தேவ சபை
பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது. அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள் (அப் 2:1)
எக்ளீசியா என்ற கிரேக்க வார்த்தை தமிழில் சபை என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது இரண்டு கிரேக்க வார்த்தை களின் கூட்டாகும். இதற்கு வெளியே அழைக்கப்பட்டவர்கள் என்று அர்த்தம், தேவனின் சிறப்பான நோக்கத்தை பூமியில் நிறைவேற்று வதற்காக அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் கூட்டமே சபையாகும். சபை என்பது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் தமது விலையேறப்பெற்ற இரத்தத்தை நமக்காக சிந்தி சம்பாதித்த சகோதர ஐக்கியமாகும். இதை மணவாட்டி என்றும் வேதம் அழைக்கிறது (யோவா 3:29, வெளி 19:7:22:17). கிறிஸ்துவின் சரீரமாகச் செயல் பட்டு அவருடைய உன்னதமான நோக்கங்களை இப்பூமியில் நிறை வேற்றும்படி பிரித்தெடுக்கப்பட்டு கிறிஸ்துவோடு ஒன்றாக இணைக் கப்பட்ட ஜனக்கூட்டம்தான் சபையாகும்.
சபையானது கிறிஸ்துவின் அன்பினை அனுபவிப்பதற்கு இயன்ற ஐக்கியத்தின் இடமாகவும், ஜளங்களை சத்தியத்தினால் கட்டியெழுப்பும் உயிரோட்டம் மிகுந்த போதனைகள் கொடுக்கப்படும். இடமாகவும், பரிசுத்தத்தின் மகிமையை உணர்கின்ற இடமாகவும், ஒருவரையொருவர் தாங்கி ஊக்குவித்து உதவுகின்ற இடமாகவும் இருக்கிறது. சபையானது இயேசுகிறிஸ்து மாதிரியாய்ப் பின்வைத்துப் போன வழிகளில் நடந்து, ஜனங்களை அவருடைய வழிகளில் நடத்தும் சிறந்த தரிசனமும், கரிசனையும் கொண்ட உத்தரவாதமுள்ள மேய்ப்பர் களைக் கொண்டிருக்க வேண்டும். அத்துடன் அவர்கள் கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தப்படுத்தும் போதனைகளைத் தந்த சரியான சத்தியத்தில் ஜனங்களை நடத்துவதற்கு அறிந்திருக்க வேண்டும்.
மனுக்குலத்திற்காகத் தேவன் ஏற்படுத்தின மிகவும் பிரம்மாண்ட மானதும், மகத்துவமானதுமான திட்டம்தான் திருச்சபை, மனுக்குலம் பாவத்தின் சாபம் மற்றும் தண்டனையிலிருந்து பரிபூரண விடுதலை பெற்று தேவனோடு நல்லுறவு வைத்துக்கொள்ள, தேவனை அறிகிற அறிவில் தேறினவர் களாக மாற திருச்சபையை தேவன் உருவாக்கி யுள்ளார். இந்த திருச் சபையின் தலைவராக, தலைமையாக தேவன் இருக்கிறார் (எபே 4:11-15; கொலோ 1:10,28).
திருச்சபை என்பது…
- ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து வேத வாக்கியங்களின்படி மரித்து அடக்கம் பண்ணப்பட்டு உயிர்த்தெழுந்தார் என்ற கடந்தகால நிகழ்வை உறுதிப்படுத்துகிறது (1கொரி 15:3,4)
- ஆண்டவராகிய இயேசு இன்றும் நம்மோடு இருக்கிறார் என்ற நிகழ்கால நம்பிக்கையை அறிக்கை செய்கிறது (மத் 28:20)
- ஆண்டவராகிய இயேசு மறுபடியும் தமது இராஜ்யத்தின் மகிமை யோடு வரப்போகிறார் என்ற எதிர்கால எதிர்பார்ப்பை வெளிப் படுத்துகிறது (மத் 16:27)
இம்மூன்று கால கட்டத்தில் நடந்து முடிந்த, நடந்து கொண் டிருக்கும் மற்றும் நடக்கவிருக்கிறதை அறிக்கை செய்வது திருச்சபை. மேலும் திருச்சபை என்பது ஒரு கட்டிடமல்ல; திருச்சபை என்பது ஒரு குறிப்பிட்ட அமைப்போ, ஸ்தாபனமோ அல்ல: திருச்சபை என்பது விசுவாசிகளின் சங்கமமம், ஐக்கியம், ஜெபக்கூடுகை மற்றும் இயேசுவின் மரணம், உயிர்த்தெழுதல், புது உடன்படிக்கையின் அடையாளத்தைப் பறைசாற்றும் சாட்சி பாசறையாகும் (அப் 2:42-47). இயேசுவின் மரணத் தையும், உயிர்த்தெழுதலையும் விசுவாசித்து சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்களின் அன்பின் சங்கமம், சீஷர்களின் தலைமைத் துவத்தில் இணைக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டதுதான் முதல் திருச்சபை. இதின் தொடர் ஊழியத்தின் வழியாக சீஷர்கள் பல்வேறு தேசங் களுக்குக் கடந்து சென்று சுவிசேஷத்தைப் பரப்பி திருச்சபைகளை நிறுவினர். நமது இந்திய தேசத்தில் சீஷன் தோமா மற்றும் பலர் வருகை புரிந்து சுவிசேஷத்தைக் கூறினதினிமித்தம் திருச்சபை உருவானது.
நம் இந்திய தேசத்தில் திருச்சபை நிறுவும் பணி அமைதி யாகவும், ஆழமாகவும் பரவியது. இயேசுவை சொந்த இரட்சகராக ஜனங்கள் ஏற்றுக்கொள்ள முன்வந்தனர். தேவன் சுவிசேஷத்தைப் பரப்புவதற்கு சூழ்நிலைகள் எதிரிடையாக இல்லை என்பதை நிரூபித்தார். தேவ சித்தத்தின்படி அமைக்கப்பட்ட திருச்சபை நிறுவுதல் பணி தேவ ஊழியர்களால், தேவனின் வழிநடத்துதலின்படி அகில உலகெங்கும் பரவி இன்றும் மகிமையாய் வளர்ந்து கொண்டிருக்கிறது.
புதிய ஏற்பாட்டில் சபை என்ற பதம்…
- மத்தேயு நற்செய்தி நூலில் 2 முறை வருகிறது.
- அப்போஸ்தலர் நடபடிகளில் 24 முறை வருகிறது
- பவுலின் நிருபத்தில் 58 முறை வருகிறது.
- எபிரேயர் நிருபத்தில் 2 முறை வருகிறது.
- யாக்கோபு நிருபத்தல் 1 முறை வருகிறது.
- யோவானின் நிருபங்களில் 3 முறை வருகிறது
- வெளிப்படுத்தின விசேஷத்தில் 19 முறை… என மொத்தம் புதிய ஏற்பாட்டில் 114 முறை சபை என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது.
கிறிஸ்துவுக்கும் சபைக்கும் இடையேயான நட்புறவு…
- கிறிஸ்து இயேசு சபையைக் கட்டினார் (மத் 16:18)
- கிறிஸ்து தமது சபைக்குச் சொந்தக்காரர் (மத் 16:18)
- கிறிஸ்து தம் சுய இரத்தத்தினால் சபையை வாங்கினார் (அப் 20:28)
- கிறிஸ்து சபைக்கு இரட்சகராயிருக்கிறார் (எபே 5:23; கொலோ 1:18)
- கிறிஸ்து சபைக்கு தலையாயிருக்கிறார் (எபே 5:23)
- கிறிஸ்து சபையை அன்புகூருகிறார் (எபே 5:25)
- கிறிஸ்து சபைக்காக மரித்தார் (எபே 5:27)
- கிறிஸ்து சபையை பரிசுத்தமாக்குகிறார் (எபே 5:26)
- கிறிஸ்து சபைக்கு வல்லமையைத் தருகிறார் (மத் 16:18; லூக் 9:1)
- கிறிஸ்து இரட்சிக்கப்படுகிறவர்களை சபையில் சேர்க்கிறார் (அப் 2:47)
- கிறிஸ்து சபையில் அற்புதங்களை நடப்பிக்கிறார் (அப் 15;4)
- கிறிஸ்துவின் மணவாட்டியாய் சபை இருக்கிறது (வெளி 19:7-9}
சபையின் ஒழுங்குகள்…
- வேத வசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களை முதலாவது எச்சரித்து பின்னர் அவர்களைக் கடிந்துகொள்ள வேண்டும். உண்மையாகவே. அத்தவறுகளை செய்திருப்பாரெனில் தனிப்பட்ட நிலையில் அவர் களை அழைத்து எச்சரிக்க வேண்டும் (2தெச 3:14; நீதி 1:1314).
- எச்சரித்தபின்பும் சத்தியத்திற்குக் கீழ்படியாமல் மீறி நடப்போரை சபை ஐக்கியத்தை விட்டு புறம்பாக்குவது நல்லது. அதே சமயம் சபையின் மற்ற அங்கத்தினர் அத்தகைய நபரிடமிருந்து தங்களது ஐக்கியத்தை விலக்கிக்கொள்வது நல்லது (1தீமோ 6:3-6).
- இதற்குப் பின்பும் அவர்களில் ஒரு மாற்றமும் காணப்படவில்லை. யானால் அப்படிப்பட்டவர்களை முழுவதுமாய் ஐக்கியத்திலிருந்து விலக்கி விட வேண்டும் (தீத்து 3:10: கலா 1:6; மத் 18:17),
- இதுபோன்ற சபைக்கு புறம்பாக்குதலானது தவறு செய்த நபர் மனத் திரும்பாதவரைக்கும் நீடிக்கும். மெய்யாய் மனந்திரும்பி வந்த இளையகுமாரனை தகப்பன் ஏற்றுக் கொண்டதுபோல தவறு செய்தவர் தவறை உணர்ந்து மனந்திரும்பி வரும்போது மனப்பூர்வமாய் ஏற்றுக்கொள்ள வேண்டும் (லூக் 15:12-24; 2கொரி 2:5-11).
சபையில் முக்கியத்துவம் பெறவேண்டிய அம்சங்கள்…
- ஆடல் முக்கியமல்ல: அர்ப்பணிப்பே முக்கியம்.
- விதிமுறைகள் முக்கியமல்ல; வேதமுறைமைகளே முக்கியம்.
- மக்கள் விருப்பம் அல்ல; தேவ சித்தமே முக்கியம்.
- விசுவாசிகள் முக்கியமல்ல: சீஷர்களே முக்கியம்.
- எண்ணிக்கை முக்கியமல்ல: மறுரூபமே முக்கியம்.
- மனித பாராட்டுகள் முக்கியமல்ல: தேவ பயமே முக்கியம்.
- திறமைகள் முக்கியமல்ல: தேவ கிருபையே முக்கியம்.
- ஆளுகை முக்கியமல்ல; தேவ அன்பே முக்கியம்.
- பரவசம் முக்கியமல்ல: தேவ பாரமே முக்கியம்
மேலும் திருச்சபையானது…
- ஜெப வீடாயிருக்க வேண்டும் (மத் 21:23)
- ஜெயத்தின் வீடாயிருக்க வேண்டும் (ரோம 8:37:1கொரி 15:57)
- அன்பின் வீடாயிருக்க வேண்டும் (1யோவா 4:16)
- ஆறுதலின் வீடாயிருக்க வேண்டும் (2கொரி 7:7)
- குணமாக்கும் வீடாயிருக்க வேண்டும் (லூக் 13:16)
- விடுவிக்கும் வீடாயிருக்க வேண்டும் (மாற் 2:10)
- சாட்சியின் வீடாயிருக்க வேண்டும் (லூக் 10:38-42)
- அன்பை விளங்கப்பண்ணும் வீடாயிருத்தல் (யோவா 11:3,4)
- கைவிடப்பட்டவர்களை விசாரிக்கும் வீடாயிருத்தல் (யாக் 1:27)
- ஒருவருக்கொருவர் புத்திச்சொல்லும் இடமாயிருத்தல் (எபி 10:25)
- உத்தம் விதவைகளுக்கு உதவும் இடமாயிருத்தல் (1தீமோ 5:18)
- சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருத்தல் (1தீமோ 3:15}
- இயேசுகிறிஸ்துவுக்குள்ளிருத்தல் (2தெச 1:1)
- கிறிஸ்துவினிமித்தம் பாடுகளைச் சகித்தல் (1தெச 2:14)
- நன்றியறிதலுள்ளவர்களாயிருத்தல் (ரோம 16:4; கொலோ 3:15)
- நல்நடக்கையுள்ளவர்களாயிருத்தல் (1கொரி 4:17; 1பேது 2:12)
- தேவனைத் துதித்து மகிமைப்படுத்துதல் (அப் 2147)
- பக்திவிருத்திடையும் சபையாயிருத்தல் (அப் 9:31)
- கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடிருத்தல் (அப் 9:31)
- பரிசுத்த ஆவியின் ஆறுதலோடு நடந்து பெருகுதல் (அப் 9:31)
- ஊக்கத்தோடு ஜெபம்பண்ண வேண்டும் (அப் 12:5)
- விசுவாசத்தில் ஸ்திரப்பட வேண்டும் (அப் 16:5)
- நாளுக்குநாள் வளர்ந்து பெருக வேண்டும் (அப் 16:5)
- பிரிவினையற்றதாயிருக்க வேண்டும் (1கொரி 1:10; 11:18)
- கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிய வேண்டும் (எபே 5:24}
- கறைதிரையற்றதாயிருக்க வேண்டும் (எபே 5:27)
- பரிசுத்தமும் பிழையற்றதுமாயிருக்க வேண்டும் (எபே 5:27)
வேதத்தில் திருச்சபை…
- உயிர்மீட்சியடைந்த திருச்சபை (அப் 2:42-47)
- உணர்வுள்ள திருச்சபை (அப் 2:37)
- உறவுள்ள திருச்சபை (அப் 2:42-44)
- உற்சாகமூட்டும் திருச்சபை (அப் 14:22)
- உபயோகிக்கும் திருச்சபை (அப் 13:23; 1கொரி 12:11)
தரமான திருச்சபையின் அடையாளம்…
- கிறிஸ்துவின் அன்பால் நிரப்பப்பட்டவர்களின் சபை (ரோம 5:5;)
- ஒருவரை ஒருவர் அன்பால் தாங்கும் சபை (எபே 4:2; கொலோ 3:13)
- ஒருவரையொருவர் அன்பினால் விசாரிக்கும் சபை (எபி 10:24,25)
- ஏழை பணக்காரன், கற்றவர் கல்லாதவர், உயர் குலம் தாழ்ந்த குலம், முதலாளி தொழிலாளி வேற்றுமையில்லாத சபை (கலா 3:28)
- அனைவரையும் சம அந்தஸ்துடன் நடத்தும் சபை (1கொரி 12:13)
- திக்கற்றோர், விதவைகளை விசாரிக்கும் சபை (யாக் 1:27)
- இல்லாதவர்களையும், ஊனமுற்றோர்களையும் பராமரிக்கும் சபை (1கொரி 12:23-25; ரோம 15:1)
- ஏழைகளை கரிசனையுடன் விசாரித்து தேவைகளை சந்திக்கும் சபை (கலா 2:10)
- அனைவருக்கும் கற்றுக்கொள்ளவும், தேறவும் வாய்ப்பளிக்கும் சபை (1கொரி 14:30,31; கொலோ 1:28; 4:12)
- அனைவரையும் கிறிஸ்துவின் நிறைவான வளர்ச்சிக்குள் நடத்த தேவையான அப்போஸ்தலர், தீர்க்கதரிசி, சுவிசேஷகர், மேய்ப்பர் போதக ஊழியம் உள்ள சபை (எபே 4:11-15)
- ஒருவொருக்கொருவர் புத்தி சொல்லும் சபை (ரோம 15:14:எபி 10:23-25)
- ஒருவொருக்கொருவர் ஊழியம் செய்யும் சபை (கலா 5:13)
- ஒருவொருக்கொருவர் கீழ்ப்படிந்திருக்கும் சபை (எபே 5:21; 1பேது 5:53
- ஒருவரையொருவர் தேற்றும் சபை (1தெச 4:18; 5:11,14)
- ஒருவரையொருவர் உபசரிக்கும் சபை (1பேது 4:9)
- ஒருவொருக்கொருவர் மனத்தாழ்மையுடன் கால்களையும் கழுவும் மனம் உடையவர்களின் சபை (யோவா 13:13-15)
- ஒருவொருக்கு ஒரு குறைவுயென்றால், பெலவீனம் என்றால் மற்றவர்கள் உதவும் சபை (1கொரி 12:26; ரோம 15:1)
- தனக்குள்ளதை தன்னுடையது என்று சொல்லாமல் மற்றவர் களுடன் பகிர்ந்துக் கொள்ளும் சபை (அப் 5:32)
- சகோதரருக்காய் உதவும் சபை (1யோவா 3:16)
- மனத்தாழ்மையுடன் தேவனை சேவிப்போரின் சபை (அப் 20:19)
- பிறரை தன்னிலும் மேன்மையாக கருதுவோரின் சபை (பிலி 2:3)
- சிறுவர் வாலிபரை கண்ணியமாய் நடத்தும் சபை (மாற் 10:13-16)
- முதியோர்களை கனம் பண்ணும் சபை (1தீமோத 5:1; 1பேது 515)
- திருவசனத்திலும், உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை இரட் டிப்பான கனத்துக்குரியவர்களாக நடத்தும் சபை (1தீமோ 5:17)
- ஏக மனம், ஏகசிந்தை உடையவர்களின் கூடுகை (அப் 4:32)
- ஒரே நோக்கம், விசுவாசம், அறிவுடையவர்களின் சபை (எபே 4:4,5,11)
- கபடு, வஞ்சனை, பொறாமை இல்லாத சபை (எபே 5:31. கொலோ 3:8)
- சாந்தம், மனத்தாழ்மை, மன்னித்தல், நீடிய பொறுமை போன்ற திவ்விய சுபாவங்களில் இயேசுவை பிரதிபலித்தல் (ரோம 8:29)
- உலகமுழுதும் சகல சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதில் அனைவரின் ஈடுபாடு (லூக் 24:47; அப் 2:46:8:4; ரோம 15:18)
- ஆவியின் வரங்கள் எல்லாம் நிறைவாய் உள்ள சபை (1கொரி 117)
- தவறுகளை அன்புடன் சுட்டிக்காட்டி சீர்படுத்தும் சபை (2தீமோ 2:26)
- சபை ஐக்கியத்தை உடைக்கிறவர்கள்மேல் அன்புடன் கண்டிப்பான நடவடிக்கைகளை எடுக்கும் சபை (1கொரி 5:11-13: 2தெச 3:6)
- பெரும்பாலும் எல்லா சபை கூடுகையிலும் திருவிருந்தும், ஐக்கிய உணவும் பரிமாறும் சபை (அப் 2:40; 1கொரி 11:33)
- ஒரு மனிதனையோ, சபையின் கோட்பாடுகளையோ துதியாமல் தேவனை மட்டும் உயர்த்தும் சபை (அப் 4:30: பிலி.2:9-11)
- சபையின் அசையும், அசையா சொத்துக்களை ஸ்தாபனங்களோ, தனிமனிதனோ நிர்வகிக்காமல் அந்த அந்தந்த ஊர் சபையாரே நிரவாகிக்கும் சபை (அப் 14:23)
- பாவம், சாபம், வியாதி, வறுமை, அநீதி போன்ற பிசாசின் கிரியை களை ஜெயித்து வாழ தேவையான கிருபையின் பிரமாணத்தை போதிக்கும் சபை (எபி 10:10,14; கலா 3:13: 1பேது 2:24)
- ஆவிக்குரிய போர் ஆயுதங்களை தரித்து உலகம், மாம்சம், பிசாசை ஜெயித்து ஜெய ஜீவியம் செய்யும் சபையார் (எபே 6:12-17)
- கிறிஸ்து இயேசுவின் இரண்டாம் வருகையை எதிர்நோக்கி வாழும்! சபையார் (2கொரி 11:2)
மாதிரி சபையில்…
- ஒருவருக்கொருவர் அன்பாயிருப்பர் (1தெச 3:12; 4:10)
- பரிசுத்தமுள்ளவர்களாயிருப்பர் (1தெச 4:3-7)
- ஊழியம் செய்கிறவர்களாயிருப்பர் (1தெச 1:8-10)
- அழைத்த அழைப்புக்குப் பாத்திரராய் நடத்தல் (1தெச 2:11,12)
- உபத்திரவங்களைச் சகிக்கிறவர்களாயிருப்பர் (1தெச 3:2,3)
- இடைவிடாமல் ஜெபம்பண்ணுவர் (1தெச 5:16-22)
- சொந்த கைகளினால் நலமான வேலை செய்கிறவர்களாயிருப்பர்
- (1தெச 4:12)
- ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாக்குவர் (ரோம 14:19;15:2)
- தேவ ஊழியர்களை மதித்து நடத்துவர் (1தெச 5:12; எபே 4:12)
- கிறிஸ்துவின் வருகையை எதிர்நோக்கிக் காத்திருப்பர் (1 கொரி 1:7)
தேவனுடைய சபையில்…
- ஒரே மேய்ப்பன் இருக்க வேண்டும் (யோவா 10:16)
- ஒரே தலை இருக்க வேண்டும் (எபே 5:23)
- ஒரே சரீரம் இருக்க வேண்டும் (ரோம 12:4,5)
- ஒரே இருதயமும் ஒரே மனமும் இருக்க வேண்டும் (அப் 4:32)
- ஒரே விசுவாசம் இருக்க வேண்டும் (எபே 4:5)
- ஒரே ஆவியாயிருக்க வேண்டும் (1கொரி 6:17)
- ஒரே வழி இருக்க வேண்டும் (எரே 32:38)
- ஒரே வாசல் இருக்க வேண்டும் (யோவா 10:9)
- ஒரே ஞானஸ்நானம் இருக்க வேண்டும் (எபே 4:5)
- ஒரே பெயர் இருக்க வேண்டும் (எபே 3:14,15)
முதல் நூற்றாண்டு சபை…
- தேவ தரிசனம் பெற்ற சபை (லூக் 24:34; யோவா 20:14-20)
- ஊக்கமாக ஜெபிக்கிற சபை (அப் 1:14; 2:42; 12:5)
- பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட சபை (அப் 1:8: 2:1-8)
- பூரண கிருபை பெற்ற சபை (அப் 4:33; 11:23; 2கொரி 12:9)
- அன்பால் நிரப்பப்பட்ட சபை (கொலோ 1:3,8)
- விசுவாசத்தால் நிறைந்த சபை (ரோம 1:8; 1தெச 1:8)
- வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்த்த சபை (அப் 17:10,11)
- சுவிசேஷ ஊழியம் செய்த சபை (அப் 1:8: 5:42) உலக சிநேகத்தை வெறுத்த சபை (அப் 4:34-37; ரோம 12:1,2)
- முன்மாதிரியான ஜீவியமுடைய சபை (1தெச 1:7; அப் 11:26)
- அற்புதங்கள் நடப்பித்த சபை (அப் 6:8: 3:1-8; 5:12)
- நன்மை செய்து வந்த சபை (2கொரி 9:1; ரோம 15:31)
- ஊழியத்திற்கு உதாரத்துவமாய்க் கொடுத்த சபை (2கொரி 8:1-5)
- பாடுகள், உபத்திரவங்களைச் சகித்த சபை (பிலி 1:29; ரோம 5:4)
- சந்தோஷத்தால் நிரப்பப்பட்ட சபை (லூக் 10:20; அப் 13:52)
- ஆவிக்குரிய ஆராதனை செய்துவந்த சபை (பிலி 3:3)
- தேவ வருகைக்கு காத்திருந்த சபை (1கொரி 1:7; பிலி 3:20)
- ஒருமனமுள்ள சபை (அப் 4:32; 2:1)