You are currently viewing நம்பிக்கையின் வார்த்தைகள்

நம்பிக்கையின் வார்த்தைகள்

நம்பிக்கையின் வார்த்தைகள்

நம்பிக்கையின் வார்த்தைகள்

“என்னோடிருப்பாய்” (லூக்கா 23:39-43) சிலுவையில் அறையப்பட்ட குற்றவாளிகளின் நிலை ஒரு முடிவில்லாததாகக் காணப்பட்டிருக்கும். கேலி செய்யும் கூட்டமானது வெறியுடன் சிலுவையைச் சுற்றிலுமிருந்து தங்களது வேலையைச் செய்து கொண்டிருந்தது, அவர்கள்: “மற்றவர்களை இரட்சித்தான். தன்னைத்தான் இரட்சித்துக் கொள்ளத் திராணியில்லை. நாம் கண்டு விசுவாசிக்கத்தக்கதாக இஸ்ரவேலுக்கு ராஜாவாகிய கிறிஸ்து இப்பொழுது சிலுவை யிலிருந்திறங்கட்டும்” என்று ஆர்ப்பரித்தார்கள் (மாற்கு 15:31ஆ-32அ). மேலும் மாற்கு, “அவரோடேகூடச் சிலுவை களில் அறையப்பட்டவர்களும் அவரை நிந்தித்தார்கள்” (மாற்கு 15:32ஆ) என்று எழுதியுள்ளார்.

சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்களில் ஒருவன் படிப் படியாக இயேசுவை வித்தியாசப்பட்ட நோக்கில் காணத் தொடங்கினான். இயேசுவைப்பற்றிய ஏதோ ஒன்று அத் திருடனின் இதயத்தைத் தொட்டது. ஒருவேளை, மரிக்கும் வேளையில் இயேசுவின் முகத்திலிருந்த பெருமிதம் அவனைத் தொட்டிருக்கலாம். ஒருவேளை அவர் மறுபடி மறுபடி “பிதாவே இவர்களுக்கு மன்னியும்” என்று சொல்லிக் கொண்டிருந்தது அவன் இருதயத்தைத் தொட்டிருக்கலாம். எதுவாயிருப்பினும், அத்திருடனின் இருதயத்தில் திடமான விசுவாசம் வளர்ந்து உறுதியானது.

அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளி களில் ஒருவன்: “நீ கிறின்துவானால், உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள்” என்று அவரை இகழ்ந்தான், மற்றவள் அவனை நோக்கி: “நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனா யிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவை. களுக்குத் தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன் றையும் நடப்பிக்கவில்லையே” என்று அவனைக் கடிந்து கொண்டு, இயேசுவை நோக்கி: “ஆண்டவரே நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்” என்றான். இயேசு அவனை நோக்கி: “இன்றைக்கு நீ என்னு டனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” என்றார் (லூக்கா 23:39-43),

சிலுவையிலும்கூட, இயேசுவின்மீதான தாக்குதலை சாத்தான் குறைக்கவில்லை. வனாந்தரத்திலே சாத்தான், இயேசுவிடம், அவர் சிலுவையில் அறையப்படாமலேயே உலகத்தின் இராஜ்யங்களைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்று சொன்னான்’ (மத்தேயு 4:8-9), இயேசுவின் நேரடியான ஊழியத்தின் முடிவு நேரத்தில், பேதுரு இயேசுவிடம் சிலுவையை மறந்துவிடும்படி கூறச் சாத்தான் தூண்டினான் (மத்தேயு 16:21-23). இப்பொழுது சிலுவையில் இயேசு மரிக்கின்ற வேளையில், சாத்தான் ஒரு கள்ளன் மூலமாகப் பேசி, இயேசுவைச் சிலுவையிலிருந்து இறங்கி, அதன்மூலமாய் மரணத்திற்குத் தப்பித்துக்கொள்ளும்படிக்கு சவால் விடுகிறான். தமது ஜீவியகால முழுவதும் இயேசு, தம்மைக் காத்துக் கொள்ளும்படி செயல்படுதல் அல்லது தம்மையே பலியாக ஒப்புக்கொடுத்தல் என்ற இரு விஷயங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் நிலையிலிருந்தார். அவரது சிலுவையில்கூட மறுபடியும் அந்த வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

விசுவாசமில்லாத கள்ளன், அவர் தம்மையே காத்துக் கொள்ளும் செயல்பாட்டைத் தேர்ந்தெடுக்க அவரிடம் பேசினான்; “நீ கிறிஸ்துவானால் உன்னையும், எங்களையும் இரட்சித்துக் கொள்” (லூக்கா 23:39), சாத்தான் வனாந்தரத்தில் “நீ தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும்” (மத் 4:3) என்று சொன்ன அதே அணுகுமுறையை இந்தக் கள்ளனும் கையாண்டான். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், “விசேஷித்த பலன்கள்! இல்லையென்றால், கிறிஸ்துவாயிருப்பதில் பயனில்லை. அப் பலன்களை அனுபவித்து, அதே வேளையில் நீர் யாரென்றும் நிரூபியும்” என்று அவன் கூறினான். A.T. ராபர்ட்சன் என்பவரின் கூற்றுப்படி. இந்தத் திருடன், “சிறையை உடைக்கும் முயற்சி செய்யும் அளவிலேயே” பேசினான். இயேசு அந்தச் சிறையுடைப்பைத் தலைமையேற்று நடத்த வேண்டும் என்றும் அவன் ஆலோசனை கொடுத்தான்.

விசுவாசத்திற்குள் வந்த கள்ளனோ, இயேசு தம்மையே பலியாக்கும் அந்தச் செயலையே விரும்பினான்: “ஆண்டவரே. நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத் தருளும்” (லூக்கா 23:42), வேறு வார்த்தைகளில் இதைச் சொல்லுவதானால், அவன் இயேசுவிடம், “நீர் சிலுவையிலே மரித்து உமது இராஜ்யத்தை ஜெயங்கொள்ளும்” என்று உற்சாகப்படுத்தினான். இந்த மனிதனின் விசுவாசம்தான் எவ்வளவாயிருந்தது! தண்டனை பெற்ற குற்றவாளியாக இயேசுவை அவன் பார்க்கவில்லை; மாறாக ஒரு இராஜாவாகப் பார்த்தான்! முள்முடிக்குப் பதிலாக மேன்மையான மகுடத்தை அவன் கண்டான். இயேசுவின் கைகளிலிருந்த ஆணிகளுக்குப் பதிலாக செங்கோலை அவன் கண்டான்! இயேசுவின் சரீரத்தி லிருந்து வெளியேறி அவர் மேல் உறைந்துகிடந்த அவரது இரத்தம் அவனுக்கு ராஜரீகமான இரத்தாம்பரமாய்த் தோன்றியது.

இந்த வசனங்களிலும், மறுபடி முழுமைபெறாத வினைச் சொற்களே பயன்படுத்தப் பட்டுள்ளன. இரண்டு கள்வர்களு இயேசுவின் செவிகளில் இரண்டு விதமான கருத்துக்களை- தம்மைக் காத்துக்கொள்வது அல்லது தம்மையே பலியாக அளிப்பது-சிலுவையைவிட்டு இறங்குவது அல்லது சிலுவை யிலேயே மரிப்பது என்ற இரு கருத்துக்களை மோத விட்டனர்.

