வெற்றியின் வார்த்தைகள்

வெற்றியின் வார்த்தைகள்

வெற்றியின் வார்த்தைகள் “முடிந்தது” (யோவான் 19:30)

வெற்றியின் வார்த்தைகளைச் சொல்வதற்கான வேளை அமைந்தது. சிலுவையில் இயேசு மேற்கொண்ட யுத்தத்தின் விளைவின்மேல் சந்தேகம் உள்ள எவரும் யோவான் 19:30ஐக் கவனிக்க வேண்டும்: “இயேசு காடியை வாங்கின பின்பு, முடிந்தது என்று சொல்லி …

“முடிந்தது” என்ற இவ்வார்த்தை, மூலபாஷையாகிய கிரேக்கத்தில், ‘டெட்டலேஸ்டாயி” என்றுள்ளது. கிரேக்க மொழியில் இது, “அது முடிக்கப்பட்டது. என்றென்றும் இச்செயல் செய்யப்பட்டாயிற்று” என்று பொருள்படும். டெட்டலேஸ்டாயி என்ற இவ்வார்த்தை விவசாயிகளால் பயன்படுத்தப்பட்டது. அவர்கள் மந்தையில் எவ்விதப் பழுதுமின்றி ஒரு விலங்குக்குட்டி முழுமையாகப் பிறக்கும் போது, அவ்விவசாயி “டெட்டலேஸ்டாயி” “டெட்ட லேஸ்டாயி” என்று களிப்புடன் கூறுவார். இவ்வார்த்தை ஓவியக் கலைஞர்களால் மற்றும் சிற்பக் கலைஞர்களால் பயன்படுத்தப்பட்டது. ஒரு இயற்கைக் காட்சியை வரைந்து முடித்த பின்னர் அல்லது சலவைக்கல்லில் ஒரு சிற்பத்தைச் செதுக்கி முடித்த பின்னர், சில அடிகள் தூரம் பின்னால் சென்று தனது வேலைப்பாடைக் கவனித்துப் பார்ப்பார். திருத்தவோ, சேர்க்கவோ எதுவும் இல்லாதபட்சத்தில், அவர் விருப்புடன், “டெட்டலேஸ்டாயி! டெட்டலேஸ்டாயி!” என்று முணு முணுப்பார். இயேசுவால் இவ்வார்த்தை பயன்படுத்தப் பட்டது: “டெட்டலேஸ்டாயி!” அதாவது அவரது ஊழியம் முழுமையாய் நிறைவேறிற்று. சிலுவையினடியில் மனிதர்கள், “இயேசுவின் வாழ்வு தோல்வியாயிற்று” என்றனர்; ஆனால் இயேசு, “இது ஒரு வெற்றியாகும்” என்றார்.

“முடிந்தது” என்று சொல்லும்போது இயேசு தனது இவ்வுலக வாழ்வின் முடிவைப்பற்றி மட்டும் குறிப்பிட வில்லை. அவர் நிறைவேற்ற வந்த காரியம் நிறைவேற்றப் பட்டது என்றும் கூறினார். அவர் நிறைவேற்ற வந்தவைகளில் ஒன்று பழைய ஏற்பாட்டு உடன்படிக்கையாகும் (மத். 5:17). அதை அவர் நிறைவேற்றினார்; புதிய உடன்படிக்கை அமுலுக்கு வரும்படி பழைய உடன்படிக்கையானது தள்ளப் பட்டது (எபிரெயர் 9:15-16: 10:9). பழைய உடன்படிக்கை முடித்து வைக்கப்பட்டது (கொலோ. 2:14); நியாயப் பிரமாணம் என்ற அளவில் பத்துக் கட்டளைகளின் பிரமாணம் முடித்து வைக்கப்பட்டது (2 கொரிந்தியர் 3:1-11); ஏழாம் நாள் ஓய்வுநாள்-பிரமாணம் முடிந்துவிட்டது (கொலோ. 2:16).

இரட்சிப்பின் ஊழியமானது நிறைவேறியது என்பது மிகவும் முக்கியமானதாகும். ஏசாயா 53:6ல் உள்ள கடினமான பணி நிறைவேறியது. “நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழி தப்பித் திரிந்து அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.” 1 தீமோத்தேயு 2:6ன் கடினப்பணி நிறை வேறிற்று: “எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக் கொடுத்தார்.” வெளி. 5:9ன் கடினமான பணி நிறைவேறியது: “தேவரீர்… அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும், பாஷைக் காரரிலும், ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக் கொண்டு…..

இவ்விடத்தில் எச்சரிக்கை ஒன்று தேவைப்படுகிறது; இயேசு வின் பங்கு நிறைவேறிவிட்டது; மனிதரின் பங்கு இன்னும் நிறைவேறவேண்டியதாய் உள்ளது. “மேசியா” என்ற தனது பாடவை ஜார்ஜ் பிரெடெரிக் ஹேன்டில் எழுதிமுடித்தபோது, “முடிந்தது” என்று சொன்னார். இருப்பினும் பாடல் எழுதும் பணி மட்டுமே முடிந்திருந்தது. அப்பாடலுக்கு என்றும் நிலைக்கும்வண்ணம் அளிக்கப்படும் இசை, இனி அதற்குத் தரப்பட வேண்டியதாயிருந்தது. இயேசுவின் பங்கு நிறைவேறி யிருக்கலாம், ஆனால் நமக்கு, “… பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்” (பிலிப். 2:12; KJV) என்று கூறப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *