திருச்சபையால் கவனிக்கப்பட வேண்டியவர்கள்
நாள் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன் (அப் 20:29,30)
- தலைமைக்கு எதிர்த்து நிற்கிறவர்கள் (1தீமோ 7:8; எண் 16:8,9)
- விமர்சிக்கிறவர்கள் (எண் 12:1.2)
- தரிசனத்திற்கு ஒத்துழைக்காதவர்கள் (நெகே 2:19)
- வார்த்தைக்கு எதிர்த்து நிற்கிறவர்கள் (2தீமோ 3:8)
- சத்தியத்திற்கு எதிர்த்து நிற்கிறவர்கள் (1பேது 2:8)
- ஊழியருக்கு எதிர்த்து நிற்கிறவர்கள் (அப் 16:6)
- செவிகொடுக்காதவர்கள் (அப் 7:51}
- விலகிப்போகிறவர்கள் (1தீமோ 6:10)
- சபையோடு ஒத்துழைக்காதவர்கள் (3யோவா 1:10)
- பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைப்போர் (2தீமோ 4:10)
- உலகத்திற்கேற்றார்போல் சிந்திக்கிறவர்கள் (மத் 16:23)
- ஆகாயத்தில் சிலம்பம்பண்ணுகிறவர்கள் (1கொரி 9:26)
- விசுவாசத்தைவிட்டு விலகுகிறவர்கள் (1தீமோ 6:21)
- வஞ்சிக்கிற ஆவிகளுக்கு இடங்கொடுத்தவர்கள் (1தீமோ 4:1)
- வேற்றுமையான உபதேசங்களுக்கு கீழ்ப்படிந்தவர்கள் (1தீமோ 1:3)
- தனக்குரியதைத் தேடுகிறவர்கள் (பிலி 2:4)
- அசையக்கூடியவர்கள் (1தெச 3:2)
- திசைமாறிப் பயணிக்கிறவர்கள் (நீதி 10:9)
- பாதைமாறிப் பயணிக்கிறவர்கள் (ஏசா 30:21)
- வழிவிலகிப் பயணிக்கிறவர்கள் (சங் 53:3)
- பிரயோஜனமில்லாதவர்கள் (பிலே 1:11)
- மாயம்பண்ணுகிறவர்கள் (கலா 2:13)
- ஏமாற்றப்படுகிறவர்கள் (1யோவா 3:7)
- இடறலை உண்டாக்குகிறவர்கள் (வெளி 2:14)
- மனிதரைப் பிரியப்படுத்துகிறவர்கள் (கலா 1:10)
- உணர்வடையாதவர்கள் (ரோம 1:21)
- முகஸ்துதி பண்ணுகிறவர்கள் (நீதி 29:5)
- பிரிவினைக்குக் காரணமாயிருக்கிறவர்கள் (அப் 6:1,2)
- கோள்சொல்லித் திரிகிறவர்கள் (லேவி 19:16)
- கலகத்தை உண்டுபண்ணுகிறவர்கள் (எண் 14:9)
- காரியங்களை மிகைப்படுத்திப் பேசுகிறவர்கள் (ரோம 12:3)
- தூற்றித்திரிகிறவர்கள் (நீதி 20:19: 1தீமோ 5:13)
- மயக்க நிலையிலிருப்பவர்கள் (2தீமோ 2:26)
- ஆவிக்குரிய தெளிவில்லாதவர்கள் (1பேது 5:8)
- ஆவிக்குரிய விழிப்பில்லாதவர்கள் (லூக் 21:36)
- ஜாக்கிரதையில்லாதவர்கள் (1பேது 4:7)
- எச்சரிப்பில்லாதவர்கள் (கொலோ 2:8)
- விவேகமில்லாதவர்கள் (மத் 24:45)
- ஞானமில்லாதவர்கள் (கொலோ 4:5)
- கவனமில்லாதவர்கள் (எபே 5:15)
- ஒருமனமில்லாதவர்கள் (1கொரி 11:18)
- சீக்கிரமாய் மனதில் காயப்படுகிறவர்கள் (நீதி 18:8)
- மற்றவர்களைக் காயப்படுத்துகிறவர்கள் (நீதி 26:22)
- ஆவிக்குரிய கண்கள் திறக்கப்படாதவர்கள் (2தீமோ 4:4)
- சத்தியத்தில் வேரூன்றாதவர்கள் (கொலோ 2:6)
- கனிகொடுக்காதவர்கள் (லூக் 13:7)
- உள்ளான மனிதனில் பெலப்படாதவர்கள் (எபே 3:16)
- கீழே வேர் பற்றாதவர்கள் (2இரா 19:30)
- பிரகாசமுள்ள மனக்கண்கள் இல்லாதவர்கள் (எபே 1:19)
ஊழியத்திற்குள்ளே இன்னொரு ஊழியமும், சபைக்குள்ளே இன்னொரு சபையும் செயல்பட சத்துரு முயற்சிக்கிறான்.
மனிதகுலத்திற்கு சுவிசேஷம் அறிவிப்பதே சபையினுடைய உன்னதமான நோக்கம்; சபையின் குறிக்கோளான இலக்கு எழுப்புதல்;
தேவ பிரசன்னத்தையும், அவரது மகிமையையும் அவருடைய ஜனங்களுக்கு வெளிப்படுத்துவது
அதன் கனி.
சபையில் பிழையான காரியத்தைத் துரிதமாய் கற்றுக்கொள்கிறவர்கள், சரியான காரியத்தை மெதுவாகக் கற்றுக்கொள்கிறார்கள்.
சபை மாத்திரம்
இல்லாதிருந்தால் என்றைக்கோ சாத்தான் இந்த உலகத்தை நரகமாக்கியிருப்பான் – ஸ்டான்லி ஜோன்ஸ்
சபைக்குள் உட்கார்ந்துகொண்டு சொகுசு வீட்டில் அங்க அசைவு எதுவுமின்றி ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதைப்போல் வாழும்படி இயேசு நம்மை அழைக்கவில்லை:
இந்த உலகத்தையே மாற்றவேண்டிய மிகப் பிரமாண்டமான வேலைக்காக
நம்மை அழைத்திருக்கிறார் – ரெயினார்டு போங்கே