யூதா 1:3 விளக்கம் |
யூதா 1:3. பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது.
EASY T^O READ VERSION |
தவறு செய்கிற மக்களை தேவன் தண்டிப்பார்
அன்பான நண்பர்களே, நாம் எல்லோரும் ஒருமித்துப் பங்குகொள்கிற மீட்பைக் குறித்து உங்களுக்கு எழுத வேண்டுமென நான் மிகவும் விரும்பினேன். ஆனால் வேறு சிலவற்றைக் குறித்து உங்களுக்கு எழுதவேண்டியதன் தேவையை நான் உணர்ந்தேன். தேவன் தம் பரிசுத்தமான மக்களுக்கு எல்லா காலத்திற்குமாகக் கொடுத்த விசுவாசத்திற்காகப் போராடுமாறு உங்களை உற்சாகப்படுத்த விரும்புகிறேன். யூதா 1.3
தொடர்பு வசனங்கள் |
- A பிலி 1:27; 1 தீமோ 1:18; 6:12; எபிரேயர் 13:22;
- B உபா 9:10; அப் 13:46-47; 2 தீமோ 4:7-8; தீத்து 1:4; யூதா 20; வெளி 2:10; 12:11;
- C ஏசாயா 45:22; அப் 4:12; 6:8-10; 9:22; கலா 2:5; 1 தெச 2:2;
- D ஏசாயா 45:17; எரேமியா 9:3; அப் 17:3; 18:4-6, 28; 20:27; 28:28; ரோமர் 15:15-16; எபே 1:1; பிலி 1:1; கொலோ 1:2; 2 தீமோ 1:13; 1 பேதுரு 5:12; 2 பேதுரு 1:1; 3:1-2; யூதா 17;
- E உபா 21:9; நெகே 13:25; 1 கொரி 15:3; கலா 3:28; 6:11; 2 பேதுரு 1:12-15.
முக்கிய வார்த்தைகள் |
“இரட்சிப்பைக்குறித்து”– ரோமர் 1:16. ன் குறிப்புகள். யூதா மிகப் பெரிதானதும், மிகுந்த மகிமை உள்ளதையும் குறித்து எழுத விரும்பினார். ஆனால், அதைவிட மற்றொன்று, அவ்வளவு விரும்பப்படத்தக்கது அல்லவாயினும், அதுபற்றி எழுத வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார்.
“பரிசுத்தவான்களுக்கு”– ரோமர் 1:7.
“ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட”– தேவன் கிறிஸ்து மூலமாகவும், தமது அப்போஸ்தலர் மூலமாகவும் வெளிப்படுத்தியுள்ள ‘விசுவாசம்’ – பூரணமானது. அதனுள் எதையும் கூட்டக் கூடாது, எதையும் எடுத்துப் போடவும் கூடாது. ஒப்பிடுக உபா 4:2; நீதி 30:6; வெளி 22:18-19. தேவன் விசுவாசத்துடன் சேர்த்துக்கொள்ள வேண்டிய சத்தியங்கள் என்று யார் மூலமாகவோ, எங்கேயோ வெளிப்படுத்தமாட்டார். எந்தப் புதிய உபதேசமும் தவறானதே. தேவன் விசுவாசிகளுக்குக் கொடுத்திருக்கும் சத்தியமானது வாழ்ந்து காட்டப்பட்ட வேண்டும், அதைத் தாக்கும்போது, அதைக் காக்க வேண்டும். ஒப்பிடுக: 1 கொரி 4:1; 1 தெச 2:4; 1 தீமோ 1:11; 6:20; 2 தீமோ 1:14.
“விசுவாசத்திற்காக”– யூதா இந்த இடத்தில் விசுவாசத்தின் அனுபவத்தைப்பற்றிக் கூறவில்லை. கிறிஸ்துமூலம் தேவன் அருளிய விசுவாசத்தைக் குறித்துப் பேசுகிறார். அவரும், அவரது அப்போஸ்தலரும் நாம் எதை விசுவாசிக்க வேண்டுமென்றும் நாம் எவ்வாறு வாழ வேண்டுமென்றும் கற்பித்திருக்கிறார்கள். இதுவே ‘அந்த விசுவாசம்’. நியமங்களைக் கைக்கொண்டால் போதாது (நியமங்கள் முக்கியமே). இந்த நியமங்களின்படி வாழ வேண்டும் (எபே 4:1; கொலோ 1:10; 1 தெச 2:12). நியமங்களை மட்டும் முக்கியப்படுத்தவில்லை யூதா, நமது நடத்தையும் நியமங்களும் சேர்ந்து செயல்பட வேண்டுமென்கிறார். தவறான போதனைகளால் ஏற்படும் பரிசுத்தமற்ற வாழ்க்கையைக் குறித்து எச்சரிக்கிறார்.
“போராடவேண்டுமென்று”– விசுவாசிகள் இருக்குமிடம் ஒரு போர்க்களத்தில் நடக்கும் சண்டை என்று கிரேக்கப் பதம் கூறுகிறது. ஒப்பிடுக: எபே 6:11-18; 1 தீமோ 6:12. பொதுவாக, உலகத்திலும், கிறிஸ்தவ சமுதாயத்திலும் தேவன் வெளிப்படுத்தின சத்தியத்தைக் குறித்து ஒரு யுத்தம் நடைபெறுகிறது.
“அவசியமாய்க் கண்டது”– திருச்சபையின் அத்தியாவசியத் தேவை அதன் கட்டாயமாக இருக்கிறது. கிறிஸ்தவ சமுதாயத்தை அச்சுறுத்தும் பெரிய ஆபத்தாக இருக்கிறது. தேவனுடைய ஆவி அவரிலிருந்து அவரைக் கட்டாயப்படுத்தியது.
விரிவான விளக்கம் |
பொதுவான இரட்சிப்பு யூதா 1:3
யூதா 1:3. பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது.
அப்போஸ்தலர் யூதா இந்த நிருபத்தை எழுதுவதற்கான காரணத்தைச் சொல்லுகிறார். விசுவாசிகளிடத்தில் கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசம் ஸ்தாபிக்கப்படவேண்டும். விசுவாசிகள் தங்களுடைய பேச்சிலும் நடத்தையிலும் உண்மையுள்ளவர்களாயிருக்க வேண்டும். கர்த்தரைப்பற்றும் விசுவாசத்தினிமித்தமாய் விசுவாசிகள் தைரியமாய்ப் போராடவேண்டும்.
சுவிசேஷத்தின் இரட்சிப்பு பொதுவான இரட்சிப்பு. எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பின் சுவிசேஷம் அறிவிக்கப்படுகிறது. இயேசுகிறிஸ்துவைத் தங்களுடைய இரட்சகராக ஏற்றுக்கொள்கிற எல்லோரும் இரட்சிக்கப்படுகிறார்கள். இரட்சிப்பின் கிருபையானது யாருக்கும் மறுக்கப்படுவதில்லை. இரட்சிப்பின் அழைப்பு மனுக்குலத்திலுள்ள எல்லோருக்கும் பொதுவாக கொடுக்கப்படுகிறது. இரட்சிப்பின் ஆசீர்வாதங்களும், கிருபைகளும் எல்லோருக்கும் வாக்குப்பண்ணப்படுகிறது. நமக்கு விருப்பம் இருந்தால் இரட்சிப்பின் கிருபையைப் பெற்றுக்கொள்ளலாம். நமக்கு விருப்பமில்லையென்றால் இரட்சிப்பின் கிருபையிலிருந்து விலகியிருக்கலாம்.
ஒருவர் இரட்சிக்கப்படவில்லையென்றால் அதற்கு சுவிசேஷம் காரணமல்ல. இரட்சிக்கப்படாததற்கு அந்த நபர் தான் காரணம். தன்னுடைய இருதயத்திற்குள் கிறிஸ்துவினுடைய சுவிசேஷம் பிரவேசிக்காதபடிக்கு இவர் தன்னுடைய இருதயத்தின் கதவை அடைத்துக்கொண்டார். ஆகையினால் தான் இவர் இரட்சிக்கப்படவில்லை. இவர் சுவிசேஷத்திற்குச் செவிகொடுத்து, மனந்திரும்பி, இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து, அவரை தன்னுடைய இரட்சகராக ஏற்றுக்கொண்டால், இவரும் இரட்சிக்கப்படுவதற்கு தடை எதுவுமில்லை.
இரட்சிப்பு எல்லா விசுவாசிகளுக்கும் பொதுவாக கொடுக்கப்படுகிறது. நாம் விசுவாசத்தில் பலவீனராகயிருந்தாலும், பெலமுள்ளவர்களாகயிருந்தாலும் இயேசுகிறிஸ்துவின் இரட்சிப்பு நமக்கு உண்டு. கர்த்தரைப்பற்றும் நம்முடைய விசுவாசத்தில் நாம் தரித்திருக்கவேண்டும். நம்முடைய விசுவாசமே நமக்குப் பாதுகாப்பு. நம்முடைய விசுவாசத்தை புதுப்பிக்கவேண்டும். தட்டியெழுப்பிவிடவேண்டும். விசுவாசத்தில் சோர்ந்துபோனால் வஞ்சிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. ஆகையினால் ஒவ்வொரு விசுவாசியும், தன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட விசுவாசத்திற்காக தைரியமாய்ப் போராடவேண்டும்.
அப்போஸ்தலரும் சுவிசேஷகர்களும் நமக்கு பொதுவான இரட்சிப்பைக் குறித்து எழுதுகிறார்கள். இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிற ஒவ்வொருவருக்கும் பொதுவான இரட்சிப்பு உண்டு. நாம் பொதுவான இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால், இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கவேண்டும். பாவத்திலிருந்து மனந்திரும்பவேண்டும். இயேசுகிறிஸ்துவை நம்முடைய இரட்சகராகவும், ஆண்டவராகவும் ஏற்றுக்கொள்ளவேண்டும். இப்படிப்பட்ட பொதுவான இரட்சிப்பைத்தான் அப்போஸ்தலர் யூதா இங்கு குறிப்பிடுகிறார்.
பொதுவான இரட்சிப்பைக் குறித்து விசுவாசிகளுக்கு எழுதி உணர்த்துவது யூதாவுக்கு அவசியமாய்த் தெரிகிறது. பரிசுத்தமான காரியங்களைப் பேசுகிறவர்கள் பயபக்தியோடும், கருத்தோடும் பேசவேண்டும். கர்த்தருடைய ஊழியத்தைச் செய்கிறவர்கள் உண்மையாயும், ஊக்கத்தோடும் ஊழியம் செய்யவேண்டும். இயேசுகிறிஸ்து கொடுக்கிற பொதுவான இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டவர்கள், அதைக் கவனமாய்க் காத்துக்கொள்ளவேண்டும்.
பரிசுத்தவான்களுக்கு ஒரு விசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நாம் தைரியமாய்ப் போராடவேண்டும். நம்முடைய விசுவாசத்தைக் குறித்து நாம் அசட்டையாயிருந்துவிடக்கூடாது. விசுவாசத்தைக் காத்துக்கொள்வதற்கு யூதா ஓர் ஆலோசனை சொல்லுகிறார். நம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நாம் தைரியமாய்ப் போராடவேண்டும் என்பதுதான் யூதா சொல்லுகிற ஆலோசனை. இந்தச் சத்தியத்தை அவர்களுக்கு எழுதி உணர்த்தவேண்டுமென்பதை யூதா அவசியம் என்று கண்டிருக்கிறார்.
இரட்சிப்பு பொதுவானது என்று அழைக்கப்படுகிறது. யூதருக்கும் புறஜாதியாருக்கும் இரட்சிப்பு ஒன்றுபோல் உள்ளது. முழு உலகத்தில் உள்ளவர்களுக்கும் இரட்சிப்பு பொதுவானது.
கள்ளப்போதகர்கள் சுவிசேஷ சத்தியத்தை அழிக்க முற்படுகிறார்கள். ஆகையினால் கள்ளப்போதகர்களின் பொய்யான உபதேசங்களுக்கு எதிராகப் போராட வேண்டும்.
அப்பொழுது தேவனுடைய விரலினால் எழுதியிருந்த இரண்டு கற்பலகைகளைக் கர்த்தர் என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்; சபை கூடியிருந்த நாளில் கர்த்தர் மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களுடனே பேசின வார்த்தைகளின்படியே அவைகளில் எழுதியிருந்தது.
கூடுதல் தொடர்பு வசனங்கள் |
இப்படிக் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதை நீ செய்வாயாகில், குற்றமில்லாத இரத்தப்பழியை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடுவாய்.
உபாகமம் 21:9 (TAM)
அவர்களையும் நான் கடிந்துகொண்டு அவர்கள்மேல் வரும் சாபத்தைக் கூறி, அவர்களில் சிலரை அடித்து, மயிரைப் பிய்த்து: நீங்கள் உங்கள் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளில் ஒருவரையும் உங்கள் குமாரருக்காகிலும் உங்களுக்காகிலும் கொள்ளாமலும் இருக்கவேண்டுமென்று அவர்களை தேவன்மேல் ஆணையிடப்பண்ணி, நான் அவர்களை நோக்கி:
நெகேமியா 13:25 (TAM)
இஸ்ரவேலோ, கர்த்தராலே நித்திய இரட்சிப்பினால் இரட்சிக்கப்படுவான்; நீங்கள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் வெட்கப்படாமலும் கலங்காமலும் இருப்பீர்கள்.
ஏசாயா 45:17 (TAM)
பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை.
ஏசாயா 45:22 (TAM)
அவர்கள் பொய்யைப் பிரயோகிக்கத் தங்கள் நாவாகிய வில்லை வளைக்கிறார்கள்; அவர்கள் இந்தத் தேசத்திலே பலத்துக்கொள்வது சத்தியத்துக்காக அல்ல; பொல்லாப்பிலிருந்து பொல்லாப்புக்கு நடந்தேறுகிறார்கள்; என்னையோ அறியாதிருக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 9:3 (TAM)
அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:12 (TAM)
ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:8 (TAM)
சவுல் அதிகமாகத் திடன்கொண்டு, இவரே கிறிஸ்துவென்று திருஷ்டாந்தப்படுத்தி, தமஸ்குவில் குடியிருக்கிற யூதர்களைக் கலங்கப்பண்ணினான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:22 (TAM)
அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியங்கொண்டு அவர்களை நோக்கி: முதலாவது உங்களுக்கே தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது; நீங்களோ அதைத் தள்ளி, உங்களை நித்திய ஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக்கொள்ளுகிறபடியினால், இதோ, நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:46 (TAM)
கிறிஸ்து பாடுபடவும் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டியதென்றும், நான் உங்களுக்கு அறிவிக்கிற இந்த இயேசுவே கிறிஸ்து என்றும் காண்பித்து, திருஷ்டாந்தப்படுத்தினான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:3 (TAM)
ஓய்வு நாள்தோறும் இவன் ஜெப ஆலயத்திலே சம்பாஷணைபண்ணி, யூதருக்கும் கிரேக்கருக்கும் புத்தி சொன்னான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:4 (TAM)
அவன் அங்கே வந்தபின்பு வெளியரங்கமாக யூதர்களுடனே பலமாய்த் தர்க்கம்பண்ணி, இயேசுவே கிறிஸ்து என்று வேதவாக்கியங்களைக் கொண்டு திருஷ்டாந்தப்படுத்தினபடியால், கிருபையினாலே விசுவாசிகளானவர்களுக்கு மிகவும் உதவியாயிருந்தான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:28 (TAM)
எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றையதினம் சாட்சிகளாக வைக்கிறேன்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:27 (TAM)
ஆதலால் தேவனுடைய இரட்சிப்பு புறஜாதியாருக்கு அனுப்பப்பட்டிருக்கிறதென்றும், அவர்கள் அதற்குச் செவிகொடுப்பார்களென்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:28 (TAM)
அப்படியிருந்தும், சகோதரரே, புறஜாதியாராகிய பலி பரிசுத்த ஆவியினாலே பரிசுத்தமாக்கப்பட்டு, தேவனுக்குப் பிரியமான பலியாகும்படிக்கு, நான் தேவனுடைய சுவிசேஷ ஊழியத்தை நடத்தும் ஆசாரியனாயிருந்து புறஜாதிகளுக்கு இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனாகும்பொருட்டு,
ரோமர் 15:15 (TAM)
நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,
1 கொரிந்தியர் 15:3 (TAM)
சுவிசேஷத்தின் சத்தியம் உங்களிடத்திலே நிலைத்திருக்கும்படி, நாங்கள் ஒரு நாழிகையாகிலும் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து இணங்கவில்லை.
கலாத்தியர் 2:5 (TAM)
யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.
கலாத்தியர் 3:28 (TAM)
என் கையெழுத்தாய் எவ்வளவு எழுதினேனென்று பாருங்கள்.
கலாத்தியர் 6:11 (TAM)
தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல், எபேசுவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது:
எபேசியர் 1:1 (TAM)
இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரராகிய பவுலும் தீமோத்தேயும், பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும், கண்காணிகளுக்கும், உதவிக்காரருக்கும் எழுதுகிறதாவது:
பிலிப்பியர் 1:1 (TAM)
நான் வந்து உங்களைக் கண்டாலும், நான் வராமலிருந்தாலும், நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாய் நின்று, ஒரே ஆத்துமாவினாலே சுவிசேஷத்தின் விசுவாசத்திற்காகக் கூடப்போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றிலும் மருளாதிருக்கிறீர்களென்று உங்களைக்குறித்து நான் கேள்விப்படும்படி, எவ்விதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குப் பாத்திரராகமாத்திரம் நடந்துகொள்ளுங்கள்.
பிலிப்பியர் 1:27 (TAM)
கொலோசே பட்டணத்தில் கிறிஸ்துவுக்குள் பரிசுத்தவான்களும் விசுவாசிகளுமாயிருக்கிற சகோதரர்களுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
கொலோசெயர் 1:2 (TAM)
உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, முன்னே பிலிப்பிபட்டணத்திலே நாங்கள் பாடுபட்டு நிந்தையடைந்திருந்தும், வெகு போராட்டத்தோடே தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குச் சொல்லும்படி, நம்முடைய தேவனுக்குள் தைரியங்கொண்டிருந்தோம்.
1 தெசலோனிக்கேயர் 2:2 (TAM)
குமாரனாகிய தீமோத்தேயுவே, உன்னைக்குறித்து முன் உண்டான தீர்க்கதரிசனங்களின்படியே, நீ அவைகளை முன்னிட்டு நல்ல போராட்டம்பண்ணும்படி, இந்தக் கட்டளையை உனக்கு ஒப்புவிக்கிறேன்; நீ விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உடையவனாயிரு.
1 தீமோத்தேயு 1:18 (TAM)
விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கைபண்ணினவனுமாயிருக்கிறாய்.
1 தீமோத்தேயு 6:12 (TAM)
நீ கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தோடும் அன்போடும் என்னிடத்தில் கேட்டிருக்கிற ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தைக் கைக்கொண்டிரு.
2 தீமோத்தேயு 1:13 (TAM)
நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.
2 தீமோத்தேயு 4:7 (TAM)
ஏற்றகாலங்களிலே நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய கட்டளையின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்ட பிரசங்கத்தினாலே தமது வார்த்தையை வெளிப்படுத்தினார்.
தீத்து 1:4 (TAM)
சகோதரரே, நான் சுருக்கமாய் உங்களுக்கு எழுதின இந்தப் புத்திமதியான வார்த்தைகளை நீங்கள் பொறுமையாய் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
எபிரெயர் 13:22 (TAM)
உங்களுக்குப் புத்திசொல்லும்படிக்கும், நீங்கள் நிலைகொண்டு நிற்கிற கிருபை தேவனுடைய மெய்யான கிருபைதானென்று சாட்சியிடும்படிக்கும், நான் சுருக்கமாய் உங்களுக்கு எழுதி, எனக்குத் தோன்றுகிறபடி உண்மையுள்ள சகோதரனாகிய சில்வானுவின் கையிலே கொடுத்து அனுப்பியிருக்கிறேன்.
1 பேதுரு 5:12 (TAM)
நம்முடைய தேவனும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப்போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு எழுதுகிறதாவது:
2 பேதுரு 1:1 (TAM)
இதினிமித்தம், இவைகளை நீங்கள் அறிந்தும், நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிற சத்தியத்தில் உறுதிப்பட்டிருந்தும், உங்களுக்கு இவைகளை எப்பொழுதும் நினைப்பூட்ட நான் அசதியாயிரேன்.
2 பேதுரு 1:12 (TAM)
பிரியமானவர்களே, இந்த இரண்டாம் நிருபத்தை இப்பொழுது உங்களுக்கு எழுதுகிறேன்.
2 பேதுரு 3:1 (TAM)
நீங்களோ பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலரால் முன் சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைவுகூருங்கள்.
யூதா 1:17 (TAM)
நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி,
யூதா 1:20 (TAM)
நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 2:10 (TAM)
மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 12:11 (TAM)