சிலுவையும் கள்ளர்கள்

சிலுவையும் கள்ளர்கள்

சிலுவையும் கள்ளர்கள் :

இயேசுவின் சிலுவைக்கும் யூதாசுக்கும் எப்படி நெருங்கிய தொடர்புண்டோ. அதேப் போல கொல்கொதா மலைக்கும் இரண்டு கள்ளர்களுக்கும் நிறைய தொடர்புண்டு. அந்த இரண்டு காளர்களைக் குறித்து துணுக்குகளோடும். வசனங்களோடும், ஆழ்ந்து சிந்தித்து தியானப்போம்.

வலதுபுறத்துக் கள்ளன்:

வலதுபுறத்தக் கள்ளனின் பெயர் – திஸ்மாஸ்

  • 1. லூக் 23:40 ஆக்கினையை அறிந்தவன் 
    • செப் 3:15 ஆக்கினையை அகற்றுவார்
  • 2. லூக் 23:40 தேவனுக்குப் பயப்படுகிறவன் 
    •  அப் 10:22 கொர்நேலிலியு தேவனுக்குப் பயந்தவன்
  • 3. லூக் 23:41 தக்கப் பலனைக் குறித்து அறிந்தவன் 
    •  வெளி 22:12 பலன் என்னோடே கூட வருகிறது
  • 4.லூக் 23:41 இயேசு தகாததை நடப்பிக்கவில்லை (இயேசுவை குறித்துச் சாட்சி சொன்னான்) 
    •  மத் 3:11 என்னிலும் வல்லமையுள்ளவர்
  • 5. லூக் 23:41 கடிந்துக்கொண்டான் (எச்சரித்தான்) 
    •  யோவா 8:11 நீ போ இனிப்பாவம் செய்யாதே
  • 6. லூக் 23:42 ராஜ்யத்தில் நினைத்தருளும் (பரலோகத்துக்காக ஜெபித்தான்)
    •  மத் 10:32,33 இயேசுவை அறிக்கைச் செய்தான் பரலோகம் கிடைத்தது.

இடதுபுறத்துக் கள்ளன்:

இடதுபுறத்துக் கள்ளனின் பெயர் – ஹெஸ்பாஸ்

  • 1. லூக் 23:39 இயேசுவை நீ என்றான் [இயேசுவை தன்னுடைய அடிமையைப் போல நினைத்தான்)  
    • மத் 26:62 பிரதான ஆசாரியனும் இயேசுவை நீ என்றான்
  • 2. லூக் 23:39 கிறிஸ்துவானால் (இயேசுவோ என்று சந்தேகப்பட்டான்)
    •  மத் 14:31 ஏன் சந்தேகப்பட்டாய்
  • 3. லூக் 23:39 உன்னையும் [இயேசுவை அவமரியாதை செய்தான்) 
    •  மத் 26:61 இவன் சொன்னான் என்றார்கள் (இயேசுவை)
  • 4. லூக் 23:39 இரட்சித்துக்கொள் (இரட்சிப்பைக்குறித்தும் கிண்டல் செய்தான்) 
    •  அப் 16:17 குறிசொல்லுகிற பெண் பவுலையும் கிண்டல் பண்ணினாள்
  • 5. லூக் 23:39 இகழ்ந்தான் (இயேசுவைத் திட்டினான்) 
    •  மத் 26:74 பேதுருவும் இயேசுவைத் திட்டினான்

One thought on “சிலுவையும் கள்ளர்கள்

  1. அருமையான தகவல்கள்.
    பயனுள்ள விளக்கம்.
    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *