சிலுவைக்காக ஆறு குற்ற விசாரணைகள்

சிலுவைக்காக ஆறு குற்ற விசாரணைகள்:

சிலுவைக்காக ஆறு குற்ற விசாரணைகள்:

அவரை இருவகை குற்ற விசாரணைகளுக்கு உட்படுத்தினர். ஒன்று மதசம்பந்தமானது. இன்னொன்று அரசு சட்ட சம்பந்தமானது. மதத்தின் தொடர்பில் மூன்று விசாரணைகள். 

1. அன்னா, காய்பா, ஆகியோர் முன், சனகெரிப் சங்கம் முன்,

2. சட்ட சம்பந்தமான விசாரணைக்காக பிலாத்து, ஏரோது, மீண்டும் பிலாத்து ஆகியோர் முன்.

அன்னாவும், காய்பாவும், பிரதான ஆசாரியர்களாகக் கூறப்படுகின்றனர். இஸ்ரவேலில் ஒருதடவை ஒரு பிராதன ஆசாரியர்தான் இருக்க முடியும். ஆனால் கால ஒட்டத்தில் ஆண்டவரைவிட்டு அரசியல் கலந்த மதமாக அது மாறியதால் இத்தகைய நிலை ஏற்பட்டது. (மத் 26:57-68; மாற் 14:53-65; லூக் 22:54,63-65: யோவா 18:13-24)

இருவர் முன்பும் விசாரிக்கப்பட்ட பின்பு யூதர்களின் நீதிமன்றமாக கருத -ப்பட்ட 70 பேர் அடங்கிய ஆலோசனைச் சங்கத்திற்குக் கொண்டு செல்ல -ப்படுகிறார். அங்கும் விசாரனை நடக்கிறது (மத் 27:1; மாற் 15:1; லூக் 22:66-71)

அதன்பின்பு சட்ட முறையிலான விசாரணைக்காக பிலாத்துவின் முன்பு கொண்டு செல்லப்படுகிறார். ஆலோசனைச் சங்கத்தில் மரண தண்டனையை தீர்ப்பளித்தாலும் ரோம அரசாங்க ஆளுநரான பிலாத்துவின் அனுமதியிருந்தால் தான் நிறைவேற்றமுடியுமென்பதால் அவரிடம் கொண்டு செல்கின்றனர். அரசதுரோக குற்றமும், சமூக சமாதானத்தைக் குலைத்தார் என்ற குற்றமும் சாட்டப்பட்டன. அவர் முன் கிறிஸ்து தமது இராஜ்யத்தின் இருப்பிடத்தை விளக்கினார். ரோம சட்டப்படி இயேசு குற்றவாளியல்ல என்று தீர்ப்பிட்டார் பிலாத்து (மத் 27:2, 11-14; மாற் 15:1-5; லூக் 23:1-5; யோவா 18:28-38).

அதன் பின்பு தேவையின்றி அவர் ஏரோதின் முன்பு அனுப்பப்பட்டார். இந்த ஏரோதுதான் தமது சகோதரனின் மனைவியான ஏரோதியாளை மனைவியாக்கியபோது யோவானால் குற்றஞ்சாட்டப்பட்டவரும் யோவானின் தலையைப் பரிசாக்கியவரும் ஆவார்.

பிலாத்து இயேசுவை கலிலேயன் என்று கூறப்பட்டதால் ஏரோதிடம் அனுப்பி, தம்மை அந்த பழியிலிருந்து விலக்க நினைத்திருக்கலாம் (லூக் 23:7-12). மேலும் அந்த செய்கையால் முன்பு தாம் செய்த ஒரு குற்றத்துக்கு ஏரோது தம்மிடம் கொண்டிருந்த பகையை நீக்கிக் கொண்டார்.

மீண்டும் பிலாத்துவின் முன்பு விசாரணை, சூழ்நிலைக்கு முன் குற்றமற்றவரை குற்றவாளியாக்கினார் பிலாத்து. தற்பாதுகாப்பை எண்ணிப்பயந்து நீதிமானை சிலுவை மரணத்துக்குத் தீர்ப்பளித்தார். (மத் 27:15-26; மாற் 15:6-15: லூக் 23:13-25; யோவா 18:39-19:6)

நியாயமற்ற விசாரணைகள்:

கிறிஸ்துவின் குற்ற விசராணைகள் பலநிலையிலும் நியாயமற்றவையாக இருந்தன.

  • 1. குற்றம் செய்தவரைப் பிடித்து விசாரிப்பதே நியாயம். ஒருவரை பிடித்து வைத்துக் கொண்டு குற்றம் தேடுவது அநியாயம் (யோவா 11:50; மாற் 14:1; 14:55)
  • 2. பொய்சாட்சிகளை ஏற்படுத்தினர் (மத் 26:61)
  • 3. குற்றவாளியின் சொற்கள் கவனிக்கப்படவில்லை (லூக் 22:67-71)
  • 4. ஆலோசனைச் சங்கம் இரவில் கூடியதே அவர்களது சட்டப்படிதவறு (மத் 26:63-66)
  • 5. பிரதான ஆசாரியனை ஆணையிட வைத்து, அந்த ஆணையைக் கொண்டு தீர்பிட்டது அநியாயம் (மத் 26:63-66)
  • 6. ஆலோசனைச் சங்கம் கூடிய இடம் பிராத ஆசாரியனின் வீடு. முறைப்படி தேவாலயத்துடன் இணைந்திருக்கும் நீதிமன்ற அறையில் கூடிதான் தீர்ப்பிட வேண்டும் (லூக் 22:54).

அவர் குற்றமற்றவரே:

  • 1. குற்றமில்லாத இரத்தத்தைக் காட்டிக் கொடுத்தேன் (மத் 27: 4)  யூதாசு,
  • 2. நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம் (மத் 27:19) – பிலாத்துவின் மனைவி
  • 3. இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை (லூக் 23:4) – பிலாத்து
  • 4. பாவமறியாதவர் (2கொரி 5:21) – – பவுல் 
  • 5. அவர் பாவஞ் செய்யவில்லை (1பேது 2:22) – பேதுரு
  • 6. அவரிடத்தில் பாவமில்லை (1யோவா 3:5) – யோவான் 

 

 

Have any Question or Comment?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page