யூதா 1:1 விளக்கம்

யூதா 1:1 விளக்கம்

யூதா 1:1 விளக்கம்

தொடர்பு வசனங்கள்

  • A யோவான் 14:22; 1 தெச 5:23; 1 பேதுரு 1:5;
  • B ரோமர் 1:1; 1 பேதுரு 2:9;
  • C லூக்கா 6:16; யோவான் 17:15; ரோமர் 8:30; 2 தீமோ 1:9; எபிரேயர் 3:1; 2 பேதுரு 1:1;
  • D மத்தேயு 10:3; மாற்கு 3:18; யோவான் 6:39; 10:28-30; 12:26; 15:16; 17:11-12, 17, 19; அப் 1:13; 20:32; 27:23; ரோமர் 6:22; 9:24; 16:18; 1 கொரி 1:2; 6:11; எபே 5:26; 1 தெச 2:12; 2 தெச 2:13-14; 2 தீமோ 4:18; யாக்கோபு 1:1; 1 பேதுரு 1:2; 5:10.

1:1 யூதா என்றால் ‘புகழப்படுபவன்’. பழைய ஏற்பாட்டில் ‘யூதா’ என்ற பெயரும், புதிய ஏற்பாட்டில் ‘யூதாஸ்’ என்ற பெயரும் இதேதான். புதிய ஏற்பாட்டில் பல மனிதர் யூதாஸ், யூதா என்ற பெயருடையவர்கள். இவர் இயேசு கிறிஸ்துவின் ஒன்றுவிட்ட சகோதரர் (மத்தேயு 13:55; யோவான் 7:3).

மத்தேயு 13:55-56 இயேசு பிறந்த பிறகு மரியாளுக்கும் யோசேப்புக்கும் வேறு பிள்ளைகள் இருந்தனர் என்பதை இந்த வசனங்கள் குறிக்கின்றன.

இயேசுவின் மரணம், உயிர்த்தெழுதலுக்குமுன் யூதா அவரை விசுவாசிக்கவில்லை. அதன்பின் அவருடைய பெயர் விசுவாசிகளுடன் காணப்படுகிறது. அப் 1:14; 1 கொரி 9:5.

ஊழியக்காரனும்”-

இதனுடைய கிரேக்கப்பதத்தை ‘அடிமை’ எனவும் மொழிபெயர்க்கலாம், ஒருவர் முற்றிலுமாக மற்றவருக்கு உரியவர். இவ்வகையில் எல்லா விசுவாசிகளும் கிறிஸ்துவின் ஊழியர்கள் (அ) அடிமைகள் – அவர் அவர்கள் அனைவரையும் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து அவருடைய ஜனங்களாக (6:16-18, 22; மத்தேயு 20:28; 1 கொரி 6:19-20) அவருடைய உரிமைப்பொருளாக ஆகும்படிக்கு கிரயம் கொடுத்து வாங்கினார். கிறிஸ்துவுடனுள்ள இந்த உறவை பவுல் சந்தோஷத்துடனும் விருப்பத்துடனும் ஏற்றுக்கொண்டார். எல்லா விசுவாசிகளும் அப்படியே செய்ய வேண்டும். குறிப்பு காண்க: 8:14.

யாக்கோபினுடைய”-

யாக்கோபு 1:1. “யாக்கோபு”- புதிய ஏற்பாட்டில் இந்தப் பெயருடைய அநேக நபர்கள் உண்டு (மத்தேயு 10:2, 3; மாற்கு 15:40; லூக்கா 6:16; மத்தேயு 13:55). அநேகமாக இயேசுவின் ஒன்றுவிட்ட உடன்பிறந்த சகோதரர் இதை எழுதினார். கிறிஸ்துவின் வாழ்நாளில் யாக்கோபோ (அ) அவரது சகோதரர்களோ இயேசுவை மேசியா, தேவகுமாரன் என நம்பவில்லை. ஆனால் கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்குப்பின் அவர்கள் விசுவாசிகளானார்கள். (அப் 1:14). பின்பு எருசலேமிலுள்ள சபைக்கு யாக்கோபு தலைவரானார். (அப் 12:17; 15:13; கலா 1:9).

பரிசுத்தமாக்கப்பட்டவர்களும்”-

அப் 20:32; 26:18; ரோமர் 15:16; 1 கொரி 1:2; 6:11; எபிரேயர் 10:10-14.

காக்கப்பட்டவர்களுமாகிய”-

யோவான் 6:37-40; 10:27-28; 17:11-12; ரோமர் 5:9-10; 8:28-30, 35-39; 1 கொரி 1:8-9; 1 பேதுரு 1:5.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *