You are currently viewing சிலுவையின் நிலை: கொலோ 2:15

சிலுவையின் நிலை: கொலோ 2:15

சிலுவையின் நிலை

சிலுவையின் நிலை: கொலோ 2:15 

a. சிலுவையானது 7 அல்லது 7.5 அடியாக இருந்துள்ளது. ஏனெனில் யோவா 19:29 ன் படி இயேசுவுக்குத் தாகம் உண்டானபோது 1 அல்லது 2 நீளம் மட்டுமேயுள்ள ஈசோப்புத் தண்டில் புளித்த திராட்சைரசத்தில் ஊறின கடற் பஞ்சை பொருத்தின ஒருவன் அதை இயேசுவின் வாய்க்கு அருகே நீட்டினான் என்பதிலிருந்து, சிலுவை தரையில் நாட்டப்பட்டப் பின்பு, ஒரு ஆள் உயரத்திற்கும் சற்று உயர்வாகத்தான் இருந்திக்கும்.

b. ஒரு முழுமையான சிலுவை என்பது நான்கு விதங்களில் இணக்கப்படும். 

  • 1. நெடுமரத்தின் நுனியில் குறுக்கு மரத்தை இணைத்தல்
  • 2. சற்று கீழே இறக்கி இணைத்தல்
  • 3. சரியாக நடுவில் இணைத்தல்
  • 4. நடுபாகத்தில் பொருத்தி கூட்டல் (t) குறி போன்று, அல்லது பெருக்கல் (x) குறி போன்று வைப்பார்கள்

C. சில சிலுவைகளில் கை மற்றும் காள்களில் அடிக்கப்படும் ஆணிகள் ஊடுறுவுவதற்க்காக ஓட்டைகளும் போடப்பட்டிருக்கும்.

d. சிலுவை என்பது இரண்டு மரத்துண்டுகளால் ஆனது. அவை, ஒன்று: நெடுமரம், இரண்டு: குறுக்கு மரம் என்றும் சொல்லப்படும்.

e. இயேசுவின் சிலுவை ஒருபோதும் பாலீஸ் செய்யப்பட்டது கிடையாது. அது கரடுமுரடாகத்தான் இருந்திருக்கும். காரணம், அக்காலத்தில், இயேசுவை சிலுவையில் அறைந்த யூதர்களும், சிலுவையில் அறைய கட்டளையிட்ட ரோமர்களும் முரடர்களாகத்தான் காணப்பட்டனர்.

f. ஒரே சிலுவையில் அடிக்கடி அநேகரை அறையும் பழக்கமும் இருந்தது. அதை யாரும் சுத்தம் செய்யாததினால் அது எப்பொழுதும் அசுத்தமாகவும், இரத்தக்கரைகளோடும், நாற்றமெடுக்கக் கூடியதாகவும் இருந்துள்ளது.

g. சிலுவையில் தொங்குபவரின் முழு எடையையும் அவர்களின் கைகளே தாங்கும் நிலை உருவாவதால் மூச்சுத்தினறலும், சோர்வும், நீரிழப்பும் ஏற்படுவதுடன் இரத்த ஓட்டமும் பாதிக்கப்படும். நிர்வாண நிலையில், நெஞ்சடைத்து தாகம் ஏற்படும். ஏதோ சில வார்த்தைகளை சொல்ல விரும்பியும் சொல்ல முடியாமல் சாவு என்னும் மரணத்துடன் போராடுவதே சிலுவை தண்டணையின் உச்சக்கட்ட வேதனையாகும்.

h. சிலுவையின் மரணம் வழங்கப்படும் இடம் எழும்புகளும், எழும்புக் கூடுகளும், மண்டையோடுகளும், இரத்தக்கரைகள் நிறைந்ததும், ஊறுக்கு அப்பால் உள்ள இடமுமாயிருக்கும்.

i. சிலுவையில் அறையப்பட்டு இறந்தவர்களின் உடல்கள் பொதுவாக அதிலேயே தொங்கிக்கொண்டிருக்கும். அவற்றைத் தின்ன பறவைகள், எலிகள், இன்னும் வேதம் சொல்வதுப் போல சில நேரத்தில் பெரிய பெரிய கழுகும் வந்து அழையும் (ஆதி 40:19).

j. பெருபாலும் மரணத்தண்டனை குற்றவாளிகளின் கழுத்தில் ஒரு பலகையைத் தொங்கவிட்டு, ஊர்வமாக அழைத்துச் செல்வார்கள். அதில் இவன் என்னைக் குற்றத்திற்காக மரணத்தண்டணை அடைந்தான் என்றக் காரணம் எழுதப்பட்டிருக்கும்.

ஆனால், இயேசுவை சிலுவையில் அறைந்தப்பின்னர் தான் பிலாத்துவின் உத்தரவு போர்வீர்களுக்குக் கிடைத்தது(மத் 27:37). அதனால், இயேசுவின் கழுத்தில் பலகை தொங்கவிடப்படவில்லை.

k. கடந்த காலங்களில் மரணத்தண்டணை மூன்று விதங்களில் தனித்தனியாக வழங்கப்பட்டது;

  • 1. கல்லெறிந்து கொள்ளப்பட்டனர் (யோசு 7:25,26). 
  • 2. உயிருடன் எரித்துக் கொள்ளப்பட்டனர் (சங் 106:18; வெளி 17:16).
  • 3. மரத்திலே தொங்கவைக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். (எஸ்த 2:23; ஆதி 40:19).

l. கொல்கொதா மலையில் இரண்டு மரத்துண்டுகளையும் இணைத்து இயேசுவைக் கிடத்தி, கால்களைக் கயறு கொண்டு கட்டினப் பின்பு, முதலில் ஒரு கையில் ஆணி அடித்தபோது, சிலுவையின் ஓட்டை வழியே அந்த ஆணி மறுபக்கம் வந்திருக்கும். அடுத்தக் கையில் ஆணி அடிக்க ஓட்டை பொருத்தமாயிராமல் இருக்குமானால், இயேசுவின் கையில் கயறு கட்டி உல்லின் மீது ஒரு காலை வைத்து மிதித்துக் கொண்டு கயிற்றை பிடித்து இழுத்து ஓட்டைக்கு நேராக வைத்து மற்றொறு கையில் ஆணி அடித்திருப் -பார்கள்.

இப்படி கயறு கட்டி இழுப்பதால் தோல்பட்டையின் உள்பகுதிகள் கிழிந்து போகும். அதனால் இன்னும் வேதனை கடுமையாயிருக்கும். அதனால் ஆணிகள் அறைந்த பின்பு,சிலுவையை புறட்டிப்போட்டு, ஆணிகளை வலைத்து விடுவார்கள். அந்நேரத்தில் இயேசுவின் முதுகின் மீது பாரமான மரச்சிலுவை அழுத்திக்கொண்டிருந்திருக்கும்.

m. எழும்புத்துண்டுகளையும், இரும்பு குண்டுகளையும், இரும்பினாலான கொக்கிகளையும் இடை இடையே இணைத்துப் பிண்ணப்பட்டிருந்த சவுக்கி -னால் இயேசுவை அடித்திருந்தனர். அப்படி கொடூரமான முறையில் அடித்திருந்ததால் அவரின் தோல் கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது. இப்படி மகாகொடிய காயத்தோடுதான் இயேசு சிலுவையை சுமந்துக் கொண்டு போனார்.

n. பிலாத்துவின் அரண்மனையிலிருந்து கொல்கொதா மலை வரைக்கும் சிலுவையை தூக்கிக் கொண்டுப் போகும்போது வழியில் மூன்று விசை இயேசு தடுமாறித் தள்ளாடினதாக வரலாறு சொல்லுகிறது.

o. இந்த இயேசுவைக் கண்டு நாம் பரிதாபப்பட்டு அழ வேண்டும் என்பதற் -க்காக அவர் பாடுபடவில்லை. மனிதகுலம் அணைத்தும் பரலோகம் வந்து சேர வேண்டும் என்பதற்க்காகவே அவர் பாடுபட்டார்.

p. சிலுவை என்பது இயேசுவின் மரணக் கருவியாகவும், கிறிஸ்த்தவர் -களின் அடையாளமாகவும் பார்க்கப்படுகின்றது.

q. சிலுவையில் அறையப்பட்ட இயேசு என்று சொல்லி, படத்தை வரை -கிறவர்கள் அதையும் அழகாகவே வரைந்து வைத்திருக்கிறார்களே ஏன்? என்று கேள்வி கேட்டபோது, இயேசுவின் மேலுள்ள அன்பினால் என்று சொன்னால் அது பொய் என்று புறிந்துக் கொள்ள வேண்டும்,

 

Leave a Reply