சிலுவையின் வரலாற்றுக் குறிப்புகள்
1. சிலுவையின் குன்று (Hill of Crosses):
வட லித்துவேனியாவில் அமைந்துள்ள சியாவுலியாய் நகரின் வடக்கில் 12 கி.மீ தூரத்தில் உள்ளது சிலுவையின் குன்று. இது கிறிஸ்தவ யாத்ரீகர்கள் செல்லும் இடமாகும். 1831ம் ஆண்டு, இங்கு முதல் முதல் ஒரு சிலுவை வைக்கப்பட்டது.
பின்பு, அதுவே பாரம்பரிய பழக்கமாக மாறிப்போய் இப்போது ஏறாளமான சிலுவைகள் அங்கு பெருகிப் போயுள்ளான. 1990 ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, ஏறத்தாழ 55,000க்கும் அதிகமான சிலுவைகள் காணப்பட்டன. அதுவே கடந்த 2006ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 1,00,000 அதிகமான சிலுவைகள் அந்த குன்றின் மீது நடப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றது.
2. தமிழ்நாட்டில் ஓர் சிலுவைச்சேரி
தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓர் கிராமம் தான் சிலுவைச்சேரி. இந்த ஊரில் அய்யனார் கோவிலும், மாரியம்மன் கோவிலும் பிரபல்யமானது. அப்படிப்பட்ட பிரபல்யத்திற்கு மத்தியில் அந்த ஊரின் பெயர் சிலுவையை சுமந்து கொண்டு இருப்பதால் இது ஓர் கிறிஸ்தவர்களின் ஊர் என்றே அணைவராலும் கருதப்படுகின்றது..
3. சிலுவைப் போர்கள்
இலத்தின் திருச்சபையின் அனுசரணையுடன் இடம் பெற்ற மதம் சார்ந்த போர்களின் தொடர்தான் சிலுவைப்போர் ஆகும்.
- 1. இஸ்லாமியரிடமிருந்து எருசலேமை மீட்பது
- 2. பாகனிய நெறிகளை ஒடுக்குதல்
- 3. மத நிந்தனையை இல்லாததாக்குதல்
- 4. ரோமன் கத்தோலிக்க குழுக்களுக்கான போட்டி நிலை -மைக்கு தீர்வுக்காணுதல்
என்பவைகள்தான் சிலுவைப் போரின் முக்கியக் காரணமாக இருந்தது.
1095 முதல் 1272 வரையும் ஏறத்தால ஒன்பது சிலுவைப் போர்கள் நடைபெற்றுள்ளன.
4. எசுப்பானிய நாட்டின் தலைநகரான மத்ரித் என்ற பட்டணத்தில் உலகின் உயரமான சிலுவை அமைந்துள்ளது.
5. பாகிஸ்தான் சிலுவை
பாகிஸ்தான் நாட்டின், கராச்சி பட்டணத்தில் கோரா கப்ரிஸ்தான் என்ற கல்லறைக்கருகில், ஆசியாவிலேயே பெரிய சிலுவையை பர்வேஸ் ஹென்றி கில் என்ற வியாபாரி கடந்த 2015ம் ஆண்டில் கட்டினார். இந்த சிலுவையானது 140 அடி (42.7 மீட்டர்) அளவு உயரம் கொண்டதாகும்.
என்ன கட்டுகிறோம் என்பதை முதலில் அவர் யாருக்கும் சொல்ல -வில்லை, ஓரளவு கட்டியப் பின்னர்தான் சிலுவை என்று தெரியவந்தது. அதனால், தொழிளாலர்கள் வேலையை பாதியிலேயே விட்டு விட்டு சென்றுவிட்டனர்.
ஆனாலும் ஒரே ஒரு முஸ்லிம் குடும்பம் வாரத்தின் ஏழு நாட்களும், ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வேளை செய்து கட்டிமுடிட்த்தனர். யாராவது இந்த சிலுவையைத் தாக்கலாம் என்று நிணைத்ததால், குண்டு துழைக்காத வகையில் இந்த சிலுவை கட்டப்பட்டுள்ளது.
One comment on “சிலுவையின் வரலாற்றுக் குறிப்புகள்”
James
February 18, 2023 at 3:08 amSuper