திருவிருந்து

திருவிருந்து – THE LORD’S SUPPER

கிறிஸ்தவ ஆராதனையின் முக்கிய சடங்கு திருவிருந்து அல்லது கர்த்தருடைய பந்தி அல்லது இராபோஜனம் ஆகும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்மை ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கும் முன்பாக இந்தத் திருவிருந்தை ஏற்படுத்தினார். இதில் மார்க்க சம்பந்தமான பிரகாரம் அப்பத்திலும், திராட்சை ரசத்திலும் பங்கு பெறுகிறோம்.

இது கிறிஸ்துவின் ஈடு இணையற்ற தியாகத்தை நினைவுகூரும் ஆதாரமாக ஆகின்றது. இதன் மூலமாக நமது விசுவாசம் வளரும் பொருட்டு உற்சாகப்படுத்தப் படுகின்றோம். கிறிஸ்துவின் பால் விசுவாசமுள்ளோராய் இருக்க இது நம்மை வழி நடத்துகின்றது.

“என்னை நினைவு கூரும்படி இதைச் செய்யுங்கள்” விசுவாசிகள் ஒன்று கூடி திருவிருந்தில் பங்கு பெறும் ஒவ்வொரு வேளையிலும் கிறிஸ்துவின் கிருபாதார பலியையும் அவர்களுடைய பாவங்களிலிருந்து அவர்களை அவருடைய மரணம் விடுவித்ததையும் நினைவு கூருகின்றார்.

கிறிஸ்துவினுடைய ஜீவிய நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் அவருடைய மரணத்தை ஏன் அனைத்திற்கும் மேலாக நினைவு கூர வேண்டும்? ஏனெனில் இது அவருடைய ஊழியத்தில் பிரதானமான நிகழ்ச்சியாக இருக்கின்றது. அதோடு அவருடைய ஜீவியத்தாலும், உபதேசத்தாலும் இரட்சிக்கப் படாமல், இரட்சிக்கப்பட்டிருக்கிறோம்.

திருவிருந்தானது சுவிசேஷத்தின் இரண்டு அடிப்படையான காரியங்களை விளக்கிடும் புனித செயல் முறைப்பாடம் ஆகும்.

1. மனித அவதாரம்: நாம் அப்பத்தைக் கையில் எடுக்கும் பொழுது அப்போஸ்தலனாகிய யோவான் “அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம் பண்ணினார்” என்று கூறுவதைக் கேட்கலாம் (யோவான் 1:4).

“வானத்திலிருந்திறங்கி, உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம்” என்று கர்த்தர் தாமே கூறுவதையும் கேட்கலாம் (யோவான் 6:33).

2. பாவ நிவாரணம்: இந்த அவதாரத்தின் வாயிலாக வரும் ஆசீர்வாதம் கிறிஸ்துவினுடைய மரணத்தின் வாயிலாகவே நமக்கு வருகின்றது. அப்பமும் திராட்சை ரசமும் மரணத்தைக் குறிக்கிறது. ஜீவனும் சரீரமும் பிரிந்ததையும், மாமிசமும் இரத்தமும் பிரிந்ததையும் இது குறிக்கிறது.

ஆவிக்குரிய ரீதியில் பசியாக இருப்போருக்கு பகிர்ந்தளிக்கப்படும் பொருட்டு ஜீவ அப்பமானது பிட்கப்படவேண்டும் என்று அப்பம் நமக்குக் கூறுகின்றது. தேவையுள்ள ஆத்துமாக்களுக்கு சுத்திகரிக்கும் உயிர்ப்பிக்கும் வல்லமை அருளப்படுவதற்காக அவருடைய ஜீவனாகிய இரத்தம் மரணத்தினால் சிந்தப்பட வேண்டும் என்று ஊற்றப்படும் திராட்சை ரசம் நமக்குக் கூறுகின்றது.

திருவிருந்துப் பொருட்கள், அதிலும் சிறப்பாக திராட்சை ரசம், விசுவாசத்தினால் நாம் கிறிஸ்துவின் தன்மையுடன் பங்குடையோராய் மாறுகின்றோம், அதாவது ஐக்கியம் கொண்டுள்ளோம் என்பதை நமக்கு நினைவூட்டுகின்றது.

திருவிருந்தில் அப்பத்தையும் திராட்சை ரசத்தையும் பங்கிடும் பொழுது, உண்மையிலேயே அவருடைய ஆவியைப் பெறலாம் எனவும் அவருடைய தன்மையைப் பிரதிபலிக்கலாம் எனவும் நாம் நினைவூட்டப்பட்டு உறுதி பண்ணப்படுகின்றோம்.

“இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது”.

ஆதிகாலத்தில் உடன்படிக்கைகளுள் மிகவும் உன்னதமானது இரத்த உடன்படிக்கை ஆகும். இது பலியில் இரத்தத்தினால் கையொப்பம் இடப்பட்டு முத்திரையிடப்படும். சீனாய் மலையில் இஸ்ரவேலருடன் ஏற்பட்ட உடன்படிக்கை இரத்த உடன்படிக்கை ஆகும். தேவன் தம்முடைய நிபந்தனைகளை கூறிய பொழுது ஜனங்கள் அவற்றை ஏற்றுக் கொண்டனர்.

மோசே ஒரு பாத்திரத்தில் பலியின் இரத்தத்தை எடுத்துக் கொண்டார். இதில் பாதியை பலிபீடத்தின் மீது தெளித்தார். உடன்படிக்கையில் தேவன் தம்முடைய பகுதியை நிறைவேற்ற கட்டுப்பட்டுள்ளார் என்பதனை இது உணர்த்துகின்றது. மீதமுள்ள இரத்தத்தை ஜனங்கள் மீது தெளித்தார். ஜனங்களும் உடன்படிக்கையில் அவர்களுடைய பங்கை நிறைவேற்ற கட்டுப்பட்டுள்ளனர் என்பதை இது உணர்த்துகிறது (யாத் 24:3-8).

கிறிஸ்துவினால் ஏற்படுத்தப்பட்ட புதிய உடன்படிக்கை இரத்த உடன்படிக்கையாகும். தேவன் கிறிஸ்துவின் இரத்தத்தை அங்கீகரித்துள்ளார் (எபி 914-24).

கிறிஸ்துவின் நிமித்தம் அவரிடம் வருவோர் அனைவரையும் மன்னித்து இரட்சிப்பதற்கு தேவன் கட்டுப்பட்டுள்ளார். பாவத்திற்காக வருந்துகிறவர்கள் மீது தேவன் கிருபையாகவும் இரக்கமாகவும் இருப்பார் என்பதற்கு கிறிஸ்துவின் இரத்தம் தெய்வீக உத்திரவாதமாக இருக்கின்றது. நிவாரணமரணத்தை விசுவாசிப்பதே, இந்த பாவ உடன்படிக்கையில் நமது பங்கு ஆகும் (ரோமர் 3:25,26).

புதிய உடன்படிக்கையின் இரத்தத்தினால் தெளிக்கப்பட்டுள்ளோம் என்று நாம் சாட்சி பகரலாம் (1பேதுரு 1:2).

கர்த்தருடைய பந்தியிலிருந்து யார் ஏற்றுக் கொள்ளப்படுவார்கள்? யார் விலகப்படுவார்கள்? (1கொரி 11:20-34)

இந்த வசனங்களில் பந்தியில் பங்கு பெறுவதற்கான தகுதியை பவுல் கூறுகின்றார். “எவன் அபாத்திரமாய் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து அவருடைய பாத்திரத்தில் பானம் பண்ணுகின்றானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான்”.

கர்த்தருடைய பந்தியில் தகுதியுடையோர் மட்டுந்தான் பங்கு பெறவேண்டுமா?

அப்படியாயின் நாம் அனைவருமே விலக்கப்பட்டுவிடுவோம்! ஏனெனில் மனிதர்களில் யார் தேவனுடைய இரக்கத்தைப் பெற தகுதியுடையவர்கள்? ஒருவரும் இல்லை. அப்போஸ்தலர் பவுல் மனிதர்களின் தகுதியற்ற தன்மையைப் பற்றி இங்கு கூறாமல் அபாத்திரமான செயல்களையே குறிப்பிடுகின்றார்.

நமக்கு இது வினோதமாக இருந்தாலும், அபாத்திரமான நபரும் கர்த்தருடைய பந்தியில் தகுதியோடு பங்கு பெற முடியும். அபாத்திரர் என்ற உணர்வுடையோராய் இருப்போர் மட்டுமே கர்த்தருடைய பந்தியில் சேருவதற்கு சரியான தகுதியுடையோராவர். சுய நீதி ஒரு போதும் பொருந்தாது.

மேலும் ஆவிக்குரிய ஜீவியத்தில் ஆழமான அனுபவம் உடையோர் மட்டும் தங்களுடைய தகுதியின்மையை அதிக அளவில் உணருவர். பாவிகளுள் “பிரதானபாவி” என்று பவுல் தன்னை வர்ணிக்கின்றார்.

திருவிருந்தின் பொருளை உணருவதற்கு தடையான காரியங்களை செய்வதின் மூலமாகவும், பயபக்தியையும், தூய எண்ணத்தையும். சரியான மனநிலையையும் கொடுக்காத காரியங்களைச் செய்வதின் மூலமாகவும் ஒருவன் அபாத்திரமாய் பங்கு பெற முடியும். கொரிந்தியருக்குத் தடையாக இருந்தது குடிப்பழக்கம் ஆகும்.

இராப்போஜனம் – SUPPER

இயேசுகிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூருவதற்காக விசுவாசிகள் அப்பத்திலும் ரசத்திலும் பங்குபெறுவது கர்த்தருடைய பந்தியாகும். இது சபையின் ஒழுங்குகளில் ஒன்று. இயேசுகிறிஸ்து இந்த சபை ஒழுங்கை ஆரம்பித்து வைத்தார். சபையார் கிறிஸ்துவின் வருகை வரையிலும் இந்த ஒழுங்கை கடைபிடித்து வரவேண்டும்.

கர்த்தருடைய பந்தியை பற்றி புதிய ஏற்பாட்டில் பல வசனங்களில் கூறப்பட்டிருக்கிறது. இதற்கு வேறு சில பெயர்களும் உள்ளன (1கொரி 1016,20,21). கர்த்தருடைய பந்தி அவருக்கு நன்றி கூறுவதாகும் (லூக் 22:17,19; 1கொரி 11:24). அப்பம் பிட்குதல் என்பது கர்த்தருடைய பந்தியோடு அன்பின் விருந்தையும் (அப் 2:42/46; 20:7,11; 2பேது 213; யூதா 12). சேர்த்து குறிக்கலாம்

இயேசுகிறிஸ்து சிலுவையில் மரிப்பதற்கு முந்திய நாள் இரவில் கர்த்தருடைய பந்தியை ஆசரித்தார் (மத் 26:17-30; மாற் 14:12-26; லூக் 22:1-23; 1கொரி 11:23-25). இந்தப் பந்தியானது யூதருடைய பஸ்காவிருந்து என்று வேதபண்டிதர்களில் கூறுகிறார்கள் (யாத் 121-14; எண் 91-5).

இயேசுகிறிஸ்து சிலுவையில் மரிப்பதற்கு முந்திய நாள் இரவில் கர்த்தருடைய பந்தியை ஆசரித்தார் (மத் 26:17-30; மாற் 14:2-26; லூக் 22:1-23; 1கொரி 11:23-25). இந்தப் பந்தியானது யூதருடைய பஸ்காவிருந்து என்று வேதபண்டிதர்களில் சிலர் கூறுகிறார்கள் (um 12.1-14; 61600 9:1-5).

“இராப்போஜனம்” என்பதற்கான கிரேக்க வார்த்தை deipnon – 1173 என்பதாகும்.

கர்த்தருடைய பந்தி – LORD’S TABLE

1. பஸ்காபோஜனத்தின்போது இது ஆரம்பிக்கப்பட்டது. (லூக்கா 22:14-20).

2. இது கர்த்தருடைய பந்தி (the Lord’s Supper) (1கொரி 11:20), இயேசு கிறிஸ்துவின்இரத்தத்தோடும்,(thecommunionofthebloodofChrist) கிறிஸ்துவின் சரீரத்தோடும் உடன்படிக்கை. (the communion of the body of Christ) (1கொரி 10:16).

3. கர்த்தருடைய பந்தியில் பயன்படுத்தப்படும் பொருட்கள். திராட்சைரசம், (the fruit of the vine, grape juice) (மாற்கு 14:25; லூக்கா 2218) புளிப்பில்லா அப்பம் “unleavened bread” (மத் 26:17,26; மாற்கு 14:12,22; லூக்கா 22:7,19).

4. அப்பம் பிட்கப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் பிட்கப்பட்ட சரீரத்திற்கு அடையாளம். நமது சரீர சுகமாதலுக்காக அவர் அடிக்கப்பட்டார். (மத் 26:26; லூக்கா 2219; 1கொரி 10:16; 1கொரி 11:24-29; ஏசா 5214; ஏசா 53:4-5; 1பேதுரு 2:24).

5. திராட்சைரசம் இயேசுகிறிஸ்துவின் இரத்தத்திற்கு அடையாளம். நம்முடைய பாவங்களை மன்னிப்பதற்காக அவர் இரத்தம் சிந்தினார். (மத் 26:28; மாற்கு 14:24; லூக்கா 22:20; 1கொரி 10:16; 1கொரி 11:25-29; எபே 1:7; கொலோ 1:4,20).

6. ஒவ்வொரு விசுவாசியும் கர்த்தருடைய பந்தியில் பங்குபெற வேண்டும். (மத் 26:26-27; மாற்கு 14:22; லூக்கா 22:17; 1கொரி 10:16-17; 1கொரி 11:28).

7. கர்த்தருடைய பந்திக்காக ஸ்தோத்திரம் பண்ணி அதை ஆசீர்வதிக்க வேண்டும். (மத்26:26-27; மாற்கு 14:22-23; லூக்கா 22:17,19; 1கொரி 10:16; 1கொரி 11:24).

8. இயேசு கிறிஸ்து மறுபடியும் வரும் வரையிலும் அவருடைய மரணத்தை நினைவுகூரும் விதமாக நாம் இதில் பங்குபெற வேண்டும். (லூக்கா 2219; 1கொரி 11:24-26).

9. கர்த்தருடைய பந்தியில் அனுதினமும் பங்குபெறலாம். (அப் 2:42,46), வாரம் ஒருமுறையோ (அப் 20:7; 1கொரி 1017) அல்லது அடிக்கடியோ (1கொரி 11:26) நாம் பங்குபெறலாம். 

ஆதித்திருச்சபையார் கர்த்தருடைய பந்தியில் அனுதினமும் பங்கு பெற்றார்கள். அதன்பின்பு அவர்கள் வாரம் ஒருமுறை கூடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். அப்போது ஒவ்வொரு வாரமும் கர்த்தருடைய பந்தியில் பங்கு பெற்றார்கள். (அப் 20:7; 1கொரி 16:2)

10. தேவனுடைய ராஜ்ஜியத்தில் கிறிஸ்துவும், எல்லா விசுவாசிகளும் கர்த்தருடைய பந்தியில் நித்திய காலமாகப் பங்கு பெறுவார்கள். (மத் 26:29; மாற்கு 14:25; லூக்கா 2218,30)

11. இது ஒரு சபை ஒழுங்கு. இதனால் விசுவாசிகள் ஒன்றுசேர வேண்டும். விசுவாசிகளிடையே அன்பு பெருக வேண்டும். பிரிவினை வந்துவிடக்கூடாது. 1கொரி 10.16-17: 1கொரி 11:16-30).

12. கர்த்தருடைய பந்தியில் விசுவாசத்தோடு பங்குபெற வேண்டும். பங்கு பெறுகிறவர் தன்னைத்தானே சோதித்துப் பார்க்க வேண்டும். அபாத்திரவானாகப் பங்குபெறுகிறவன் ஆக்கினையையும், வியாதியையும் சிலர் மரணத்தையும் அடைவார்கள். (1கொரி 11:17-30)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *