En Ratchaga En yesu e karaoke

Lyrics

என் இரட்சகா என் இயேசுவே
என்னை அழைத்த நல் மீட்பரே
என் உள்ளத்தில் சந்தோஷத்தை
தந்தவா உம்மை ஸ்தோத்திரிப்பேன்

தூரமாய் நானும் சென்ற போது
அன்பாய் என்னை அழைத்தீரே
காலமெல்லாம் நான் உந்தன் ஒளியில்
என்றும் நிலைத்து வாழ்ந்து சுகிப்பேன்

பாக்கிய நாள் பாக்கிய நாள்
இயேசு என் பாவம் தீர்த்த நாள்…

சத்தியம் ஜீவன் வழியும் நீரே
கிருபை கூர்ந்து தெரிந்தீரே
தேவனே உம்மில் இணைந்து இருக்க
இன்றும் என்றும் அருள் செய்வீரே

இருளினின்று ஒளியினிடமாய்
அழைத்த தேவனை போற்றுவேன்
உந்தனின் புண்ணியம் யாவும் சொல்லி
சாட்சியாக பூவில் திகழ்வேன்

எந்தன் கால்கள் தளரும் போது
தாங்கி என்னை மீட்டவா
உந்தனின் வாக்கு வெளிச்சம் தந்து
காத்து என்றும் நடத்துவீரே

New Music Song Play

Old Version Play

New Version Karaoke Download

Old Version Karaoke Download

Have any Question or Comment?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page