நித்திய பாதுகாப்பு

நித்திய பாதுகாப்பு

1. ஒரு நபர் இரட்சிப்புக்காக உண்மையிலே இயேசுக்கிறிஸ்துவில் நம்பிக்கை வைக்கும்போது, அந்நபர் அதன் பின்னர் வாழ்நாள்முழுதும் இரட்சிக்கப்பட்டவராகவே இருக்கிறார். அவர் ஒருபோதும் தனது இரட்சிப்பை இழந்து போவது இல்லை.

2.நமது நிலை குறித்த முறைமை: (ரோமர் 8:38-39)

நாம் கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்டுள்ளோம் (Aறிஸ்துவுக்குள் இருக்கிறோம்) கிறிஸ்துவிலுள்ள தேவனுடைய அன்பை விட்டு முற்றிலுமாய் ஒன்றும் நம்மை பிரிக்கமாட்டாது.

3. பகுத்தறிவு சார்ந்த முறைமை (ரோமர் 8:32, ரோமர் 5),

அவிசுவாசிகளாய் நாமிருந்தபோது தேவனுக்கு பகைஞராய் இருந்தோம் (ரோமர் 5). நாம் விசுவாசிகளானபோது பிள்ளைகளாயிருக்கிறோம். தனது சத்துருக்களுக்கு அதிகமாய் அவர் செய்தபோது, தமது பிள்ளைகளுக்காய் அவர் என்ன செய்வார்? நாம் அவரது சத்துருக்களாய் இருந்தபோது நம்மை இரட்சித்தவர், நமது இரட்சிப்பு இழக்கப்படாவண்ணம் செய்கிறார்.

4 தேவக்கரம் சார்ந்த முறைமை: (யோவான் 10:28, சங்கீதம் 37:24.

தேவனின் கரத்தில் உள்ளதை ஒருவனாலும் பறித்துக்கொள்ள முடியாது. தேவன் சர்வ வல்லவர்.

5.அனுபவரீதியான முறைமை: (2 தீமோத்தேயு 2:12-13)

நாம் கிறிஸ்துவை மறுதளிப்போமானால் அவரும் நம்மை மறுதளிப்பார். (இதன் பொருள் = உபத்திரவம் மற்றும் பிரதிபலன்). நாம் அவரை மறுதளிக்கும் போதும் அவர் உண்மையுள்ளவராகவே இருக்கிறார். விசுவாசி கிறிஸ்துவுக்குள் இருக்கும்போது கிறிஸ்து விசுவாசியில் வாசம்பண்ணுகிறார். அவர் தம்மைதாமே மறுதளிக்கமாட்டார்.

6.குடும்ப முறைமை: (கலாத்தியர் 3:26, யோவான் 1:12).

நீங்கள் இயேசுக்கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும்போது, மறுபடியும் பிறந்து தேவனின் பிள்ளையாயிருக்கிறீர்கள். நீக்கள் பிறவாதநிலையில் இருக்கமுடியாது. ஒருமுறை நீங்கள் பிள்ளைகளானால், எப்பொழுதும் நீங்கள் பிள்ளைகளாகவே இருக்கிறீர்கள்.

7.சுதந்தரிக்கும் முறைமை (1 பேதுரு 1:4-5)

நமக்கு mopahjlk; khw;wJk; thilhjJkhfpa சுதந்திரம் பரலோகில் உண்டு, அவைகள் தேவ வல்லமையினாலே நமக்காக வைக்கப்பட்டுள்ளது. அது நமக்காகவே வைக்கப்பட்டுள்ளது. நாமல்ல தேவனே அதை நமக்காக வைத்திருக்கிறார்.

8. ஏகாதிபதித்துவ முறைமை: (2 பேதுரு 3:9, யூதா 24)

ஒருவரும் அழிந்து போவது தேவனுக்குச்சித்தமல்ல. இந்த வாக்கியம் முழு மனுக்குலத்திற்கும் பொருந்தும், 2 பேதுரு 3:9 tOthjgb cq;fisf; fhf;fTk;> (அழிவிலிருந்து காத்தல்) ஒருமுறை நீங்கள் இரட்சிப்படைந்து இருக்கிறீர்கள் எனில், தேவன் நீங்கள் அழிந்து போகாவண்ணம் காக்க வல்லவராய் இருக்கிறார்.

9. சரீர முறைமை: (1 கொரிந்தியர் 12:21, கொலோசெயர் 1:18)

கிறிஸ்து தலையாய் இருக்கிறார், நாம் அவரது சரீரத்தின் அங்கங்களாய் இருக்கிறோம். யாராவது இழக்கப்படுவார்களேயானால், கிறிஸ்துவின் சரீரம் முழுமையடையாது.

10.கிரேக்க இலக்கண முறைமை (எபேசியர் 2:8-9)

கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்” “SOz0” சோஜோ என்கிற கிரேக்கச்சொல், வினைச்சொல்லின் முடிந்துவிட்ட காலத்தை குறிக்கிறது. கிருபையின் மூலம் இரட்சிக்கப்பட்டு விட்டீர்கள் இவ்வாக்கியம் இறந்த காலத்தைக்குறிக்கிறது, இதன் பொருள் நீங்கள் எந்நாளும் இரட்சிக்கப்படுகிறவர்களாக இருக்கிறீர்கள்.

11. பரிசுத்த ஆவியானவரால் முத்திரையிடப்படுகிற முறைமை: (2 கொரிந்தியர் 1:22, எபேசியர் 1:13, 4:30).

பண்டைய உலகில் முத்திரை என்பது, பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிக்கக்கூடியதாய் இருந்தது. நமக்குள் வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியானவர் நமது பாதுகாப்பாய் விளங்குகிறார்.

Leave a Reply