சிலுவையும் காடியும்

சிலுவையும் காடியும்

சிலுவையும் காடியும் 

சிலுவையில் அறையப்பட்ட இயேசுவுக்குக் காடி கொடுக்கப்பட்டது என்பது நன்க்குத் தெரியும். ஆனால், எத்தனை முறை கொடுக்கப் -பட்டது? எப்போது கொடுக்கப்பட்டது? எப்படி கொடுக்கப்பட்டது என்கிற குழப்பம் அநேகருக்கு உண்டு. இயேசுவுக்கு மூன்று முறை காழ கொடுக் கப்பட்டதாக வேதம் விவரிக்கின்றது. அதைத் தெரிந்துக்கொள்வோம்.

1. மாற் 15:23 சிலுவையில் அறைவதற்க்கு முன்: 

முக்கிய குறிப்பு: வெள்ளிப்போளம் கலந்த திராட்சைரசமான இது வலியை மறக்கக் கொடுக்கப்படும் பாணம். ஆனால், கிறிஸ்துவோ முழு வேதனையையும் சகிக்கும்படி அதனை ஏற்க்கவில்லை.

2.லூக் 23:36 சிலுவையில் மத்தியானத்திற்கு முன்:

முக்கிய குறிப்பு: இது படைவீரர்கள் கிறிஸ்துவை ராஜா என எள்ளி நகையாடி கொடுத்தது. அக்காலத்தில் அரசர்கள் பதவி ஏற்ற -வுடன் மரியாதை நிமித்தம் இனிய பானம் வழங்குவதைப்போல இயேசுவுக்குக் கொடுத்து, நீ யூதரின் ராஜாவானால் இரட்சித்தக் -கொள் என்று கிண்டல் செய்தனர் (லூக் 23:36). சிலுவையின் இரண்டாவது வாரத்தைக்கு முன்பு இது நிகழ்ந்தது (லூக் 23:43). அதன் பின்பு பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை அந்தகாரம் உண்டானது (மாற் 15:33).

3. யோவா 19:29,30 மாற் 15:36 சிலுவையில் மத்தியானத்திற்குப் பின்:

முக்கிய குறிப்பு: சங் 69:21; 22:15 போன்ற வேத வசனங்களின் நிறைவேறுதலாக இயேசு கூறியபோது, பஞ்சில் தோய்த்து, ஈசோப் -புத்தண்டில் மாட்டிக்கொடுத்தனர். கிறிஸ்து அதை சுவைத்தப்பின் முடிந்தது என்றார். சிலுவையில் நான்காவது வார்த்தைக்குப் பிறகு (மாற் 15:34). ஐந்தாவது வார்த்தையைத் தொடர்ந்தும் இது நிகழ்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *