ஆதி கிறிஸ்துவத்தின் இரகசியங்கள்
கிறிஸ்தவம் என்பது மதமா?
இல்லை அது ஒரு மார்க்கம் அதாவது வழி.
எதற்கான வழி?
நானே வழி என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார். அதாவது ஒரு மனிதன் பரலோகம் போவதற்கு ஒரே வழி அவர் மட்டுமே. இயேசு கிறிஸ்துவின் மூலம் பரலோகம் போவதற்கான வழியை கிறிஸ்தவம் போதிக்கிறது.
நியாயப்பிரமாண கால மார்க்கம்
தேவன் மனிதனை உண்டாக்கினார் மனிதன் மதங்களை உண்டு பண்ணினான் மதங்கள் பிரிவினைகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் ஏற்படுத்தினது.
வேதம் கூறும் மூன்று வித மார்கங்கள்
1. மனுஷ மார்கம்
1 கொரி 3:3;1:11-13 – தேவன் ரத்தம் சிந்தி ஜீவனை கொடுத்து உண்டாக்கினது சத்தியமார்க்கம் ஆனால் நாம் மாம்ஸ் கிரியைகளின் மூலம் மனுஷ மார்க்கம் உள்ளவர்களாக இருக்கிறோம் பொறாமை வாக்குவாதம் பிரிவினை இவைகள் எல்லாம் மனுஷ மார்கத்திற்கான அடையாளங்கள். நம்மிடையே பிரிவினைகள் பேதங்கள் ஏற்றத்தாழ்வுகள் இருந்தால் நாம் மனுஷ மார்க்கத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறோம் என்பது பொருள் ஆகும்.
2. துன்மார்க்கம்
1 பேது 4:3-4 ஏசாயா 47:10 – இருதயத்தில் “நான்” என்ற சிந்தை இருந்தால் அவர்கள் துன்மார்க்கத்தை சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காட்டப்படுகிறது.
3. சத்தியமார்க்கம்
இதற்கு ஏழு காரண பெயர்கள் உள்ளன.
- ஜீவ மார்க்கம்
- ஞானமார்க்கம்
- விசுவாசமார்கம்
- உத்தம மார்க்கம்
- செம்மையான மார்க்கம்
- நீதியின் மார்க்கம்
- சத்தியமார்கம்
ஜீவ மார்கம்
எபிரெயர் 10: 19,20
ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமானமார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்,
20. அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்,
ஒரு ஊழியக்காரர் தனக்காகவோ அல்லது ஒரு ஸ்தாபனத்திற்காகவோ ஊழியம் செய்யாமல் தேவன் தங்களுக்கு கொடுத்த பிரதான கட்டளைகளின் படி தேவனுக்கு என்று ஊழியம் செய்ய வேண்டும் அதுதான் நாம் ஜீவ மார்க்கத்தில் இருக்கிறோம் என்பதற்கான அடையாளம்.
பழைய ஏற்பாடு காலத்தில் தேவனுடைய ஆலயத்திற்கு வருவதற்கு இஸ்ரவேலின் 12 கோத்திரங்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டது. ஆலயத்தின் உள் வேலைக்கும் லேவியர்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டது. அதிலும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் சென்று ஊழியம் செய்ய வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பிரதான ஆசாரியனுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் இடையே ஒரு திரை சிலை இருந்தது. தேவனுடைய கட்டளையை மீறி மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் அதாவது அந்த திரை சீலையை தாண்டி பிரவேசித்தால் மரணம் நிச்சயம். சாதாரண திரை சீலை என்றாலும் அதைத் தாண்டினால் மரணம் அடைவார். இப்படி பல கட்டுப்பாட்டுகளோடு தேவாலயம் இருந்த நிலையில் இயேசு கிறிஸ்துவின் மரணம் நாம் யாவரும் தேவ சமூகத்திற்கு செல்லும் சிலாக்கியத்தை பெறுகிறோம். இந்த பாக்கியம் நம்மை உயர்த்தவோ அல்லது நாம் சார்ந்த ஸ்தாபனங்களை உயர்த்தவோ அல்ல அது தேவனை உயர்த்துவதற்காக நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிற சிலாக்கியம் ஆகும்.
யோவான் 17:1, 3 இயேசு இவைகளைச் சொன்னபின்பு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து:
3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
ஜீவமார்க்கம் என்பது நித்தியஜீவனை போதிக்கும் ஒன்றாக உள்ளது. ஒரு மனிதனுக்கு நித்தியஜீவனை குறித்து போதிப்பதே ஜீவமார்க்கத்தின் பிரதானமான நோக்கமாக உள்ளது. பிதாவாகிய தேவனைக் குறித்தும் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை குறித்தும் பரிசுத்த ஆவியானவரை குறித்தும் தெளிவாக போதிப்பது இதன் நோக்கம் ஆகும். அதாவது தேவனுடைய தெய்வீகம் குணாதிசயங்கள் பண்புகள் செயல்பாடுகள் ஆகியவற்றை தெளிவாக போதிக்கும் மார்க்கமே ஜீவமார்க்கம் ஆகும்.
எ.கா.
ஜெபிக்க வரும் ஒருவருக்கு ஜெபத்தை குறித்த தெளிவை போதிக்க வேண்டும். எப்படி ஜெபிப்பது தேவன் எப்பொழுது பதிலை தருவார் யாருக்கு தருவார் போன்றவற்றை குறித்த தெளிவை போதிக்க வேண்டும்.
ஞானமார்க்கம்
நீதி 4:11;8:14; 2:4; 1 கொரி 2:7; பிர 7:12 ஞானம் ஆகிய இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவை பெற்றிருக்கிற மார்க்கமே ஞானமார்க்கம் ஆகும். ஜனங்கள் சத்தியத்தை அறிகிற அறிவை உடையவர்களாக மாற்றுவது ஞான மார்க்கத்தின் பிரதான நோக்கமாக உள்ளது. மெய்ஞானத்தை போதிக்கும் மார்க்கம் ஞான மார்க்கம் ஆகும்.
விசுவாசமார்கம்
கலா 3:6-9,14-16 தேவன் ஆபிரகாமுக்கு உனக்குள் பூமியின் வம்சங்கள் எல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று கூறினார்.
இந்த வார்த்தை ஆபிரகாமின் வம்சத்தில் வரப்போகும் இயேசு கிறிஸ்துவின் மூலம் பூமியில் உள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று விசுவாசிக்கும் மார்க்கம் விசுவாசம் மார்க்கம் ஆகும்.
உத்தமம் மார்க்கம்
சங் 119:1; நீதி 11:20; எஸ்றா 7:10 வேதத்தின் படி நடக்கிறவர்களே உத்தம மார்க்கத்தை சேர்ந்தவர்கள் ஆவர். பழைய ஏற்பாடு காலத்தில் நியாயப்பிரமாணத்தின் படி நடக்கிறவர்களை உத்தமர்கள் என்று அழைத்தனர் புதிய ஏற்பாடு காலத்தில் வேத வசனத்தின் படி வாழ்கிறவர்களை உத்தமர்கள் என்று அழைக்கிறோம். சுத்தம் பரிசுத்தம் இவற்றின் உயர் நிலையை தான் உத்தமும் என்கிறார்கள். ஒரு மனிதன் தொடர்ந்து வேத வசனத்தை கை கொள்ளுவதன் மூலம் சுத்தத்தையும் பரிசுத்தத்தையும் அடைந்து அதன் உச்ச நிலையான உத்தமத்தையும் அடைகிறான்.
செம்மையான மார்க்கம்
சங்கீதம் 37:14; பிர 7:29 – பிரசங்கி 7: 29 இதோ, தேவன் மனுஷனைச் செம்மையானவனாக உண்டாக்கினார்; அவர்களோ அநேக உபாயதந்திரங்களைத் தேடிக்கொண்டார்கள்; இதைமாத்திரம் கண்டேன்.
இந்த வசனத்தில் உபாய தந்திரம் என்ற வார்த்தை தனக்கு வேண்டியதை சூழ்ச்சிகள் மூலம் பெற்றுக் கொள்வதை குறிக்கிறது. சூழ்ச்சிகள் மூலமாக பெறாமல் நேர்வழிகளில் தனக்கானவைகளை பெற்றுக் கொள்கிறவர்களே செம்மையான மார்க்கத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
நீதியின் மார்க்கம்
2 பேதுரு 2:21-22; ஏசாயா 26:2; ரோம 5:21 – நீதியை தேடும் மார்கத்திற்கு நீதியின் மார்க்கம் என்று பெயர். நீதியை தேடுவது என்பது தேவனுடைய பிரமாணங்கள் சட்டங்கள் விதிகள் கட்டளைகள் ஆகியவற்றை கை கொள்ளுவதை குறிக்கிறது.
சத்தியமார்கம்
2 பேதுரு 2:1-2; யோவான் 18:37;8:47; 1 யோவான் 4:6 – சத்தியவான்கள் உள்ள மார்க்கத்திற்கு சத்திய மார்க்கம் என்று பெயர். இந்த மார்க்கத்தின் நோக்கம் ஒரு தனி மனிதனை சத்தியவானாக மாற்றுவது ஒரு கூட்டத்தை சத்திய ஜாதியாக மாற்றுவது திறள் கூட்டத்தை சத்தியம் மார்க்கமாக மாற்றுவது ஆகும்.
கிறிஸ்தவர்கள் என்ற பெயர் வர காரணம்
அப் 11:26 கிறிஸ்துவை பின்பற்றின சீஷர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்ற பெயர் வழங்கப்பட்டது.
சீஷன் என்பவன் யார்?
தன்னை வெறுக்கிறவன் லூக் 9:23;14:26, தனக்கு உண்டான எல்லாவற்றையும் வெறுக்கிறவன் லூக் 14:31, பிதாவின் சித்தத்தை மாத்திரம் செய்கிறவன் மத் 12:50 இந்தத் தகுதிகளை உடையவனே சீஷன் ஆவான். சீஷனவதற்கு மத் 8:34; லூக் 9:33.
முடிவுரை
யூதா 13; யாக் 5:19; எரே 6:16;18:15 – இந்த வசனத்தில் மார்க்கம் தப்பினவன் என்று யாரைக் குறித்து கூறப்பட்டு உள்ளது என்றால் நாம் மேலே பார்த்த ஏழு மார்க்கத்தில் இல்லாதவனையே ஆகும்.