தொழுதுகொள்ளுதல்

தொழுதுகொள்ளுதல்

‘தேவன் மனிதனைப் படைத்ததற்கான முதன்மையான நோக்கம் அவன் நம்மைத் தொழுதுகொள்ள வேண்டும் என்பதாகும்’ என்று கூறினால் அது மிகையாகாது. வாளத்திலும் பூமியிலும் பூமியின்கீழும் இருக்கும் யாவும் தேவனைத் தொழுதுகொள்ளவேண்டும் (வெளி.5:13), பிராசுகள் இயேசுவைப் பணிந்துகொண்டு அவரிடம் விண்ணப்பம் செய்கின்றன (மாற்.5:2-12) என்றால், நம்மை நேசித்து, நமக்காகத் தமது சொந்தக்குமாரனைத் தந்த தேவளை நாம் வணங்காமலிருப்பது எப்படி?

ஆவியோடும் உண்மையோடும் சரீரத்தாலும் தொழுதல் 

1) சரீரத்தால் தொழுதல்: தொழுதுகொள்வது என்பதை வணங்குதல், பணிந்துகொள்ளுதல் என்றும் கூறலாம். பணிந்து குளிந்து முழங்கால்படியிட்டுத் தொழுதுகொள்ளலாம் (சங்.95:6), கைகளைக் குவித்தும் குளிந்து முகங்குப்புற விழுந்தும் தொழுதுகொள்ளலாம் (நெகே.8:6). கைகளை உயர்த்தியும் தொழுதுகொள்ளலாம் (1 தீமோ.2:8). தரையில் (சாஷ்டாங்கமாக) விழுந்து பணிந்துகொள்ளலாம் (மத்-2:11; வெளி.4:10; 5:8-10,14).

2) உண்மையோடு தொழுதுகொள்ளுதல்: சடங்காசாரமாக அல்லாமல் முழுமையாக உணர்ந்து தொழுது கொள்வது என்று இதைக் குறிப்பிடலாம் (யோவா.4:23-24), மேலும் இதைக் கருத்தோடு தொழுது கொள்வது என்றும் அதாவது, தொழுதுகொள்ளும்போது பயன்படுத்தும் சொற்களைப் பொருளுணர்ந்து கூறித் தொழுதுகொள்வது என்றும் பொருள்கொள்ளலாம்.

3) ஆவியில் தொழுதுகொள்ளுதல் : தேவனைத் தொழுதுகொள்கிற யாராயிருந்தாலும் அவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார் (யோவா.4:23-24), ஆவியில் ஆராதனை செய்கிறவர்களே உண்மையான விருத்தசேதனமுள்ளவர்கள் என்று வேதம் கூறுகிறது. (பிலி.3:3). மேலும் ஆவியில் ஜெபிக்கவேண்டும் என்று எபே.6:16; யூதா 20 ஆகிய வசனங்கள் வலியுறுத்துகின்றன. ஆவியில் ஜெபிப்பது என்றால் என்ன என்பதற்கு ஒரே ஒரு விளக்கம் மட்டுமே வேதத்தில் உண்டு. அந்நிய மொழிகளில் பேசுவது ஆவியில் பேசுவது என்று 1 கொரி.14:2 கூறுகிறது. அந்நிய மொழிகளில் விண்ணப்பம்பண்ணுவது ஆவியில் விண்ணப்பம் பண்ணுவதாகும் என்று 1 கொரி.14:14 கூறுகிறது. வேறு விளக்கம் எதுவும் வேதத்தில் இல்லை.

நாம் செய்யவேண்டியது என்ன?

கொள்வோமாக (சங்.95:6; யோவா.4:23-24; 1 கொரி.14:14-15). நம்முடைய தொழுகையில் ஆவியோடு தொழுது சரீரத்தால் தொழுதுகொள்ளும்பொழுது ஆவியோடும் கருத்தோடும் தேவனைப் போற்றித் தொழுது கொள்ளவும், கருத்துடன் உணர்ந்து தொழுதுகொள்ளவும் நேரம் ஒதுக்குவோமாக.

