பஸ்கா என்றால் என்ன?

பஸ்கா என்றால் என்ன?

பஸ்கா என்றால் என்ன? 

இஸ்ரவேலர் ஆசாரித்து வந்த மூன்று விசேஷித்த பண்டிகைகளில் பஸ்காவும் ஒன்று. இது நிசான் (பங்குனி-சித்திரை)மாதம் 14-ம் தேதி தொடங்கி 21-ம் தேதிவரை கொண்டாடப்பட்டு வந்தது.

பஸ்கா என்பது அடிக்கப்படும் ஆட்டுகுட்டியையே குறிக்கிறது. நிசான் மாதம் 10-ம் தேதி ஒவ்வொரு வீட்டுத் தலைவனும் ஒரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்து எடுப்பான். 13-ம் தேதி சாயந்திரம் வீடுகளிலிருந்து புளித்தமா அகற்றப்படவேண்டும். 14-ம் மேதி சாயங்காலத்திற்குமுன், எல்லா வேலைகளும் நிறுத்தப்படும். பகற் சாப்பாட்டின் பின் சாப்பிடவும் மாட்டார்கள். இந்த பண்டிகை நினைவு கூருதலாக மாத்திரமல்ல, முன்னடையாளமாகவுமிருந்தது, நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே (1கொரி 5:7).

இன்னும் வேறு அடையாளங்களையும் கவனிக்கலாம். 

  • 1) பஸ்கா பாவத்தின் அழமைத்தனத்திலிருந்து விடுதலையாகுதல்.
  •  2) இயேசுவின் இரத்தத்தில் வைக்கிற விசுவாசத்தினித்தம் பாவத் -தின் சம்பளமாகிய மரணத்திலிருந்து தப்பிக்கொள்ளுகிறோம். 
  • 3) இரத்தம் கதவு நிலையில் தெளித்தல், நம்முடைய விசுவாசத் -தின் அறிக்கையைக்காட்டுகிறது. 
  • 4) பஸ்காவைச் சாப்பிடுவது போல, நாமும் அவரோடு ஐக்கியப்பட்டிருந்தால்தான் ஜீவனைப் பெற லாம். 
  • 5) கசப்பான கீரைகளோடு சாப்பிடவேண்டும். இது நாம் அடையவேண்டிய மனஸ்தாபத்தையும், செய்யவேண்டிய அறிக்கையும் குறிக்கிறது. 
  • 6) இஸ்ரவேலர் பிரயாணத்துக்கு ஆயத்தமாகிச் சாப்பிட்டது போல, நாமும் தேவ ஊழியத்துக்கும், மோட்ச பிரயாணத்துக்கும் ஆயத் -தமாக வேண்டும்.

சீசர்கள் பஸ்காவை ஆயத்தம் செய்தனர்;

1. துணுக்குகள்: 

  • a. யோவா 18:39 பஸ்கா என்றால் என்ன?
    • பஸ்கா (எல்) பலி (அ) விடுதலை (அ) உடன்படிக்கை 
  • b. நெகே 2:1 பஸ்காவின் மாதம் எது?
    • நிசான் மாதம் [எல்) பங்குனி – சித்திரை (எல்) ஏப்ரல்-மே 
  • c, யாத் 12:26,27 பஸ்கா எதாற்கு அடையாளம்?
    • எகிப்திலிருந்து பறப்பட்டதற்கு அடையாளம்.
  • d. ஆட்குட்டி என்ற வார்த்தை வெளிப்படுதலில் மட்டும் 28 முறை வருகிறது

II. பஸ்காவின் உணவுகள் எவை? 

a. பழைய ஏற்பாட்டில்:

  • யாத் 12:8
    • 1, மாம்சம்,
    • 2.புளிப்பில்லா அப்பம்,
    • 3.கசப்பான கீரை

b. புதிய ஏற்பாட்டில்:

  • மத் 26:26-28
    • 1. அப்பம்,
    • 2. ஸ்தோத்திரபாட்டு,
    • 3. இரத்தம்

III. பஸ்காவை சாப்பிட நிபந்தணைகள்: யாத் 12:11

  • a. காலை வரை மீதம் வைக்கக் கூடாது
  • b. இடுப்பில் கட்சை கட்டிகொள்ள வேண்டும் 
  • c. காலில் செருப்பு போட வேண்டும்
  • d. கையில் தடியை பிடித்துக்கொள்ள வேண்டும்
  • e. தீவிரமாய் (சீக்கிரமாய்) சாப்பிட வேண்டும்

IV. பஸ்கா பொருட்களின் விளக்கம்:

  • a. யாத் 12:7 இரத்தம் (எல்) எபி 12:22 பாவமன்னிப்புகாக தெளிக்கனும்
  • b. யாத் 12:8 புளிப்பில்லா அப்பம் (எல்) 1கொரி 5:8 தூய்மை – உண்மை
  • C. யாத் 12:8 கசப்பான கீரை (எல்)
    • எபே 4:31 பாவத்துக்காக மனஸ்தாபம் 
  • d. யாத் 12:11 அரைக்கட்சை (எல்) அப் 12:15 உறுதி (சாதனை)
  • e. யாத் 12:11 காலில் செறுப்பு (எல்) மாற் 6:9 ஆயத்தம்
  • f. யாத் 12:11 கையில் தடி (எல்) சங் 23:4 பாதுகாப்பு (அ) தேவ வார்த்தை

V. பஸ்காவை ஆசரித்தவர்கள் யார் யார்?

  • a. யோசு 5:10,11 இஸ்ரவேலர் ஆசரித்தனர் 
  • b.2இரா 23:23,22 யோசியா இராஜா ஆசரித்தான்
  • C. 2நாள் 30:1,17 எசேக்கியா இராஜா ஆசரித்தான்
  • d. எஸ்றா 6:19 சிறையிலிருந்து வந்தவர்கள் ஆசரித்தனர்
  • e.லூக் 2:41-43 இயேசுவும் – பெற்றோரும் ஆசரித்தனர் 
  •  f. மத் 26:17-19 இயேசுவும் சீசர்களும் ஆசரித்தனர்

VI. செய்தி:

  • a. யாத் 12:5 ஆட்டுக்குட்டி (எல்) 1கொரி 5:7 கிறிஸ்துவே பாவம் சுமக்கும் ஆட்டுகுட்டி [பஸ்கா) 
  • b. யாத் 12:8 புளிப்பில்லா அப்பம் (எல்) 1கொரி 5:8,9 துர்குணம், பொல்லாப்பு, விபச்சாரம்
  • C. யாத் 12:8 கசப்பான கீரை (எல்) எபே 4:31,32 
    • 1. கசப்பு, 
    • 2. கோபம், 
    • 3, மூர்க்கம்,
    • 4. கூக்குரல், 
    • 5. தூஷணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *