யுகங்கள்

யுகங்கள்

1.பொதுவான வேதபகுதி (எபேசியர் 3:1-5)

2. திறவுகோல் வார்த்தைகள் :

  • வசனம் 2 – யுகம் – உக்கிராணத்துவம் அல்லது நிர்வாகம்
  • வசனம் 3 இரகசியம் – சபை யுகத்தை குறிப்பிடுகிறது
  • வசனம் 5 – மற்ற சந்ததிகள் – பழைய ஏற்பாட்டு யுகங்களை குறிப்பிடுகிறது.

3. யுகம் என்பது மனித சரித்திரம் சம்பந்தப்பட்ட, தேவனால் நியமிக்கப்பட்ட கால அளவாய் இருக்கிறது. ஒவ்வொரு யுகத்திலும் தேவன் ஒரு குறிப்பிட்ட ஜனத்தாருக்கு சுவிஷேசம் பரவும்படி செய்தார்.

4.மனித சரித்திரம் வேதாகம ரீதியில் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது;

  • a) புறஜாதியார் அல்லது குடும்பம்
  • b) யூதர்கள் 
  • c) சபை அல்லது கிருபை
  • d) கிறிஸ்து அல்லது ஆயிரவருட ஆளுகை

5.எல்லா யுகங்களிலும் இரட்சிப்பு என்பது ஒன்றாகவே இருக்கிறது – இயேசுக்கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பது

  • a) புறஜாதி மற்றும் யூத காலங்களில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இரட்சகரை எதிர் நோக்கினர்.
  •  b) சபையின் காலத்தில் சரித்திர ரீதியில் நிகழ்ந்த சிலுவை கிரியைகளை பின்னோக்கிப் பார்க்கப்படுகிறது. 
  • c) ஆயிர வருட ஆழுகை காலத்தில் இயேசுக்கிறிஸ்துவை பூமியில் ஆழும் ராஜாவாக நோக்கிப் பார்க்கப்படும்.

6. சுவிஷேசத்தை அறிவிக்கும் பொறுப்புடையவர்.

  • a) புறஜாதிய யுகத்தில் – ஒவ்வொரு குடும்பத் தலைவர்
  • (b) யூத-யுகத்தில் இஸ்ரவேல்
  • c) சபியின் யுகத்தில் – சபை 
  • d) ஆயிர வருட அரசாளுகை யுகத்தில் – கிறிஸ்து. 

புறஜாதிகளின் யுகம் / குடும்ப யுகம்

1வேதபகுதி: ஆதியாகமம் 1-11

2.வரையறை ஆதாம் முதல் ஆபிரகாம் வரை

3.மூன்று பகுதிகளாக பிரிக்கப்படுகின்றன

  • a) அறியாமையின் காலம் (ஆதியாகமம் 1:28-3:22) 
  • b) கலகத்தின் காலம் ( ஆதியாகமம் 3:23-8:20)
  • c) தேசங்களின் காலம் (ஆதியாகமம் 8:21-11:32} 

4. சிறப்பியல்பு

  • a) ஒரே மொழி (ஆதியாகமம் 11:6)
  • b) ஒரே குலம் புறஜாதியர் (ஆதியாகமம் 11:6) 
  • c) எழுதப்பட்ட வேதாகமம் இல்லை
  • (d) மிஷனரிகள் இல்லை – ஒவ்வொரு விசுவாசியும் சுவிஷேசத்திற்கு பொறுப்பாளி முக்கியமாய் குடும்பத்தலைவர் ‘அப்பா’
  • e) சுவிஷேச வழி முறை – கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பது (ரோமர் 4:3)
  • f) கால அளவு சுமார் 2000 ஆண்டுகள்
  • g) பெரிய அளவிலான நியாயத்தீர்ப்பு – நோவா (ஜலப்பிரளயம்) (ஆதியாகமம் 
  • h) b) மரணத்திற்குப்பின்னர் விசுவசிகள் பரதீசு சென்றனர்
  • i) மரணத்திற்குப் பின்னர் அவிசுவாசிகள் உபாதிக்கபடுமிடத்திற்கு சென்றனர் 
  • j) ஆசாரியத்துவம் – விஷேசமானது – முக்கியமாய் தகப்பனே அவரது குடும்பத்திற்கு ஆசாரியன்
  •  k) நியாயப்பிரமாணம் – மோசேயின் நியாயப்பிரமாணம் இல்லை
  • l) பரிசுத்த ஆவியானவர் – தெரிந்து கொள்ளப்பட்ட சில விசுவாசிகளுக்கு மட்டும் உதவியாய் இருந்தார்.
  • (m) சுற்று சூழல் – பூரணமான தோட்டச் சூழலில் இருந்தனர், பாவத்திற்கு பின்னர் சூழல் மாசுப்பட்டு மிகவும் மோசமடைந்துவிட்டது. (ஆதியாகமம் 1:31, 3:17-18). 
  • n) சாத்தான் பரலோகிலும் மற்றும் பூமியிலும் இருந்தான்
  • O) கலகம் – ஆதாம் மற்றும் ஏவாள், பாபேல் கோபுரம் (ஆதியாகமம் 11:1-9) 

5. இந்த யுகத்தில் தேவன் மனுக்குலத்திற்காக ஐந்து நிறுவனங்களை ஏற்படுத்தினார்;

  • a) சுயசித்தம் (ஆதியாகமம் 2:16,17)
  • b) திருமணம் ஆதியாகமம் 2:22-24)
  •  c) குடும்பம் (ஆதியாகமம் 4:1)
  • d) மனித ஆழுகை மற்றும் தேசங்கள் (ஆதியாகமம் 9-11) 

6. இந்த யுகத்தில் சாத்தான் இப்படிப்பட்ட அமைப்புகளை தாக்கினான்:

  • a) சுய சித்தம் ( ஆதியாகமம் – 3) – ஆதாம் ஏவாளின் வீழ்ச்சி
  • b) திருமணம் மற்றும் குடும்பம் ( ஆதியாகமம் – 6) – தேவதூதர்களின் ஊடுருவல் 
  • c) தேசிய அமைப்பு (ஆதியாகமம் 11:1-9) – பாபேல் கோபுர சர்வதேச அமைப்பு.

யூதர்கள் அல்லது இஸ்ரவேலர்களின் யுகம்

1.வேதபகுதி: ஆதியாகமம் 12 – அப்போஸ்தலர்.

2.காலவரை ஆபிரகாம் முதல் இரண்டாம் வருகை வரை.

3. இது மூன்று பகுதிகளாக பிரிக்கப்படுகின்றன.

  • a) முற்பிதாக்கள் – ஆபிரகாம் முதல் மோசே வரை
  • b) நியாயப்பிரமாணம் – மோசே முதல் பெந்தெகொஸ்தே நாள் வரை (சபை துவக்கம்) 
  • c) உபத்திரவகாலம் – சபை எடுத்துக்கொள்ளபடும் நாள் துவங்கி கிறிஸ்துவின் இரண்டாம் வருகை வரை 

4.சிறப்பியல்பு:

  • a) இந்த யுகத்தின் அளவு: சுமார் 2000 ஆண்டுகள். 
  • b) இரட்சிப்பின் வழி – கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசம்
  • c) எழுதப்பட்ட வேதம் – பழைய ஏற்பாடு கி.மு 425 ல் நிறைவடைந்தது.
  • (d) சுவிஷேசகர்கள் யூதர்கள்
  • e) நான்கு நிபந்தனையற்ற உடன்படிக்கைகள்:
  • i) ஆபிரகாமின் உடன்படிக்கை (ஆதியாகமம் 12:1-3)
  • ii) பாலஸ்தீனிய உடன்படிக்கை ( ஆதியாகமம் 15:18-21)
  • iii) தாவீதின் உடன்படிக்கை (2 சாமுவேல் 7:8-16)
  •  iv) புதிய உடன்படிக்கை (எரேமியா 31:31-34) இவைகள் அணைத்தும் இயேசுக்கிறிஸ்துவின் (மேசியாவின்) இரண்டாம் வருகையில் அவர் ராஜாவய் வரும்பொழுது நிறைவேறும்.

f) நிறைவேற்றத்தவறும்போது, தெய்வீக வழிநடத்துதலுடன் தனிப்பட்ட சிட்சயும், அளிக்கப்பட்டது.

  • i) யூதர்களை அயல்தேசத்தினர் ஆண்டனர் (உ.ம். ரோமர்கள் கி.மு. 60 முதல் கி.பி. 70 வரை)
  • ii) யூதர்கள் தங்களது சொந்த மண்ணிலிருந்து அகற்றப்பட்டனர். (உ.ம். பாபிலோனிய சிறையிருப்பு கி.மு.586 முதல் கி.மு. 516 வரை)
  •  g) பெரிய நியாயத்தீர்ப்பு பாபிலோனிய சிறையிருப்பு
  • h) விசுவாசிகள் மரித்தபொழுது – பரதீசு சென்றனர் (ஆபிரகாமின் மடி) லூக்கா 16:19-31
  • i) அவிசுவாசிகள் மரித்தபொழுது வேதனை மிகுந்த இடத்திற்குச்சென்றனர் லூக்கா 16:19-31
  • j) ஆசாரியத்துவம் – லேவியர் (யாத்திராகமம் 28-29)
  • k) நியாயப்பிரமாணம் – மோசேயிக்கு கொடுக்கப்பட்டது, (யாத்திராகமம் 19-24)
  • l) பரிசுத்த ஆவியானவர்- தெரிந்தெடுக்கப்பட்ட சில விசுவாசிகளுக்கு உதவிசெய்தார். உ.ம். கிதியோன், தாவீது, சிம்சோன்
  • m) சுற்று சூழல் – பாவம் நிறைந்திருந்திருந்தது 
  • n) சாத்தான் – பரலோகிலும் மற்றும் பூமியிலுமிருந்தான்
  • (O) கலகம் -விக்கிரக ஆராதணை, நியாயப்பிரமாணத்தை புறம்பாக்குதல்.
  • p) அநேக மொழிகள் – (ஆதியாகமம் 119)
  • q) அநேக ஜாதியான மக்கள் (ஆதியாகமம் 11:9)
  • r) ஆவிக்குரிய தன்மை – கர்த்தருடைய வாக்குத்தத்தத்தில் இளைப்பாறுதல்

5. இயேசுக்கிறிஸ்துவின் சிலுவை மரணம் யூதரிகளின் யுகத்தை இடைமறித்தது. (தானியேல் 9:26a) அவரை தங்களது மேசியாவாய் ஏற்றுக் கொள்வதற்கு பதில் அவரை புறக்கணித்து சிலுவையில் அறைந்தனர். இதினிமித்தம் தேவன் அவர்களை தற்காலிகமாய் தள்ளிவிட்டு சபையை பூமியில் தனது ஸ்தானபதியாய் ஏற்படுத்தியுள்ளார். (ரோமர் 11:17-25) சபை பூமியிலிருந்து எடுத்துக்கொள்ளப்படும்பொது தேவன் யூதர்களை திரும்பவும் தனது ஸ்தானாபதிகளாய் ஏற்படுத்துவார். இது ஏழு ஆண்டுகாலங்கள் நீடிக்கும் (தானியேல் 9.26b-27), இக்காலம் உபத்திரவக்காலம் என அறியப்படுகிறது.(கீழே காண்க) இக்காலத்தில் யூதர்கள் மனந்திருந்தி மேசியாவை அழைக்கும்போது, இயேசுக்கிற்ரிஸ்து தனது இரண்டாம் வருகையில் திரும்ப வந்து இஸ்ரவேலரைக்கூட்டிச்சேர்த்து, தனது இராஜ்ஜியத்தை பூமியில் ஸ்தாபிப்பார்.

சபை யுகம்

காலவரை: 

பெந்தெகொஸ்தே நாள்முதல் சபை எடுத்துக்கொள்ளப்படும் வரை

இரு பிரிவுகள் 

  • a) வேதம் பகுக்கப்பட்டதற்கு முன்னர் முதல் கி.பி 100 வரை, தற்காலிக மற்றும் நிரந்தரமான வரங்களுக்குரிய காலம். 
  • b) வேதம் பகுக்கப்பட்டபின்னர் – வேதாகமம் முழுமை பெற்ற பின்னர் வரங்கள் நிரந்தரமாய் அளிக்கப்பட்ட காலம்,

சிறப்பியல்பு:

a) கால அளவு: அறியப்படவில்லை ஆனால் சுமார் 2000 ஆண்டுகள் இருக்கலாம் 

b) இரட்சிப்பின் வழி – கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பது

c) எழுதப்பட்ட வேதம் – பழைய ஏற்பாடு (வேதம் பகுக்கப்பட்டதற்கு முன்) , முழுவேதாகமம் – வேதம் பகுக்கப்பட்டதற்குப் பின். 

(d) சுவிஷேசகர்கள் – விசுவாசிகள் அனைவரும் (மத்தேயு 28:18-20 2 கொரிந்தியர் 5:20)

e) பெரிய நியாயத்தீர்ப்பு – இல்லை

f) மரிக்கும்போது விசுவாசிகள் – பரலோகம் செல்வர், கர்த்தரை முகமுகமாய் காண்பர் (2 கொரிந்தியர் 5:8)

g) அவிசுவாசிகள் மரிக்கும்போது – வேதனை மிகுந்த இடம் ஆதீசு செல்வர்

h) ஆசாரியத்துவம் எல்லா விசுவாசிகளும் ஆசாரியர்களே (1 பேதுரு 2:9)

 i) நியாயப்பிரமாணம் – கிருபை, இயேசுக்கிறிஸ்துவினால் நியாயப்பிரமாணம் நிறைவேற்றி தீர்க்கப்பட்டது.

j) பரிசுத்த ஆவியானவர் – எல்லா விசுவாசிகளிலும் வாசம்பண்ணுகிறார்.

k) சுற்றுச்சூழல் – பாவம் நிறைந்தது 

I) சாத்தான் – பரலோகிலும் மற்றும் பூமி மீதும் இருக்கிறான்

m) கலகம் – விசுவாச துரோகம் (2 தீமோத்தேயு 3:1-6)

n) அநேக மொழிகள் – (ஆதியாகமம் 11.9) 

o) அநேக இன மக்கள் – (ஆதியாகமம் 11:9)

p) ஆவிக்குரிய நிலை – பரிசுத்தாவியானவரால் நிரப்பப்படுதல் (எபேசியர் 5:18) 

q) ஒவ்வொரு விசுவாசியும் கிறிஸ்துவுடன் இணைக்கப்படுதல் (1 கொரிந்தியர் 12:13)

r) ஒவ்வொரு விசுவாசியிலும் கிறிஸ்து வாசம்பண்ணுதல் (யோவான் 14:20) 

சபை யுகம் பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்படவில்லை.

a) சபை பழைய ஏற்பாட்டு எழுத்தாளருக்கு இரகசியமாய் இருந்தது (கொலோசியர் 1:25-26)

b) பழைய ஏற்பாடு, இயேசுக்கிறிஸ்து மனிதனாய் தோன்றுவது, சிலுவைப்பாடுகள், உயிர்த்தெழுதல், பரமேறுதல், கிறிஸ்துவின் நியாயசங்கம் போன்றவகளை உள்ளடக்கியுள்ளது. (சபையுகத்திலிருந்து உபத்திரவகாலம் வரை, கிரிஸ்துவின் இரண்டாம் வருகை மற்றும் ஆயிர வருட அரசாட்சி இவைகளை விட்டு இருக்கிறது.)? 

c) பழைய ஏற்பாட்டில் உள்ள வேதவசனங்களில் உதாரணங்கள்: 

  • தானியேல் 2:40,41, 7:23,24, 9:268,26b, 11:35,36, ஓசியா 3:4,5, ஏசாயா 61:26,2b போன்ற வேதபக்குதிகளில் பெரிய அளவில் இடைப்பிரிவு (parenthesis) ஏற்பட்டுள்ளதை கவனிக்கவும்.

ஆயிரவருட அரசாட்சியின் யுகம்

1. பொதுவான வேதபகுதி: 

அநேக பழைய ஏற்பாட்டு வேதபகுதிகள், வெளிப்படுத்தல் 20

2. காலவரை: 

கிரிஸ்துவின் இரண்டாம் வருகை முதல் வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு வரை

3.சிறப்பியல்புகள்:

a) யுகத்தின் கால அளவு – 1000 வருடங்கள். 

b) இரட்சிப்பின் வழி கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசம்.

c)வேதபகுதி கிறிஸ்து

(d) சுவிஷேசகர் கிறிஸ்து. 

e) பெரிய அளவிலான நியாயத்தீர்ப்பு:

  • i) அக்கினியின் ஞானஸ்நானம் (மத்தேயு 3:12, 24:36-41)
  • (ii) இறுதி நியாயத்தீர்ப்பு (வெளிப்படுத்தல் 20:11-15) 
  • iii) சர்வலோகத்தின் அழிவு (2 பேதுரு 3:7-13)

 f) மரணம் மிகக்குறைவு. வாழ்நாள் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. (ஏசாயா 65:20)

g) அவிசுவாசிகளின் மரணத்தின் போது – வேதன மிகுந்த இடத்திற்கு செல்வர்.

h) ஆசாரியத்துவம் கிறிஸ்து 

i) நியாயப்பிரமாணம் – நியாயப்பிரமாணம் இல்லை, இயேசுக்கிறிஸ்து கிறிஸ்து நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றிவிட்டார். (மத்தேயு 5:17)

j) பரிசுத்த ஆவியானவர் – உலகலாவிய அளவில் விசுவாசியில் வாசம்பண்ணுதல். (யோவேல் 2:28-29)

k) சுற்றுசூழல் – பூரணமான சூழல் (ஏசாயா 11:1-9)

l) சாத்தான் – சங்கிலிகளால் கட்டப்பட்டு 1000 வருட காலம் பாதாளத்தில் இருப்பான். 

m) இந்த யுகத்தின் இறுதியில் அவிசுவாசிகள் கலகம் செய்வர் (வெளிப்படுத்தல் 20:7-9) 

n) ஆவிக்குரிய நிலை – பரிசுத்த ஆவியனவரின் நிறைவில் வாழ்வர் (யோவேல் 2:28,29)

o) மனுஷீக மதம் இல்லை – சாத்தான் கட்டப்பட்டு இருப்பதால் அவனது செயல்கள் எதுவும் பூமியில் இல்லை.

p) இஸ்ரவேல் – திரும்ப கூட்டிச்சேர்க்கப்படும். ஏசாயா 35:3-10)

q) உலகலாவிய சமாதானம் – (சங்கீதம் 46:9, ஓசியா 2:18, மீகா 4:3)

r) கிறிஸ்து ராஜாவாய் ஆழும் பூரணமான அரசாங்கம் (ஏசாயா 11:1-5, சகரியா 14:9)

s) உலகலாவிய செழிப்பு – (சங்கீதம் 72:7)

t) உலகலாவிய அளவில் தேவனைப்பற்றிய அறிவு இருக்கும் (ஏசாயா 11:9)

u) இயற்கையில் முழுவதுமான மாற்றம் இருக்கும். -ஆதியில் ஏதேனின் சீருக்குத்திரும்பும்.

  • i) பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து மனுக்குலம் விடுவிக்கப்படும். (ரோமர் 8:19-22)
  •  i) பாவம் இயற்கையின் மீது பகைமை விளைவை அளிக்காது (ஆதியாகமம் 3:17-18 ஏசாயா 35:1-2,7) 
  • iii) மிருகங்கள் தங்களது மிருகத்தன்மையை இழந்து காணப்படும், ( ஏசாயா 11:6-8, 65:25) 
  • iv) ஆயிரவருட அரசாட்சி – விசுவாசிகளை மட்டும் கொண்டு துவங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *