சபையின் அடிப்படை உபதேசங்கள்

சபையின் அடிப்படை உபதேசங்கள்

அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம் பண்ணுவதிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள் அப் 2:42)

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே மெய்யான தேவன் என்பதை விசுவாசித்து, தன் இருதயத்தில் அவரை சொந்த இரட்ச கராக ஏற்றுக்கொண்டு (ரோம 10:9,10), அவரிடம் தன் பாவங்களை யெல்லாம் மறைக்காமல் அறிக்கை செய்து (நீதி 28:13), அவரின் திருஇரத்தத்தால் கழுவப்பட்டேன் என்ற பாவ மன்னிப்பின் நிச்சயத்தை (1யோவா 1:7,9) உள்ளத்தில் பெற்றுக் கொண்டு அதுமுதல் தேவ வசன ஒழுங்கின்படி இயேசுவுக்காக வாழ்வேன் என்று உள்ளத்தில் எடுத்துக் கொள்ளும் உறுதியான தீர்மானமே மனந்திரும்புதலாகும் (அப் 2:38; 2பேது 3:9; மத் 4:17). ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து வுக்குள் தேவன் நமக்கு அருளும் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்வதற்கான முதற்படி மனந்திரும்புதல். 

மனந்திரும்புதல் என்பது…

  • தேவனுக்கு முன் நாம் பாவிகள் என்பதை அறிதல் (சங் 51:3,4) 
  • நமது பாவங்களைக் குறித்த ஆழமான துக்கம் (2கொரி 7:10,11: லூக் 18:13; சங் 38:18)
  • பாவங்களை விட்டு பரிசுத்தத்திற்கு திரும்புதல் (1தெச 1:9; அப் 26:18) 
  • மனதை தேவனைப் பின்பற்றும்படி திருப்புதல் (எரே 24:7)

மனந்திரும்புதல் என்பது இதுவல்ல… 

  •  வெறுமனே பாவத்தைக் குறித்த குற்றவுணர்வைப் பெறுவது மட்டுமல்ல. (அப் 24:25)
  • செய்த பாவம் குறித்து வருத்தப்படுவது மட்டுமல்ல (2கொரி 7:9-11)
  • நல்ல மனிதராயிருக்க முயற்சி செய்வது மட்டுமல்ல (ஏசா 64:5,6)
  • பாரம்பரிய நம்பிக்கை கொள்வது மட்டுமல்ல (மத் 3:9,10)
  • சத்தியத்தை அறிந்து வைத்திருப்பது மட்டுமல்ல (யாக் 2:19,20)

மனந்திரும்புதலின்போது…

  •  தமது மனம் (மத் 21:28,29)
  • நமது இருதயம் (2கொரி 7:9,10; ஏசா 57:15)
  • நமது சுயசித்தம் (லூக் 15:18-20) மாற்றமடைகிறது.

மனந்திரும்புதலோடு தொடர்புடையவை….

  • பாவ உணர்வடைதல் (அப் 2:37,38:19:16-18)
  • ஞானஸ்நானம் பெறுதல் (அப் 2:38)
  • பரிசுத்த ஆவியானவரால் அபிஷேகிக்கப்படல் (அப் 2:4: 8:16,17)
  • தேவனை நோக்கித் திரும்புதல் (அப் 2:38; 4:19; யோவே 2:12,13)
  • பாவங்களை அறிக்கையிடுதல் (நீதி 28:13; 1யோவா 1:9; மத் 3:6)
  • பாவ மன்னிப்பு (லூக் 24:46,47: அப் 2:38)
  • விசுவாசம் (மத் 21:32; மாற் 1:15; அப் 20:21)
  • ஜெபம் (1இரா 8:38; அப் 8:22)
  • பாவங்களை விட்டு திரும்புதல் (2நாளா 6:26) 
  • விக்கிரகாராதனையிலிருந்து திரும்புதல் (1தெச 1:9; எசேக் 14:6)
  • வாழ்க்கை முறையில் மாற்றம் (மத் 3:2-8; லூக் 15:17-24)
  • நியாயத்தீர்ப்பு பற்றிய பயம் (மத் 3:7; லூக் 23:40; எபி 10:26,27)

எப்படி மனந்திரும்ப வேண்டும்?

  • இருதயத்தில் உணர்வடைந்து… (மத் 13:15: அப் 2:37)
  • பாவத்தை அறிக்கையிட்டு… (சங் 51:4: நீதி 28:13)
  • முழு இருதயத்தோடு… (அப் 8:37)
  • முழு ஆத்துமாவோடு… (1இரா 8:48)
  • தன்னை முற்றிலும் தாழ்த்தி… (மத் 11:21; லூக் 18:13)
  • வசனத்துக்குக் கீழ்ப்படிந்து… (மத் 12:41)
  • பாவத்தை வெறுத்து விட்டு… (சங் 97:10; தீத்து 2:12: யூதா 23) 
  • துர்க்குணத்தை ஒழித்துவிட்டு… (அப் 8:22)
  • ஜாக்கிரதையாயிருந்து… (வெளி 3:19)

மெய்யாக மனந்திரும்பினவர்களின் அடையாளம்…

  • நற்கிரியைகள் செய்யத் தொடங்குவர் (அப் 26:20; எபே 2:10; 1தீமோ 2:10; 2தீமோ 3:17; தீத்து 2:7,14; எபி 10:24; 1பேது 2:12)
  • விரோதிகளை மன்னிப்பர் (மத் 6:12-15; 18:21-35; மாற் 11:25,26: லூக் 6:37; 11:4; 23:34; அப் 7:60; எபே 4:32)
  • தவறைத் திருத்திக் கொள்வர் (லூக் 19:2-10)
  •  பின்னிட்டுப் பார்க்கமாட்டார்கள் (லூக் 9:62)

ஞானஸ்நானம்..

தேவன் பக்கம் மனந்திரும்பியவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தனக்காகக் கல்வாரி சிலுவையிலே இரத்தஞ்சிந்தி மரித்து. அடக்கம்பண்ணப்பட்டு, உயிரோடு எழுந்தார்; ஆகையால் தானும் பாவத்திற்கு மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, மறுபடியும் பிறந்ததன் அடையாளமாக பிதா குமாரன் பரிசுத்தாவியின் நாமத்தினால் தண்ணீரில் மூழ்கி, மீண்டும் எழுந்து, வெளியே வரும் செயல் ஞானஸ்நானமாகக் கருதப்படுகிறது (மத் 28:18-20; அப் 2:38). இந்த செயல் கிறிஸ்து மரித்தார்; அவருக்குள் நானும் மரித்தேன் (ரோம 6:6,7) என்பதையும்.

கிறிஸ்து அடக்கம்பண்ணப்பட்டார்; நானும் அவரோடுகூட அடக்கம் பண்ணப்பட்டேன் (ரோம 6:3,4) என்பதையும், கிறிஸ்து உயிரோடு எழுப்பப்பட்டார்; அவரோடுகூட நானும் எழுப்பப்பட்டு புது வாழ்வாகிய மறுஜென்மத்தை அடைந்திருக்கிறேன் (ரோம 6:4,5) என்பதையும், கிறிஸ்து உள்ளதங்களிலே ஏறினார்; நானும் அவரோடுகூட உன்னதத் திற்கு ஏறுவேன் (எபே 2:7; கொலோ 3:1) என்பதையும் குறிப்பதாக இருக்கிறது.

ஞானஸ்நானம்…

  • கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதற்கு அடையாளம் (அப் 2:38,41)
  • அவருக்குக் கீழ்ப்படிகிறதற்கான அடையாளம் (அப் 8:12,13
  • முழுமையாக அர்ப்பணித்துவிட்டதற்கான அடையாளம் (அப் 9:18)
  • வெளிப்படையாய் விசுவாசிப்பதற்கான அடையாளம் (அப்9:37,38)
  • பாவத்திற்கு மரித்து நீதிக்கு பிழைப்பதற்கான அடையாளம் (ரோம 6:8)
  • உள்ளான இரட்சிப்பிற்கு வெளிப்படையான அடையாளம் (மத் 3:8) 
  • உலகம், மாமிசம், பிசாசின்மேல் ஜெயமெடுப்பதற்கு… (1யோவா 5:4)
  • அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றதற்கு… (ரோம 6:3-7)

வேதத்தில் ஞானஸ்நானம் பெற்றவர்கள்…

  • பெந்தேகொஸ்தே நாளில் 3,000பேர் (அப் 2:37 – 41)
  • சமாரியா நாட்டு புதிய கிறிஸ்தவர்கள் (அப் 8:12)
  • எத்தியோப்பியா மந்திரி (அப் 8:35-38)
  • கொர்நேலியுவும், அவனை சார்ந்தவர்களும் (அப் 10:47,48) 
  • கொரிந்தியர்கள் (அப் 18:8)
  • எபேசுவிலிருந்த சீஷர்கள் (அப் 19:1,5) ஸ்தேவான் வீட்டார் (1கொரி 16:15)
  • சிறைச்சாலைக்காரன் குடும்பம் (அப் 16:31-34) 
  • கிறிஸ்புவின் வீட்டார் (அப் 16:8)
  • லீதியாளின் குடும்பத்தார் (அப் 16:14,15)

பரிசுத்த ஆவியின் வரம்

மனந்திரும்பி கர்த்தரை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு அவருடைய பிள்ளையாக மாறின ஒவ்வொருவருக்குள்ளும் பரிசுத்த ஆவியானவர் வந்து தங்கியிருப்பதே பரிசுத்த ஆவியின் வரம் (அபிஷேகம்) ஆகும். அந்நிய பாஷைகளில் பேசுதல் அதின் ஆரம்ப அடையாளம் (அப் 2:4,38; 1கொரி 6:19; 14:2-5).

அபிஷேகத்தினால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள்…

  • கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வதற்கான பெலன் தருகிறார் (அப் 1:8)
  • சாட்சியாய் நிற்க வல்லமைப்படுத்துகிறார் (அப் 1:8; 15:8)
  • ஊழியஞ்செய்ய வரங்களைத் தருகிறார் (1பேது 4:10) 
  • சத்தியங்களைப் போதிக்கிறார் (யோவா 14:26; 1யோவா 2:27)
  • சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துகிறார் (யோவா 16:13)
  • எச்சரிக்கிறார், கடிந்துகொள்ளுகிறார் (அப் 13:9-11)
  • தவறுகளை உணர்த்துகிறார் (யோவா 16:8)
  • கடைசிநாளில் உயிரோடு எழுப்புகிறார் (யோவா 6:39,40; 2கொரி 3:6)

விட்டு விலகுதல்

தெய்வீக வழிக்கு ஒவ்வாத சந்ததியின் மாறுபாடான வாழ்க்கை முறைகளாகிய பாவம், பாவிகளின் ஐக்கியம், இந்த பிரபஞ்சத்துக்கு ஒத்த வேஷம், துர் உபதேசம், ஒழுங்கற்று நடக்கிறவர்களின் ஐக்கியம் போன்றவைகளை விட்டு விலகி ஜீவியத்தைக் காத்துக் கொள்ளுதல் ஆகும் (சங் 1:1; மத் 16:11,12; அப் 2:39-41; ரோம 12:2; 1கொரி 5:6-8; 2தெச 3:6; எபி 7:26) 

விட்டு விலக வேண்டியவைகள்…

  • விக்கிரகாராதனையை… (1கொரி 10:14)
  •  வேசித்தனத்திற்கு… (1கொரி 6:18)
  • மாம்ச இச்சைகளுக்கு (2தீமோ 2:22; 1பேது 2:11; 1யோவா 2:16)
  • மாறுபாடானவைகளுக்கு… (அப் 2:40: 2தீமோ 3:2-5)
  • சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு… (2தீமோ 2:16)
  • கட்டுக்கதைகளுக்கு… (1தீமோ 4:7)
  • தர்க்கங்களுக்கு… (1தீமோ 6:5)

அப்போஸ்தலருடைய உபதேசம்

தேவனால் அனுப்பப்பட்ட அப்போஸ்தலர்களின் போதனைகள் அப்போஸ்தலருடைய உபதேசம் எனக் கருதப்படுகிறது. அதைக் கற்றுக்கொண்டு அதன் வழி நடப்பதில் தேவ ஜனங்கள் உறுதியாய்த் தரித்திருக்க வேண்டியது அவசியம் (மத் 28:18: அப் 2:42; ரோம 6:17)

அந்நியோந்நியம், அப்பம் பிட்குதல்

மனந்திரும்பினவர்கள் தேவ அன்பில் நிறைந்து, ஒருவருக்கொருவர் மாயமற்ற சகோதர சிநேகத்தோடு பழகி, விசாரித்தல், உதவுதல், ஜெபித்தல் போன்ற நற்பண்புகளால் நிறைந்து, சபை கூடி வந்து, கல்வாரி சிலுவையில் நமக்காகத் தந்தருளப்பட்ட இயேசுகிறிஸ் துவின் மரணத்தை நினைவுகூரும் வகையில் அவரது சரீரத்துக்கும் இரத்தத்துக்கும் அடையாளமாக அப்பம் புசித்து, இரசத்தை பானம் பண்ணுதல் அப்பம் பிட்குதல் (கர்த்தருடைய பந்தி) ஆராதனை ஆகும். இவைகளில் தரித்திருக்க வேண்டும் (மத் 26:26-29; அப் 2:42-47; ரோம 12:5: 1கொரி 11:23-31)

அப்பம் பிட்குதலின் முக்கியத்துவம்

  • புதிய உடன்படிக்கையின் அடையாளம் (மத் 26:28) 
  • பாவமன்னிப்பின் அடையாளம் (மத் 26:28)
  • நினைவுகூருதலின் அடையாளம் (1கொரி 11:24,25)
  • கிறிஸ்துவின் மரணத்தை அறிவிப்பதின் அடையாளம் (1கொரி 11:26)
  • இரத்தத்தில் பங்குபெறுதலின் அடையாளம் (1கொரி 10:16)
  • தேவ வருகை வரை அனுசரிப்பதற்கான அடையாளம் (1கொரி 11:25)

ஜெபம்பண்ணுதல்

தேவனோடுள்ள ஐக்கியத்தை தொடர்ந்து காத்துக்கொள்ளும்படி அவருடன் பேசுதல் (விண்ணப்பித்தல்) ஜெபம் பண்ணுதல் ஆகும். ஜெபம் பரலோகத்தையும் பூலோகத்தையும் இணைக்கும் பாலமாக இருக்கிறது. ஒவ்வொருவரும் ஜெபிக்க வேண்டும் என்பது தேவனுடைய விருப்பமும் வாஞ்சையுமாயிருக்கிறது. தேவ பிள்ளைகள் ஜெபத்தில் தரித்திருக்க வேண்டும் (மத் 6:5-13: அப் 4:24-31)

ஜெபம்…

  • ஜெபம் விசுவாசத்தைக் கொண்டு வருகிறது (1சாமு 1:18)
  • தைரியத்தைக் கொண்டு வருகிறது (அப் 4:31)
  • தேவனோடுள்ள உறவில் அன்பில் வளரச் செய்கிறது (சங் 42:2)
  • தேவ சாயலை உருவாக்குகிறது ( யாத் 34:29; ரோம 8:29)
  • அதிகாரத்தைக் கொடுக்கிறது (மத் 9:8; 10:1)
  • அசாதாரணமானவர்களாய் மாற்றுகிறது (யாத் 7:10-12,20)
  • தேவனோடு நம்மை இணைக்கிறது (தானி 9:23)
  • தேவனை நம் பக்கம் திருப்புகிறது (1இரா 18:36-39)
  • தேவ சித்தத்தை அறிய வைக்கிறது (ஆதி 18:20)
  • தேவனுக்காய் விரைந்து செயல்படத் தூண்டுகிறது (நெகே 2:18)
  • தேவ பாரத்தை சுமக்க வைக்கிறது (உபா 9:20; நெகே 1:2-4)
  • தேவனின் குணாதிசயங்களை வெளிப்படுத்துகிறது (அப் 7:60)
  •  பரிசுத்தத்தைக் கொண்டு வருகிறது (1தீமோ 4:5)
  • ஆசிர்வாதங்களைக் கொண்டு வருகிறது (1நாளா 7:14)

தேவனே! உமது திருச்சபையை வேத சத்தியத்தினாலும், உபதேசத்தினாலும் ஊன்றக் கட்டுகிற அநேக பவுல்களை எழுப்பும்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *