இருதயம் – HEART

இருதயம் - HEART

இருதயம் – HEART

இது உள்ளான மனுஷன் எனவும் அழைக்கப்படுகிறது. மனுஷனுடைய சிந்தனைகள், உணர்வுகள், முடிவுகள் ஆகியவை அவனுடைய இருதயத்திலிருந்தே புறப்பட்டு வருகிறது. மனுஷனுடைய ஆள்தத்துவத்தைப் பற்றி வேதாகமத்தில் குறிப்பிடும்போது அவனுடைய இருதயத்தைப் பற்றியே பிரதானமாக குறிப்பிடப்படுகிறது.

மனுஷனுடைய உணர்வுகளெல்லாம் அவனுடைய இருதயத்திலிருந்தே வருகின்றன. அன்பும் கோபமும் (சங் 105:25; 1பேது 1:22) சந்தோஷமும் வருத்தமும் (பிர 2:10; யோவா 16:6) சமாதானமும் கசப்பும் (எசே 27:31; கொலோ 3:15) தைரியமும் பயமும் (ஆதி 42:28; ஆமோ 2:16) ஆகிய உணர்வுகளைப் பற்றி வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள இடங்களிலெல்லாம் மனுஷனுடைய இருதயமும் அங்கு

மனுஷனுடைய சிந்திக்கும் ஆற்றல் அவனுடைய இருதயத்திலிருந்தே வருகிறது. சிந்திப்பது (எஸ் 6.6) புரிந்துகொள்வது (யோபு 38:36) கற்பனைசெய்வது (எரே 9:14) நினைவுகூருவது (உபா 49) ஞானத்துடன் இருப்பது (நீதி 210) உள்மனதுடன் பேசுவது (உபா 7:7) ஆகியவையெல்லாம் இருதயத்திலேயே நடைபெறுகின்றன. மனுஷன் தன் இருதயத்தில் தீர்மானம் பண்ணுகிறான். மனுஷனுடைய நோக்கம் (அப் 11:23) குறிக்கோள் (எபி சித்தம் (எபே ஆகியவையெல்லாம் இருதயத்தின் 432) கிரியைகளாகும். 6.6)

ஒரு மனுஷனுடைய இருதயம் அவனுடைய ஆள்தத்துவப் பண்பை வெளிப்படுத்துகிறது. துன்மார்க்கம் அல்லது பரிசுத்தம் (எரே 317; மத் 5:8) நாணயம் அல்லது மனக்கடினம் (யாத் 4:21; கொலோ 3:22) முதிர்ச்சி அல்லது முரட்டாட்டம் (சங் 101:2; எரே 5:23) ஆகியவையெல்லாம் இருதயத்தின் மூலமாக வெளிப்படும் மனுஷனுடைய சுபாவங்களாகும்.

தேவன் ஒவ்வொரு மனுஷனுடைய இருதயத்தையும் அறிந்து வைத்திருக்கிறார் (சொமு 16:7), மனுஷனுடைய பேச்சும் செயலும் அவனுடைய இருதயத்திலிருந்தே வருகிறது. ஆகையினால் மனுஷன் தன் இருதயத்தை காத்துக்கொள்ளவேண்டும் (நீதி 4:23; மத் 15:18-19). எல்லாவற்றிற்கும் மேலாக மனுஷன் தன் முழு இருதயத்தோடு கர்த்தரிடத்தில் அன்பு கூரவேண்டும் (மத் 22:37). இயேசுகிறிஸ்துவை நம்முடைய இருதயத்தில் நாம் விசுவாசிப்பதினால் தேவனுடைய அன்பையும் பிரசன்னத்தையும் நமது இருதயத்தில் மாத்திரமே (ரோம 5:5; 109-10; எபே 3:17). உணர அவருடைய முடியும்

மனுஷனுடைய ஜீவியத்தின் மையப்பகுதியாக அவனுடைய இருதயம் அமைந்துள்ளது. இது சிந்தனைகள் பிறக்கும் இடமாகும். வேதாகமத்தில் பலவிதமான இருதயங்களை பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இருதயத்தின் பயன்பாடுகளும் வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளன.

இருதயத்தின் பயன்பாடுகள்

  • 1. சரீரத்தில் இரத்த ஓட்டத்தை இயக்கும் கருவி. (1சாமு 25:37; நீதி 14:30)
  • 2. ஆத்துமாவின் பிரியம் (உபா 19.6; உபா 20:8; உபா 28:47; சங் 4:7; சங் 13:2)
  • 3. மனச்சாட்சி (1சாமு 24:5; யோபு 27.6) 27:6)
  • 4.மானிட சுபாவம் (எரே 179; mark 7:20-23)
  • 5. சிந்தை (யாத் 35:5,35; உபா 29:4; 1இராஜா 3.9; 1இராஜா 4:29; ஏசா 14:13; ரோமர் 10:6)
  • 6. அனைத்திற்கும் மையப்பகுதி (யாத் 15:8; மத் 12:40)

இருதயத்தின் வகைகள்

  • 1. நொருங்குண்டது (Broken) (சங் 3418; சங் 51:17; சங் 69:20)
  • 2.நருங்குண்டது (Contrite) (சங் 51:17)
  • 3. மனம் கசந்தது (Grieved) ஆதி 6:6; சங் 73:21)
  • 4. மனப்பூர்வமானது (Willing) (யாத் 25:2; யாத் 35:5,29)
  • 5. திடனற்றுப்போனது. (Discouraged) (எண் 32:7-9; உபா 1:28)
  • 6. கடினமானது (Obstinate) (உபா 2:30)
  • 7. பெருமையானது (Proud) (உபா 814;சங் 101:5; எசே 28:5,17)
  • 8.பொல்லாதது (Wicked) (உபா 159;நீதி 6:1418; எரே 414-18)
  • 9. தத்தளிக்கிறது (Trembling)(உபா 28.65; ஏசா 66:2)
  • 10.உத்தமமானது (Perfect)(1இராஜா 8.6; 1நாளா 299)
  • 11.வஞ்சனையானது (Double)(நாளா 12:33; யாக் 4:8)
  • 12. இளகியது. (Tender) (2இராஜா 22:19; 2நாளா 34:27; எபே 4:32)
  • 13.மென்மையானது (Soft) (1சாமு 24:5; யோபு 23.16)
  • 14.சுத்தமானது (Pure) (சங் 24:4; மத் 5:8; 1பேதுரு 1:22)
  • 15.நேர்மையானது (Upright) (சங் 32:11; சங் 36:10; சங் 6410; சங் 97:11)
  • 16. சுத்தமானது (Clean) (சங் 51:10;சங் 731; நீதி 209)
  • 17. ஆயத்தமானது (Fixed) (சங் 57:7;சங் 112:7)
  • 18. தந்திரமானது (Subtle) (நீதி 730)
  • 19. மாறுபாடுள்ளது (Froward or perverse) (நீதி 11:20; நீதி 12:8)
  • 20.ஞானமுள்ளது (Wise) (யாத் 28:3; யாத் 35:25; நீதி 10:8; நீதி 11:29)
  • 21. மனமகிழ்ச்சியானது (Merry) (2 நாளா 7:10; நீதி 1513-15; நீதி 17:22)
  • 22. துக்கமானது (Sorrowful) (நீதி 1413; நீதி 15:13)
  • 23. இறுமாப்புள்ளது (Haughty) (நீதி 1812; எரே 48:29)
  • 24.தாங்கலானது (Fretting) (நீதி 19:3; நீதி 2419; சங் 374-8)
  • 25. மனதுக்கமுள்ளது (Heavy) (நீதி 25:20; நீதி 31:6)
  • 26. ஆராயமுடியாதது (Unsearchable) (நீதி 25:3; சங் 64.6)
  • 27.கேடுள்ளது (Despiteful) (எசே 2515; ரோமர் 1:30)
  • 28. மனக்கசப்பானது (Bitter) (எசே 27:31; எபி 12:15; யாக் 314)
  • 29. புதியது (New) (எசே 18:31; எசே 36:26; 2கொரி 5:17-18)
  • 30. கல்லானது (Stony) (எசே 119; எசே 36:26)
  • 31. மாம்சமானது (Flesh) (எசே n:19; எசே 36:26)
  • 32. விருத்தசேதனமில்லாதது (Uncircumcised) (எசே 447; எரே 9:26; அப் 7:51)
  • 33. சாந்தமும், மனத்தாழ்மையுமானது. (Meek and lowly) மத் 11:29)
  • 34. உண்மையும், நன்மையுமானது. (Honest and good) (லூக்கா 8.15)
  • 35. பாரமடைந்தது (Overcharged) (லூக்கா 21:34)
  • 36.கலங்கினது Troubled (யோவான் 14:1-3,27)
  • 37. ஒருமனப்பட்டது (Single) அப் 2:46; எபே 6:5)
  • 38. மதியீனமானது, இருளானது (Foolish and darkened) (ரோமர் 1:21)
  • 39. குணப்படாதது (Impenitent) ரோமர் 1:21; ரோமர் 2:5)
  • 40. விருத்தசேதனமானது (Circumcised) (ரோமர் 2:29; பிலி 3:3)
  • 4. பொல்லாதது (Evil) (எரே 3:17; எரே7:24; எரே 11:8; எரே 16:12; எபி 3:12)
  • 42. உண்மையுள்ளது (True) (எபி 10:22; மத் 22:16)
  • 43. கரையக்கூடியது. (Melted) (யோசு 2:17; யோசு 54; யோசு 7:5; யோசு 14:8)
  • 44. கபடமுள்ளது (Deceitful) (எரே 14:14; எரே 17:9; மாற்கு 7:21-23)
  • 45.கடினமானது (Hard) (உபா 15:7; சங் 95:8; எபி 3:8)
  • 46.சோரமானது (Whorish) (எசே 6:9; ஓசி 412; ஓசி 91)
  • 47.தீங்கானது (Mischievous) (நீதி 2814; நீதி 2215; ரோமர் 1:21)
  • 48. வஞ்சிக்கக்கூடியது (Diabolical) (யோவான் 13:2; அப் 5:3)
  • 49. பேராசையுடையது (Covetous) (எரே 2217; 2பேதுரு 2:14)
  • 50. வியாகுலமானது (Compassionate) (சங் 55:4; எரே 4:19)

துன்மார்க்கருடைய சிந்தனையும், பக்திமான்களுடைய சிந்தனையும் வித்தியாசமாக இருக்கும். தேவன் இருதயத்தை ஆராய்ந்து பார்க்கிறார். அவர் இருதயத்தின் நினைவுகளையெல்லாம் அறிந்திருக்கிறார். (சொமு 16:7; 1நாளா 28.9; எரே 17:9-10; எசே 11:5; லூக்கா 16:15; ரோமர் 8:27; எபி 4:12).

 

One thought on “இருதயம் – HEART

  1. இதயம் மற்றும் இருதயம் இரண்டிற்கான வேறுபாடு–இதயம் என்பது ஒரு தசை உறுப்பு. ரத்தம் மற்றும் ரத்த நாளங்களால் ஆனது. இது ரத்த ஓட்ட அமைப்பு வழியாக உடல் முழுவதும் ரத்தத்தைச் செலுத்துகிறது.
    இருதயம் என்பது நம் உணர்ச்சிகள் மற்றும் ஆசைகள் வசிக்கும் ஆவிக்குரிய பகுதியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *