சிலுவையில் இயேசுவின் 7 வார்த்தைகள் 

சிலுவையில் இயேசுவின் வார்த்தைகள் 

ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக

இயேசுகிறிஸ்து கொல்கொதா கொல்கொதா மலையில் இரண்டு கள்ளர்கள் நடுவில் சிலுவையில் அறையப்பட்டவராக இருக்கிறார்இயேசுவை பரியாசம்பண்ணி அவரை சவுக்கினால் அடித்து துன்புறுத்தி சிலுவையில் அறைந்த யூத மக்கள் அங்கு கூடி இருந்தார்கள்சில நாட்களுக்கு முன்பாக ஓசன்னா என்று பாடிய மக்களும் இருந்தார்கள்இவ்விதமான சூழ்நிலையில் இயேசு சிலுவையில் ஏழு வார்த்தைகளைச் சொல்லுகிறார்இந்த வார்த்தைகள் ஏதோ தற்செயலாக சொன்ன வார்த்தைகள் அல்லஇயேசு இந்த உலகில் செய்த ஒவ்வொன்றும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்றுவேத வாக்கியங்கள் நிறைவேறேத்தக்கதாக நடந்த நிகழ்வாகும்இயேசு மரிப்பதற்கு முன்பாக சொல்லிய ஏழு வார்த்தைகளைக் குறித்து சுருக்கமாக இங்கு பார்க்கலாம்.

முதல் வார்த்தை: “பிதாவேஇவர்களுக்கு மன்னியும்தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” (லூக்கா 23:34).

இயேசு கிறிஸ்து தம் கடைசிவேளை வரைக்கும் மன்னிப்பை பிரசங்கித்தார்கற்றுக்கொடுத்தார்கர்த்தருடைய சீஷர்களுக்கு கற்றுக்கொடுத்த ஜெபத்திலும்மத்தேயு 6:12 “எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்” என்று கற்றுக்கொடுத்தார்பேதுரு இயேசுவினிடத்தில் எத்தனை முறை மன்னிக்க வேண்டும் என்று கேட்டபொழுதுமத்தேயு 18:21-22 “அப்பொழுதுபேதுரு அவரிடத்தில் வந்துஆண்டவரேஎன் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்துவந்தால்நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்ஏழுதரமட்டுமோ என்று கேட்டான்அதற்கு இயேசுஏழுதரமாத்திரம் அல்லஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்” அளவில்லாமல் நாம் மன்னிக்க வேண்டும் என்பதை குறித்து இயேசு சொன்னார்.

மாற்கு இரண்டாம் அதிகாரத்தில் ஒரு திமிர்வாதகாரனை இயேசு மன்னித்தார்விபசார ஸ்திரியை இயேசு மன்னித்தார்அவர் உயிர்தெழுந்த பின்பும் மன்னிப்பை குறித்து பேசுகிறார்யோவான் 20:21-23 “இயேசு மறுபடியும் அவர்களை நோக்கிஉங்களுக்குச் சமாதானமுண்டாவதாகபிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லிஅவர்கள்மேல் ஊதிபரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும்எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்” இயேசு கிறிஸ்து தம் வாழ்நாள் முழுவதுமே மன்னிப்பைப் போதித்தார்இங்கு சிலுவையிலும் தாம் போதித்தபடி தன்னை சிலுவையில் அறைந்த மக்களுக்காக பிதாவினிடத்தில் அவர்களை மன்னிக்கும்படி ஜெபிக்கிறார்கிறிஸ்துவத்தின் மிக மிக முக்கியமான அம்சம் மன்னித்தல்நாம் மற்றவர்களை மன்னிக்கவில்லை என்றால் நம்மை ஆண்டவர் மன்னிக்கமாட்டார்ஒரு இரட்சிக்கப்பட்ட மனிதனில் காணப்படவேண்டிய மிக முக்கியமான குணம் மன்னிக்கும் குணம்ஒருவேளை என்னிடத்தில் மன்னிப்புகேட்டால் மன்னிப்புகேட்டால் மன்னிப்பதல்லமன்னிப்பு கேட்டாலும் கேட்காவிட்டாலும் மன்னிக்க வேண்டுமென்பதே ஆண்டவர் நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடமாகும்.

இரண்டாவது வார்த்தை: “இன்றைக்கு நீ என்னுடேனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” (லூக்கா 23:43)

இயேசு கிறிஸ்துவின் வலது பக்கத்தில் சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு கள்ளன் பிதாவேஇவர்களுக்கு மன்னியும்தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” (லூக்கா 23:34) என்று சொன்ன வார்த்தையை கேட்டான்அவனுடைய வாழ்க்கையில் மெய்யான இயேசுவின் மன்னிக்கும் அன்பு அவனைத் தொட்டதுமுதலாவது மற்ற கள்ளனைப் போலவே அவனும் இயேசு கிறிஸ்துவை நிந்தித்தான்ஆனால் இயேசு கிறிஸ்துவின் மன்னிக்கும் வார்த்தையை கேட்டபொழுதுஅவனுடைய கண்கள் திறக்கப்படுகிறதுஅவன் தான் ஒரு பாவி என்பதை உணர்ந்த நிலையில்ஆண்டவரிடத்தில் மனந்திரும்புகிறதை நாம் பார்க்கிறோம்லூக்கா 23:42 இல் இயேசுவை நோக்கிஆண்டவரேநீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்“. “நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்” என்று அவன் சொன்ன வார்த்தை அவன் தன் பாவத்தை ஒப்புக்கொள்ளுகிறதைக் காண்பிக்கிறதுஇயேசுவினிடத்தில் அவன் தன்னைத் தாழ்த்துகிறதைப் பார்க்கிறோம்அந்த நேரத்தில் இயேசு அவனை நோக்கி, “இன்றைக்கு நீ என்னுடேனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” என்றார்அந்த கள்ளன் தன் பாவத்தை உணர்ந்துதன்னை தாழ்த்தி மன்னிப்பு கேட்டபொழுது இயேசு அவனை மன்னித்தார்நாம் இந்த கள்ளனைப் போல நம்மை தாழ்த்தி இயேசுவினிடத்தில் மன்னிப்பு கேட்கும்பொழுது மாத்திரமே அவருடைய மன்னிப்பை பெற்று பரலோக ராஜ்ஜியதிற்கு செல்ல முடியும்மனந்திரும்புதல் இல்லாமல்நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படாமல் நாம் பரலோக ராஜ்ஜியம் செல்ல முடியாதுகிறிஸ்தவ தன் பாவத்தை உணருகிற தன்மை காணப்படும்அவன் பாவம் செய்யும் பொழுது அவனுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவர் அவனுடைய பாவத்தை உணர்த்தி மன்னிப்புக்குள் வழிநடத்துகிறார்.

மூன்றாவது வார்த்தை: “ஸ்திரீயேஅதோஉன் மகன் என்றார்பின்பு அந்தச் சீஷனை நோக்கிஅதோஉன் தாய் என்றார்” (யோவான் 19:26-27)

மூன்றாவது வார்த்தையோவான் 19:26-27 “அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டுதம்முடைய தாயை நோக்கிஸ்திரீயேஅதோஉன் மகன் என்றார்பின்பு அந்தச் சீஷனை நோக்கிஅதோஉன் தாய் என்றார் அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்“. இந்த இடத்தில் ஸ்திரீயே என்று சொல்லவது ஒரு கனத்துக்குரிய பதமாய் இருக்கிறதுஇந்த இடத்தில் மரியாளுடைய இருதயம் எவ்வளவாய் வேதனை பட்டிருக்கும் என்பதை நம்மால் விளங்கிக்கொள்ள முடிகிறதுஇப்படிப்பட்ட சூழ்நிலையில் இயேசு தாம் சிலுவையில் தொங்கிகொண்டிருந்த வேளையிலும் தம்முடைய தாயை பார்த்துக்கொள்ளும்படியான பொறுப்பை தம்முடைய சீஷனான யோவானிடத்தில் ஒப்புவிக்கிறார்இதை நாம் பார்க்கும்பொழுது அவர் இந்த உலகத்தில் மனிதர்களை எவ்வளவு அதிகமாய் நேசித்தார் என்பதை நம்மால் விளங்கிக்கொள்ள முடிகிறதுமுக்கியமாக தன்னை பாதுகாத்து பராமரித்து வந்த தன்னுடைய தாயையோவானிடத்தில் ஒப்புவித்து தம்முடைய பொறுப்பை நிறைவேற்றுவதை நாம் பார்க்கிறோம்.

நான்காவது வார்த்தை: “ஏலீஏலீலாமா சபக்தானி” (மத்தேயு 27:45)

நான்காவது வார்த்தைமத்தேயு 27:46 “ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசுஏலீஏலீலாமா சபக்தானிஎன்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்அதற்கு என் தேவனேஎன் தேவனேஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்”இயேசு இந்த வார்த்தையை சொல்வதற்கு முன்பாக மூன்றுமணி நேரம் பூமி எங்கும் அந்தகாரம் உண்டாயிருந்தது என்று பார்க்கிறோம்அந்த மூன்று மணி நேரமும் இயேசு கிறிஸ்து தம்முடைய மக்களின் பாவங்களையும்அதினால் வரும் ஆக்கினைகளையும் சுமந்து தீர்த்தார்இயேசுவானவர் ஒருநாளும் பிதாவினிடத்தில் இருந்து பிரிந்தது கிடையாதுபிதாவும் நானும் ஒன்று என்று சொன்னார்இயேசு தாம் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பாக பிதாவினிடத்தில்இந்த பாத்திரம் என்னை விட்டு நீங்க கூடுமானால் நீங்கும்படி செய்யும் என்று ஜெபித்தார்அதனுடைய மெய்யான அர்த்தம் என்னவென்றால் அவர் பிதாவோடு கொண்டிருந்த ஐக்கியத்தை இழந்து போக விரும்பவில்லை என்பதாகும்சீஷர்கள் அவரை விட்டு ஓடிப்போனார்கள்இயேசு கிறிஸ்து தனிமையை உணர்ந்தவராய் இந்த வார்த்தையை பேசினார்

மரணம் என்பது ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் ஒரு பயங்கரமான வேளைஇந்த உலகத்தில் தேவனற்ற நிலையில் ஒரு மனிதன் மரிக்கும்பொழுது அவனுடைய நிலை ஏறக்குறைய இவ்விதமாகவே இருக்கும்ஆனால் கிறிஸ்துவின் பிள்ளையாக இருப்பவர்கள் தங்கள் மரண நேரத்திலும் எந்த பயமும் இல்லாமல் இருப்பதற்காக இயேசு கிறிஸ்து அவர்களுக்காக சிலுவையில் மரணத்தை வென்றார். 1 தீமோத்தேயு 2:5-6 “தேவன் ஒருவரேதேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரேஎல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரேஇதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது“. அவர் தம்மை முழு மனிதனாக தம்முடைய மக்களின் பாவங்களுக்காக இந்த மரணத்தை ஏற்றுக்கொண்டார். 1 பேதுரு 2:24 ‘நாம் பாவங்களுக்குச் செத்துநீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்குஅவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.’

ஐந்தாவது வார்த்தை: “தாகமாயிருக்கிறேன்” (யோவான் 19:28)

ஐந்தாவது வார்த்தையோவான் 19:28 “அதன்பின்புஎல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்துவேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாகதாகமாயிருக்கிறேன் என்றார்“. இயேசு கிறிஸ்து தம்முடைய சரீரத்தில் முற்றிலும் முற்றிலும் பெலவீனப்பட்டவராய் இருந்தார்அந்தச் சூழ்நிலையில் தாகமாயிருக்கிறேன் என்று சொன்னார்யோவான் 4: 13-14 “இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாகஇந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும்நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாதுநான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்”ஜீவத் தண்ணீரை கொடுக்கிற இயேசுகிறிஸ்து அந்த வேளையில் தன் சரீரம் முற்றிலும் பெலன் இழந்தவராய் தாகமாய் இருக்கிறேன் என்று சொன்னார்மேலும் இதன் மூலமாய் நாம் கற்றுகொள்ளும் பாடம் என்னவென்றல் நம்மைப்போல முழுமையான மனிதனாகவே சிலுவையில் தம்முடைய மக்களுக்காக மரித்தார் என்பதைக் காட்டுகிறது.

ஆறாவது வார்த்தை: “முடிந்தது” (யோவான் 19:30)

ஆறாவது வார்த்தையோவான் 19:30 இல் இயேசு காடியை வாங்கினபின்புமுடிந்தது என்று சொல்லிதலையைச் சாய்த்துஆவியை ஒப்புக்கொடுத்தார்”இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வந்ததின் நோக்கம் பாவிகளை இரட்சிக்க வந்தார் என்பதை வேதத்தின் மூலம் நாம் அறிவோம்இழந்து போனதைத் தேடவும் இரட்சிக்கவுமே இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வந்தார்ஒரு பாவி இரட்சிக்கப்பட தேவையான எல்லாவற்றையுமே (முழுமையாகஇயேசு கிறிஸ்து சிலுவையில் செய்து முடித்தார்ஆகவேதான் அவர் முடிந்தது என்று சொல்லுகிறதை நாம் பார்க்கிறோம்இனி மனிதனுடைய பாவங்களுக்காக பலியிட வேறொரு பலி தேவையில்லைசெய்யவேண்டியது ஒன்றுமில்லைஇயேசுவின் இந்த வார்த்தையானது ஒரு பாவிக்கு நம்பிக்கையளிக்கும் படியான வார்த்தையாக இருக்கிறதுநாம் இயேசுவின் மீது வைக்கும் விசுவாசத்தின் மூலம் அவர் சம்பாதித்த இந்த இரட்சிப்பில் நாம் பங்கடையவர்களாக காணப்படுவோம்நாம் இரட்சிக்கும் படியான வேறொரு வழியுமில்லைநாமமுமில்லை.

ஏழாவது வார்த்தை: “பிதாவேஉம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” (லூக்கா 23:46).

ஏழாவது வார்த்தைலூக்கா 23: 46 “இயேசுபிதாவேஉம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்இப்படிச் சொல்லிஜீவனை விட்டார்பிதாவோடு கொண்டிருந்த தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர்” என்றார்ஆனால் இப்போது மறுபடியும் பிதாவோடு கொண்டிருந்த தொடர்பு இணைக்கப்படுகிறதுபிதாவின் அருமையான கரங்களில் அவர் தம்மை ஒப்புவிக்கிறார்சங்கீதம் 31: 5 இல் உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்சத்தியபரனாகிய கர்த்தாவேநீர் என்னை மீட்டுக்கொண்டீர்”பிதாவோடு இயேசு கிறிஸ்து கொண்டிருந்த தொடர்பை குறித்து குறித்து இயேசு சொல்லும்போது யோவான் 10:30 இல் நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.’ மேலும் யோவான் 14: 10 “நான் பிதாவிலும்பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையாநான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லைஎன்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்யோவான் 16:28 இல் “நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன்மறுபடியும் உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகிறேன் என்றார்”ஆகவே இயேசு கிறிஸ்து மனிதனின் இரட்சிப்பிற்காக மகத்துவமான கிரயத்தை செலுத்தி வெற்றியுள்ளவராக மரணத்தை ஜெயித்தவராக பாவத்தை மேற்கொண்டவராக பிதாவினிடத்தில் சென்றார்.

அன்பான நண்பர்களேஒரு கிறிஸ்தவனுக்கு மரணம் என்பது ஒரு மகிமைகரமான நாள்இந்த உலகத்தின் பாடுகள் எல்லாம் நீங்கி மெய்யான இளைப்பாறுதலில் பிரவேசிக்கின்ற மகிமையான ஒரு நிகழ்வாகும்ஒரு மனிதன் இயேசு கிறிஸ்து சிலுவையிலே சம்பாதித்த இலவசமான மீட்பை புறக்கணிப்பதினாலே அவன் நரகத்திற்கு செல்லுகிறான்நீங்கள் இன்னும் கிறிஸ்துவை விசுவாசியாமல்இரட்சிப்பின் நிச்சயம் இல்லாமல் இருப்பீர்களானால் கிறிஸ்து மட்டுமே ஒரே வழிஅவரே நம்முடைய பாவங்களை நீக்கும்படியான அதிகாரம் கொண்டவர்அவரிடத்தில் சென்றுநம்முடைய பாவங்களுக்காக வருந்திநம் பாவங்களை அறிக்கையிட்டுமனந்திரும்பக்கடவோம்.


Have any Question or Comment?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page