கிறிஸ்து சிலுவையில் கூறிய ஏழு வாக்கியங்கள்

கிறிஸ்து சிலுவையில் கூறிய ஏழு வாக்கியங்கள்

  1. சிலுவையில் தொங்கினபோது, கர்த்தர் ஏழு வாக்கியங்களைக் கூறினார்.

2.கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரிக்கு முன்னர் இடைப்பட்ட ஆறு மணி நேரங்களில் இந்நிகழ்வு இடம் பெற்றது 

3.கிறிஸ்துவை பாடுகளுக்குட்படுத்த, சிலுவையில் அறையும் குழுவினர் கொல்கதாவில் சேர்ந்தனர். அவ்விடம் கபாலஸ்தலம் என அழைக்கபட்டது, (மத்தேயு 27:33),

  1. கசப்பு கலந்த காடியை அவருக்கு கொடுத்தார்கள், அது அவரது சுயசித்தத்தை பெலவீனப்படுத்துவதாய் இருந்ததினிமித்தம் அவர் அதை மறுத்துவிட்டார்.(மத்தேயு 27:34)
  1. இயேசு தனது முதலாவது வாக்கியத்தைக் கூறியபோது அவர் இரு கள்ளர்கள் நடுவே சிலுவையில் அறையப்பட்டிருந்தார்..  (லூக்கா 23:32-34).

6. முதலாவது வாக்கியம்: 

இயேசுக்கிறிஸ்துவின் ஜெபம், பிதாவை நோக்கி தன்னை சிலுவையில் அறைந்தவர்களை மன்னிக்க கேட்டுக்கொள்கிறார். இது முக்கியமானதாய் இருந்தது, காரணம் அவர்களது பாவங்களுக்காக இவர் நியாயந்தீர்க்கப்பட்டவராக இருந்தார்.

7.போர்ச்சேவகர்கள் அவரது வஸ்திரத்தின் மீது சீட்டுப்போட்டனர். (மத்தேயு 27:35,36 சங்கீதம் 22:18)

8 வஸ்த்திரங்களை விற்று கிடைத்த பணத்தினால் சிவப்பு திராட்சை ரசம் வாங்கி பருகினர், பாரம்பரியப்படி, சிலுவையில் அறையப்படுகிறவர்கள் நிர்வாண கோலத்தில் இருப்பார்கள். 

  1. யூதர்கள் அவரை பரிகாசம் செய்தனர். (மத்தேயு 27:39-43) சிலுவையிலிருந்து இறங்கி வர அவரை சோதித்தனர். அவர்கள் சொற்படி அவர் செய்தால் அவரை விசுவாசிப்பதாய் கூறினர். (சங்கீதம் 22:7-8),
  1. கள்ளர்களில் ஒருவர் அவரை நம்பினான். (லூக்கா 23:42) – எல்லா கள்ளரும் செய்யக்கூடியது விசுவாசிப்பதொன்றே அவர்களால் செய்ய இயலும். இக்கள்ளன் ஞானஸ்நானம் பெறவில்லை, அவன் ஒரு சபையிலிருந்து வரவில்லை.
  1. அடிப்படைச்சத்தியம்: கிறிஸ்துவின் கிரியைகளில் விசுவாசம் வைப்பது ஓர் தனிப்பட்ட நபரின் இரட்சிப்புக்கு வழியாக இருக்கிறது.

12.இரண்டாவது வாக்கியம்  (லூக்கா 23:43)

13.அடிப்படைச்சத்தியம்: இயேசுவின் ஆத்தும பரதீசு சென்றது, அவரது சரீரம் கள்ளறைக்குச்சென்றது, அவரது ஆவி பிதாவினிடத்திற்குச் சென்றது. (லூக்கா 23:46

  1. பரதீசு அல்லது ஆபிரகாமின் மடி, பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் பாதாளத்தில் தற்காலிகமாய் தாபரிக்கும் ஸ்தலமாய் இருந்தது சிலுவை சரித்திர உண்மையாகும் வரை, அவர்கள் அங்கு தரித்து இருக்க நேர்ந்தது. அவிசுவாசியான கள்ளனும் தன்து மரணத்தில் பாதாளம் சென்று அங்கு வாதிக்கப்படுவான், இந்த இடத்திற்கும் பரதீசுக்கும் இடையே ஆழமான இடைவெளி பிரித்தது.
  1. இரு கள்ளரும் மனுக்குலத்தின் இரு பகுதியினரை பிரதிபலிக்கின்றனர் விசுவாசிகள் மற்றும் அவிசுவாசிகள் (யோவான் 3:36).

16.மூன்றாவது வாக்கியம்: (யோவான் 19,26,27)

  1. இயேசு தனது தாயை “அம்மா” என அழைக்கவில்லை. அவர் எப்பொழுதும் “ஸ்திரீயே” என அழைத்தார். ஸ்திரீயின் வித்தாய் தோன்றின இயேசுக்கிறிஸ்துவுக்கு மனுஷீக நிலையில் தாயாக இருப்பதை அவர் வளியுறுத்தினாரே அல்லாது தேவனுக்கு தாயாக அல்ல (ஆதியாகமம் 3:15) மரியாளை குறித்த எதிர்கால பிரச்சனைகளை முன்னதாகவேக் கண்டு, தேவனுக்கு அவள் தாய் என்கிற பிரச்சனையை தவிர்க்க மரியாளை அவர் ஸ்திரீயே என அழைத்தார்.
  1. ஐந்தாம் கற்பனைக்கு கீழ்படியும் வண்ணம் “தாயையும் தந்தையையும் கனப்படுத்துவாயாக” (யாத்திராகமம் 20:12) அவர் தன் தாய்க்கு அடைக்கலத்தை ஏற்படுத்தும் வண்ணம், யோவானைப்பார்த்து, “அதோ உன் தாய்” என்றார். யோவான் 100 ஆண்டுகாலங்கள் வாழ்ந்தார் இது ஐந்தாம் கற்பனையின் பிற்பகுதி கூறும் வண்ணம், உன் வாழ்நாட்கள் நீடித்திருக்கும் படியாக” என்பதை குரிக்கிறது.

19.நன்பகல் 12 மணிக்கு அந்தகாரம் பூமியை சூழ்ந்தது. (மத்தேயு 27:45).

20. நான்காம் வாக்கியம்: (மத்தேயு 27:46; மாற்கு 15:34),

 “என் தேவனே, என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர்?” (cf சங்கீதம் 22:1) கிறிஸ்து கைவிடப்பட்டார். இச்சொற்றொடர், இயேசுக்கிறிஸ்து நமது பாவங்களுக்காக நியாயந்தீர்க்கப்பட்டதை காட்டுகிறது.

(2 கொரிந்தியர் 5:21; 1 பேதுரு 2:24). பிதாவாகிய தேவனும், பரிசுத்த ஆவியானவரும் அவரைக் கைவிட்டனர் காரணம் அவர்கள் மட்டுமே பாவத்தை நியாந்தீர்க்க முடியும்.

21.ஐந்தாம் வாக்கியம்: (யோவான் 19:28)

 சிலுவையில் தனது பணியை கிறிஸ்து நிறைவேற்றி தீர்த்தார்., சங்கீதம் 69:21 ன் படி இவ்வேதவாக்கியத்தை நிறைவேற்றினார், கசப்பு கலந்த காடியை குடிப்பது 22. அவர் மகா துயருற்றபோதும் தீர்க்கதரின வேதவாக்கியங்களை சரியான நேரத்தில் முற்றிலுமாய் நிறைவேற்றுவதற்கு அதிக முக்கியத்துவம் அளித்தார். இதற்கு முன்னர் அவருக்குக் குடிக்க கொடுத்தபோது அதை அவர் மறுத்தார் என்பதை நினைவில் கொள்க.

23.ஆறாவது வாக்கியம்:  (யோவான் 19:28). 

இயேசுக்கிறிஸ்துவின் பணி பூமியில் நிறைவேறி தீர்ந்தது. சர்வலோகத்தின் பாவத்திற்காக அவர் நியாயந்தீர்க்கப்பட்டார். இரட்சிப்பின் பணி நிறைவேற்றபட்டு இருக்கிறது.

  1. அடிப்படைச் சத்தியம்: மனிதனின் கிரியைகள் மூலம் இரட்சிப்பை அடையமுடியாது. இரட்சிபின் பணி முழுவதுமாய் கி.பி. 32 ல் கொல்கொதாவில் நிறைவேற்றப்பட்டு தீர்ந்தன. கிறிஸ்துவின் தியாகபலியைக்குறித்து ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனும் எவ்வாறு அதை கருதுகிறானோ அதைப்பொறுத்தே அவனது எதிர்கால நித்தியம் தீர்மானிக்கப்படுகிறது. தனது சொந்த முயற்சியாலும், கிரியைகளாலும் பரலோகம் செல்ல முயற்சிக்கிறார்களா (ஏசாயா 64:6; எபேசியர் 2:9, தீத்து 3:5) அல்லது கிறிஸ்துவின் கிரியைகளை விசுவாசிப்பதன் மூலம் பரலோகம் செல்ல முயற்சிக்கிறார்களா?

25.ஏழாவது வாக்கியம்:  (லூக்கா 23:46).

 இது மிகவும் முக்கியம் வாய்ந்த வாக்கியம். கிறிஸ்து இனி ஒருபோதும் நமது பாவங்களை சுமக்க அவசியம் இல்லை. அவர் கைவிடப்பட்டிருந்த போதும் திரும்ப தனது உறவை பெற்றுக்கொண்டார். (நான்காவது வாக்கியத்தை கவனியுங்கள் இயேசுக்கிறிஸ்து ஒவ்வொன்றையும் தக்க காலத்தில் செய்து நிறைவேற்றினார். தனது ஆவியை பிதாவின் கரத்தில் ஒப்புக்கொடுப்பதும் பிதாவின் சித்தமாகவே இருந்தது.

  1. கிறிஸ்து சரீரப்பிரகாரமாய் மாலை 3:00 மணியளவில் மரித்தார் (மத்தேயு 27:50). மரத்தில் தொங்கி மரிப்பவனின் பிரதேம் இரவு முழுவதும் தொங்கக்கூடாது என்பதை நிறைவேற்றினார். ஆகையால் அந்த நாளின் மாலை வேளையிலே அவர் அடக்கம் பண்ணப்பட்டார். (மத்தேயு 5:17; உபாகமம் 21:22,23).

 

Have any Question or Comment?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page