ஆராதனையின் இரகசியம்

ஆராதனையின் இரகசியம்

யாத்திராகமம் 3:12 – அதற்கு அவர்: நான் உன்னோடே இருப்பேன். நீ ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்துவந்தபின், நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள். நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம் என்றார். 

யாத்திராகமம் 3:10 – நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா என்றார். 

தேவன் ஒரு குறிப்பிட்ட இனத்தை தமக்காக தெரிந்து கொண்டு அவர்களைப் பிரித்து எடுத்து அவர்கள் தன்னை ஆராதிக்க வேண்டும் என்று கூறினார். இன்றைக்கு நம்முடைய 120 க்கும் அதிகமான கிறிஸ்தவ பிரிவுகள் உள்ளன. இவர்கள் எல்லோரும் ஆராதிக்கிறார்கள். இப்படி ஆராதனை செய்கிற இவர்களுக்குள் ஆராதனை முறை பல வித்தியாசங்கள் உள்ளன. இப்படி ஆராதனை முறையில் பல வித்தியாசங்கள் எப்படி வந்தன இவைகளை அறிமுகப்படுத்தியது யார் இதில் எந்த முறை சரியானது என்பவைகள் ஆராய்ந்து பார்க்க வேண்டியதாக உள்ளது.

வேதத்தில் உள்ள ஆராதனை முறைகள் எபிரேயர் 9:1,6

1 அன்றியும், முதலாம் உடன்படிக்கையானது ஆராதனைக்கேற்ற முறைமைகளும் பூமிக்குரிய பரிசுத்த ஸ்தலமும் உடையதாயிருந்தது. 

6 இவைகள் இவ்விதமாய் ஆயத்தமாக்கப்பட்டிருக்க, ஆசாரியர்கள் ஆராதனை முறைமைகளை நிறைவேற்றும்படிக்கு முதலாங்கூடாரத்திலே நித்தமும் பிரவேசிப்பார்கள். 

வ.1ல் ஆராதனை செய்வதற்கு என்று சில முறைகள் உள்ளதாக இந்த வசனம் கூறுகிறது.

வ.6ல் அந்த முறைமைகளை ஆசாரியர்கள் நிறைவேற்ற வேண்டும் என்று இந்த வசனம் கூறுகிறது.

ஆராதனையில் என்ன என்ன இருக்கிறது

  1. முறைமைகள்
  2. ஆராதனை திட்டம் 2 நாளாக 29:35

2 நாளாகமம் 35:10,16

10 இப்;படி ஆராதனை திட்டம்பண்ணப்பட்டபோது, ராஜாவினுடைய கட்டளையின்படியே, ஆசாரியர் தங்கள் ஸ்தானத்திலும், லேவியர் தங்கள் வகுப்புகளின் வரிசையிலும் நின்று, 

16 அப்படியே ராஜாவாகிய யோசியாவினுடைய கட்டளைப்படி, பஸ்காவை ஆசரிக்கிறதற்கும், கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலிகளை இடுகிறதற்கும் அடுத்த கர்த்தருடைய ஆராதனையெல்லாம் அன்றையதினம் திட்டமாய் செய்யப்பட்டது. 

ஆராதனையில் ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் தனித்தனி வேலை உள்ளது.

ஆராதனை திட்டம் எங்கு துவங்கியது

எபிரேயர் 8:3,5

3 ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி நியமிக்கப்படுகிறான். ஆதலால், செலுத்தும்படிக்கு ஏதோ ஒன்று இவருக்கும் அவசியம் வேண்டியதாயிருக்கிறது. 

5 இவர்கள் செய்யும் ஆராதனை பரலோகத்திலுள்ளவைகைளின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கிறது; அப்படியே, மோசே கூடாரத்தை உண்டுபண்ணுகையில் மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே நீ எல்லாவற்றையும் செய்ய எச்சரிக்கையாயிருங்கள் என்று தேவன் அவனுக்குக் கட்டளையிட்டார். 

ஆராதனை என்பது பரலோகத்தில் செய்யப்படும் ஆராதனைக்கு மாதிரியாக உள்ளது இந்த பரலோகத்தின் மாதிரியின் படி செய்யப்படுகிற ஆராதனை மிக கவனமாக செய்ய வேண்டும் பரலோக மாதிரியின் படி ஆராதனை செய்ய வேண்டும் என்று தேவன் எச்சரிக்கை செய்கிறார்.

ஆடு மாடு பறவை ஆலயத்தில் விற்பனை செய்ததற்கான காரணம்

இயேசு கிறிஸ்து தேவாலயத்தில் விற்க அவர்களை துரத்தி ஆலயத்தை சுத்திகரித்தார். அப்பொழுது ஆடுகளையும் மாடுகளையும் வெளியே துரத்தினார். 

யோவான் 2:14,15

14 தேவாலயத்திலே ஆடுகள் மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும், காசுக்காரர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டு. 

15 கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டுபண்ணி, அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு, காசுக்காரருடைய காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப்போட்டு, 

தேவாலயத்துக்கு வருகிறவர்கள் பலி செலுத்த வேண்டும். வெகு தூரத்தில் இருந்து வருகிறவர்கள் பலிக்கான விலங்குகளை கொண்டு வர முடியாது எனவே அப்படிப்பட்டவர்களுக்காக மிருகங்களும் பறவைகளும் தேவாலயத்தில் விற்பனைக்கு என்று வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

ஆராதனையில் பலி அவசியம்

  • தெற்கே 10:32
  • யாத் 3:16

புதிய ஏற்பாட்டில் மூன்று பலிகள் உள்ளது

  • ஆத்துமாவில் செய்யப்படும் பலி
  • ஆவியில் செய்யப்படும் பலி
  • சரீரத்தில் செய்யப்படும் பலி

ஆத்துமாவில் செய்யப்படும் பலி

சங்கீதம் 51: 17

தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.

ஒவ்வொரு ஆராதனையிலும் இருதயத்தின் நினைவுகளை அர்ப்பணம் செய்து ஆராதிக்க வேண்டும். ஆராதனைக்கு வருகிறவர்கள் பல தரப்பட்ட நிலையில் இருப்பார்கள் அதாவது பெருமை ஆணவம் போன்ற செயல்கள். அந்த எண்ணத்தோடு ஆராதனை செய்யக்கூடாது. ஆத்துமாவில் அதாவது இருதயத்தில் உள்ள எல்லாவற்றையும் பலியாக ஒப்பு கொடுக்க வேண்டும். இதற்குப் பெயர்தான் ஆத்மாவில் பலியிடுதல் என்று பொருள்.

ஆவியில் செய்யப்படும் பலி

எபிரெயர் 13: 15

ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.

யோவேல் 14: 2

வார்த்தைகளைக்கொண்டு கர்த்தரிடத்தில் திரும்புங்கள்; அவரை நோக்கி: தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாய் அங்கீகரித்தருளும்; அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் காளைகளைச் செலுத்துவோம்.

உதடுகளின் கனி – என்பது தேவனுடைய நாமத்தை உச்சரித்து போற்றி புகழ்வது ஆகும். 

உதடுகளின் காளை – பொதுவாக காளை என்றாலே பெலத்தை குறிப்பதாகும். என் பெலனே தேவன் என்று துதிப்பதை அப்படி கூறுகின்றனர்.

ஆவியில் துதிப்பது என்றால் வார்த்தையில் துதிப்பது என்று பொருள்.

ஸ்தோத்திர பலி என்றால் தேவன் செய்த நன்மைக்கு நன்றி செலுத்துவது என்று பொருள்.

துதி என்பதற்கு தேவனுடைய மகத்துவத்தை புகழ்ந்து போற்ற வேண்டும் என்று பொருள்.

சரீரத்தில் செய்யப்படும் பலி

ரோமர் 12: 1

அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை.

சரீரத்தின் கிரியைகள் எல்லாவற்றையும் பலியாக செலுத்தி ஆராதிப்பதற்கு சரீரத்தில் செலுத்தப்படும் பலி என்று பொருள் அதையே புத்தி உள்ள ஆராதனை என்று வேதம் கூறுகிறது. புத்தி இல்லாத ஆராதனையை குறித்து மத் 15:9 கூறுகிறது. சரீரத்தின் கிருதிகளை கட்டுப்படுத்தி ஆராதிக்க வேண்டும்.

ஆராதனையில் இருக்க வேண்டியவைகள்

பய பக்தி இருக்க வேண்டும் எபி 12:28; லேவி 19:30; சங்கீதம் 5:7

எது பயம்? 1 தீமோ 3:16

பழைய ஏற்பாட்டு ஆராதனை புதிய ஏற்பாட்டில் உருமாற்றம் செய்யப்பட்டுள்ளது

பிரகாரம்

அ. வெண்கல தொட்டி

எபே 5:26; யோவான் 17:17 இது சுத்திகரிப்பின் அடையாளமாக உள்ளது. புதிய ஏற்பாட்டில் திருவசனம் தண்ணீராக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே பழைய ஏற்பாட்டில் தேவ சமூகத்திற்கு போகும் ஒருவன் இந்த வெண்கல தொட்டியில் உள்ள தண்ணீரைக் கொண்டு தன்னை சுத்திகரித்த பிறகு செல்ல வேண்டும் ஆனால் புதிய ஏற்பாட்டில் திரு வசனத்தைக் கொண்டு தன்னை சுத்திகரித்துக் கொண்டு தேவ சமூகத்துக்கு செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

ஆ. பலிபீடம்

எபே 5:2; ரோம 12:1 புதிய ஏற்பாட்டில் பலிபீடம் என்பது அர்ப்பணிப்பை காட்டுகிறது. ஆராதிக்க வருகிற ஒவ்வொருவரும் தங்களுடைய எண்ணங்களை வார்த்தைகளை நினைவுகளை அர்ப்பணிக்க வேண்டும் என்பதை இது விளக்குகிறது.

இ. குத்துவிளக்கு

எபே 5:19-20; சங்கீதம் 100:1-4 

இடித்தல் பிழிதல் தெளிவாக்குதல் போன்ற செயல்முறைகள் வெளிச்சம் பிரகாசம் மகிமை போன்றவைகளோடு தொடர்புடையதாக உள்ளது. 

அப்போஸ்தலர்கள் காலம் வரை தேவனுடைய நாமத்தை மெதுவாக இசையோடு ஓயாமல் துதித்துக் கொண்டு வந்தனர் இவைகள் தான் பின் நாட்களில் பாடல்களாக உருவாக்கப்பட்டது.

குத்துவிளக்கு என்பது சுவிசேஷத்தை ஜனங்களுக்குள் ஒளியாக ஏற்றி வைக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்துகிறது. 

ஆராதனையில் தேவனை நாம் துதிக்கும்போது நம்முடைய ஆத்மா தீபம் போல் எரிய வேண்டும் என்பதையும் இந்த குத்துவிளக்கு விளக்குகிறது.

சமூகத்து அப்பம்

இங்கு அனுதினமும் புதிதாக அப்பம் வைக்கப்பட வேண்டும். நானே ஜீவ அப்பம் என்று இயேசு கூறினார். இந்த அப்பச்சி பொசிக்கிறவனுக்கு மரணம் இல்லை என்றும் இயேசு கூறினார் இது எதற்கு அடையாளம் என்றால் இயேசு கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூர்ந்து அவரை துதிப்பதற்கு அடையாளமாக உள்ளது. யோவான் 6:48-58; எரே 15:16 ; யோவான் 1:1,14 மேலும் இது தேவனுடைய வார்த்தையை தினந்தோறும் புசிக்க வேண்டும் தியானிக்க வேண்டும் என்பவைகளையும் வெளிப்படுத்துகிறது.

ஈ. தூப கலசம்

இது அனுதினமும் நாம் செய்ய வேண்டிய ஜெபத்திற்கு அடையாளமாக உள்ளது வெளி 5:8; 8:3-4; பிலி 4:6; நீதி 28:9

உ. உடன்படிக்கைப் பெட்டி கற்பலகை

இது தேவனுடைய கட்டளைகள் பிரமாணங்கள் விதிகள் ஆகியவற்றை குறிக்கிறது புதிய ஏற்பாடு காலத்தில் சத்திய வேதமே கட்டளைகளும் கற்பனைகளும் விதிகளுமாக உள்ளது.

ஆராதனையின் அர்த்தம்

Worship – இது Wordhyship என்ற வார்த்தையில் இருந்து வந்தவை ஆகும். இதை எபிரேய மொழியில் shaw-khw என்றும் கிரேக்க மொழியில் Proeskineo என்றும் அழைக்கின்றனர். தொழுது கொள்ளுதல் பணிந்து கொள்ளுதல் சேவித்தல் ஆகிய இவை மூன்றும் சேர்ந்தவைகள் தான் ஆராதனை ஆகும். ஆதி 4:24,26; 12:8; உபா 4:7; சங்கீதம் 29:2.

தொழுது கொள்ளுதல்

தேவனுடைய நாமத்தை சங்கீர்த்தனம் செய்வதே தொழுது கொள்ளுதல் ஆகும். ஓசி 12:5; சங்கீதம் 95:1; 21:11.

பணிந்து கொள்ளுதல் அல்லது வணங்குதல்

தேவனை எப்படி பணிந்து கொள்ள வேண்டும் என்று கீழே உள்ள வசனங்களை படித்து பாருங்கள்

சங் 9:6; யாத் 34:7-8; யோசு 5:14; 1 இரா 18:42; மத் 2:11; 4:10; லூக் 4:8; 1 கொரி 14:25.

ஏன் இப்படி பணிய வேண்டும்?

நாம் ஆராதிக்க வரும் பொழுது நமக்குள் இருக்கும் பேரு மை ஆணவம் கர்வம் மேட்டின்மை போன்ற எண்ணங்களோடு தேவனை ஆராதிக்க கூடாது. நாம் இப்படி பணிந்து கொள்வதின் அடையாளம் என்னவென்றால் நம்முடைய பெருமை ஆணவம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு தேவனுக்கு முன்பதாக தன்னை தாழ்த்தி அவருடைய பாதத்தில் விழுவதற்கு தம்மை அர்ப்பணிப்பதாக உள்ளது.

சேவித்தல்

சேவித்தல் என்பது தேவனுக்கு சேவகம் செய்வதை குறிக்கிறது. யாத் 23:25; யோசு 24:14-15; 2 நாளா 3:8; சங்கீதம் 2:11; ரோம 1:9; அப் 20:19; கொலோ 2:3; 3:23; எண் 8:24; தானி 1:3.

ஆராதனையில் பிசாசு செய்யும் குழப்பம்

கொலோ 2:23

மத் 15:19

வெளி 7:1

ஏசாயா 2:8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *