You are currently viewing மன்னிப்பின் வார்த்தைகள்

மன்னிப்பின் வார்த்தைகள்

மன்னிப்பின் வார்த்தைகள்

மன்னிப்பின் வார்த்தைகள்

“இவர்களுக்கு மன்னியும்” (லூக். 23:34) சிலுவையின் ஊர்வலம் கல்வாரியை அடைந்தபோது, இயேசுளின் வஸ்திரங்கள் உரியப்பட்டன; ஐந்து நாட்களுக்கு முன்புதான், எருசலேமில் இருந்தவர்கள், இயேசு வரும் வழியில் விரிக்கத் தங்கள் வஸ்திரங்களைக் கழற்றினார்கள்; இப் பொழுதோ அவர்கள் அவரது வஸ்திரத்தை உரித்தார்கள். தமக்குத் தண்டனையை நிறைவேற்றுவோரிடம் இயேசு தமது கரங்களை விரித்துக் கொடுத்தார்-அந்தக் கரங்கள் யாருக்கும் தீமை எதுவும் செய்ததில்லை, உலகத்திற்கு ஆசிர்வாதங்கள் அளித்த உன்னத கரங்கள் அவை. அடிக்கும் சத்தமானது அடியிலிருந்த நகர மதில்களில் எதிரொலித்தது, அதன் பிறகு சிலுவையானது மெதுவாக உயர்த்தப்பட்டு, வானத்தையே குலுக்கும் திடும் என்ற ஒரு ஒலியுடன் குழியில் நிறுத்தப் பட்டது. இயேசு தமது கடைசிப் பிரசங்க மேடையில் உயர்த்தப்பட்டார்.

சிலுவையில் இயேசு கூறிய முதல் வசனம் மன்னிப்பின் வசனம் ஆகும்: “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” (லூக். 23:34அ). இந்த முதலாவது, நான்காவது மற்றும் ஏழாவது வசனங்கள் ஜெப வார்த்தைகள் ஆகும். துவக்கமும், நடுவும், நிறைவுமான மூன்று இடங்களில் இயேசுவின் துக்கம் தேவனு டைய ஐக்கியத்தில் தோய்க்கப்பட்டது.

சிலுவையில் மனிதர்கள் ஜெபிப்பது அரிது, மரணத்தை எவ்வளவு வலிமிக்கதாய் மாற்ற முடியும் என்று சிந்தித்த வக்கிர மனங்களின் கண்டுபிடிப்பே சிலுவையாகும். அப்படிப்பட்ட பயங்கரமான தண்டனையைப் பெறும் குற்றவாளிகள் வழக்கமாக வலியினால் துடித்து மயங்கி,அலறி, கெஞ்சி, சபித்து, தன்னைப் பார்ப்பவர்கள் மேல் துப்புவார்கள். ஆனால் இயேசு ஜெபித்தார்.

இயேசு தமது வலியை முதலில் எண்ணாமல், தம்மை உபத்திரவப்படுத்தினவர்கள் தங்களுக்குத் தாங்களே ஏற் படுத்திக் கொண்ட தீமையை எண்ணிப்பார்க்கிறார். சத்தன மரமானது தன்னை வெட்டும் கோடரியைக்கூட நறுமணத் தால் தோய்ப்பது போல, இயேசுவும்கூட அங்கு, “பிதாவே நீர் உமது இரக்கங்களை என்னைவிட்டு மறைத்தாலும், இவர் களுக்கு மறையாதேயும்” என்றார்.

தமது நேரடியான ஊழியத்தில் இயேசு மன்னிப்பு என்ற பொருள்பற்றி அடிக்கடி போதித்துள்ளார்; “எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும் … மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷ்ருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்” மேத்-6:12, 14-15),

அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: “ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்துவந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்க வேண்டும்? எழுதரமட்டுமோ” என்று கேட்டான். அதற்கு இயேசு: “ஏழுதர மாத்திரம் அல்ல; ஏழெழுயதுதரமட்டும் என்று உனக்கு சொல்லுகிறேன் .. நீங்களும் அவனனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பி தங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரம பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார்” என்றார் (மத். 18:21-22, 35),

இருப்பினும் மன்னித்தல்பற்றிய இயேசுவின் மாபெரும் போதனை சிலுவையில்தான் நிகழ்ந்தது. ஏனெனில் அதில் அவர் தாம் போதித்ததை செயல்முறையில் விளக்கப் படுத்தினார். லூக்கா 23:34ன் வினைச் சொல்லானது கிரேக்க மொழியில் முற்றுப் பெறாத வினைச் சொல்லாக அமைந்துள்ளது. தமிழில் என்றார்” என்றுள்ளது. ஆனால் அது என்று சொல்லிக் கொண்டிருந்தார்” என்று இருக்க வேண்டும். அதாவது அந்த வார்த்தைகளை இயேசு மறுபடி மறுபடி அநேக முறை சொல்லிக்கொண்டிருந்தார் என்று ஆகிறது.

காட்சி இப்படியாக நடந்திருக்கவேண்டும்: கபாலஸ் தலத்திற்கு வந்து சேர்ந்தவுடன். இயேசு சுற்றிலும் பார்த்து, “பிதாவே இவர்களுக்கு மன்னியும்; தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்” என்று ஜெபித்தார். ஒரு நூற்றுக்கு அதிபதி வந்து அவரைத் தரையிலே தள்ளியதும், “பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்று ஜெபித்தார். மழுங்கிய ஆணி அவரது துடிக்கும் உள்ளங்கைகளில் கிழித்து நுழைந்தபோது “பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்று ஜெபித்தார். சிலுவையானது நேராக நிமிர்த்தப்படுகையில், “பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்று ஜெபித்தார். கூட்டம் தம்மை சபித்துத் திட்டும் போது, “பிதாவே இவர் களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியா திருக்கிறார்களே” என்று ஜெபித்தார். தையலில்லாத அவருடைய மேலங்கிக்காகப் படைவீரர்கள் சீட்டுப் போட்ட போது, “பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்று ஜெபித்தார். முழுவிபரமும் நமக்குத் தெரியவில்லையென்றாலும், இயேசு தொடர்ந்து ஜெபித்துக்கொண்டிருந்தார் என்று மட்டும் நாம் அறிகிறோம்.

“பிதாவே இவர்களுக்கு மன்னியும் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்று ஜெபித்துக்கொண்டிருந்தார். பாவமன்னிப்பானது பெந்தெகொஸ்தே நாள் வரைக்கும் பரமபிதாவினிடத்தினின்று பொழியப்படவில்லை என்பதை யும் (அப். 2:38) அதுவும்கூட மனந்திரும்பி, ஞானஸ்நானம் பெற்றவர்களுக்கு மட்டுமே கிடைத்தது என்பதையும் நாம் இங்கு கவனிக்க வேண்டியது அவசியமாகும். அதே சமயம், இயேசு தாம் மரிக்கின்றபொழுது தமது இருதயத்தில் எவ்வித பகைமை உணர்வும் கொண்டிருக்கவில்லை என்பதையும் நாம் வலியுறுத்துகின்றோம். நீங்களும். நானும் இயேசுவைப்போல் இருக்கக் கற்றுக் கொள்வது அவசியம்; நாம் நமது எதிரிகளிடம் அன்பு காட்டவும், நம்மை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்காக ஜெபம் செய்யவும் சுற்றுக்கொள்வது அவசியமாகும் (மத். 5:44),

 

Leave a Reply