விசுவாசித்த அந்தக் கள்ளனுக்கு இயேசு அளித்த பதில் ஒரு நம்பிக்கையின் செய்தியாக இருந்தது: ‘இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” (வ. 43), ஆனால், “அந்தக் கள்ளன் இரட்சிக்கப்பட்டது போல இன்று இரட்சிக்கப்பட முடியும்” என்பது இங்கு சொல்லப் படவில்லை (அதிலும் விசேஷமாய், ஞானஸ்தானம் இல்லாமல் இரட்சிப்பு உண்டு என்று இங்கு கூறப்படவில்லை)’ என்பதைக் கவனிக்க வேண்டும். அந்த கள்ளன் இயேசுவின் மரணத்திற்கு முன்பு இரட்சிக்கப்பட்டான்; இப்படியாக அவன் பழைய பிரமாணத்தின்கீழாக இரட்சிக்கப்பட்டவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறானே யன்றி, நாம் விசுவாசித்து ஞானஸ்நானம் பெறவேண்டிய புதிய பிரமாணத்தின்படியாக (கொலோ. 2:14; எபி. 9:16-17) அவன் இரட்சிப்படையவில்லை (மாற்கு 16:16). மேலும் இது. ‘கடைசி நிமிட இரட்சிப்பு” என்ற நம்பிக் கையைத் தரும் செய்தியல்ல. நாம் அறிந்தமட்டில், இதுவே இயேசுவைப்பற்றி அறிய அக்கள்ளன் பெற்ற முதல் வாய்ப்பு ஆகும். மறுபடி மறுபடி சுவிசேஷத்தை ஏற்க மறுத்து கடைசி நிமிடத்திற்காக ஒத்திப்போடுபவர்களுக்கு இவன் ஒரு மூன் மாதிரியல்ல. “பதினோராம் மணி வேளையில்” இரட்சிப்புப் பெற நம்பிக்கையாயிருப்பவர்களில் அநேகர் 10:30 மணிக்கு மரித்துவிடுகின்றார்கள் என்று யாரோ ஒருவர் கூறியுள்ளார்.

வேறு எவ்வழியில் இயேசுவின் இவ்வார்த்தைகள் நம்பிக்கையின் செய்தியாய் உள்ளன? முதல் கள்ளனின் ஆலோசனையை அவர் மறுத்து, இந்த இரண்டாம் சுள்ளனின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டதால் இது நம்பிக்கையின் செய்தியாயிருக்கிறது. “மெய்யாகவே”” என்ற வார்த்தை “ஆமென்” என்ற வார்த்தைக்குரிய கிரேக்கப் பதத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இயேசு கூறியது, “ஆமென்! அப்படியே ஆகட்டும். எல்லா மனிதரும் பரதீசுக்குச் செல்லும் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்வதற்காக நான் மரிப்பேன்! தேவனுடைய திட்டத்தை இப்படி நான் முழுமையாக நிறைவேற்றுவேன்” என்று ஆகும். அப்போது பரலோக முழுவதும் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கவேண்டும்.

இரண்டாவதாக, எல்லா மனிதரும், அவர்கள் வாழ்க்கை எவ்வளவுதான் நம்பிக்கையற்றதாகக் காணப்படினும் இரட்சிக்கப்படமுடியும் என்பதால் இது நம்பிக்கையின் செய்தியாக இருக்கிறது. “ஒரே முறை கேட்டு, ஒரே முறை தேடி, ஒரே முறை தட்டி. வாழ்வின் கடைசி நாளில் இந்தத் திருடன் இரட்சிக்கப்பட்டான்” என்று யாரோ ஒருவர் கூறியுள்ளார். இந்தத் திருடன் இவ்விதமாய் இரட்சிக்கப்படக்கூடுமானால், நீங்களும்கூட, என்ன செய்திருந்தாலும் இரட்சிக்கப்பட முடியும். சிலுவையில் அறையப்படத் தான் தகுதியானவனே (லூக். 23:41)” என்று ஒத்துக்கொண்ட இந்தக் குற்றவாளியின் வாழ்க்கையைக் காட்டிலும் உங்கள் வாழ்க்கை மோசமா யிருக்காது என்பது உறுதி.

தாம் நேசித்தும், இன்னும் தம்மிடம் திரும்பாதவர்களுக்கு கர்த்தரின் நம்பிக்கை காத்திருக்கின்றது. எனவே இதை விட்டு விடாதீர்கள். திருடனுக்கு இந்நம்பிக்கை இருக்குமேயானால், இன்றுள்ள அப்படிப்பட்டவர்களுக்கும்கூட அந்த நம்பிக்கை நிச்சயம் உண்டு! கிறிஸ்துவால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை!

 

Leave a Reply