சிருஷ்டிப்பு

சிருஷ்டிப்பு

1. வேதாகமத்தின் முதல் வசனம் 

தவறான போதனைகளால் பல விதங்களில் தாக்கப்படும் பொழுது, இந்த வசனம் அவைகளால் மேற்கொள்ளப்படாத வண்ணம் இருக்கிறது. மனுஷீக தத்துவங்களை பொய்யாக்கும்படி இவ்வசனத்தில், 8 உண்மைகள் இருக்கின்றன.

 8 உண்மைகள்

a) ஆதியிலே தேவன்” – தேவன் இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. இது நாஸ்திக கொள்கையாகிய தேவன் இல்லை என்பதை எதிர்க்கிறது, 

b) “தேவன் சிருஷ்டித்தார்” – இது நித்திய சிருஷ்டிகரைக் காட்டுகிறது, மற்ற வேதபகுதிகளில் சிருஷ்டிகர் இயேசுக்கிறிஸ்து என அறிகிறோம். (கொலோசியர்1:16). இது பலதெய்வ கோட்பாடுகளை எதிர்க்கிறது.

c) “வானங்களும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்டன” – இது பரிணாம வளர்ச்சியை எதிர்க்கிறது, எல்லா வஸ்துகளும் தேவனால் சிருஷ்டிக்கப்படவை.

d) “தேவன் சிருஷ்டித்தார் – இது சர்வவல்லமையை விவரிக்கிறது அல்லது தேவனின் சர்வ சக்தியை காட்டுகிறது, இது எல்லாம் கடவுள் என்கிற கோட்பாடை எதிர்க்கிறது, மற்றும் எல்லாவற்றையும் ஆராதிக்கும் முறையை எதிர்க்கிறது. 

e) “தேவன் சிருஷ்டித்தார் – இது தேவனுடைய சுயாதீனத்தையும், அவரது சித்தத்தையும் விவரிக்கிறது, விதியின் மேல் நம்பிக்கை வைப்பதை எதிர்க்கிறது. 

f) எல்லாம் இயற்கையே என்பதை எதிர்க்க, இவ்வசனத்திற்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட வெளிப்பாடு அவசியப்படுகிறது, இயற்கை மற்றும் பௌதீக விதிகள் தெய்வீக வெளிப்பாடின்றி, விவரிக்க போதுமானதாய் இருக்கிறது.

g) இவ்வசனம் விசுவாசத்தை உரிமைபாராட்டுகிறது, இது மனித தகுதிக்கு அப்பாற்பட்டது, பகுத்தறிவு வாதத்தையும், அனுபவ வாதத்தையும் எதிர்க்கிறது,

h) இவ்வசனம் மனிதனின் உதவியற்ற நிலையை சுட்டிக் காண்பித்து, மனிதக்கிரியைகள், அல்லது நற்கிரியைகள் மூலம் இரட்சிப்பை அடைவது போன்றவற்றிற்கு எதிர்த்து நிற்கிறது.

2. சிருஷ்டிப்புக்கு எடுத்துக்கொண்ட காலம் எவ்வளவு?

இயல்பாக பூமி சிருஷ்டிக்கப்பட நீண்ட காலம் எடுத்துக்கொள்ளப்படவில்லை. சிருஷ்டிப்பு உடனடியாக நடந்தது. (சங்கீதம் 33:6 எபிரெயர் 11:3, 2பேதுரு 3:5),

3. சிருஷ்டிப்பின் காலம்:

வேதாகம வம்ச அட்டவணை மூலம், ஆதாம் சுமார் கி.மு.4000 ல் சிருஷ்டிக்கப்பட்டார். பூமியானது ஆதாம் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்னர் சிருஷ்டிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

4. சிருஷ்டிப்பு என்ற பதத்திற்கு எபிரெய வார்த்தைகள்:

அ) பாரா இதன் பொருள் ஒன்றுமில்லாமையிலிருந்து சிலவற்றை சிருஷ்டிப்பது. வச. 1 ஒன்றுமில்லாமையிலிருந்து தேவன் அண்டசராசரத்தை சிருஷ்டித்தார். வச.21 தேவன் மிருகங்களின் ஆத்துமாவை ஒன்றுமில்லாமையிலிருந்து சிருஷ்டித்தார். வச.27. தேவன் மனிதனின் ஆவி மற்றும் ஆத்துமாவை ஒன்றுமில்லாமையிலிருந்து சிருஷ்டித்தார்.

ஆ) ‘அயா (hayah)’ இதன் பொருள் இருக்கின்ற மூலப்பொருட்களிலிருந்து சிலவற்றை சிருஷ்டிப்பது வச. 7 தேவன் இருக்கின்ற மூலப்பொருட்களிலிருந்து ஆகாய விரிவை சிருஷ்டித்தார்.

வச. 16. முன்னதாகவே இருந்த மூலப்பொருட்களிலிருந்து மகத்தான இரு பெரிய சுடர்களை தேவன் சிருஷ்டித்தார். வச. 26 மனிதனின் சரீரம் பூமியின் தூளினாலே வடிவமைக்கப்பட்டது.

இ) ‘யட்சார்’ என்பதன் பொருள் வடிவமைத்தல், களிமண்ணிலிருந்து குயவன் வடிவமைப்பது போன்று, (ஆதியாகமம் 2:7) மனித சரீரம் ஒரு இறுதி தலை மறு இறுதி கால் என உருவமைக்கப்பட்டு இருக்கிறது.

(ஈ) உதாரணங்கள் : ஏசாயா 43:7 ல் ” மனிதனின் சிருஷ்டிப்பு குறித்த எபிரெய சொற்கள் மூன்றும் இவ்வசனத்தில் இடம்பெற்றுள்ளது. சிருஷ்டித்து ‘பார” (ஆத்துமா மற்றும் ஆவி) உருவாக்கி ‘யாட்சார்” (சரீரத்தின் அமைப்பு) படைத்து ‘ஆசா’ (பூமியிலிருந்து). 

மேற்கண்ட வசனத்தில் மூன்று எபிரெய சொற்களும் பூமி சிருஷ்டிக்கப்பட்டதில் இடம் பெற்று இருப்பதை கவனிக்கவும்.

 ‘ஆசா’ ஏற்கனவே இருந்த மூலப்பொருட்களிலிருந்து படைத்தார். படைத்த இவைகளை கழிவுப்பொருளாக சிருஷ்டிக்க வில்லை. 

5.சிருஷ்டிப்புக்குப் பின்னர் நிகழ்ந்தது என்ன?

ஆதியாகமம் 1:2 ஆரம்பத்தில் அனைத்தும் பூரணமாய் சிருஷ்டிக்கப்பட்டது காரணம் தேவன் பூரணர் எல்லாம் உண்டாக்கப்பட்டு இருந்த பின்னரே மாற்றம் ஏற்பட்டுள்ளது, (எபிரெய பதம் ‘டொகு’ என்பதன் பொருள் – ஒழுங்கின்மை கழிவு அல்லது உபயோகமற்ற பொருட்குவியல். எபிரெய பதத்தின் படி ‘பொகு’ வாக மாறியது இதன் பொருள் வெறுமை அல்லது பலனற்றது. எவ்வாறு உலகம் வெறுமை அல்லது பலனற்ற நிலையில் மற்றும் உபயோகமற்ற கழிவுக்குவியலாக மாறியது?

ஏசாயா 14: 17

உலகத்தை வனாந்தரமாக்கி, அதின் நகரங்களை அழித்து, சிறைப்பட்டவர்களைத் தங்கள் வீடுகளுக்குப் போகவிடாமலிருந்தவன் என்பார்கள்.

இவ்வசனப்படி, சாத்தான் பூமியை வனாந்திரமாக்கியவன், உபயோகமற்ற கழிவுக்குவியலாக மாற்றியவன் எனக்கூறுகிறது. பூரணமாக உருவேற்படுத்தப்பட்ட முழு உலகம், பலனற்ற, உபயோகமற்ற நிலையில் மாறியதற்கு காரணம், சாத்தானின் கலகமே என எளிதாய் ஒருவர் முடிவுக்கு வர இயலும்.

6. ஆதியாகமம் 1:2 பின்பகுதி – திரும்ப சிருஷ்டித்தல், அல்லது புதுப்பித்தல்.

மனிதனின் சுயசித்தத்திற்கு பூரணமான பரீட்சை வைக்கும்படி, அவனை அறியாமையில் சிருஷ்டிக்க நேர்ந்தது. அவன் பூரணமான சூழலை பெற்று இருந்தால் மட்டுமே, அவனது சுய சித்தம் பரீட்சை பார்க்கப்படுகிறதாய் இருந்தது. புதுப்பிக்கும் பரிசுத்த ஆவியானவர் “ஜலத்தின் மீது அசைவாடிக்கொண்டிருந்தார். “மனிதன் சிருஷ்டிக்கப்பட்டு ஆறாவது நாளில் பூமியில் இடம்பெற்றான் இதினிமித்தம் புதுப்பிக்கப்படுதலுக்கு ஆறு நாட்கள் அவசியப்படுகிறது. ஆறு நாட்களில் புதுப்பிக்கப்படுதல் என்பது ஆதியாகமம் 1:1 ல் உள்ள, ஆரம்ப சிருஷ்டிப்பிலிருந்து மாறுபட்டதாய் இருக்கவேண்டும்.

பரிசுத்த ஆவியானவரின் ஊழியம் என்பது ஜீவனை திரும்பப்பெறுகிறதாய் இருக்கிறது. (சங்கீதம் 104:30)

a) திரும்ப உருவாக்கப்படுதல் – ஆவிக்குரிய ஜீவன் புதுப்பிக்கப்படுதல் 

b) உயிர்த்தெழுதல் – ஆவிக்குரிய மற்றும் சரீர ஜீவன் புதுப்பிக்கபடல்

c) புதுப்பிக்கப்படுதல் – ஐக்கியம் புதுப்பிக்கப்படுதல்

d) உணர்த்தும் ஊழியம் – ஐக்கியத்தை திரும்ப அடைய முடியும். சங் 104:30 

பரிசுத்த ஆவியானவர், கழிவு, பலனற்றவைகள், ஜலம் இவைகளிலிருந்து புணர் நிர்மாணம் செய்தார்.

7. இதினிமித்தம் வேதாகமம் சுட்டிக்காட்டி சுருங்கக்கூறுவது என்னவென்றால்.

a) பூமியானது சிருஷ்டிக்கப்பட்டபொழுது, ஆரம்பத்திலேயே அழிந்த நிலையில் இல்லை.

b) பூமியானது குடியிருப்புக்காக சிருஷ்டிக்கப்பட்டது. (ஏசாயா 45:18)

c) சாத்தானின் வீழ்ச்சியும், தேவதூதர்களின் முறண்பாடுமே பூமியின் அழிவுக்கு காரணங்களாயின. (ஏசாயா 14:17)

d) இதினிமித்தமே பூமி அழிவுக்குட்பட்டது (ஆதியாகமம் 1:2)

e) பூமியை புணர் நிர்மாணம் செய்யவே பரிசுத்த ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். (ஆதியாகமம் 1:2) 

புணர் நிர்மாணம் செய்யப்பட்ட நாட்கள் ஒவ்வொன்றும் 24 மணி நேரங்களைக் கொண்டதா?

‘நாள்’ என்ற பதம் வேதாகமத்தில் மூன்று விதங்களில் பயன்படுத்தப்படுகிறது.

அ) 24 மணி நேரத்திற்கும் குறைவாக (1 தெசலோனிக்கேயர். 4:13-18) கிறிஸ்துவின் நாள் (2 தெசலோனிக்கேயர் 2:2, 1 கொரிந்தியர். 15) கிறிஸ்துவின் நாள் என்பது உடனடியாய் நிகழும், சபை எடுத்துக்கொள்ளப் படுவதோடு சம்பந்தப்பட்டுள்ளது.

ஆ) 24 மணி நேரத்திற்கும் அதிகமாக கர்த்தருடைய நாள் – 1007 வருடங்கள் அல்லது அதன் ஒரு பகுதி. எபிரெய பாஷையில் *கிறிஸ்துவின்,” “கர்த்தருடைய” என்கிற சொல் தொடருடன் ‘நாள்’ என்கிற பதம் சேர்ந்து வுருமேயானால், 24 மணி நேர நாள் அளவுக்கு அப்பாற்பட்ட நேரத்தை குறிக்கிறது. மற்றபடி 24 மணி நேரத்தை குறிப்பிட எண் வரிசைப்பெயர்கள், அல்லது இயல்பான எண்களைக் கொன்டு நேரம் கணக்கிடப்படுகிறது.

இ) 24 மணி நேரம்: (ஆதியாகமம் 1) ஒவ்வொரு நாளும் இரவு பகல் என்று இருக்கிறது, யூத கணிப்பின் படி ஒவ்வொரு நாளிலும் இரவு முன்னும், பகல் பின்னரும் வருகிறது. சூரிய கணக்கின் படி உள்ள நாட்கள் இப்படியே பிரிக்கப்பட்டுள்ளது. தாவரங்கள் முன்னிருந்த நிலையை திரும்பப்பெற்றது மூன்றாவது நாளில் மற்றும் பச்சய சுழற்ச்சியினிமித்தம் – அவைகள் முற்றிலும் காரிருளில் இருக்க முடியாது வெளிச்சம் கொடுக்கும் சுடர்கள் நான்காவது நாளில் சிருஷ்டிக்கப்பட்டன. முன் நிலைக்கு கொண்டுவர எடுத்துக்கொள்ளப்பட்ட காலம் சாதாரணமான 24 மணிநேரத்தை கொண்ட ஒரு நாள் என்பது தெளிவாகிறது.

9. ஆதியாகமம் 1:3-5 – நாள் 1

இரவு பகல் நியமிக்கப்படுகின்றன, இருளிலிருந்து வெளிச்சம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. வச 3 “தேவன் (பிதாவாகிய தேவன்) வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டானது,” 

வெளிச்சம் என்பதை குறிக்க இரண்டு எபிரெய சொற்கள் பயன் படுத்தப்படுகின்றன

a) ஆர் -OR (எபி, சொல்) முக்கிய பண்பு, அல்லது மூலப்பொருள் அல்லது வெளிச்சத்திற்கான அடிப்படை மூலக் கூறுகள், முதல் நாளில் முன் நிலைக்கு கொண்டுவரப்பட்ட வெளிச்சம், அடிப்படை வெளிச்ச மூலக்க் கூறுகள் ஆகும். 

b) நெயோர் – NEOR (எபி, சொல்) ஒரு பாத்திரத்தில் உள்ள வெளிச்சம், அல்லது வெளிச்சம் கொடுக்கும் சுடர் எனப்பொருள்படும். (நாள் 4) இப்படிப்பட்ட வெளிச்சம் இருளின் பிரச்சனைய தீர்த்து வைத்தது. வெளிச்சம் இருளை உறிஞ்சிக்கொள்வதில்லை அனால் அது இருளிலிருந்து வேறுபடுத்துகிறது. வெளிச்சம் நல்லது ஏனென்றால் அது தேவனிடமிருந்து வந்தது. வேதாகமத்தில் வெளிச்சம் நன்மையை அர்த்தப்படுத்துகிறது. (1 யோவான் 1:5). வேதாகமத்தில் இருள் தீமையை அர்த்தப்படுத்துகிறது. (யோவான் 3:19). தேவன் ஒளியை நிர்மாணித்த பின்னர் வெளிச்சத்திற்கு பகல் என்றும் இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார். தேவன் தீமையையும் நன்மையும் வேறுபிரித்தார் மற்றும் தெய்வீக நன்மை மற்றும் மனித நன்மை இரண்டையும் வேறுபிரித்தார். இருள் – அவிசுவாசி (2 கொரிந்தியர் 4:3,4) வெளிச்சம் – விசுவாசி (யோவான் 8:12) குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், பகலில் வெளிச்சம் மட்டும் அகற்றப்படுமேயானால் நாமெல்லாரும் மரிக்க நேரிடும்.

செயல்பாட்டிற்கு வல்லமை மீது கவனம் செலுத்துவது மனிதனுக்கு நல்லதல்ல. தேசீயம் (Nationalism) ஒருபோதும் சர்வதேசியத்தினால் (Internationalism) எடுத்துக்கொள்ளப்படுவதை அனுமதிப்பதில்லை, காரணம் இயேசுக்கிறிஸ்துவுக்கு மட்டுமே அப்படிப்பட்ட வல்லமை அளிக்கப்பட்டுள்ளது, மற்ற எந்த ஆழுகை செய்பவராலும் இந்த இடத்தை எடுத்துக்கொள்ள முடியாது,

10. ஆதியாகமம் 1:6-8 நாள் 2

ஜலத்தால் பூமி மூடப்படவேண்டுமானால் அறியப்படாத ஆழங்களிலிருந்து திரளான அளவு தண்ணீர் அவசியப்பட்டது. இப்படிப் பட்ட திரளான தண்ணீர் நைட்ரிஜன். ஆக்ஸிஜன், ஹைட்ரிஜன் மற்றும் இதர வாயுக்களால் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்படவுள்ளது, முழு பூமியும் தண்ணீரால் சூழப்பட்டும், மற்றும் பூமியை சூழ்ந்துள்ள ஆகாய விரிவிலும் தண்ணீரால் சூழப்பட்டும் இருக்கிறது. இது வெள்ளப்பெருக்கால் நியாயந்தீர்க்கப்பட பயன்படுவதாய் உள்ளது,

ஆகாய விரிவு நான்கு பாகங்களாக விவரிக்கப்படுகின்றன.

சங்கீதம் 104:2 – 

ஏசாயா 40:22  – இதற்கு எடை உண்டு ஆனால் இலகுவானது அதனை காண இயலாது.

யாத்திராகமம் 24:10 – நீல வானம்

யோபு 37:18- 

ஆதியாகமம் 116 – பின்பகுதி  (கீழே உள்ள ஜலம்), (மேலே உள்ள ஜவம்) 

ஆதியாகமம் 1:7->(ASAHED) ஆசா

ஆதியாகமம்-1:8  (ஒருமை)  இது முதலாம் வானம், தேவன் மூன்றாம் வானத்தில் இருக்கிறார் – 

செயல்படுத்துவது ஆகாயவிரிவு எப்படி ஜலத்தை பிரித்ததோ அப்படியே சிலுவையும் சமுத்திரமாகிய ஜனங்களை பிரிக்கிறது – விசுவாசிகள் – சிலுவை – அவிசுவாசிகள். (யோவான் 3:36)

11.ஆதியாகமம் 1:9-13 நாள் 3

பூமி தண்ணீரால் மூடப்பட்டு இருக்கிறது – அதிகமான தண்ணீர் கடல்கள், சமுத்திரங்களை தவிர்த்து பூமிக்கு கீழே இழுத்துக்கொள்ளப்பட்டன. நோவா காலத்து ஜலப்பிரளயத்தின் போது, தண்ணீர் பூமியிலிருந்தும், வானத்திலிருந்தும் வந்தன. ஜலப்பிரளயத்திற்கு முன்னர் கீழே உள்ள தண்ணீரால் பூமிக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டது. (ஆதியாகமம் 2:5,6), மூன்றாவது நாளில் நிலம் காணப்பட்டது, தாவரங்கள் முன்னிருந்த நிலைக்கு கொண்டு வரப்பட்டன.

ஆதியாகமம் 19  (பிதாவாகிய தேவன்)  (சங்கீதம் 104:5-10),  – பூமி. தண்ணீர் – கடல்கள்  – இதன் பொருள் தேவனது திட்டம் மனிதனுக்கு பூரணமான சுற்று சூழலை அமைத்துக்கொடுப்பதே ஆகும்.

ஆதியாகமம் 1:11,12- தாவரங்கள் தோன்றின, புல், பூண்டுகள் – காய்கறிகள், மற்றும் மரங்கள், விருட்சங்கள் தோன்றின.

“தங்களில் தாங்களது விதைகளையுடைய” – இனங்கள் மாறுபடாத வண்ணம், தங்களது இனங்கள் எவ்விதத்திலும் மாறுபடாவண்ணம் பெருக்கமடைதல். நாய் ஒருபோதும்

பூனைகளை உற்பத்தி செய்யாது, ரோஜா மலர்கள் வில்லி மலர்களை மலரச்செய்யாது.

12. ஆதியாகமம் 1:14-19 நாள் 4.

வச 14  -( NEORIM)  நெயோரிம் கலங்களாகப் பிரிக்கப்படுகிறது – (நட்சத்திரங்கள்) – பிரதிபலிக்கிறவைகள் – (கிரகங்கள் மற்றும் சந்திரன்). 

வெளிச்சம் கொடுக்கும் கலங்களுக்கு ஐந்து காரணங்கள் உண்டு.

a) பகலிலிருந்து இரவை பிரிக்க; விழுந்து போன நிலையில் இருந்த பூமியில் வெளிச்சமின்றி இருள் சூழ்ந்து இருந்தது. – இரவில் வெளிச்சம் இருந்தது. சூரியனை விட அதிகமாய் பிரகாசிக்கும் கலங்கள் இருந்தபோதிலும் அவைகள் அநேக ஒளி வருடங்களுக்கு அப்பாற்பட்ட தூரத்தில் இருந்தன, பரிசுத்த ஆவியானவராகிய தேவன் எல்லாவற்றையும் நேர்த்தியாய் ஒழுங்குபடுத்தியிருந்தமையால் இரவு பகல் வித்தியாசம் உண்டாயிருந்தது. செயல்பாட்டுக்கு: விசுவாசிகள் ‘நெயோரிம” ஆக இருக்கின்றனர். அவர்கள் சுவிஷேச ஒளியை பிரகாசிக்கச் செய்கின்றனர்.

b) அடையாளங்கள்: தேவனிடமிருந்து வரும் சில அற்புத செயல்பாடாக அடையாளங்கள் இருக்கின்றன. அடையாளங்கள் இரு விதமான நோக்கங்களை பெற்றுள்ளது

  • i) வழக்கத்திற்கு மாறான சம்பவங்களை அறிவிக்க -உம். கிறிஸ்துவின் பிறப்பு (மத்தேயு 2:2)
  • ii) வானிலை மாற்றங்களை தெரிவிக்க. (மத்தேயு 16:1-4)

c)பருவகாலங்கள் – பருவ காலங்கள் விவசாயத்திற்கென ஏற்படுத்தப்பட்டது. — விவசாயம் பருவகாலத்தை சார்ந்தே இருக்கிறது. (மத்தேயு 13:37-39). விவசாயம் வானிலையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. – விதைக்கும் காலம், வளரும் காலம், அறுவடை காலம்

(d) நாட்கள் மற்றும் வருடங்கள் காலண்டரின் இலக்கம்: நாம் இரவு பகல் மற்றும் கோடைகாலம் குளிர்காலம் இவற்றை மற்றும் குறிப்பிடுகிறதில்லை, வருடங்களையும் கூட குறிப்பிடுகிறோம்.

e) ஆகாயவிரிவிலே சுடர்கள் (வச 15) – இவைகள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவைகள், மற்றும் மனுக்குல ஆரோக்கியம், வளர்ச்சிக்கு இன்றியமையாதது. சூரியன் மற்று நட்சத்திரங்கள் ஆகாயவிரிவிலே சுடர்களாய் பிரகாசிக்கின்றன.

வச 16 இச்சுடர் கலங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. பெரிய சுடர் (சூரியன்), சிறிய சுடர் (சந்திரன்) மற்றும் நட்சத்திரங்கள்,

வச 17,18 வெளிச்சம் தருபவைகளை திரும்ப கொண்டுவருதல்: தேவன் அவைகளை பூமிக்கு வெளிச்சம் கொடுக்கும்படியாக ஆகாயவிரிவிலே வைத்தார். தேவன் அதை நல்லது என்று கண்டார். 4 ம் நாள் நிறைவடைந்தது.

13.ஆதியாகமம் 1:20-23 நாள் 5.

நீந்தும் ஜீவஜந்துக்கள், பறக்கும் பறவை இனங்களை சிருஷ்டித்தல்: வச 20 (பாலூட்டிகள், ஊர்ந்து செல்வன, மீன்கள்)

அடிப்படைகள்: 

அறிவியல் சட்டங்களை (பிரமாணங்களை) ஏற்படுத்த முடியாது. ஆனால் அவைகள் பிரமாணங்களை கண்டுபிடிக்கும். அறிவியல் பிரமாணங்கள் தேவனின் மாறாத்தன்மையை வருணிக்கின்றன. எல்லா இனங்களிலும் வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் ஒரு இனத்திலிருந்து மற்றொரு இனத்திற்கு மாறுபாடு இல்லை.

தேவன் அவர்களை ஆசீர்வதித்து சொன்னது நீங்கள் பலுகி பெருகுங்கள், பறவைகள் பூமியிலே பெருகக்கடவது.

14. ஆதியாகமம் 1:24-31 நாள் 6.

a) மிருக ஜீவன்களை சிருஷ்டித்தல்: (வச 24,25)

b) மனிதனை சிருஷ்டித்த விதத்தைக்காண்போம் (வச 26,27);

தேவன் சொன்னார் நாம் மனிதனை உண்டாக்குவோமாக (bara, asah பாரா, ஆசா) அவனை மண்ணின் இரசாயண மூலப்பொருட்களாலும், நமது சாயலிலும் உண்டாக்குவோமாக என்றார்.

c) ஸ்திரீயின் வித்து

வச 27 ஆகையால் தேவன் (இயேசுக்கிறிஸ்து) மனிதனை தனது சொந்த சாயலில் சிருஷ்டித்தார் (barah பாரா) – மெய்யான நீங்கள், உங்களுள் வசிப்பது ஓர் காணக்கூடிய திடப்பொருள் அல்ல, – ஆவி ஆத்தும – தேவனுடைய ரூபத்தைக் காணமுடியாது, “அவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்தார்” தேவன் ஆணையும் பெண்ணையும் வேறுபிரித்தார். தேவன் ஆணும் பெண்ணுமாக வேறு பிரிக்குமுன்னர் அவர்கள் ஒன்றாய் இருந்தனர். அவர்கள் பிரிக்கப்பட்ட போது சில குணாதிசங்களுடன் விளங்கினர் ஆண் சூரியனின் குணாதிசயத்தையும் – இதற்கு ஆரம்பமானவர் யாக்கோபு பெண் சந்திரனின் குணாதிசயத்தை குறிக்கிறது அது பிரதிபலிக்கும் தனமை மற்றும் பதிலளிக்கும் தன்மையுடன் விளங்குவது. இதற்கு ஒப்பனை ராகேல் மற்றும் ஒருவருக்கொருவர் இணைந்து செல்லுதல், (ஆதியாகமம் 37:9-10) வச 28 மிருகங்கள் மீது மனிதனுக்குண்டான ஆழுகை. மனிதன் தேவனின் கரத்திலிருந்து வந்தபடியால் அவனுக்கு பூமியின் மேல் ஆழுகை கொடுக்கப்பட்டது. மனிதன் பாவம் செய்தபோது அவ்வாழுகை சாத்தான் வசம் சென்றது,

இயேசுக்கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் அவர் தேவ மனிதனாயிருந்து இப்பூமியை ஆளப்போகிறார். மனிதன் பலுகி பெருகி பூமியை நிரப்பும்படி பணிக்கப்பட்டான்.

15.உணவு: 

தேவன் மனிதனுக்கு உணவாக விதை தரும் சகலவித பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் கொடுத்தார். மனிதன் (ஆரம்பத்தில் சைவ உணவையே உட்கொண்டான்.) ஜலப்பிரளயத்திற்கு பின்னர் மாமிசம் உண்ணும்படியான கட்டளைபெற்றான். (ஆதி.. 9:3) (மனிதன் எல்லாதவித உணவுகளையும் உண்ணுபவனாக மாறினான்) இரண்டாம் வருகையில் சிங்கமும். எருதும் ஒருமித்து புல்லைத்தின்னும், மனிதன் மறுபடியும் சைவ உணவாளியாய் மாறுவான் எனத்தோன்றுகிறது. (ரோமர் 8:19-22; ஏசாயா 65:25; 11:6-9),

16. ஆதியாகமம் 2 ஏழாவது நாள்:

இந்த அதிகாரம் ஓய்வு என்பதுடன் ஆரம்பித்து, திருமணத்தில் முடிவடைகிறது. ஆதியாகமம் 2:1-3 

Have any Question or Comment?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *