சபை
1. (கிரேக்க மொழியில் எல்லீசியா என்பது சபையென்று தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. இச்சொல் உலகெங்குமுள்ள கிறிஸ்துவுக்குள்ளான யாவரும் சேர்ந்த குழுவைக் குறிப்பதாக அமைந்துள்ளது. 1 கொரி 12:28; 15:0; கலாட்:113, யோ:123: 3:10,24; 8:21-32; பிலி.3:6; கொலோ 1:18,24; 1 தீமோ.3:5:15 போன்ற பகுதிகளில் இதைக் காணலாம்.
2) ஒரு ஊரிலுள்ள கிறிஸ்துவுக்குள்ளாள யாவரையும் குறிப்பதாகவும் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்.13:1; 15:4,30; 1 கொரி.1:2; 2 கொரி.1:1; 1 தொ.1:1; 2 தொ.3:1 போன்ற வசனங்களில் இவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது.
3) தேவனைத் தொழுதுகொள்வதற்காக வீடுகளில் கூடிவந்த கிறிஸ்துவுக்குள்ளான குழுவையும் சபையென்று அழைப்பதை ரோ:16:5; 1 கொரி.16:19; கொலோ.4:15; பிலே.2 இல் காணாலாம்.
4) சில இடங்களில் Ekklesia என்ற இச்சொல் மக்களின் கூடுகையைக் குறிப்பதாகவும் எழுதப்பட்டுள்ளது (அப்.7:36; 19:32,41},
ஒரு நாடு அல்லது பகுதியிலுள்ள பல ஊர்களிலுள்ள சபைகளை அப்பகுதியிலுள்ள சபைகள் என்று வேதத்தில் எழுதப்பட்டுள்ளதை அப்.9:31; 1 கொரி.15:19; கலா,12 போன்ற வசனங்களில் காண்கிறோம்.
சபை (EkIesia) என்ற சொல்லிற்கு, வெளியே (பிரிந்திருக்கும்படி) அழைக்கப்பட்டவர்கள் (People called cut) என்று பொருள் கூறலாம். பாவத்திலிருந்து, பாவப் பழக்கங்களிலிருந்து, பாவமான மக்களின் பிடியிலிருந்து, சாத்தானின் பிடியிலிருந்து வெளியேறி கிறிஸ்துவுக்குள் பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்கள் என்று இதற்கு விளக்கம் தரலாம்.
கிறிஸ்துவின் சரீரமாகிய சபையென்றால் என்ன?
பரலோகம் செல்கிற மனிதர்கள் யாவரும் அடங்கியது கிறிஸ்துவின் சரீரமாகிய சபை எனப்படும். அதாவது
1) இவ்வுலகில் கிறிஸ்துவுக்குள் வாழ்ந்து மரனாமடைந்தோரும்
2) இப்பொழுது கிறிஸ்துவுக்குள் வாழ்ந்து பரலோகம் சேரப்போகிறவர்களும்
3) இனி கிறிஸ்துவுக்குள்ளாக மாறி அவரில் நிலைத்திருந்து பரலோகம் சேரப்போகிறவர்களும் சேர்ந்தது கிறிஸ்துவின் சரீரமாகிய சபையாகும்.
இவ்வுலகில் இப்பொழுது இருக்கும் சபையில் கிறிஸ்துவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களும் பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்கிற யாவரும் அங்கத்தினர்கள் ஆவார்கள் (1 கொரி.1:2; யோவா.4:24).
மறுபடியும் பிறக்காதவர்களும், தண்ணீரினாலும் ஆவியினாலும் பிறக்காதவர்களும் தேவனுடைய அரசிற்குச் செய்வதற்குத் தகுதியில்ாதவர்கள் என்பதால் அவர்கள் கிறிஸ்தவர்களாயிருந்தாலும் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் உறுப்பினர் அல்ல (யோவா.3:3,5), மேலும், முடிவு பரியந்தம் நிறைநிற்பவனே இரட்சிக்கப்படுவாள் (மத் 24:13) என்று கர்த்தர் கூறியிருப்பதால் கர்த்தருக்குள் நிலைத்திராதவர்கள் (பிள்மாற்றமாயிருப்பவர்கள்) கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் உறுப்பினர்களல்ல (யோவா.15:4-6).
ஒரு ஊரிலுள்ள சபை
எருசலேமிலிருந்த சபை (அப்.11:22), அந்தியோகியா சபை (அப்.14:26-27), கொரிந்து பட்டனத்திலுள்ள தேவனுடைய சபை (2 கொரி.1:1) என்பது அந்தந்தப் பட்டணங்களில் விசுவாசிகளாயிருந்த பரிசுத்தவாள்களையும் பரிசுத்தமாகும்படி அழைக்கப்பட்டார்களையும் குறிக்கிறது. இக்காலத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் (ஊரில்) பல பெயர்களுடன் சபைகள் இருப்பதை நாம் காண்கிறோம். இவ்வாறு இருப்பவை சபைப்பிரிவுகள் (Denominations) ஆகும். சபையானது பலபிரிவுகளாக இருப்பதும் இப்பிரிவுகளுக்குள் போட்டி, ஒருமனமின்மை, ஒற்றுமையின்மை போன்றவை நிலவுவதும் தேவனுக்குப் பிரியமானவை அல்ல, தேவனுடைய பிள்ளைகள் யாவரும் அன்புடனும் ஒற்றுமையுடனும் இருந்து ஒருவருக்கொருவர் உதவி செய்வதே சிறந்தது (யோவா.15:12-13,17; 17:22-23; 1 யோவா.4:7-B,12,20), ஒரே இடத்தில் கூடிவருவதும் ஒரே தலைமை இருப்பதும் இப்பொழுது சாத்தியமல்லாதபோதிலும் ஒருவரையொருவர் நேசித்து உதவுவது நடக்கக்கூடியதல்லவா?
சபை எப்பொழுது தொடங்கியது?.
இந்தக் கல்லின்பேல் என் சபையைக் கட்டுவேன் என்று கர்த்தர் பத்.16:18 இல் குறிப்பிட்டார். எனவே, அதுவரை சபை தொடங்கப்படவில்லை என்பதை இது தெளிவுபடுத்துகிறது. ஆனால் பெந்தெகொஸ்தே நாளுக்குப் பின்பு அனுதினமும் கர்த்தர் பக்களைச் சபையில் சேர்த்துக்கொண்டுவந்தார் (அப்.2:47). எனவே பெந்தெகொஸ்தே நாளில் சபை தொடங்கப்பட்டது என்பது நன்கு தெரிகிறது. ஆவியானவரின் திருமுழுக்குடன் சபை தொடங்கியது
ஆவியானவரின் திருமுழுக்குடன் கிறிஸ்துவின் சரீரமாகிய சபை தொடங்கியது. ஆதிசபையில், இயேசு கிறிஸ்துவில் விசுவாசிகளாளவர்கள் ஆவியானவரின் திருமுழுக்கைப் பெறாதிருத்தல் ஒரு குறையென்று கருதப்பட்டது என்பதை அப்.8:12-17; 19:1-6 இல் காண்கிறோம். ஆவியினால் திருமுழுக்கு, கட்டுரை காண்க. பக்கம் 1812.
சபையின் அஸ்திபாரம்
சபையின் அஸ்திபாரம் கிறிஸ்துவே (1 கொரி.3:11). ‘இயேசுவே ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து’ என்ற பேருண்மை சபையின் அடிக்கல்லாக அமைகிறது (மத்.16:18 குறிப்பு காண்க). இயேசு கிறிஸ்துவை மூலைக்கல்லாகக்கொண்டு அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகளை அஸ்திபாரமாகக்கொண்டு நாம் கட்டப்பட்டவர்கள் என்றும் வேதம் கூறுகிறது (எபே.2:19-20 குறிப்பு). கிறிஸ்து என்ற ஆதாரத்தின்மீது அப்போஸ்தலர், நீர்க்கதரிசிகளின் உபதேசங்களால் சபை கட்டப்பட்டுள்ளது என்று இதற்குப் பொருள்.
சபையின் ஊழியர்கள்
கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள், கவிசேஷகர், மேய்ப்பர். போதகர் என்ற ஐந்து முக்கியமான ஊழியங்கள் உள்ளன (எ.பே.4:11-13). ஒரு இடத்தில் கூடிவரும் சபையைக் கவனிப்பதற்குக் கண்காணியானவர்கள் ஏற்படுத்தப்பட்டனர் (1 தீமோ.3:1). கண்காணியானவன் என்றாலும் மூப்பர் என்றாலும் ஒன்றுதான் என்பதை தீத்.1:5,7 இலிருந்து அறிகிறோம். இவர்களின் தகுதிகளை 1 தீமோ.3:2-7; தீத்.1:5-9 இல் வாசிக்கிறோம். சபைப் பொறுப்பாளர்கள் தங்களுக்கு இத்தகுதிகள் இருக்கின்றனவா என்று கவனித்து, தங்களைச் சரி செய்துகொள்ளவேண்டும். மூப்பர்கள் மட்டுமன்றி உதவிக்காரரும் சபையில் பணியாற்றியதையும் அவர்களின் தகுதிகளையும் 1 தீமோ.3:8-13 கூறுகின்றது. தகுதிகள் இல்லாதோர் இப்பொறுப்புகளில் நீடிப்பது நல்லதல்ல.
சபையின் பணிகள்
1) தேவனுக்கு : தேவனைத் தொழுதுகொள்வது (யோவா.4:23-24), அவருக்குச் சாட்சியாக இருப்பது, தேவனைப் பிரதிபலிப்பது (மத்.5:14), விசுவாசத்தில் நிலைத்திருப்பது (எபி.11:5-6),
2) சபை மக்களுக்கு ; சபைமக்கள் அனைவரும் தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்திலும் அறியிலும் ஒருமைப்பட்டவர்களாகவும், கிறிஸ்துவின் நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்கதாகப் பூரண புருஷராகவும் பக்திவிருத்தியடையும்படி செய்யவேண்டும் (எபே.4:11-13). எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேகவுக்குள் தேறினவனாக நிறுத்தவேண்டும் (கொலோ.1:28). இவற்றைக் கருத்தாகச் செய்வது ஊழியரின் கடமையாகும். ஒவ்வொரு ஆத்துமாவைக்குறித்தும் கர்த்தர் கணக்கு கேட்பார்.
3) சபை மக்களல்லாதவர்களுக்கு : உலகெங்கும் போய் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கவேண்டும் (மாற்.16:15). எல்லா மக்களினங்களையும் சீடராக்கவேண்டும், பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் அவர்களுக்குத் திருமுழுக்கு கொடுக்கவேண்டும், கிறிஸ்து கூறிய யாவற்றையும் அவர்கள் கைக்கொள்ளும்படி உபதேசம்பண்ணவேண்டும் (மத்.28:19-20). இதற்காக நற்செய்திப் பணியாளரை உலகெங்கும் அனுப்பவேண்டும் (ரோம.10:13-15). ஆத்தும ஆதாயம் செய்யாத சபை செத்தசபை.
இவற்றை உங்கள் சபைப்பிரிவு செய்கிறதா என்று ஆராய்ந்துபார்த்து அவற்றிற்கான முயற்சிகள் செய்யுங்கள்.
சபையின் எதிர்பார்ப்பு
‘கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தான் சொன்னபடியே சபைாவத் தம்முடன் அழைத்துக்கொண்டுசெல்வதற்கு வருவார்” (யோவ:.14:2-3) என்ற நாபெரும் உன்ளற எதிர்பார்ப்புடன் சனப காத்துக்கொண்டிருக்கிறது (பி23:20-211 தெச.1:10). ஆமென் கர்த்தராகிய இயேசுவே வாரும்’ (வெளி.22:20) என்றும், கர்த்தருடன் செல்வதற்குத் தருதியுடையவர்களாக எண்ணப்படவேண்டும் (லூக்.21:36) என்றும் ஜெபிக்கும்படி சபை எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயத்தமாகுவீர், ஏமாந்துபோகாதீர்
மறுபடியும் பிறக்கும் அனுபவமில்லாத எவரும் (யோவா.3:3) நீரினாலும் ஆவியினாலும் பிறக்கும் அனுபவம் இல்லாத எவரும் (யோவா.3:5) தேவனுடைய அரசிற்குள் செல்லமுடியாது என்பதைக் கருத்திற்கொண்டு இவற்றை அடையும்படி கேளுங்கள். தேடுங்கள், தட்டுங்கள், உடனடியாகச் செயல்படுங்கள். இவற்றைப் பெற்ற பின்பு முடியுவரை கிறிஸ்துவுக்குள் நிலைத்திருங்கள் (மத்.24:13). இவ்வாறு இல்லையெனில் ஏமாந்துபோனீர். கர்த்தரின் இரசுசிய வருகையில் கையிடப்படும் நிலையில் இருக்காதீர்.
பல காலங்களில் சபையின் நிலை
வசனத்தோடும். வல்லமையோடும் பரிசுத்த ஆவியோடும் முழுநிச்சயத்தோடும் நற்செய்தி அறிவிக்கப்பட்டதோடு (1 தெச.1:5), அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலந்த செயல்களினாலும் பரிசுத்த ஆவியின் வரங்களினாலும் நிரம்பியிருந்ததாக ஆதி சபை விளங்கியது (எபி.2.4; அப்.3:1-8; 5:15-16; 19:11-12). ஆவியின் களி காணப்பட்டது. ஆனால் அப்போஸ்தலரின் காலத்திலேயே கள்ள அப்போஸ்தலர் (2 கொரி.11:13), கள்ளச்சகோதார் (2 கொரி.11:26; கலா.2:4), கள்ளத்தீர்க்கதரிசிகள், கள்ளப்போதகர் (2 பேது.2:1), பக்கவழியாய் நுழைந்தவர்கள் (யூதா 4) இருந்தனர். யூதராலும் புற இனத்தாராலும் ரோமப் பேரரசாலும் மிகவும் துன்புறுத்தப்பட்ட சபையானது கி.பி.நான்காம் நூற்றாண்டில் கான்ஸ்டன்டைன் என்ற ரோமப் பேரரசளின் காலத்தில் அரசாங்க ஆதரவு பெற்றது. இச்சமயத்தில் விசுவாசமில்லாத, சந்தர்ப்பவாதிகளான, பெரிய திரள் கூட்டமான மக்கள் கிறிஸ்தவர்களாக மாறினர். பல கலாச்சாரங்கள், மதங்கள் ஆகியவற்றின் கோட்பாடுகளும் நடைமுறைகளும் வழிபாடுகளும் கிறிஸ்தவர்களுக்குள் நுழைந்து கிறிஸ்தவத்தின் பெரும் பகுதியினர் சடங்காசாரமானவர்களாயினர். ஆவிக்குரிய ஐக்கியமாக இருந்த சபை ஒரு நிறுவனமாக மாறியது. ஆனால், இச்சூழ்நிலையிலும் ஆங்காங்கே சிறுகுழுக்கள் கர்த்தருக்கு உத்தமமாக இருந்துவந்தன.
மறுமலர்ச்சி
1517 ஆம் ஆண்டில் மார்ட்டின் லூத்தர் ‘விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்’ என்ற வேதத்தின் அடிப்படைக் கோட்பாட்டைப் புரிந்துகொண்டு சபையைச் சீர்திருத்த விழைந்தார். சீர்திருத்த சபை (Protes tant Church) இதனால் உதயமாயிற்று. விசுவாசத்தினால் இரட்சிப்படைவதை அவ்வப்பொழுது கர்த்தர் எழுப்பிய ஊழியர்கள் சபைக்குப் போதித்து ஆங்காங்கே மக்களை இரட்சிப்பிற்குள் நடத்தினர்.
ஆவியானவரின் பின்மாரி
கி.பி. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆவியானவரின் அருள்மாரி ஊற்றப்பட ஆரம்பித்தது. இன்று உலகெங்கும் ஆவியானவரின் திருமுழுக்கு பெரிய அளவில் நடைபெற்றுவருகிறது. அற்புதங்களும் அடையாளங்களும் ஓரளவு நடைபெற்றுவருகின்றன.
இனி நடக்கயிருப்பது என்ன?
உலகெங்கும் மகத்தான அளவில் ஆவியின் வரங்கள் செயல்படும். உலகின் எல்லாப் பகுதியிலும் மக்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வார்கள். ஆவியின் கனி சபையெங்கும் காணப்படும். அவ்வாறு சபை தயாரானதும் கிறிஸ்துவின் இரகசிய வருகையில் சபை எடுத்துக்கொள்ளப்படும் (வெளி.19:7).
சபையைக் குறிக்கும் உருவகங்கள்
சபையைக்குறித்து பண்ணை, மாளிகை, போன்ற பல உருவகங்கள் வேதத்தில் உள்ளன. எபே.1:23; 2:19 22 குறிப்புகள் காண்க, அவற்றில் முக்கியமான மூன்றைக் காண்போம்.
1 சபையைக் கிறிஸ்துவின் சரீரமென்று பல வசனங்கள் கூறுகின்றன (ரோம.12:4-5; 1 கொரி.12:27: எபே.1:23; 4;12; கொலோ.1:18,24).
2) கிறிஸ் துவின் மணவாட்டியாக சபை உருவகப்படுத்தப்பட்டுள்ளதை 2 கொரி.11:2; எபே.5:22-32 இலிருந்து புரிந்துகொள்கிறோம். உள்ளதப்பாட்டு நூலில் கிறிஸ்துவும் சபையும் உருவகமாக நேசராகவும் சூலமித்தியாகவும் கூறப்பட்டிருக்கின்றது என்பது பல வேதவல்லுநர்களின் கருந்து.
3) சபை ஒரு ஆணாகக் கூறப்பட்டுள்ளதை எபே2:15; 4:11; 2 தெச.2:7 (குறிப்பு) இல் காண்கிறோம். ஒரு மனிதனைச் சபையில் சேர்ப்பது ஆவியானவரே ஒரு மனிதனுக்கு அவனது பாவத்தைக் கண்டித்து உணரித்தி, நீநியையும் நியாயத்தீர்ப்பையும் உணரும்படி செய்து (யோவா.16:8), கிறிஸ்துவின் சரீரத்திற்குள் (சபைக்குள்) அவனைச் சேர்க்கும் (திருமுழுக்கு தரும்) பணியை ஆவியானவர் செய்கிறார் (1 கொரி.12:13). இரட்சிப்பின் நிச்சயத்தைத் தருபவரும் ஆலியானவரே (ரோம.8:16), இவ்வாறு செய்வதற்கு நற்செய்தியாளர்களைப் பயன்படுத்துகிறார்.
யாரை சபையிலிருந்து விலக்கவேண்டும்?
1) சபையிலுள்ள ஒருவருக்கு விரோதமாகக் குற்றம் செய்ததோடு சபையாரின் சமாதான ஆலோசனை களையும் ஏற்றுக்கொள்ளதவர்கள் (மத்.18:15-17).
2) வேநத்தின் உபதேசத்திற்கு விரோதமாகப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்கள் (ரோம.16:17).
3) விபசாரம், பொருளாசை, சிலைவழிபாடு, வளசமொழி பேசுதல், குடிவெறி, கொள்ளையடித்தல் போன்ற பாவங்களில் இருப்பவர்கள் (1 கொரி.5:11}.
4) அவிசுவாசிகள், அநீதியாயிருப்பவர்கள் (2 கொரி.6:14-15).
5) ஒழுங்கற்று நடக்கிறவர்கள் (2 தெச.3:6),
6) வசனத்துக்குக் கீழ்ப்படியாதவர்கள் (2 தெச.3:14).
7) நல்மனச்சாட்சியைத் தள்ளிவிட்டு விகவாசத்தைச் சேதப்படுத்தியவர்கள் (1 திமோ.1:19-20).
8) கள்ளப்போதகம் செய்கிறவர்கள், தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்கள் (1 தீமோ.5:3-5; 2 யோவா.10).
9) வேதப்புரட்டர்கள் (தீத்.3:10). 2 தீமோ.3:2-5 இல் இன்னும் பலரைக் குறித்துக் கூறப்பட்டுள்ளது.
இப்படிப்பட்டவர்களை நீக்கினால் இன்றைய சபைப்பிரிவுகளில் பலரை விலக்கவேண்டியிருக்கும் என்பது உண்மைதான். ஆனால், இப்படிப்பட்டவர்களை விலக்கினால் மீதமுள்ள சபை உண்மையுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் அமையும்.
சபையின் வெற்றி
சபை ஆரம்பித்தபொழுது யூதரால் துன்புறுத்தப்பட்டது. அதன் பின்பு ரோமர், கிரேக்கர்; மேலும் பல இனத்தவர்களால் சபை நுள்புறுத்தப்பட்டது. இரத்தசாட்சிகளாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. சொல்லொணாத துயரங்களையும் பாடுகளையும் இன்றுவரை உலகின் பல இடங்களில் கர்த்தருடைய பிள்ளைகள் சந்தித்து வருகின்றனர். சபையை அழித்து விடுவதற்காகச் சாத்தான் பலவிதங்களில் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டுவருகின்றான். அதற்காக சபைக்குள் களைகளை விதைத்துள்ளான். ஆனால், சபை பெருகி வருகின்றது. கடந்த 200 ஆண்டுகளில், குறிப்பாகக் கடந்த 50 ஆண்டுகளில் சபை உலகெங்கும் மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. சபையை எதிர்த்து நின்ற அரசுகள், குழுக்கள் யாவும் தோல்வியைச் சந்தித்தன. இன்னும் சபை முன்னேறும். உலகெங்கும் நற்செய்தி பரவும். கிறிஸ்துவின் நாமம் உலகெங்கும் தொழுதுகொள்ளப்படும். பாதாளத்தால், எதிர்ப்பாளர்களால், கள்ளச் சகோதரரால் சபையை மேற்கொள்ள முடியவே முடியாது (மத்.16:18). அல்லேலூயா!