சிலுவையும் சாத்தானும்
1.சிலுவையில் கிறிஸ்துவின் மரணத்தினால் முழு உலகின் பாவத்திற்கு பரிகாரம் உண்டானது. (கொலோசெயர் 1:15-22, 1 யோவான் 2:2
2. பாவம் அகற்றப்பட்டதுடன், தடையாய் இருந்த சாத்தானின் வல்லமையும் அகற்றப்பட்டது. (யோவான் 12:31, 16:11, கொலோசெயர் 2:14, எபிரெயர் 2:14)
3.சாத்தானின் மீது நியாயத்தீர்ப்பு அறிவிக்கப்பட்டாயிற்று அனலும், அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை, அவன் இன்னும் இவ்வுலகின் அதிபதியாய் இருக்கிறான், (2 கொரிந்தியர் 4:4 எபெசியர் 2:2)
4. சாத்தான் இன்னும் புத்தியற்ற விசுவாசிகளை வஞ்சித்து மற்றும் பொய்களை நம்பச்செய்து அவர்களை வழிநடத்தி வருகிறான். (1 பேதுரு 5:8-9)
5. சிலுவையானது, தேவன் பேரில் விசுவாசம் வைக்கும் ஒவ்வொருவருக்கும் இரட்சிப்புக்கேதுவான கிருபையை அளிக்கிறதாய் இருக்கிறது. சாத்தான் இரட்சகரின்றி இரட்சிப்படைய முடியும் என தத்துவங்கள் மூலமும், இன்னும் பல உபாயங்கள் மூலமும் மனுக்குலத்தை வஞ்சித்து தாக்குதல் நடத்தி வருகிறான். (எபேசியர் 2:8-9)
6.சாத்தானின் நியாயத்தீர்ப்பு, படிப்படியாக வெளிப்பட்டு வருகிறது.
- a) ஏதேன் தோட்டத்தில் (ஆதியாகமம் 3:15)
- b) சிலுவையில் (யோவான் 12:31)
- c) உபத்திரவக்காலத்தில் (வெளிப்படுத்தல் 12:7-12)
- d) கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் (வெளிப்படுத்தல் 20:1-3)
- e) இறுதி நியாயத்தீர்ப்பில் ( வெளிப்படுத்தல் 20:10)
7. சாத்தானின் கலகத்தில் இரண்டு பாவங்கள் மையமாய் உள்ளன, பெருமை மற்றும் பொய் (ஏசாயா 14:12-24, எசேக்கியேல் 28:17. யோவான் 8:44)
8.சாத்தானின் வல்லமை மற்றும் பாவம் இவற்றை அகற்றி தேவன் இரட்சிப்பளிக்க அழைத்தல் என்பது, தேவனது திட்டமாய் இருக்கிறது. சிலுவையில் கிடைத்த மகத்தான வெற்றி தேவனுடைய மகிமைக்கு வழி நடத்துகிறது, மற்றும் நித்திய காலமெல்லாம் தேவனது நீதியை அறிவிக்கிறதாய் இருக்கிறது. (1யோவான் 3:8),