ஒப்புக்கொடுத்தலின் வார்த்தைகள் “உம்முடைய கைகளில்” (லூக்கா 23:46)
துன்பம் எல்லாம் முடிவுக்கு வந்தாயிற்று; பேசுவதற்குச் சில வார்த்தைகளே எஞ்சியிருந்தன. இயேசு தமது ஜீவனை விடத் தயாரானார். இயேசு: “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார் (லூக்கா 23:46). அவர் இத்தனை சீக்கிரத்தில் மரித்துப் போனாரா என்று பிலாத்து பின்பு ஆச்சரியப்பட்டான் (மாற்கு 15:44), முன்னதா கவே யேசு “நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்து கொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். ஒருவனும் அதை என்னிடத் திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன்” என்று கூறியிருந்தார் (யோவான் 10:17-18), இயேசுவிடம் மரணம் நெருங்கவில்லை, மாறாக இயேசுவே மரணத்தைச் சந்தித்தார்.
சாதாரணமாக மரணமடையுமுன் ஒருவர் தமது தலையைத் தூக்குவார் – இது நுரையீரல்களைப் பிராணவாயுவினால் நிரப்புவதற்கென்று இயற்கையில் நடக்கும் கடைசி முயற்சி யாகும் பின்பு அவரின் தலை கீழே சாயும். ஆனால் இயேசு, “தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்” (யோவான் 19:30ஆ) – இது இயேசுவே தாமாக முன்வந்து தமது ஜீவனை ஒப்புக்கொடுத்ததைத் தெளிவாக்குகின்றது, “அவர் தாமே விரும்பியவண்ணம் தமது ஜீவனைக் கொடுத்தார். ஏனென்றால், அவர் அதை விரும்பிச் செய்தார். அவர் தாம் விரும்பியபடியே செய்தார்” என்று அகஸ்தீன் என்பவர் கூறினார்.
இரட்சிப்பின் ஊழியத்தை இயேசு நிறைவேற்றிய பின்பு, “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆளியை ஒப்புவிக் கிறேன்” என்று கூறினார் (லூக். 23:46). இயேசு தமது வாழ்வை தேவனுக்கு ஒப்புவிக்க முடிந்தது. அவ்வாறே நீங்களும் நானும் நமது ஆவியைத் தேவனுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமானால், இவ்வாழ்க்கையையும் தேவனுக்கு ஒப்புவித்து வாழ வேண்டும்.