இயேசுவின் ஏழுவித இரத்தம்
இயேசு மரணத்திற்கு முன்பும் இரத்தம் சிந்தினார்,மரிக்கும் போதும் இரத்தம் சிந்தினார். இயேசு இரத்தம் சிந்தினார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், எந்த எந்த இடங்களில், எப்படியெல்லாம் இரத்தம் சிந்தினார், எப்போது சிந்தினார், எத்தனை முறை இரத்தம் சிந்தினார் என்று அநேகர் அரிவதில்லை. அந்த விபரங்களை பொறுமையோடும், ஆழ்ந்தும் கவனிப்போம்.
1. ஜெபிக்கும்போது சிந்தின இரத்தம்:
லூக் 22:44 இரத்தம் வரும்வரை ஜெபித்தார்
- இடம்: மாற் 14:32 கெத்செமனே தோட்டம்
-
- லூக் 22:44 ஊக்கமும், தேவபாரமும் வரும்
- பலன்: மத் 26:41 ஜெப ஆவியைத் தரும்
2. சிரசில் சிந்தின இரத்தம்:
யோவா 19:2 முள்முடியை சிரசில் வைத்து அடித்தனர்
- இடம்: மத் 27:27 தேசாதிபதியின் அரண்மனை
- ஏசா 59:17 சிரசு (எ) இரட்சிப்பு ஆதி 49:26 சிரசு (எ) ஆசீர்வாதம்
- பலன்: ஏசா 51:11 மகிழ்ச்சி தலையின் மேல் இருக்கும்
3. கன்னத்தில் வடிந்த இரத்தம்:
கேள்வி: எத்தனை பேர் அறைந்தனர்?
- மத் 26:67 சிலர் (ஒன்றுக்கும் அதிகமானோர்] அறைந்தனர்
கேள்வி: அறைந்தது யார்?
- மாற் 14:65 வேலைக்காரர்கள்
-
- உன் 1:10; 5:13 கன்னம் (எ) பூ போன்றது (அ) அழகானது
- பலன்: உன் 2:14 உங்கள் முகம் அழகாகும்
4. தாடையில் வடிந்த இரத்தம்:
ஏசா 50:6 தாடை மயிரைப் பிடுங்கினார்கள்
- உ.ம்: சங் 3:7 சத்துருக்களைத்தான் தாடையில் அடிப்பார்கள்
-
- நியா 15:15,16 சிம்சோன் தாடை எலும்பினால் ஜெயித்தான்
- சங் 133:2 தாடையின் இரத்தம் அபிஷேகத்தைத் தரும்
5. முதுகில் வடிந்த இரத்தம்:
ஏசா 50:6 முதுகில் அடித்தார்கள்
- யோவா 19:1 வாரினால் (சாட்டையால்) அடித்தார்கள்
- இடம்: யோவா 19:1 பிலாத்துவின் அரண்மனை
-
- ஏசா 38:17 பாவத்தை முதுகுக்குப் பின் எறிந்தார்
- பலன்: மாற் 2:12 முதுகின் இரத்தம் படுக்கையை மாற்றும்
6. கை, கால்களில் வடிந்த இரத்தம்:
யோவா 20:20,25 கை, கால்களில் ஆணியின் காயம் இருந்தது
- இடம்: யோவா 19:17 கொல்கொதா மலை (அ) கபால ஸ்தலம்
- கொல்கொதா (எ) அந்த மலை மண்டை ஓடு வடிவத்தில் இருந்தது.
- கபாலஸ்தலம் (எ) மண்டை ஒடுகள் நிறைந்து இருந்த இடம்
- கொலோ 2:14,15 அதிகாரங்களை வெற்றி சிறந்தார்
- பலன்: ஏசா 35:3 உங்கள் கைகளை, முழங்கால்களைப் பலப்படுத்தும்
7. விலாவில் வடிந்த இரத்தம்:
யோவா 19:34 விலாவில் இரத்தம் வடிந்தது
- இடம்: யோவா 19:17 கபால ஸ்தலம் (மண்டை ஓடுகள் நிறைந்த இடம்]
- ஆதி 2:21,22 விலாவைக் கொண்டு மனுஷியை உண்டாக்கினார்
- அப் 12:7 பேதுருவை தட்டி எழுப்பினார்
- பலன்: சங் 107:14 கட்டுகளை அறுப்பது