நித்திய ஜீவன்
1. மனுக்குலம் தேவனுடன் ஐக்கியங்கொண்டு மகிழவே, அவரால் சிருஷ்டிக்கப்பட்டனர். 2பேதுரு 3:9.
2. நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பது இயேசுக்கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தினால் மூலமே யோவான் 3:36, 5:24, அப்போஸ்தலர்13:46, கலாத்தியர் 6:8, மத்தேயு 25:46.
3. ஜீவனயும் மரணத்தையும் குறித்து ஜாக்கிரதை உள்ளவர்கள் இதைக்குறித்து கேட்பார்கள் மத்தேயு 13:40-43, 19:16, மாற்கு 10:17, லூக்கா 10:25, 18:18,
4. தேவன் மரணத்தை குறித்தும் ஜீவனைக்குரித்தும் பதில் அளிக்கிறவராய் இருக்கிறார். யோவான் 6:68. ரோமர் 5:20, 21, ரோமர் 6:22, 23.
5. நித்திய ஜீவனை கர்த்தர் ஒருவரே அளிக்கிறவராய் இருக்கிறார் யோவான் 5:39, 40, யோவான் 1250
6. விசுவாசிகள் இப்பொழுதே நித்திய ஜீவனைப் பெற்று இருக்கிறார்கள். 1 யோவான் 5:11-13 இது நமது இரட்சிப்புக்கு உறுதியளிக்கிறது.
7.சபை எடுத்துக்கொள்ளப்படும்போது / உயிர்த்தெழுந்து நமது புதிய சரீரத்தை கர்த்தரிடம் பெற்றுக்கொள்ளும்போது நித்திய ஜீவனை, நாம் முழுமையாய் பெற்றுக்கொள்வோம்.
8. நாம் ஒவ்வொரு நாளும் நித்திய ஜீவனையுடையவர்களாய், மனதளவில் வாழ்ந்து, கர்த்தருடன் நாம் என்றென்றுமாய் இருப்போம் என்கிற நினைவில் வாழ வற்புறுத்தப்படுகிறோம். மத்தேயு 19:29, 30, மாற்கு 10:29-31, யோவான் 12:25, யோவான் 4:36. ரோமர் 2:6,7.