சிலுவையில் அறையப்படுதல்

சிலுவையில் அறையப்படுதல்: 

சிலுவையில் அறையப்படுதலை குறித்த தீர்க்கதரிசனங்கள்

1. பொதுவான வேதபகுதி – சங்கீதம் 22 தாவீதின் சங்கீதம்.

2.சிலுவையில் அறைதல், ரோமர்களின் மரணதண்டணையாகும், இப்படிப்பட்ட தண்டணையை யூதர் ஒருவரும் தாவீதின் காலத்தில் கொடுத்ததில்லை.

3. வச14-17 ல் சிலுவை வேதனகள் வருணிக்கப்படுகின்றன.

 • a) வச 14 சிலுவை மரணத்தின் போது எலும்புகள் கட்டுவிடும், அதோடு கொடிய வேதனைகளின்மித்தம் அதிகமான வியர்வை உண்டாகும்.
 • b) வச 14 கொடிய அழுத்தம் மற்றும் உதவியற்ற நிலை 
 • c) வச 15 மிகுந்த பெலவீனம் மற்றும் களைப்பு
 • d) வச 15 மிகுந்த தாகம் 
 • e) வச 16 சிலுவை மரணத்தில் கைகளிலும் கால்களிலும் ஆணிகளால் சிலுவை மரத்துடன் அறையப்படுதல்.
 • f) வச 17 கொடிய வேதனை
 •  g) வச 17 சிலுவையில் அறையப்படுபவர்கள் நிர்வாணிகளாயிருபார்கள்

4. சிலுவையில் நிறைவேறின சங்கீதம் 22 ன் பகுதிகள்:

 • a) சிலுவையிலிருந்து கதறுதல் வச 1 (மத்தேயு 27:46) 
 • b) வெளிச்சத்திற்கும் இருளுக்கும் உள்ள காலப்பகுதி (வச 2) (மத்தேயு 27:45)
 • c) தூஷிக்கும் திரள் கூட்டம் (வச 7-8). (மத்தேயு 27:39-43)
 • d) வஸ்திரத்தை பங்கிடுதல் (வச 18). (மத்தேயு 27:35)
 • e) வஸ்திரத்தின் மீது சீட்டுப்போடுதல் (வச 18). (மத்தேயு 27:35) 
 • f) புறஜாதிய அவிசுவாசிகள் அங்கிருத்தல் (வச 16). (மத்தேயு 27:36)
 • g) கள்ளர்கள் நடுவே சிலுவையில் அறையப்படுதல் (வச 16). (மத்தேயு 27:38) 

5. இதில் கவனிக்கப்படக்கூடியது புழுவின் இரத்தம் வச 6 பண்டைய காலங்களில் அரச வஸ்திரங்களை புழுவின் இரத்தத்தால் சாயம் கட்டுவர். அவரது மரணத்தினால் ஆராய்ந்தறிவது, நாம் எந்நாளும் அணிந்து கொள்ளும் வண்ணம் அரச வஸ்திரங்களைப் பெற்று இருக்கிறோம். (1 பேதுரு 2:9),

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *