சிலுவையும் ரோமர்களும்
a. ரோமானியர்கள் இந்த சிலுவையின் தண்டணை முறையை பிற நாட்டுக் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்க்காக கி.மு முதல் நூற்றாண்டு முதலே பயன்படுத்தி -யுள்ளதாக ஆய்வுகள் சொல்கின்றது.
b. செல்வாக்குள்ள சிலரைத் தவிர, தண்டனைப்பெற்ற குற்றவாளிகள் அணைவரையும், நிர்வாணமாகவே ரோமர்கள் சிலுவையில் அறைந்து கொள்ளுவார்கள்.
c. ரோம அரசாங்கத்தினர் பல்வேறு அளவுகளில் சிலுவைகளைச் செய்து, பொருள் கிடங்கில் வைத்திருப்பார்கள்.
d. ரோமர்களில் யார் எவ்வளவு பெரிய துரோகியாக இருந்தாலும், சிலுவையில் கொல்லப்பட மாட்டார்கள். அடிமைகளும், அந்நியர்களும் மட்டுமே சிலுவையில் கொள்ளப்படுவார்கள்.
e. இந்தியாவில் தூக்குதண்டனையைப் போன்று, பார சீகர்களும், மேதியர்களும், சீரியர்களும், மரணத் தண்டணையை நிறைவேற்ற சிலுவையையேப் பயன்படுத்தினர்.
f. கி.மு 27ல் ரோம ராயனாக அகுஸ்து சீஷர்” என்பவரும் யூதேயாவை உள்ளடக்கின சீரிய ஆளுனராக “குரேனியுவும் இருந்த நாட்களில் தான், யூதேயாவிளுள்ள பெத்லெகேமில் இயேசு பிறந்து வளர்ந்தார் (லூக் 2:1,2) இயேசுவின் புரட்சிகரமான வாரத்தைகளும், வல்லமை மிக்க செயல்களும் ரோம ஆளுனர்களை பயம் கொள்ள வைத்தது. அதனால்தான், இயேசுவை சிலுவையில் அறைந்து, கொள்ள வேண்டுமென்று யூதாஸ்காரியோத் மூலம் பலிதீர்க்கும் காரியத்தை ஆரம்பித்தார்கள்.