திராட்சத் தோட்டங்களைக் கெடுக்கிற நரிகள்

திராட்சத் தோட்டங்களைக் கெடுக்கிற நரிகள்

கர்த்தருடைய சரீரமாகிய சளபயில் ஒருமணப்பாட்டைக் கெடுக்கிற சில காரியங்களைப் பார்ப்போம்.

1. பெருமை

‘யார் பெரியவன்?’ என்ற பிரச்சனை ஆரம்ப காலத்திலிருந்து இருந்துவந்திருக்கிறது. இதனால் சண்டைகளும் பிரிவினைகளும் உண்டாகியிருக்கின்றன. இதை நிவிர்த்திசெய்வது மனத்தாழ்மை ஆகும். கல்வாரியை உற்று நோக்கி, இயேசுவின் தாழ்மையைத் தியாளித்தால் (பிலி.2:5-8) 

கர்த்தராகிய இயேசு ஒருமுறை தன் மரணத்தைக் கவளிக்குமாறு கூறினார். அதைச் சிந்திக்கத் தவறியதால் ரீஷர்களுக்குள் ‘எவன் பெரியவர்? என்ற கேள்வி எழுந்தது (லூக்.9:43-46). எனவே பெருமை தலைதாக்கும் போதெல்லாம் சிலுவையைச் சிந்திப்போமாக. ‘நான் அதிக வரங்கள் உடையவன், நான் வேதத்தை அதிகமாக அறிந்தவள், நான் பணக்காரன்’. என்ற பெருமைகளெல்லாம் சிலுவையின் முன்னால் எம்மாத்திரம்? வரங்கள். வேத அறிவு, பதவி முதலிய யாவுமே கர்த்தரிடமிருந்து பெற்றவை அல்லவா? சுயமாக நம்மிடத்தில் நன்மை ஒன்றுமில்லை என்பதையும் ‘இன்றைக்குத் தேவன் எடுத்துக் கொண்டால். என்பதையும் சிந்தித்துப் பார்த்தால் தாழ்பை உண்டாகும். பெருமையுள்ளவர்களுக்குத் தேவள் எதிர்த்து நிற்கிறார்” (யாக்.4:6) என்பதை நாம் மறந்து போகக் கூடாது. கர்த்தர் நம் ஒவ்வொருவரையும் பெருமை என்ற பயங்கரமான பாலத்தில் விழாமல் காப்பாராக.

கர்த்தரால் மூப்பராக, அப்போஸ்தலராக, போதகராக ஏற்படுத்தப்பட்டவர்களுக்குக் கீழ்ப்படிந்து அவர்களோடு சேர்ந்து உழைக்கவேண்டும். தேவைப்பட்டால் அவர்களுக்கு ஆலோசனை கூறவேண்டும். அவர்களில் பெருமையிருப்பதாகத் தோன்றினால் அவர்களிடம் தனியாக அதை அறிவிக்கலாம். அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும். ஆனால் அவர்களில் மாய்மாலம் காணப்பட்டால் எதிர்த்து நிற்கலாம் (கலா.2:11-14). அவர்களியிருக்கும் வேதத்திற்குப் புறம்பான யாதொன்றைக்குறித்தும் தைரியமாக அவர்களிடம் கூறவேண்டும். ஆனால், அவர்களைக் களம்பண்ணி அவர்களோடு ஒத்துழைக்கவேண்டும் (1 தீமோ.5:17), அவர்களுக்கு அடங்கியிருக்கவேண்டும் (1 பேது.5:5).

ஆவிக்குரிய குழுவின் மூப்பர்கள் தேவனால் நியமிக்கப்பட்டவர்களாக இருக்கவேண்டும். பணவசதி, பதவி, கல்வி, போன்றவற்றால் ஆவிக்குரிய தலைவனாக ஒருவரை நாம் ஏற்படுத்தக் கூடாது. தலைவர்கள், அப்போஸ்தலர், மூப்பர், போதகர் முதலானோர் அன்புடனும் தாழ்மையுடனும் நடந்துகொள்ளவேண்டும். மற்றவர்களுக்கு ஊழியம் செய்யவேண்டும் (மதி.20:25-28). மற்றவர்களின் கால்களைக் கழுவும் அளவிற்குத் தாழ்மையுடையவர்களாக இருக்கவேண்டும் (யோவா.13:14). இறுமாப்பாக ஆளக்கூடாது (1 பேது.5:1-3), தங்களுடைய குறைகளையும் தவறுகளையும் ஒத்துக்கொண்டு திருந்தும் மனப்பான்மை உடையவர்களாக இருக்கவேண்டும். கடிந்துகொள்ளுதலைக் கேட்டுத் தன்னைத் திருத்திக்கொள்ளாத ‘ஊழியரிடத்தில் தேவன் பிரியமாயிரார் (நீதி.15:31-32), பெருமையுடைய ஊழியரே தேவன் உமக்கு எதிர்த்து நிற்கிறார். 

2. பொறாமை

உம் சகோதரனைக் கர்த்தர் உயர்த்தினால் அதற்காகச் சந்தோஷப்படவேண்டுமேயொழிய அதற்காகப் பொறாமைகொள்ளக்கூடாது. நீர் உத்தமனாக இருந்தால் தேவன் உம்மை ஏற்ற காலத்தில் உயர்த்துவார். அதற்காகப் பொறுமையுடன் காத்திருப்பீராக (1 பேது.5:6). மேன்மைக்கு முன்னானது தாழ்மை (நீதி.15:33),

3. மனத்தாங்கல்

எந்தக் காரியத்தைக்குறித்தும் உமக்கு உம் சகோதரனிடத்தில் மனத்தாங்கல் உண்டானால் முதலாவது மன்னிப்பீராக? கிறிஸ்துவுக்குள் தேவன் உமக்கு மள்ளித்ததுபோல நீர் மன்னிக்கவேண்டும் என்று வேதம் சொல்கிறது (எபே.4:32; கொலோ.3:13; லூக்.17:3-4). மன்னியாவிடில் உயது தவறுகளுக்கு மன்னிப்பு இல்லை (மத்.6:15). 

கர்த்தர் கூறும் ஆலோசனை என்னவெனில்: 

1) தனியாகக் சந்தித்துப் பேசுதல்,

 2) சில மூப்பர்களோடு சேர்ந்து சந்தித்துப் பேசுதல், 

3) சபைக்கு அறிவித்தல் ஆகியவையே (மத்.18:15-17). (கர்த்தருடைய பிள்ளைகளுக்கு எதிராக உலகப் பிரகாரமான நீதிமன்றத்திற்குச் செல்லாதீர் (1 கொரி.6:1).

அநியாயத்தைச் சகித்துக்கொள்ளுதலும் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்கிறதும் தேவனுடைய பார்வையில் விலைமதிப்புள்ளவை (1 கொரி.6:7). ஆனால், மிகவும் தவறாக நடக்கும் மக்களிடமிருந்து பாதுகாப்பும், இதியும் வேண்டி நாட்டின் அரசு, காவலர், நீதிமன்றங்களை நாடுவது தவறு அல்ல. 

4.இச்சைகள்

பலவித இச்சைகளால் இழுப்புண்டு. எபையைக் குமைத்துப்போடுவது மிகவும் பெரியமாரும் (யாக் 4:1). பாலியல், பணம், பதவி, புகழ். போன்ற இச்சைகள் நமக்கு இல்லாதிருப்பதாக, தேவன் இலைகளினின்று நம்மைக் காப்பாராக, மனிதரால் வரும் மேன்மையை நாடினால் விழுந்துபோக நேரிடும். 

5. வாக்குவாதங்கள்

வேதத்திற்குப் புறம்பான போதனைகளையும் நடவடிக்கைகளையும் எதிர்ந்துத் தைரியமாகக் கூறலாம். ஆனால், கடுஞ்சொற்களால் இல்லாமல் அன்போடு கூறவேண்டும் (நீதி.15:1). தேவன் நமது சொற்களை அன்பு கலந்ததாக மாற்றவராக ஆனால், தேவனுடைய வார்த்தைக்கு எதிராகத் தொடர்ந்து செயல் புரியவர்களோடு ஒருமளப்படக்கூடாது. அவர்களை விட்டு விலகவேண்டும் (தீத்.3:9). தேவையற்ற சிறு காரியங்களில் வாக்குவாதங்கள் பிரிவினைகளை உண்டாக்கும். கிறிஸ்துவைக்குறித்தும் அவருடைய சிலுவையைக்குறித்தும் மேன்மை பாராட்டாமல், தன் போதகரையோ,

6. மனுஷமார்க்கம்

தன் குழுத்தலைவரையோ, ஒரு ஊழியரையோ, தனக்குள்ள தனி வெளிப்பாட்டையோ -குறித்து மேன்மை பாராட்டினால் பிரிவினை ஏற்பட ஏதுவுண்டாகும் (1 கொரி 3:4), நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிற வனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும் (1 கொரி.3:5-7) என்பதை நினைத்து தேவனைக்குறித்தே சிந்தித்து அவரில் மேன்மைபாராட்டுவோமாக, நாம் செய்யும் எந்தக் காரியத்திலும் கர்த்தருடைய நாமமே மகிமைப்படுவதாக, சடங்காசாரமான வழக்கங்களை விட்டுவிட்டு வேதத்தின்படி வாழ்வதற்கும் ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்பதற்கும் ஒத்துழைப்போமாக.

7. பட்சபாதம் 

பணக்காசர், ஏழைகள், உயர்சாதி, கீழ்சாதி, படித்தவன், படிக்காதவன், உயர் பதவியிலிருப்போர், அவ்வாறில்லாதோர், என்பவைபோன்ற பேதங்கள் இல்லாது சபையில் யாவரையும் சமணகக் கருதவேண்டும். (யாக்.2:1-4). நாம் ஒவ்வொருவரும் சரீரமாகிய சபையில் அவயவங்கள் (ரோமர் 12:5) என்பதை நிளைவிற்கொள்ளவேண்டும். ஒருவரையொருவர் கனம்பண்ணுவதில் முந்திக்கொள்ளவேண்டும் (ரோமர் 12:10), ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டு உபசரிக்கவேண்டும் (ரோம.15:7; 1 பேது,4:9).

8. புறங்கூறுதல் 

மற்றவர்களைப்பற்றி அவர்கள் இல்லாத இடத்தில் குறைகுறிப்பேசும் கெட்ட வழக்கம் நம்தல் அதோளிடத்தில் காணப்படுகிறது. இப்பழக்கத்தால் எத்தனையோ சபைகள் அழிந்திருக்கின்றன. இன்னோருவரைக்குறித்துத் திங்கு போாதில் வாக்.4:12). வதந்திகளைப் பேசுகிறவன் பிசாசின் தூதனாயிருக்கிறாள். “ஜெபத்திற்காகச் சொய்கிறேன்” என்று சொல்லிக்கொண்டே அவதூறு பேசுதல் கொடிய பாவமாகும். ஏதாவது ஒரு சகோதான் மீது குரையிருக்குமாளால் அவரிடம் தேரில் சொல்லாமல் மற்றவர்களிடம் சொல்வது தவறு நீ வேற்றுமையான உபதேசங்கள் உள்ளப்போ தலங்களும் கள்ள உபதேசங்களும் தேவனுடைய சபையைப் பல காலமாகக் கெடுத்துப் பிரித்து யந்திருக்கின்றன. வேற்றுமையான உபதேசங்கள் தருபவர்களையும், இதனால் பிரிவினைகளையும் இடறுதல்களைவும் உண்டாக்குகிறவர்களையும் விட்டு விலகுவீராக (ரோம.16:17). ‘கெட்ட சிந்தை உடையவர்களை விட்டு விலகு சத்தியமில்லாதவர்களை விட்டு விலகு தேவ பக்தியை ஆதாயத் தொழிலாக ண்ணுகிறவர்களை விட்டு விலகு (1 திமோ.6:3-5). தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களை விட்டு விலகு (2 தீமோ.3:5)’ என்று வேதம் கூறுகிறது. அவர்களோடு ஊாக்குவாதம். பண்ணாதீ, அவர்களோடு ஒருமனப்படுவதற்கு முயற்சிக்காதீர், வளமான வாழ்வு (Prosperity) என்று கூறி மக்களைத் திசைதிருப்பும் உபதேசம் இக்காலத்தில் பெருகிவருகிறது. பாளோகத்திற்குரியவற்றை நாடாமல், இவ்வுலகுக்குரியதை நாடும்படி மக்களை இது திசைதிருப்புகிறது (கொலோ.3:1-2). ‘நான் தேவனுடைய பின்னை. எனக்குப் பெரிய வீடு, பெரிய கார் இருக்கவேண்டும்’, என்பது இச்சையாகும். பொருளாசையைத் தூண்டுபவர்கள் இவ்யுவகற்றின்மேல் ஆசையைக்கும்படியும், தேவனுக்குப் பகைவராகும்படியும் வழிநடத்துகிறார்கள் (யாக்.4:4: 1 யோவா.2:15-17).

10. மிகைப்படுத்துதல்

அற்பக் காரியங்களைப் பெரிதுபடுத்தி ஒருமனப்பாட்டைக் கெடுக்கக் கூடாது. எடுத்துக்காட்டாக, முதன்வது பாடல் இரண்டாவது ஜெபம் என்று ஒருவர் நடத்துவாரானால் அதைப் பெரிதுபடுத்தி வாக்குவாதம் செய்தல் கூடாது. முக்கியமான காரியங்களில் ஒற்றுமையும், சிறு காரியங்களில் சுதந்திரமும், யாவற்றிலும் அன்பும் காணப்படவேண்டும். ஒருவர் பாரங்களை (குறைகளை ஒருவர் சுமக்கவேண்டும் (சுலா.6:2). அன்பு திரளான பாவங்களை மூடும் (நீதி.10:12).

11. வாஞ்சையின்மை

தேவள்மீதும் தேவனுடைய வசனத்தின்மீதும் வாஞ்சையாயிருப்பது அரிதாகக் காணப்படுகிறது. அனுதின் வேதத்தியாளமும், ஊக்கமான ஜெபமும் மிகவும் குறைவாகவே உள்ளது. சபை ஆராதனைகளிலும் ஜெபக்குறைவு காணப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் எனப கூடிவரும் பொழுது அந்த வாரத்தில் உலகின் முக்கிய ஜெபக்குறிப்பு களுக்காக, தேவையிலுள்ள மக்களுக்காசு, உலக மக்களின் இரட்சிப்பிற்காக, உலகெங்கும் நற்செய்திப்பணி நடைபெறுவதற்காக ஜெபிக்கும் சபைப்பிரிவு எங்கே இருக்கிறது?

12. ஆத்தும தாகமின்மை

அனுதினமும் உலகில் சுமார் இரண்டரை இலட்சம் பேர் மரணமடைகின்றனர். இவர்களில் பலர் இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளாதவர்கள். இந்நிலையில் ஆத்தும ஆதாயம் எவ்வளவு தேவையென்று உணர்ந்து ஜெபிப்போர், பணி செய்வார் மிகவும் குறைவாக உள்ளனர். ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஆந்தும ஆதாயம் செய்ய வேண்டும் என்பதே கிறிஸ்துவின் கட்டளை (மத்.28:18-20, மாற்.16:15-16).

நமது குறைகளைச் சரிசெய்வோமாக.

Have any Question or Comment?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page