தெரிந்து கொள்ளுதல் மற்றும் முன்குறித்தல்

தெரிந்து கொள்ளுதல் மற்றும் முன்குறித்தல்

1. வேதாகம அடிப்படையிலான முன்குறித்தல், மனித சுய சித்தத்துடன் முறண்படுவது சு இல்லை

2. கிறிஸ்து கடந்த கால நித்தியத்தில் குறிப்பிட்ட நோக்கத்திற்காக முன்குறிக்கப்பட்டவராய் இருந்தார். – சிலுவைக்குசென்று மகிமைக்கு உயர்த்தப்படுவது (ஏசாயா 42:1, 1 பேதுரு 2:4-6, அப்போஸ்தலர் 2:23)

3. மனித வர்க்கத்தின் எல்லா நபர்களும், வரையறுக்கப்படாத பிராயச்சித்தத்தின் கீழ் பிதாவாகிய தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டுள்ளனர். (2 பேதுரு 3:9, 1 யோவான் 2:2)

4. ஒரு நபர் தனது இரட்சிப்புக்காய் கிறிஸ்துவில் நம்பிக்கை வைக்கும்போது, அந்நபர் கிரிஸ்துவுடன் இணைக்கப்பட்டு, கிறிஸ்துவின் தெரிந்துகொள்ளுதலிலும், மற்றும் முன்குறிக்கப்படுதலிலும் பங்குபெறுகிறார். (1 கொரிந்தியர் 1:2, 30, ரோமர் 8:28, 32, எபேசியர் 1-4) 

5. தெரிந்துகொள்ளுதலுக்கு, முன்அறிதலுடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது, கடந்தகால நித்தியத்தில், யார் விசுவாசிப்பார் என்று தேவன் அறிவார், அப்படிப்பட்டவர்களை அவர் முன்குறித்துள்ளார், அழைத்தும் இருக்கிறர், மற்றும் அவர்கள் இரட்சிக்கப்பட்டும் இருக்கின்றனர். (ரோமர் 8:29-30,2 தீமோத்தேயு 1:9)

6. இதினிமித்தம், தெரிந்துகொள்ளுதலும், முன்குறித்தலும் விசுவாசிகளுக்கு மட்டுமே பொருந்தும் எந்தஒரு தனிப்பட்டநபரும் நரகத்திற்கென முன் குறிக்கப்படவில்லை – இது சுயசித்தத்தத்தின் தெரிந்து கொள்ளுதலாய் இருக்கிறது. (யோவான் 3:18, யோவான் 3:36).

7. தெரிந்துகொள்ளுதல் என்பது ஒவ்வொரு விசுவாசியின் நிகழ்கால மற்றும் எதிர்கால உரிமை சொத்தாக இருக்கிறது. ( யோவான் 15:16, கொலோசெயர் 3:12)

8.தெரிந்துகொள்ளுதல் உலகலாவிய சபையின் அஸ்திபாரமாகக்கூட இருக்கிறது. (1 தெசலோனிக்கேயர் 1:4)

9. ஐந்து கிரேக்க சொற்கள், முன்குறித்தல் என்கிற சொல்லை இணைக்கும் சொற்களாய் இருக்கின்றன.

  • a) Pro Orizo ப்ரோ ஒரிஜோ – முன்பதாகவே வடிவமைத்தல் (ரோமர் 8:28, 29 எபேசியர் 1:5,11)
  •  b) Protithemi ப்ரோடிதெமி – முன் நிர்ணயித்தல் (ரோமர் 3:25, எபேசியர் 1:9)
  • c) Prothesis ப்ரோதெஸிஸ் – ஒரு முன் நிர்ணயிக்கப்பட்ட திட்டம் (ரோமர் 8:28, 9:11. எபேசியர் 1:11, 3:11, 2 தீமோத்தேயு 1:9),
  • d) Proginosko ப்ரோகினோஸ்கொ – முன்னதாகவே தீர்மானித்தல், முன்தீர்மானித்தல், (ரோமர் 8:29, 11:2, 1 பேதுரு 1:20)
  • e) Prognosis ப்ரோக்னோஸிஸ் – முன்னறிவு, அல்லது நோக்கத்துடன் முன்நிர்ணயித்தல் (அப்போஸ்தலர் 2:23, 1 பேதுரு 1:2) 

10. யூதாஸின் வாழ்க்கை முன்தீர்மானம் மற்றும் சுயசித்தம் இவைகளுக்கு நல்ல எடுத்துக்காட்டாய் இருக்கிறது.

  • a) தேவனின் அழைப்பு எல்லா ஜனங்களுக்கும் உரியதாய் இருக்கிரது, அவரது ஆசை எல்லோரும் இரட்சிப்படைய வேண்டும் என்பதே (மத்தேயு 28:18-20, யோவான் 3:161 யோவான் 2:2, 3;23)
  • b) இழந்து போனவர்கள் மீது தேவன் நீடிய பொறுமை உள்ளவராக இருக்கிறார். ஒருவரும் கெட்டுப்போவது அவரது சித்தம் அல்ல (2 பேதுரு 3:9) 
  • c) தேவனது அழைப்பு எல்லோருக்கும் உரியது, ஆனால் மக்கள் அதற்கு செவிசாய்க்கவேண்டும். (யோவான் 3:36, 16:8-11)
  • (d) தமது மிகுந்த அன்பினிமித்தமே தேவன் அழைக்கிறார். (எரேமியா 31:3, யோவான் 3:16)
  • e) அவரது அன்புக்கு எதிர்த்து நிற்கிறவர்கள், தங்களது ஆத்துமாவை கடினப்படுத்துகிறார்கள் மற்றும் சாத்தானுக்கு திறந்த வாயிலை ஏற்படுத்திக்கொடுத்து அவனது செயல்களுக்கும், அவன் பிடித்து ஆட்டிப்படைக்கவும் தங்களை அற்பணிக்கின்றனர். ( ரோமர் 1:20-32, 2 தெசலோனிக்கேயர் 2:9-12)
  • f) கர்த்தர் தமது அன்பினிமித்தம் யூதாஸை தெரிந்துகொண்டார். (மத்தேயு 10:1-4, யோவான் 13:18) மற்றும் கனப்படுத்தப்படுகிற விருந்தினருக்கு அளிக்கப்படும். இரசத்தில் தோய்க்கப்பட்ட துணிக்கையைப் பெற்று இராவிருந்தின் போது கர்த்தரின் வலது பக்கத்தில் அமரும் பாக்கியத்தையும் பெற்றான். (யோவான் 12:6, 13:18)
  • g) திருடனும் அவரைக்காட்டிக் கொடுக்கிறவனாயிருந்தும் இயேசு அவனை நேசித்தார். (யோவான் 12:6, 13:18)
  • (h) இரட்சிக்கப்படாத மனிதனாய் சுவிஷேச ஊழியத்தில் பங்கு பெற்றான் மற்ற அனைவரும் அவரது வார்த்தையை வாசித்தறிந்ததன் மூலம் இரட்சிக்கப்பட்டு இருந்தனர் ஆனால் யூதாஸோ இரட்சிப்படையவில்லை. (மத்தேயு 10:1-8)
  •  i) அவனது தீர்மானத்தால் பாழாக்குகிறவனின் குமாரனாய் மாறினான், அவனால் யாரையும் குற்றப்படுத்த இயலவில்லை (யோவான் 17:12)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *