கடவுளின் இரக்கம், பரிவு, பொறுமை, சாந்தம் போன்ற பண்புகளைக் காண முடிகிறது. ஆயினும் இந்தப் பெரிய மனிதர்கள் தங்கள் ஆவிக்குரிய தகுதிக்கேற்ப நடவாததினால், சுழற்சி தொடர்ந்து கொண்டே வந்தது.
அதிகாரங்கள் 17-21 – ஆவிக்குரிய வீழ்ச்சி – ஒழுக்கச்சீர்கேடு
நியாயாதிபதிகளின் கடைசி 5 அதிகாரங்கள் இதற்குப் பிற்சேர்க்கையாகவுள்ளது. ஆகவே இதில் நியாயாதிபதிகள் காலத்தே நடைபெற்ற பல்வேறு தெரிந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள் கூறப்பட்டுள்ளன. இஸ்ரவேலரின் ஆவிக்குரிய நிலை தாழ்ந்து, மூழ்கி நிலைக்குத் தள்ளப் பட்டதைக் காணலாம். இங்கே கூறப்பட்டுள்ளவை யாவும் கட்டுக்கடங்காத பாவத்தின் விளைவுகள் எனலாம். அவனவன் தனக்குத் தோன்றினபடி நல்லது, கெட்டதைத் தெரிந்து கொண்டு, தனக்கென ஒரு ஒழுக்கநிலையைக் கையாண்டு வந்தான், இந்நூலின் முக்கிய வசனமாக நாம் கடைசி வசனத்தைக் கூறலாம்.
அந்நாட்களிலோ இஸ்ரவேவில் இராஜா இல்லை; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்து வந்தான் (21:25)
இந்தக் கருத்து உண்மை என்றாலும், அது முழுவதும் உண்மையல்ல. ஏனெனில் இஸ்ரவேலருக்கு பூமிக்குரிய இராஜா இல்லாவிடினும், ஒரு இராஜா இருந்தார். அவர் கடவுள் கடவுளுக்குக் கீழ்ப்படிவதற்குப் பதிலாக, அவனவன் தனக்குத்தாளே கடவுளாக இருந்தான். பாவத்தின் சாரம், கடவுளை விட்டுப் பிரிந்து தள்ளிச்சையாக வாழ்வது! (ஆதியாகமம் 3:1-4; ரோமர் 1:25) அராஜகம். குழப்பம். பாவம் போன்றவை இதன் முடிவு! நியாயாதிபதிகள் புத்தகம், சாமுவேல். இராஜாக்கள், நாளாகமம் போன்ற புத்தகங்களுக்கு வழிவகுத்தது எனலாம்.
மையப்பொருள்/நோக்கம்
இஸ்ரவேலரை சீர்திருத்தக் கடவுள் எவ்வாறு அந்நிய நாட்டவரைப் பயன்படுத்தினார். எனவும், இஸ்ரவேலர் மனந்திரும்பி, முறையிட்டபோது, கடவுள் எவ்வாறு அவர்களை விடுவித்தார் எனவும் காட்டுவதற்கென யோசுவாவிற்கும். சாமுவேலுக்கும் இடைப்பட்ட கால இஸ்ரவேலரின் வரலாற்றை ஆசிரியர் எழுதியுள்ளார்.
பயன்பாட்டுக்குரிய செய்தி
நாம் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல், நம்முடைய பார்வைக்குச் செம்மையானதை செய்வோமாகில், நாம் பாவத்திற்கு அடிமைப்பட்டு, அவதிப்படுவது உறுதி. மீண்டும் மனந்திரும்பி கடவுளிடம் கெஞ்சும்போது, அவர் விடுதலை தருவதை அனுபவிக்கலாம்.
முக்கிய அதிகாரங்கள்
- 2. கீழ்ப்படியாமை/விடுதலை சுழற்சியின் சுருக்கம்
- 4. தெபொராள், பாராக் மூலம் விடுதலை
- 6-8. கிதியோன், விடுதலையாள்/நியாயாதிபதி
- 13-16. சிம்சோன், விடுதலை வீரர்/நியாயாதிபதி
முத்திய பகுதிகள்
- 1:21
- 2:10-12
- 3:6
- 8:28
- 13:1
- 16:23-30
- 2:2-3
- 2:14-23
- 6:36-40
- 8:33-34
- 13:5
- 21:25
முக்கியட்போகளைகள்
- உலகின் பாவ பழக்கங்களோடு நெருங்கிய தொடர்பு கொள்வது கடவுளின் மக்களைக் கெடுத்துவிடும்.
- நாம் பாவத்திலிருந்து முற்றுமாக விலகியிருக்க வேண்டும்.
- கடவுளுக்குக் கீழ்ப்படியாமற் போவது தீய விளைவுகளைத் தரும்.
- கடவுள் சிலை வழிபாட்டையும், ஒழுக்கக்கேட்டையும் தண்டிப்பார்.
- கடவுள் தம் மக்களைப் பாவத்திற்கென சிட்சிப்பார்.
- உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடும் யாவருக்கும் கடவுள் பதிலளிக்கிறார்.
- நாம் மனந்திரும்பி அவரிடம் வரும்போது, கடவுள் நம்மைப் பாவத்தின் கட்டிலிருந்து விடுவிக்கிறார்.
- கடவுளின் இரக்கமும், பொறுமையும் அளப்பாகாது.
- கடவுள் தமது சித்தத்தை அவ்வப்போது வெளிப்படையாகவும் உறுதி செய்கிறார்.
- கடவுள் தம் மக்களைச் சீர்திருத்த மற்ற மக்களையும், சூழ்நிலையையும் பயன்படுத்துகிறார்.
- நாம் நம் பார்வைக்குச் செம்மையாய்த் தோன்றுகிறபடி செய்வோமாகில், நாம் கடவுளை புறம்பே தள்ளி, நம்மைக் கடவுளாக்குகிறோம். கடவுள் நம் வாழ்வில் ஆண்டவராக இல்லையெனில் நாம் ஆளுகிறோம்!
தெரிந்துகொள்ளப்பட்ட தொடர்பான வேத பகுதிகள்
- நெகேமியா 9:26-31
- அப்போஸ்தலர் 13:16-20
- எபிரெயர் 11:32, 33
- யாக்கோபு 1:27
சிறப்பு அம்சங்கள்
- பாவசுழற்சி – கீழ்ப்படியாமை/விடுதலை.
- நியாயாதிபதிகள்.
- கிதியோனின் தோல் சோதனை.
- கர்த்தரின் ஆவியானவர் தம் விடுதலையாளரை பலப்படுத்துதல்.
- தெபெராள் – பெண் நியாயாதிபதி.
- சிம்சோனின் பெரிய வல்லமை.
- அவனவன் தன்தன் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து வந்தான்.