இயேசுவை சிலுவைக்கு அனுப்பின யூதாஸின் 7 வித வாழ்க்கை:
1. யூதாஸின் அறிமுகம்
- முழு பெயர் : யோவா6:71 சீமோனின் குமாரணகிய யூதாஸ் காரியோத்து.
- யூதாஸ் – (எல்) கொண்டாடபடுகின்ற (அ) துதி
- அப்பா பெயர்: யோவா 6:71 சீமோன்
- ஊர் பெயர் : எரே 48:41 கீரியோத்
- எல்லை: யூதேயாவின் தெற்கில் உள்ளது கீரியோத்.
- வித்தியாசம்:- மற்ற 11 சீசர்களும் கலேயாவைச் சேர்ந்தவர்கள்
- இவன் மட்டும் யூதேயாவைச் சேர்ந்தவன்
II.யூதாஸின் மற்ற பெயர்கள்:
- 1. யோவா 12:4 சீசனாகிய யூதாஸ்
- 2.மத் 26:14 பன்னிரண்டு பேரில் ஒருவன்
- 3. மத் 10.4 காட்டிக் கொடுத்த டபூதாஸ்
- 4.அப் 1:16 எதிரிகளுக்கு வழிகாட்டி
- 5.யோவா 17:12 கேட்டின் மகன்
- 6. யோவா 12:6 திருடன்
- 7. லூக் 6:16 துரோகி
III. யூதாஸின் நற்குணங்கள்:
- 1. யோவா 18:2 இயேசு ஜெபித்த இடத்துக்கு அடிக்கடிப்போனவன்.
- 2. சங் 41:9 பிராண சிநேகிதன்.
- 3. சங் 43:9 நம்பிக்கைக்குறியவன்.
- 4. மத் 27:3 நல்ல மனஸ்தாபமுள்ளவன்,
- 5. மத் 27:4 அவன் தன் தவறை உணர்ந்தான்.
பாவ அறிக்கை செய்யவில்லை.
IV. யூதாஸின் பொறுப்புகள்:
- 1.யோவா 12:6 பணப்பையை சுமப்பவன்
- 2.யோவா 13:29 பண்டிகைகளுக்கு பொருட்களை வாங்குபவன்
- 3.யோவா 13:29 ஏழைகளுக்கு உதவிசெய்யும் பொறுப்பும் இருந்தது
- 4.யோவா 12:5 தைலம் போன்ற பொருட்களின் விலைப்பட்டியலை அறிந்திருந்தான்.
V. யூதாஸின் சுபாவங்கள்:
- 1. யோவா 12:3,4 இயேசுக்கு தைலம் பூசியதில் குற்றம் கண்டான்
- 2. யோவா 13:30 இராக்கால நேரத்தில் வெளியே போகிறவனயிருந்தான்.
- 3. மாற் 14:45 முத்தம் செய்யும் குணம் இருந்தது.
- 4.யோவா 13:18 எதிரியைப்போல தன் குதிங்காலைத் தூக்குபவன்.
- 5. மத் 27:4 குற்றமில்லாதவர்களையும் காட்டி கொடுப்பவன்.
- 6. மத் 27:4 பாவத்தை பாவம் என்று தெரிந்தும் செய்பவன்.
- 7. மாற் 14:11 பணத்துக்காக எதிரிகளை சந்தோஷப்படுத்துபவன்.
- 8. மத் 27:5 சம்பாதித்த பணத்தை தூக்கியெரியும் குணமுள்ளவன்.
VI. யூதாஸின் பின் விளைவுகள்:
- 1. மாற் 3:19 சீசர்களின் பெயர் வரிசையில் கடைசிக்குத் தள்ளப்பட்டான்.
- 2. மத் 27:4 அவன் நம்பின அதிகாரிகளால் கை விடப்பட்டான்.
- 3. யோவா13:2 பிசாசினால் தூண்டப்பட்டான்.
- 4. லூக் 22:3 சாத்தான் டபூதாசுக்குள் புகுந்தான்.
- 5. யோவா 6:70 பிசாசின் சொருபமாகவே வாழ்ந்தான்.
- 6.அப் 1:24 ஊழியத்தை இழந்துபோனான்.
VII. யூதாசின் முடிவு:
- 1. சங் 109:8 அவனுடைய நாட்கள் கொஞ்சமாகக் கடவது. (மற்ற 11 சீசர்களை விட சீக்கிரமாகவே செத்துப்போனன்)
- 2. மத்27:5 நான்று(தூக்கிட்டுக்) கொண்டான்
- 3. அப் 1:18 தலைகீழாக விழுந்தான்
- 4. அப் 1:18 யூதாசின் வயிறு வெடித்தது
- 5.அப் 1:18 குடல்களெல்லாம் சரிந்துப் போனது
- 6. அப் 1:20 அவனுடைய வாசஸ்தலம் பாழாய்ப்போனது