தொழுதுகொள்வதற்குச் சில ஆலோசனைகள்

1) தேவனுடைய பெயர்களைப் பொருள் உணர்ந்து கூறித் துதிக்கலாம். தேவனுடைய பண்புகளை நினைத்து அவற்றைக் கூறி அவரைப் போற்றலாம். வேதத்தில் எழுதப்பட்டுள்ள தேவனின் செயல்களைக் கூறி அவரைப் போற்றலாம். உலகில் அவர் செய்துவரும் பல செயல்களை நினைத்து அவரைப் போற்றலாம், தேவனின் படைப்பையும் அதில் விளங்கும் அவரது ஞானத்தையும் வியந்து அவரைப் போற்றலாம். தேவனது மாபெரும் திட்டங்களை (இரட்சிப்பின் திட்டம், காலத்தை நியமித்த திட்டம், எதிர்காலத்தைக் குறித்த திட்டம், நியாயத்தீர்ப்புகள் போன்றவை) நினைத்து அவரைப் புகழலாம். தேவனுடைய வாக்குறுதிகளைக் கூறி அவரைப் போற்றலாம். வேதத்தின் பல இடங்களில் தேவனைப் போற்றி எழுதியிருப்பதை நாம் காண்கிறோம். சங்கீதங்களிலும், வெளிப்படுத்தின விசேஷத்திலும் இவை அநேகம் உண்டு. இவற்றைப் பயன்படுத்தித் தொழுதுகொள்ளலாம். தரமான துதிப்பாடல்களைப் பயன்படுத்தியும் தொழுதுகொள்ளலாம்.

2) போற்றுதல் (துதித்தல், புகழ்தல்) வேறு, நன்றி சொல்லுதல் வேறு தேவன் நமக்கும் மற்றவர்களுக்கும் நமது நாட்டிற்கும் உலகிற்கும் செய்துள்ள எல்லா நன்மைகளை நினைத்து அவருக்கு நன்றி செலுத்த வேண்டும். 

3) பரிசுத்த ஆவியானவரின் நிறைவுடன் ஆவியில் தொழுதுகொள்வதற்குக் கவனபாக இருக்கவேண்டும்.

இசைக் கருவிகளைப் பயன்படுத்தலாமா?

இசைக் கருவிகளைப் பயன்படுத்தித் தேவனைத் தொழுதுகொண்டதைப் பழைய ஏற்பாட்டின் பல இடங்களில் காண்கிறோம். சங்.150 இல் பல்வேறு இசைக் கருவிகளைப் பயன்படுத்தித் தொழுதுகொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளோம் பரலோகத்தில் இசைக் கருவிகள் பயன்படுத்தப்படுவதை வெளி.5:8 கூறுகிறது. பழைய ஏற்பாட்டிலும் பரலோகத்திலும் இருக்கும் இசைக் கருவிகளைப் புதிய ஏற்பாட்டுக் காலத்தில் பட்டும் ஒதுக்கி வைப்பது சரியன்று. எனவே இசைக்கருவிகளை முறையாகப் பயன்படுத்தித் தேவனைத் தொழுதுகொள்வது முறையானதே. ஆனால், இசைக்கு முக்கியத்துவம் அளிக்காமல் பொருளுணர்ந்து பாடவும், ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்கவும் கவனமாக இருக்கவேண்டும்.

தனிநபர் தொழுதுகொள்குதல்

ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் தேவனைத் தொழுதுகொள்வது அவசியம் ஆகும் மனதிற்குள்ளாக அவமரத் தியானித்துத் தொழுதுகொள்ளம். மனதிற்குள்ளாக அந்நிய மொழியில் தொழுதுகொள்வதும் சிறந்தது. ஈத்தமாக ஆராதிப்பதும் சரியானதே.

குடும்ப ஜெபத்தில் தொழுதுகொள்ளுதல்

குடும்பமாக தேவனை ஆராதிப்பது சிறந்தது. ஒவ்வொரு நாளும் குடும்ப ஜெபம் செய்யுங்கள். அதில் ஒரு பகுதியாகத் தேவளைப் போற்றி, தொழுதுகொள்வது சிறந்தது.

யாரைத் தொழுதுகொள்ளவேண்டும்

பிதாலையட்டும், இயோபைட்டும். ஆவியாராவரைமட்டும் தொழுதுகொள்வதற்குச் சிவர் முக்கியத்துவம் அளிக்கின்றனர். மூவரையும் (திரித்துவ தேவனைத்) தொழுதுகொள்வதே சிறந்தது.

குழுவினராகத் தொழுதுகொள்ளுதல்

நாள் இருக்கும் சபைப்பிரியில் ஆராதனைகளுக்கு நாம் செல்வது தேவையானது. ஆனால் அதோடு நிறுத்திவிடாமல் ஒரு சிறு ஜெயக்குழுவில் பங்கேற்பது சிறந்தது. வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒரு முறையேனும் கூடி ஜெபித்துத் தொழுதுகொள்ளவும். உபவாச ஜெயங்கள் முதலியயற்றை ஏற்படுத்தி, சேர்ந்து ஆராதித்து ஜெபியுங்கள், குழுவில் பங்கேற்கிறேன் என்று கூறி, சபை கூடிவருதலை விட்டுவிடக்கூடாது. குழுக்கள் சபைக்கு உறுதுணையாக அமையவேண்டும்.

சபையாகத் தொழுதுகொள்ளுதல்

பல சபைப்பிரிவுகளில் ஏற்கெனவே அச்சடிக்கப்பட்ட ஆராதனை முறைமை நூல்களிலுள்ளவற்றைப் பின்பற்றுகின்றனர். இந்த ஆராதனை முறைமைகளில் பல நல்ல விண்ணப்பங்கள், அறிவுரைகள் ஆகியவை அடங்கியிருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால், ஒரேவிதமாக அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்து வதால் பொருளை உணராமல் சடங்காசாரமாகத் தொழுகைகள் நடத்தப்படுகின்றன. பொருளுணர்ந்து பயன்படுத்தலாம்.

1) பாடல்கள், அருளுரை ஆகியவற்றுடன் ஆராதனையின் தொடக்கத்தில் இரண்டு அல்லது மூன்று சபை மக்களைத் தேவனைப் போற்றித் துதிக்கும், நன்றி சொல்லும் ஜெயங்களை ஈறெடுக்கும்படி செய்ய வேண்டும். மற்றவர்களையும் அவர்களோடு இணைந்து துதிக்கும்படி உற்சாகப்படுத்தவேண்டும். 

2) சபை மக்கள் யாவரையும் ஆவியோடும் கருத்தோடும் ஆராதிக்க உற்சாகப்படுத்தவேண்டும். அவ்வாறு யாவரும் சேர்ந்து வாய்களைத் திறந்து போற்றித் தொழுதுகொள்வதற்குச் சற்று நேரம் தரவேண்டும்.

3) மேலும் அந்த யாரத்தில் உலகிலும், நம் நாட்டிலும், சபையிலும் நடந்த நிகழ்ச்சிகளில் உள்ள முக்கிய குறிப்புகளைக் கூறி இரண்டுமூன்று பேரை அவற்றிற்காக அக்கமாக ஜெபிக்குமாறு, நுதிக்குமாறு கூறவேண்டும். அவ்வாறு ஜெபிக்கும்பொழுது மற்றவர்களையும் கருத்துடன் இணைத்து ஜெபிக்க உற்சாகப்படுத்தவேண்டும். மக்களின், சபைப்பிரிவின் தனிப்பட்ட தேவைகளுக்காகவும் ஜெபிக்க வேண்டும்.

ஆராதனையில் பங்கேற்கும் ஒவ்வொருவரும் உணர்ந்து துதிக்கவும் விண்ணப்பிக்கவும் வாய்ப்பளிக்காத, உற்சாகப்படுத்தாத, வழிநடத்தாத, ஆராதனை தேவனுடைய பார்வையில் ஏற்றுக்கொள்ளத் தகுந்ததாயிருக்குமோ? சபை ஆராதனைகளில் நேவ பிரசன்னத்தை மக்கள் உணர்வதற்கு, யாவரும் பங்கேற்பதும் ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்வதும் மிகவும் அவசியம். இவற்றைச் சரிவர நிறைவேற்றாத சபை ஊழியர் கர்த்தருக்குக் கணக்கு கொடுக்கவேண்டும். சாட்சி கூறும் பகுதி, காணிக்கைப் பகுதி, சபைமக்களின் தேவைகளுக்காக ஜெபிக்கும் பகுதி, செய்திப் பகுதி போன்றவற்றை நடத்துவதும் அவசியமாகும்.

Leave a Reply