எப்படி மனந்திரும்பக்கூடாது ? – 1
1. நியாயத்தீர்ப்புக்குத் தப்பிக்கொள்ளவே மனந்திரும்பக்கூடாது.
மனந்திரும்பதலுக்கான முக்கிய காரணம் —
- மத் 3:2… ஏனென்றால் … பரலோக இராஜ்யம், நரகமல்ல, சமீபம்!
- ”இராஜ்யம்’ = அரசாட்சி, ஆளுகை, கர்த்தத்துவம்
சரியான பிரதிபலிப்பு:
- தங்கள் பாவங்களை அறிக்கையிட்டனர் (வச 6)
தவறான பிரதிபலிப்பு:
- பரிசேயர், சதுசேயர் … “ஆனால்…..” (வச 7,8}
தவறான நோக்கிற்கு எடுத்துக்காட்டுகள்
- பார்வோன் (யாத் 9:33-35) … கல்மழை நின்றதும்! “பின்னும் பாவம் செய்து … இதயத்தைக் கடினப்படுத்தினான்”
- ப நியாயாதிபதிகளின் காலத்தில் (நியா 2:16-19) “… அவர்கள் வழியைச் சீக்கிரமாய் விட்டு விலகி…
- இதுதான் “லவுகீக துக்கம்” (2 கொரி 7:9-11)
எடுத்துக்காட்டு:
- பெரும்பாலான இன்றைய மனந்திரும்புதல்கள்
மனந்திரும்புவதற்குச் சரியான காரணங்கள்—
அ) தேவ பயம்
- யோசேப்பு -ஆதி 39:9
- மருத்துவச்சிகள் – யாத் 1:17
- நெகேமியா – நெகே 5:15
துன்மார்க்கத்திற்கு அடிப்படைக் காரணம்
- சங் 36:1 .., துன்மார்க்கன்… தெய்வ பயம் இல்லை…
- அசுசியை நீக்கிவிட்டு .. பரிசுத்தமாகுதலைத் தொடருவோம்- “தேவ பயத்தோடே…” 2 கொரி 7:1
- ஒரு கள்ளன் அடுத்தவனிடம் சொன்னது: “நீ தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?” லூக் 23:40,41
- இவ்விதப் பாவவுணர்வும் மனந்திரும்புதலும் இருந்ததால்தான் கடைசி வேளையிலும் நொடிப்பொழுதில் இரட்சிக்கப்பட்டான்.
ஆ)தேவ அன்பு
- 2 கொரி 5:14,15 … என்னே அன்பு! அவர் நமக்காய்ப் பாவமானார்!
- :20,21 … பாவமற்றவர் பாவமானாரே! மனந்திரும்ப நெருக்கி ஏவும் அன்பு…
- வெளி 3:19…. “நேசிக்கிறவர்களைக் கடிந்துகொள்கிறேன்” என்னை இவ்வளவாய் நேசித்தவரை நான் துக்கப்படுத்துவதெப்படி?
இ) தேவ வசனம்
– செல்வந்தன்… லாசரு 5 சகோதரர்கள்
- லூக் 16:29,31 … “மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு திருவார்த்தையே முடிவானது!
தேவ வசனத்தின் மூலம்தான் மெய்யான உணர்வு
- சங் 19:7அ … “ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறது …”
- :11 “எச்சரிக்கப்படுகிறேன்.. மிகுந்த பலன்”
வேத வசனத்தின் உணர்த்துவிப்புக்கு நாம் அடிபணியும்போது, பரிதபிக்கும் பிரதான ஆசாரியரின் உதவி நமக்குண்டு-
- எபி 4:12,13 … “வார்த்தை” (உணர்த்துவிப்பு)
- :14-16 “பிரதான ஆசாரியர்… கிருபாசனம்” (உதவி)