விசுவாசிகளின் இறுதி நிலை

விசுவாசிகளின் இறுதி நிலை

1. இயேசுக்கிறிஸ்துவை விசுவாசிப்போருக்கு இப்பொழுது நித்திய ஜீவனும் (1 யோவான் 5:11-13). மரிக்காமல் இருக்கும் நிலையும் அருளப்படுகிறது. (யோவான் 11:25,26, யோவான் 8:51)

2. விசுவாசிகள் மரிக்கும்போது “நித்திரையடைவதாக” கூறப்படுகிறது (1 தெசலோனிக்கேயர் 4:14). ஆத்துமா சரீரத்தைவிட்டுப்பிரிந்து உணர்வுகளுடன் கிறிஸ்துவுடன் இருக்கிறது, சரீரம் கல்லறையில் “நித்திரை” செய்து உயிர்த்தெழும் வரை அங்கேயே இருக்கிறது, (2 கொரிந்தியர் 5:6-8)

3. கிறிஸ்து வரும்பொழுது, ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படும் போது, கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களின் சரீரம் மரித்தோரிலிருந்து எழுப்பப்படும். (1தெசலோனிக்கேயர் 4:16, 1கொரிந்தியர் 15:20-23

4. நமது ஜட சரீரம் அழியாமையுள்ள சரீரமாய் மாற்றியமைக்கப்படும். (2 கொரிந்தியர் 5:1-4) – கிறிஸ்துவின் ஏக சரீரமாய் மாற்றப்படும். (பிலிப்பியர் 3:20-21)

5.நாம் கிறிஸ்துவுக்கு ஒப்பாயிருப்போம் (1 யோவான் 3:2) அவரது மகிமையைக்கண்டு அதை நமக்குள் பிரதிபளிக்கச்செய்வோம்.(கொலோசெயர் 3:4, யோவான் 17:22).

6. நமது விசுவாசக்கிரியைகளுக்கான பிரதிபலனைப் பெறுவோம் (லூக்கா 19:12-19) தேவனை சேவித்ததில் உள்ள உண்மைக்குத்தக்கதாய் பிரதிபலன்வித்தியாசப்படும்.(மத்தேயு 6:20, 1கொரிந்தியர் 3:11-15)

7. ஆயிர வருட அரசாளுகையில், கிறிஸ்துவுடன் ஆழுகைசெய்து, தேவனுடைய மற்றும் கிறிஸ்துவினுடைய ஆசாரியராய் இருப்போம்.(வெளிப்படுத்தல் 20:6).

8. ஜெயங்கொள்ளுகிறவனுக்கு (1 யோவான் 5:4-5) கிறிஸ்து ஜீவ விருட்சத்தின் கனியை கொடுப்பார் (வெளிப்படுத்தல் 2:7) இரண்டாம் மரணத்தால் – அக்கினிக்கடலால் சேதப்படுவதில்லை (வெளிப்படுத்தல் 2.11), இராஜ்ஜியங்களை அரசாள அதிகாரம் அளிக்கப்படும் (வெளிப்படுத்தல் 2.26-27) தேவனுக்கு முன்னரே விசுவாசிகளை கிறிஸ்து அறிந்துகொள்வார். (வெளிப்படுத்தல் 3:4-5) அவர்களை தேவனுடைய ஆலயத்தில் தூணாக்குவார் (வெளிப்படுத்தல் 3:12) மற்றும் தனது சொந்த சிங்காசனத்தில் அவர்களை அமரச்செய்வார் (வெளிப்படுத்தல் 3:21)

9.தேவன் அவர்கள் முகங்களிலிருந்து எல்லா கண்ணீரையும் துடைப்பார். துக்கம், அவருதல், வேதனை, மற்றும் மரணம் இனி ஒருபோதும் இராது (வெளிப்படுத்தல் 21:4) 

10.எல்லா காரியங்களையும் பூரணமாய் அறிந்துகொள்வோம் (1 கொரிந்தியர் 13:12)

11.மாசற்ற சுதந்திரத்தை நாம் பெற்றுக்கொள்வோம். (1 பேதுரு 1:3-5) இதை நமக்காக எல்ல வல்லமயையும் பெற்ற பரலோக தேவன் வைத்து இருக்கிறார்.

Leave a Reply