ஒருமுறை இரட்சிக்கப்பட்டால் போதுமா?

ஒருமுறை இரட்சிக்கப்பட்டால் போதுமா?

‘ஒருமுறை பரம ஈவான மீட்பை அனுபவித்தவர்கள் எப்படி வாழ்ந்தாலும் இறுதியில் பரலோகத்தில் அனுமதிக்கப்படுவார்கள்’ என்று ஒருசிலர் கருதுகின்றனர். அவ்வாறு இல்லை என்று வேறுசினர் நம்புகின்றனர், இதைப்பற்றி வேதம் என்ன கூறுகிறது என்று காண்போம். முன்குறிக்கப்படுதல், தெரிந்துகொள்ளப்படுதல்

கீழே எழுதப்பட்டுள்ள வசனங்களைக் கவனமாகப் படியுங்கள். எந்தவொரு மனிதனும் பிதாவினால் இழுத்துக் கொள்ளப்படாவிட்டால் கிறிஸ்துவிடம் வர இயலாது (யோவா.6:37,44), அவ்வாறு வருகின்றவர்களைப் பிதா உலகத் தோற்றத்திற்கு முன்பே தெரிந்துகொண்டுள்ளார் (எபே.1:4-6; ரோம8:29-30). தேவன் தெரிந்து கொண்டவர்களை நீதிமான்களாக்குகிறார். யாரும் அவர்களை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்க முடியாது (ரோம.8:33-34), எதுவும் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு, தெரிந்து கொள்ளப்பட்டவர்களைப் பிரிக்கமாட்டாது (ரோம.6:35-39).

என்றும் பாதுகாப்பு

தமது மூலமாக தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்யும்படிக்குக் கிறிஸ்து எப்பொழுதும் உயிரோடிருக்கிறபடியால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயிருக்கிறார் (எபி.7:25), இயேசுவை விசுவாசிக்கிறவன் கெட்டுப்போவதில்லை (யோவா.3:16; 10:28), ஆக்கிளைக்குள்ளாகத் தீர்க்கப்படுவதுமில்வை (யோவா.3:18), வழுவாதபடி தமது மக்களைக் காப்பதற்குத் தேவன் வல்லவராயிருக்கிறார். அவர் அப்படியே செய்வார் (யூதா 24-25; 1 தெச.5:23-24), இறுதி மீட்புக்கு அச்சாரமாக ஆவியானவர் அருளப்பட்டுள்ளார் (எபே.114).

ஒருமனிதன் ஒருமுறை மீட்பைப் பெற்றுவிட்டால் அவன் நிச்சயமாகப் பரலோகம் சென்றடைவான் என்று இந்த வசனங்களிலிருந்து கருதப்படுகின்றது. மேலும் யோவா.1:12-13 இன்படி இயேசுவின் திருப்பெயரில் விசுவாசம்கொண்டு அவரை ஏற்றுக்கொண்டவர்கள் தேவனால் பிறந்தவர்கள் என்பதால் இவ்வாறு பிறந்தவர்கள் அதன்பின் எவ்வாறு வாழ்ந்தாலும் அவருடைய பிள்ளைகளாகவே இருந்து பிள்ளைகளின் உரிமையான பரலோக வாழ்வைப் பெறுவர் என்றும் பலர் கருதுகின்றனர்.

விசுவாசத்தினால் நீதிபாள் பிழைப்பான்

மீட்பைப் பெற்றுக்கொள்வதற்கும் கர்த்தரில் தொடர்ந்து வாழ்வதற்கும் விசுவாசமே அடிப்படையாகும். (யோவா.1:12; 3:15-16,18,36; 6:40; ரோம.1:17; 3:28; 4:5; கலா.3:11). விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம் (எபி.11:5).

பாவத்தில் விழும் விசுயாசிகள்

விசுவாசிகளாயிருப்பவர்கள் ஒருசில பாவங்களில், தவறுகளில் விழுவது நடக்கக்கூடியதே. பேதுரு மறுதலித்ததும் (லூக்.22:54-62) பேதுருவும் பர்னபாவும் சில யூதர்களும் மாய்மாலமாக நடந்துகொண்டதும் (கலா.2:11-13) வேதத்தில் கூறப்பட்டுள்ளன. இவ்விதம் பலவித பாவங்களில் தவறி விழுவதைப் பின்மாற்றம் என்று கூறுகிறோம். பின்மாற்றமாயிருப்பவர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து மனந்திரும்பி கர்த்தரிடம் பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பு கேட்கவேண்டும்; கர்த்தர் மளமிரங்கி அவர்களது பாவங்கள் யாவையும் மன்னிப்பார் (1 யோவா.1:8-10). நமக்கு, தாம், நம்முடைய என்று இவ்வானங்களில் எழுதியிருப்பதிலிருந்து, இதை எழுதிய யோவான் தன்னையும் சேர்த்து எழுதியிருப்பதால், விசுவாசிகளுக்கு இந்த வேதப்பகுதி பொருந்தும் என்பது தெளிவு. மேலும் விசுவாசியாயிருப்பவன் பாவம் செய்தால் கர்த்தராகிய இயேசு பிதாவினிடம் பரிந்துபேசுகிறார் (1 யோவா.2:1-2). இவ்வாறு நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான் என்றும் வேதம் கூறுகிறது (நீதி.24:16). விசுவாசி சத்தியத்தை விட்டுவிலகி மோசம்போகமுடியும், அவ்வாறு செய்கிறவள் நரகம் செல்ல (மரணமடைய) நேரிடும் என்று யாகி.5:19-20 இலிருந்து புரிந்துகொள்ளலாம். யாக்.5:19-20 குறிப்பு காண்க.

கர்த்தரிடம் பாவமன்னிப்பாகிய மீட்பைப் பெற்று வாழ்ந்த ஒரு மனிதன் பாவத்தில் விழுவதுமட்டுமன்றி தொடர்ந்து பாவத்தில் வாழ்ந்தால் சிறிது சிறிதாக விசுவாசத்தை இழந்துபோக நேரிடும் (1 தீமோ.119), முதலில் கொண்டிருந்த விசுவாசத்தை விட்டுவிட்டால் ஆக்கினைக்குட்பட நேரிடும் (1 தீனே.5:12). பண ஆசையினால் விசுவாசத்தை விட்டு வழுவிப்போகிறவர்களும் ஞானமென்று பொய்யாய்ப் பெயர் பெற்றிருக்கிற கொள்கை (தவறான அறிவியல் Sclence) கனைப் பின்பற்றி விசுவாசத்தை விட்டு வழுவிப்போனவர்களும் உண்டு (1 தீமோ.8:10,20-21), விசுவாசத்தை விட்டு வழுவிப்போனவனுக்குத் தேவனிடத்தில் பங்கு ஏது (எபி.11:6)?

இவ்வுலகப் பொருட்களின்மீது பற்று ஏற்பட்டதால் பவுலுடன் ஊழியம் செய்து வந்த தேமா (பிலே,24) பிரிந்து போனார் (2 தீமோ.4:10), உலக ஆசை தேவனுக்கு விரோதமான பகை என்பதால் இதன்மூலம் தேமா தேவனுக்குப்

பகைவனானார் (யாக்.4:4). சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு மளப்பூர்வமாகப்

பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால்..விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினை இருக்கும் (எபி.10:25-27),

நிலைத்திருக்கவேண்டும் என்ற நிபந்தளை

கீழ்க்கண்ட வசனங்களைக் கவனிக்க,

1. நல்லகனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு நெருப்பில் போடப்படும் (மத்-3:10), 

2. உப்பானது சாரமற்றுப்போளால் பயனற்றதாகும் (பத்.5:13)

3. மற்றவர்களுக்கு மன்னிக்கிறவர்களுக்கே மன்னிப்பு உண்டு (மத்.6:14-15), மன்னிப்பு பெற்றவன் பற்றவர்கனை மன்னிக்கத் தவறினால் தான் பெற்ற மன்னிப்பை இழந்துபோவான் (மத்.18:23-35).

4. தகப்பளையாவது தாயையாவது இயேசுளிலும் அதிகமாக நேசிக்கிறவன், தன் சிலுவையை எடுத்தும் கொண்டு கர்த்தரைப் பின்பற்றாதவள் தகுதியுடையவனல்ல (மத் 10:37-38).

5. வசனத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு பின்பு இடறலடையும் மக்கள் உண்டு (மத்.13:20-21). 

6. முடிவு பரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவாள் (மத்.10:22; 24:13).

7. கன்னிகைகளாயிருந்தபோதிலும் எண்ணெயை எடுத்து வராதவர்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. (பாத்.25:1-13).

8. தாலந்து பெற்ற ஊழியர், தான் பெற்ற தாலந்தைப் பயன்படுத்தாவிடில் நரகத்தில் தள்ளப்படுவர் (மத்.25:30).

9. கிறிஸ்துவில் நிலைத்திராதவன் வெளியே எறியுண்ட கொடியைப்போல உலர்ந்துபோவான். அப்படிப்பட்டவற்றை நெருப்பில் (அப்படிப்பட்டவர்களை நரகத்தில்) போடுவார்கள் (யோவா.15:5), 

10. ஜீவனுள்ள தேவளைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் இல்லாதபடிக்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பாவத்தின் வஞ்சனையினால் கடினப்பட்டுப் போகாமலிருக்கவேண்டும் (எபி.3:12-13).

11. பிள்வாங்கிப் போனவனாகக் காணப்படாதபடிக்குப் பயந்திருக்கவேண்டும் (எபி.4:1), பின்வாங்கிப் போகிறவன்மீது கர்த்தருடைய ஆத்துமா பிரியமாயிராது (எபி.10:38),

12. கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாதபடிக்கு ஜாக்கிரதையாயிருக்கவேண்டும் (எபி.4:11). 

13. ஜெயங்கொண்டு முடிவு பரியந்தம் கர்த்தருடைய செயல்களைக் கைக்கொள்வதின் முக்கியத்துவத்தை வெளி.2,3 அதிகாரங்களில் காணலாம். 

14. ஜீவபுத்தகத்திலிருந்து பெயரை நீக்குதல் உண்டு (வெளி.22:19).

15.மற்றவர்களுக்குத் தேவசெய்தி அளிக்கும் பவுலைப்போன்ற சிறந்த ஊழியரும் ஆகாதவனாய்ப் போகமுடியும் (1 கொரி.9:27),

மறுதலித்து நிந்திக்கிறவர்களின் நிலை

ஒருதரம் பிரகாசிக்கப்பட்டும் பரம ஈயை ருசிபார்த்தும் பரிசுத்த ஆயிலைப் பெற்றும் தேவனுடைய நல்வார்த்தைகளையும் இனிவரும் பலன்களையும் ருசிபார்த்தும் மறுதலிக்கிறவர்கள் இருக்க முடியும் என்பதற்கு எபி.6:4-6 உறுதியான சான்று ஆகும். இப்படிப்பட்டவர்கள் தேவனுடைய குமாரனை மீண்டும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால் மளந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிப்பது கூடாத காரியம் (எபி.5:4-6). நாகத்தில் தள்ளப்படுவதே (கட்டெரிக்கப்படுவதே) இவர்களின் முடிவு (எபி.6.6). இந்த நிலைக்கு வந்தவர்கள் துரோகிகளாவார்கள். தேவனுடைய குமாரனைக் காவின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தம் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அகத்தமென்று எண்ணி, நிருபையின் ஆவியை நித்திக்கிறவர்கள் இருக்கமுடியும் என்பதையும் அவர்களுக்குக் கொடிதாள ஆக்கினை உண்டு என்பதையும் எபி.10:29 தெளிவாகக் கூறுகிறது.

என்றென்றுமான பாதுகாப்பு உண்டா?

ஒரு மனிதர் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போது தேவனுடைய பிள்ளையாக, தேவனுடைய குடும்பத்தில் பிறக்கிறார் (யோவா.1:12-13) என்பதும் யாரும் அவர்களைத் தேவனுடைய கரத்திலிருந்து பறித்துக்கொள்ள முடியாது (யோவா.10:28-29) என்பதும் எதுவும் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு அவர்களைப் பிரிக்கமாட்டாது (ரோம.8:38-39) என்பதும் உண்மைதான். ஆனால் மனிதர் ஒவ்வொருவருக்கும் தங்கள் விருப்பப்படி நடந்துகொள்வதற்குத் தேவன் உரிமையளித்துள்ளார். அளித்த உரிமையை அவர் திரும்பப் பெறமாட்டார். எனவே எந்த நிலையில் கிறிஸ்துவுக்குள் இருக்கும் மனிதரும் தங்கள் சுய இச்சையினால் சிக்குண்டு பாவத்தில் விழுவதும் (யாக்.1114-16) பாவத்தை விரும்பித் தேவளைவிட்டு விலகிச்செல்வதும் நடக்க முடியும். அவ்வாறு தொடர்ந்து பாவத்தில் வாழ்கிறவர்கள் விசுவாசத்தைவிட்டு வழுவிப்போவார்கள். அவர்களில் சிலர் கிறிஸ்துவை நிந்தித்துத் துரோகியாவதற்கும் வாய்ப்பு உண்டு. அதாவது தேவன் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குத் தயாராக இருந்தபோதிலும் தேவளைவிட பாலத்தை நேசித்து தேவனை விட்டு விலகுகிறவர்களை அவர் கட்டாயப்படுத்தமாட்டார்.

தவறான நம்பிக்கை அழிவில் சேர்க்கும்

1) தேவாலயத்திற்குள் நுழையும் யூதரல்லாத அந்நியர் உடனடியாக மரணமடைவார்கள் என்றும் தாவீதின் பரம்பரையினரின் ஆட்சி தொடர்ந்து என்றென்றும் இருக்கும் என்றும் வேதம் கூறுவதால், யாரும் எருசலேமைக் கைப்பற்ற முடியாது என்று யூதர்கள் முழுமையாக நம்பினர். எனவே, எரேமியா போன்ற தீர்க்கதரிசிகள் கூறியதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பாவத்தை விட்டு மனந்திரும்பவுமில்லை.

இறுதியாக எருசலேம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. தேவாலயமும் தீக்கிரையாக்கப்பட்டது.

2) தகப்பனுக்குக் கீழ்ப்படிதல், பெரியோர்களை மதித்தல் போன்ற பல நற்பண்புகள் கொண்ட சவுல் (1 சாமு.9), தேவளால் புதிய இருதயத்தையும் (1 சாமு.10:9) தேவனுடைய ஆவியையும் (1 சாமு.10:10) பெற்றிருந்தபோதிலும் பின்மாற்றமாகி அஞ்சனம் பார்த்ததையும் மடிந்ததையும் வேதம் கூறுகிறது.

3) லோத்தின் மனைவி தேவதூதர்களால் அழிவிற்கு நீங்கலாக்கிக் காப்பாற்றப்பட்ட பின்பு திரும்பிப் பார்த்து உப்புத்தூணானதை வேதம் ஆதி.19:15-17,24-26 இல் கூறுகிறது. கிறிஸ்து இந்த உண்மையை வலியுறுத்தும்விதமாக லோத்தின் மனைவியை நிளைத்துக்கொள்ளுங்கள் என்று எச்சரித்துள்ளார். (லூக்.17:32).

4) எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்டு, மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் திருமுழுக்கு பெற்று ஞான ஆகாரத்தைப் புசித்த இஸ்ரவேலரில் பலர் காளான் தேசத்தைச் சென்றடையவில்லை என்ற உண்மை நமக்கு எச்சரிப்பாகப் புதிய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளது (1 கொரி.10:1-11).

இவ்வாறே, ‘நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன். எனவே, நாள் நரகத்திற்குச் செல்ல மாட்டேன்’ என்று கருதி

பாவத்தில் வாழ்கிறவர்களும் ஏமரந்துபோவார்கள். பின்மாற்றமாயிருந்து மடிந்தால் முடிவு பரிதாபம். தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன் (1 கொரி. 10:12).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *