யூதா 1:2 விளக்கம்
உங்களுக்கு இரக்கமும்📖 சமாதானமும்📖 அன்பும்📖 பெருகக்கடவது
Easy to read version
எல்லா இரக்கமும், சமாதானமும், அன்பும் உங்களுக்குரியதாகுக. யூதா 1.2
ஒத்த வசனங்கள்
-
- A 1 பேதுரு 1:2; 2 பேதுரு 1:2;
- B ரோமர் 1:7; வெளி 1:4-6.
“இரக்கமும்”- ரோமர் 9:15-16; 11:32; 12:1; 15:9; எபே 2:4; தீத்து 3:5. விசுவாசிகள் தங்கள் பாவம், அறியாமை, பலவீனம் இவற்றால் உதவியின்றி இருந்தபோது, தேவன் தமது இரக்கத்தினாலே அவர்களை இரட்சித்தார். அது தகுதியற்றவர்களிடம் காண்பிக்கப்படும் பரிவும் கருணையுமே. தேவனுடைய இரக்கம் நமக்கு எப்போதும் இருக்கிறது, இதுவே சமாதானத்தின் அஸ்திபாரமாகும்.
“சமாதானமும்”- ரோமர் 1:7. இந்த மன சமாதானமும், இருதயத்தில் அமைதியும், தேவனோடு கொண்டுள்ள சரியான தொடர்பினாலும், விசுவாசிகளிடையே காணப்படும் நல்லிணக்கத்தாலும் வருகிறது.
“அன்பும்”- தெய்வீக அன்பு (அகாப்பே – காண்க: யோவான் 13:34; ரோமர் 5:5; 1 கொரி 13:1; எபே 3:17). நாம் தேவனுடைய இரக்கத்தையும், கிருபையையும் பெற்றிருப்பதால் இது கிடைத்துள்ளது. எல்லாம் குணங்களிலும் அன்பே தலைசிறந்தது (1 கொரி 13:13). இதன் பிறப்பிடம் அன்பாக இருக்கிற தேவனே (1 யோவான் 4:7-8).
கூடுதல் விளக்கம்
அப்போஸ்தலர் யூதா விசுவாசிகளுக்கு அப்போஸ்தல ஆசீர்வாதம் சொல்லுகிறார். “”உங்களுக்கு இரக்கமும், சமாதானமும் அன்பும் பெருகக்கடவது” என்று சொல்லி வாழ்த்துகிறார். இரக்கம் தேவனிடமிருந்து வருகிறது. எல்லா நன்மைக்கும் தேவனுடைய கிருபையும் இரக்கமும் ஊற்றாகவும் ஊற்றின் கண்ணாகவும் இருக்கிறது. எல்லா நன்மைகளுக்கும் தேவனுடைய இரக்கமே ஆதாரம்.
கர்த்தருடைய பிள்ளைகள் எல்லோருக்குமே தேவனுடைய இரக்கமும் கிருபையும் தேவைப்படுகிறது. இதற்கடுத்தபடியாக நமக்கு சமாதானம் தேவை. நம்மிடத்தில் தேவகிருபை இருக்குமென்றால் சமாதானமும் இருக்கும். தேவனுடைய கிருபையினாலும் இரக்கத்தினாலும் சமாதானம் உண்டாகும். சமாதானத்திலிருந்து அன்பு உண்டாகும். நம்மிடத்தில் தேவனுடைய அன்பு காணப்படவேண்டும். நாமும் தேவனிடத்தில் அன்பாயிருக்கவேண்டும்.
விசுவாசிகள் ஒருவருக்கொருவர் சகோதர சிநேகத்தோடிருக்கவேண்டும். இப்படிப்பட்ட சுபாவங்கள் விசுவாசிகளிடத்தில் பெருக்கடவது என்று அப்போஸ்தலர் யூதா வாழ்த்துகிறார். கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்கிறார். ஆசீர்வாதத்தில் நாம் வளர்ச்சி பெறவேண்டும். கர்த்தர் நமக்கு தம்முடைய கிருபையை வெளிப்படுத்துகிறார். தேவகிருபையில் நாம் வளர்ச்சி பெறவேண்டும். நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் இன்னும் அதிகமாய் வளர்ச்சி பெறவேண்டுமென்னும் விருப்பம் நமக்குள் இருக்கவேண்டும்.
விசுவாசிகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஆசீர்வாதங்கள்
- 1. பரிசுத்தமாக்கப்படுதல்
- 2. காக்கப்படுதல் (யூதா 1:1; 1தெச 5:23).
- 3. அழைக்கப்படுதல். (யூதா 1:2; ரோமர் 8:28; 2பேதுரு 1:10)