தேவனுடைய தெரிந்துகொள்ளுதல்

தேவனுடைய தெரிந்துகொள்ளுதல்

தேவன் தெரிந்துகொள்கிறார் என்பது வேதம் தெளிவாகப் போதிக்கும் ஒரு சுருத்து. இதைக்குறித்து பாத்.24:22,24,31; மாற்.13:20,22,27; லூக்.18:7; ரோம.6:29-31,33; 9:11-15; 1:5,7,28; 1 கொரி.1:26-31; எபே.::4 6; கொலோ.3:12; 1 தெச.1:3; 2 தெச.2:13; 2 திமோ.2:10; 1 பேது.1:2; 2:9; 2 பேது,1:10; 2 யோவா.2,13; வெளி-17:14 ஆகிய வசனங்களில் காண்கிறோம். ஆதிமுதல் தெரிந்துகொள்ளப்பட்டிருப்பதையும் (2 தெச.2:13) உலகத் தோற்றத்திற்குமுன் தெரிந்துகொள்ளப்பட்டதையும் (எபே.1:4-6) வாசிக்கிறோம். தெரிந்துகொள்ளப் பட்டவர்களுக்குரிய ஆசீர்வாதங்களை மேலே கூறப்பட்டுள்ள எல்லா வசனங்களையும் ஆராய்ந்து கண்டுபிடியுங்கள்.

தேவன், இப்படி ஒருசிலரை மட்டும் தெரிந்துகொண்டு அவர்களுக்குச் சிறப்புகள் அளிப்பது (எபே.1:4-5; 1 பேது.1:2; 2:9) பாரபட்சமாகத் தோன்றுகிறது அல்லவா? மேலும் ஏசாவும் யாக்கோபும் பிறக்கும் முன்பு, நற்செயல் அல்லது பாவம் செய்யாததற்கு முன்னே தேவன் தெரிந்துகொள்வது நீதியா என்று கேட்கத் தோன்றுகிறது. (மல்.1:2-5), ஆனால் தேவன் பாரபட்சம் உள்ளவரல்ல என்பதையும் வேதம் கூறுகிறது (அப்.10:34-35).

யாவருக்கும் அழைப்பு

மனந்திரும்பும்படி உலகிலுள்ள யாவருக்கும் தேவன் கட்டளையிடுகிறார் (அப்.17:30). வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிற யாவரையும் இயேசு அழைக்கிறார் (மத்.11:28-30). உலக மக்கள் யாவரும் இரட்சிக்கப்படுவதே (தேவனுடைய விருப்பம் ஆகும் (யோவா.1:29; 3:17; 1 தீமோ.2:4; 1 யோவா.2:2). ஆனால் உலகிலுள்ள மக்களில் பலர் தேவனுடைய திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லையென்பது நாம் அறிந்ததே. ஏனெனில் தன்னுடைய விருப்பம்போல் நடந்துகொள்ளும் உரிமையை மனிதனுக்கு அளித்துள்ள தேவன், அதற்கு மாறாக ஒன்றும் செய்யமாட்டார். எனவே, மனிதனின் தீர்மானத்திற்கும் அதன் விளைவுகளுக்கும் மனிதனே பொறுப்பு. மனிதன் மனந்திரும்பும்பொழுது அவனுக்கு மன்னிப்பளித்து ஏற்றுக்கொள்வதற்கு அவர் தயாராயிருக்கிறார்.

தேவனுடைய முன்னறிவு

ஆனால், தேவன் எல்லாக் காலத்து நிகழ்ச்சிகளையும் அறிந்தவராகையால் யார் தமது வழியைத் தெரிந்து ‘கொள்வார்கள் என்று அவர் முன்பே அறிந்திருக்கிறார். இவ்வாறு அறிந்திருக்கிறபடியால் அப்படிப்பட்டவர்களை முன்குறித்து, தெரிந்துகொள்கிறார் (ரோம.8:29). எனவே இதில் பாரபட்சம் இல்லை. ‘நான் தெரிந்து கொள்ளப்பட்டிருக்கிறேன்’ என்று தன்னைக்குறித்து எண்ணுகிற யாராயிறும் தனது தெரிந்துகொள்ளுதலை உறுதியாக்கும்படி கவனமாக இருக்கவேண்டும் (2 பேது.1:10). எப்படி கவளமாயிருப்பது என்று 1 பேது.2:9; 2 பேது.1:5-10 பகுதிகளில் காண்சு,

எப்படிப்பட்டவர்களைத் தெரிந்து கொண்டார்?

  • அறிவில் குறைந்தவர்களை,
  • பலவீனமானவர்களை,
  • இழிவானவர்களை,
  • அற்பமாய் எண்ணப்பட்டவர்களை,
  • இல்லாதவர்களை,
  • பரதேசிகளைத் 

(1 கொரி.1:26-29; 1 பேது.1:2) தேவன் தெரிந்துகொண்டிருக்கிறார்.

தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டேன் என்று எண்ணுகிற எவரும் தான் இப்படிப்பட்டவன் என்பதை உணர்ந்து தாழ்மையோடிருப்பதே முறையானது. ஒருமுறை இரட்சிக்கப்பட்டால் போதுமா, கட்டுரை காண்க,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *