மாம்சம்

மாம்சம்

மாம்ச இச்சை LUST OF THE FLESH

மாம்சத்தின் ஆசைகள். பவுல் விசுவாசிகளுக்கு ஆலோசனை கூறுகிறார். நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள். மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்குவிரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது (கலா 536,17). அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார். அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றவையாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்து கொண்டீர்கள். அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின் படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப் போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம் (எபே 2:1-3).

பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகி, புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன் என்று பேதுரு கூறுகிறார் (1பேது 2:11,12).

மாம்ச சிந்தை – CARNALLY MIND

மாம்சத்தின் சிந்தை. மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும் கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது (ரோம 8.6.7).

மாம்சம் FLESH, MEAT

புசிக்கக்கூடிய மிருகங்களின் மாம்சம். இது பறவைகள், மச்சங்கள் ஆகியவற்றின் மாம்சத்திலிருந்து வேறுபட்டது (எண் 11:4; உபா 12:15,20).

பவுலின் காலத்தில் புறஜாதி தெய்வங்களுக்கு மிருகங்களை பலியிட்டு, அதை சந்தை வெளியில் விற்பனைசெய்தார்கள். விசுவாசிகள் இதை வாங்கி புசிக்கலாமா என்னும் பிரச்சனை அக்காலத்தில் உண்டாயிற்று. பவுல் அதை புசிக்கக்கூடாது என்று வலியுறுத்துகிறார் (1கொரி 813).

மாம்சத்திற்குரியது – CARNAL

உலகத்திற்குரியது, உணர்ச்சி பிரகாரமானது, ஆவிக்குரியதல்லாதது என்று இதற்கு பலவிதமாக பொருள் கூறலாம். சரீரத்தின் இச்சைகள் மாம்சத்திற்குரியதாகும். அப்போஸ்தலர் பவுல் ஆவிக்குரிய ஜனங்களையும் மாம்சத்திற்குரியவர்களையும் ஒப்பிட்டுக் கூறுகிறார். ஆவிக்குரியவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளுக்கு உட்பட்டவர்கள். மாம்சத்திற்குரியவர்களோ மாம்சத்தின் ஆளுகைக்கு உட்பட்டவர்கள் 1 கொரி 31-4; ரோம 8:5-7). புதிய ஏற்பாட்டில் மாம்சத்திற்குரியவர்கள் என்னும் வார்த்தை உலகப் பிரகாரமான கிறிஸ்தவர்களை குறிக்கிறது.

மாம்சத்தின் கிரியைகள்

1.விபசாரம் (adultery)

2.வேசித்தனம் (fornication)

  1. அசுத்தம் (uncleanness)

4.காமவிகாரம் (lewdness)

5.விக்கிரகாராதனை (idolatry)

  1. பில்லிசூனியம் (sorcery)
  2. பகைகள் (hatred)

8.விரோதங்கள் (contentions)

  1. வைராக்கியங்கள் (jealousies)

10.கோபங்கள் (outbursts of wrath)

  1. சண்டைகள் (selfish ambitions)
  2. fesser (dissensions)
  3. மார்க்கபேதங்கள் (heresies)
  4. GLIT MIT GOLD56T (envy)
  5. GET 6060856ir (murders)
  6. Coupler (drunkenness)
  7. களியாட்டுகள் (revelries)

மாமிசம் – FLESH

மனுஷருடைய பௌதீக சரீரமும் மிருகங்களின் பௌதீக சரீரமும் மாம்சம் என்னப்படுகிறது. தேவன் ஆதாமின் சரீரத்திலிருந்து ஒரு விலா எலும்பை எடுத்து அதில் சதையை வைத்து மூடி ஏவாளை சிருஷ்டித்தார் (ஆதி 2:21). மனுஷர், மிருகங்கள், மீன், பறவைகள் ஆகியவற்றின் மாம்சத்தைக் குறித்து அப்போஸ்தலர் பவுல் குறிப்பிட்டிருக்கிறார் (1கொரி 15:39).

வேதாகமத்தில் மாம்சம் என்னும் வார்த்தைக்கு பல்வேறு விதமாக பொருள் கூறப்பட்டிருக்கிறது. மாம்சம் என்பது சரீரத்தின் பௌதீக மாம்சத்தை குறிப்பதோடு அது முழு சரீரத்தையும் குறிக்கிறது (கலா 5:13). மனுஷனும் அவனுடைய மனைவியும் ஒரே சரீரமாக ஆகிறார்கள் (ஆதி 2:24). மனுஷன் தன் குடும்பத்தாரிடம் நான் உங்களுடைய மாம்சமும் எலும்புமாக இருக்கிறேன் என்று கூறுகிறான் (நியா 9:2). மனுக்குலத்தார் அனைவரையும் சில சமயங்களில் மிருகங்களையும் குறிப்பதற்கு மாம்சம் என்னும் வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது (ஆதி 6:3),

வேதாகம ஆசிரியர்கள் மாம்சத்தை பலவீனமானது என்று குறிப்பிடுகிறார்கள். இதை சங்கீதக்காரர் இவ்வாறு கூறுகிறார். “தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?” (சங் 56:4).

இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பாக கெத்செமனே தோட்டத்தில் ஜெபித்தபோது சீஷர்கள் தூக்கம் கொண்டிருந்தார்கள். அப்போது இயேசுகிறிஸ்து மாம்சமோ பலவீனமுள்ளது என்று கூறினார் (மாற் 14:38).

மாம்சம் மனுஷனுடைய உலகத்திற்குரிய பகுதியாகும். இது அவனுடைய ஆசைகளுக்கு பிரதிநிதி (எபே 2:3). மாம்சம் ஆவிக்கு விரோதமாக இருக்கிறது (கலா 5:17). மாம்சத்தில் இருக்கிறவர்களால் தேவனை பிரியப்படுத்த முடியாது (ரோம 8:8). மாம்சத்தின் கிரியைக்கும் ஆவியின் கனிக்கும் வேறுபாடுகள் உள்ளது (கலா 5.19-23). மாம்சம் வேதாகமத்தில் முழுவதுமாக கடிந்து கூறப்படவில்லை. இயேசுகிறிஸ்து தாமே மாம்சத்தில் வெளிப்பட்டார் (1யோவா 4:2). “நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே” (கலா 2:16).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *