சிலுவையும் சில அடையாளங்களும்:

சிலுவையின் துவக்கம்:

சிலுவையும் சில அடையாளங்களும்: 

a. ரோமன் கத்தோலிக்கச் சபையினர் தாங்கள் கிறிஸ்தவ பக்தியுள்ளவர்கள் என்பதைக் காண்பிப்பதற்க்காக தந்தை, மகன், தூய ஆவியானவர் என்றுச் சொல்லி கண், மார்பு, தோல்பட்டைகளைத் தொட்டு சிலுவையின் அடையாளத்தைப் போட்டுக் கொள்வார்கள்.

இதில் தந்தை என்றால் பிதாவையும், மகன் என்றால் இயேசுவையும், தூய ஆவி என்றால் பரிசுத்த ஆவியானவர் என்றும் அர்த்தமாகும். அது போல, கண் என்றால் ஆவியையும், மார்பு என்றால் ஆத்துமாவையும், தோல்பட்டை என்றால் சரீரத்தையும் குறிப்பிடுவதாகச் சொல்லுவார்கள். இது அவர்களுக்கென்று, அவர்களே உருவாக்கிக் கொண்ட அடையாளமாகும்

b. நாம் படிக்கும் கல்வி பாடத்தில் கூட பலவிதங்களிலும் சிலுவையோ அல்லது சிலுவையின் அடையாளமோ பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

  • 1. ரோமன் இலக்கம் 10 என்பது “ X ” ஆகும்.
  • 2. இலத்தின் அகர வரிசையில் ” X ” என்ற எழுத்தும் “t” என்ற எழுத்தும் சிலுவையைக் குறிக்கும்.
  • 3. ஹன் என்ற எழுத்தில் 10 என்பது “ † ” ஆகும்.
  • 4. கூட்டல் அடையாளத்திற்கு ” + ” ஆகும். 
  • 5. பெருக்கல் அடையாளத்திற்கு “ X ” ஆகும்.
  • 6. பிழை என்பதை குறிக்கவும் “X” ஆகும்.

இப்படி அனுதின வாழ்கையில் ஏதோ ஒரு வகையில் சிலுவை நம்மோடுகூட கலந்து நிற்கிறது.

C. சங்கீத புஸ்தகத்தில் வரும் 22 ம் சங்கீதம் இயேசுவின் சிலுவையையும், சிலுவையின் பாடுகளையும் குறிப்பிடும் ஓர் சங்கீதமாக உள்ளது. 6,14,15,18 ஆகிய வசனங்களே இதற்கு ஆதாரம். ஆதலால் 22 ம் சங்கீதம் இயேசுவின் சிலுவையின் அடையாளமாகும்.

d. ஏசாயாவின் புஸ்தகம் 53ம் அதிகாரமும் இயேசுவின் சிலுவையை படம்பிடித்து காண்பிப்பதைபோல் எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக 9 மற்றும் 10 ஆகிய வசனங்கள் இயேசு சிலுவையில் சந்தித்த, சகித்த தூன்பங்களை தெளிவாக விவரிக்கின்றது. இதன் மூலம் தீர்க்கதரி சனங்களும், தீர்க்கதரிசிகளும் சிலுவையைத் தவிர்க்க முடியாது என்பதைக் காட்டுகினறது. ஆதலால், ஏசாயா 53ம் அதிகாரமும் ஓர் ஆடையாளம் தான்.

e. சிரேனே என்ற ஊரைச் சேர்ந்தவனும், அலெக்சந்தர் மற்றும் சூப் என்னும் இரண்டு பிள்ளைகளுக்குத் தகப்பனுமாகிய சீமோன் என்பவன் மீது, போர்வீர்கள் அந்த பாரமான சிலுவையை வைத்தார்கள் (லூக் 23:26]. தேசாதிபதியின் அரண்மணையின் வெளியில் இருந்து, ஏறத்தால கபாலஸ்தலம் என்ற இடம் வரைக்கும் இந்த சீமோன் சிலுவையைச் சுமந்திருக்கலாம் (மாற் 15:16,21). ஆதலால், இயேசுவின் சிலுவையின் அடையாளங்களில், தவிர்க்க முடியாத அடையாளமாக சீமோன் மாறிவிட்டான்.

f. கிறிஸ்தவக் கொடி :

வட அமெரிக்கா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய இடங்களில் உள்ள சீர்திருத்த திருச்சபைகளின் மூலம் இந்த கொடி உருவாக்கப்பட்டது. இந்த கொடியின் பின்புறம் வெள்ளை நிறமும், இடப்புறத்தில் நீள நிறமும், அதன் உள்ளே சிகப்பு நிறமும் காணப்படும்வன்னம் வரையப்பட்டுள்ளது. இதில் சிவப்பு நிறம் இயேசுவின் இரத்தத்தையும், நீளநிறம் ஞானஸ்நானத்தையும் மற்றும் விசுவாசத்தையும், வெள்ளை நிறம் இயேசுவின் பரிசுத்தத்தையும் காட்டுவதாக உள்ளது.

Have any Question or Comment?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Our FM

WMM CPC Church FM Station